(Reading time: 17 - 33 minutes)

 

" ழகு எனக்கு டெய்லி சாக்லேட் தாருவானே "

" அழகா ? அழகுக்கு உங்களை பிடிக்காதா ? "

" இல்லையே  ரொம்ப பிடிக்கும் "

"  இல்லை இல்லை பிடிக்காது "

" ஏன் அப்படி சொல்லுற நிலா ? "

" ஆமா ரொம்ப சாக்லேட் சாப்பிடா  பல்லு பூச்சி பிடிக்கும் .. அப்பறம் உங்க கேர்ல் ப்ரண்ட்ஸ் உங்களை கிண்டல் பண்ணுவாங்க.. அதுனாலதான் அழகு உங்களுக்கு சாக்லேட் தர்றான் "

" அட ஆமாலே .. இரு நிலா .. நான் அழகு கிட்ட பேசிக்கிறேன் .. இனி எனக்கு சாக்லேட் வேணாம்... "

" சமத்து கண்ணா " என்று அவன் நெற்றியில் முத்தமிட்டவள், அவனிடம் சிறிது நேரம் நட்பு பாராட்டிவிட்டு நம்ம ஷாந்தனுவை அழகுகிட்ட சண்டை போட தயார் படுத்திவிட்டு அங்கிருந்து சென்றாள்... ( காதலுக்கு முன்னாடியே மோதலா ? பாவம் நிலா நம்ம மதி ! )

ன் தேவதை தனக்காக  உருவாக்கி வைத்த சிக்கலை அறியாத மதியழகனோ, திட்டமிட்டபடி அவள் கார் வரும் சாலையோரம் காத்திருந்தான் .. சரியாய் அவளின் கார் வரவும், லிப்ட் கேட்க கை நீட்டி அவளின் காரை நிறுத்தினான் .

இடதுபுற கதவின் ஜன்னலை இறக்கியவளிடம்,

" ஹாய் நிலா ! என் ஆபார்ட்மென்ட் பக்கத்துலதான் இருக்கு கொஞ்சம் ட்ரோப் பண்ணிடுறியா ? " என்று உரிமையை கேட்டான் மதியழகன் ..

" யாரு டா இவன் ? அவன் பாட்டுக்கு வந்தான், பேரை சொன்னான் , என்னமோ ரொம்ப நாளு தெரிஞ்ச மாதிரி பேசுறானே" என்று எண்ணியபடியே பின் கதவை திறந்து விட்டாள்...

" தேங்க்ஸ் டா.. ஆனாலும் இப்படியா கேர்லசா இருப்ப நீ ? "

" ஹெலோ மிஸ்டர் முதல்ல நீங்க யாரு ? என்னம்மோ ரொம்ப தெரிஞ்சவர்  மாதிரி பேசுறிங்க? எனகென்ன கேர்லஸ் ? " என்று பொரிந்தாள்..

" கூல் கூல் .. இப்போ கேட்டியே இது சரியான கேள்வி .. நான் யாரு ? இதை நான் ஏறுறதுக்கு முன்னாடியே கேட்கணும்டா .. நீ பாட்டுக்கு கதவை திறந்து விடுறியே .. ஒருவேளை நான் திருடனா இருந்தா ? அதுனாலதான் கேர்லஸ்நு சொன்னேன் ... "

" ரொம்ப அறிவுதான் ...பட் யு க்நொவ்  வாட், திருடுற  மூஞ்சிக்கின்னு  ஒரு  தனி கலை இருக்கு அது உன்கிட்ட இல்லை "

" அடேங்கப்பா திருடனை உயர்த்தி பேசிய முதல்  ஆளு நீதான் "

" உன்னை மாதிரி தெரியாதவங்க கிட்ட உரிமையை திருடி நீ வா போன்னு பேசுறவனை விட திருடன் ரொம்ப பெட்டர் "

" ஓஹோ இப்போ நீங்க மட்டும் என்ன  வாங்க போங்கண்ணா பேசுனிங்க மேடம் ? "

" ஹெலோ .... நீங்க மரியாதையை கொடுக்கல அதான் நானும் கொடுக்கல "

" ஹா ஹா ஹா "

" என்ன சிரிப்பு "

" எப்படி டா இவ்வளோ கியூட்டா கோபப்படுற? மதி கொடுத்து வெச்சவன் "

" ஹேய் வீணா என் கோபத்தை கிழராத... யாரு மதி ? யாரு நீ ? "

" என்னை டிராப் பண்ணாதான் சொல்லுவேன் "

" இதென்னடா இம்சையா போச்சு ? பாவம்னு லிப்ட் கொடுத்தேன் பாரு என்னை சொல்லணும் ... எங்க போகணும் சொல்லு "

" நேரா போயி லேபிட் ல திரும்பு "

"..."

" ஹே இங்கதான் இங்கதான் .. தேங்க்ஸ் டா .. நல்ல டிரைவ் பண்ணுற டா .. "

".."

" ஹே ஏன் சைலெண்ட் ? அட்லீஸ்ட் என்னை  திட்டுவன்னு எதிர்பார்த்தேனே "

" ... "

" ஓகே ஓகே .... நானே சொல்லிடுறேன் ... நான் உன் நண்பன்னு வெச்சுக்கோ .. நிம்மதியா இருக்குற உன் லைப் ல அப்பபோ குட்டி குட்டி டென்ஷன் கொடுத்து இம்சை  பண்ண வந்தவன் .. அப்பறம் திருடரதுக்கு ஒரு முகம் இருக்கு பட் எனக்கது இல்லைன்னு சொன்னியே , தப்புடா .. நான் திருடன் தான் .. அதை நீயே ஒரு நாள் ஒத்துக்குவே பாரு .... இடையில மானே தேனே பொன்மானே போட்டுக்கோ .. "

அவன் அத்தனை பேசியும் கடுகடுத்த முகத்துடன் எதுவுமே சொல்லாமல் காரை எடுத்தாள் நிலா ..

" இப்படியே இரு அப்போதான் மதிக்கு பிடிக்கும் " என்றவனின் குரல் காற்றில் கரைந்ததே தவிர அவளை எட்டவில்லை .. கோபமாய் வண்டியை செலுத்தியவள் தூரமாய் சென்றபிறகு காரை நிறுத்தினாள்....

" யாரிந்த குரங்கு ? கழுதை .. எருமை .. அழகா இருந்தா அப்படியே பல்லிளிசிருவோம் நெனைச்சானா ? நான் பேசிருந்தா இந்நேரம் நிம்மதியா  அவன் வேலைய பார்பான்ல.. அதான் பேசல ... ஏன்டா பேசாம போனேன்னு யோசிச்சுகிட்டே இருக்கட்டும் ..அதுவும் இல்லாமல் இவனை மாதிரி லொட லொட கேஸ்கிட்ட வாய கொடுத்தா  நமக்குதான் தேவ இல்லாத டென்ஷன் .. அதுக்காக ஒதுங்கிலாம் போக மாட்டேன் .. . இன்னொரு தடவை என் கண்ணுல படட்டும் அப்பறம் பார்த்துக்கலாம்.. " என்று தனக்கு தானே சொல்லிகொண்டவளின் உள்மனம் .. ஆனா  அவனின் குரல் ???? என்று கேட்டு கண் சிமிட்டியது ..

இங்கு அவனின் நிலா கொதித்து  கொண்டிருக்க,

" தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் " என்று பாடிகொண்டே வீட்டினுள் நுழைந்தவன் தன் பாட்டி அமிர்தவர்ஷினியை கட்டிக்கொண்டு

" ஹே அம்மு , என் கல்யாணத்தை பார்க்கனும்னு ஆசைபட்டியே , கூடிய சீக்கிரம் பார்ப்ப! " என்று சொல்லி  அவரின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு சென்றான் .. அவன் செல்போனில் அவளின் ஐ டி கார்டின் போட்டோ இருந்தது .. பின்சீட்டில் அமர்ந்தவன் அவளின் ஐ டீ கார்டின்மூலம் அவளை பற்றி அறிந்துகொண்டாள்... அவளுக்கே தெரியாமல் அதை படம் பிடித்தும்  வைத்து கொண்டான் .. " இவ்வளோ க்லேரட்டி உள்ள கேமரா போன் வாங்கினதுக்கு இன்னைக்குதான் பலன் கிடைச்சிருக்கு " என்றவன் அந்த போட்டோவிற்கு முத்தமழை பொழிந்தான் ..

சிவகங்கை ....

 ஷக்தியின் போனுக்காக காத்திருந்தால் மித்ரா ... அவளின்  எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் உடனே அழைத்தான் அவளின் கதாநாயகன் ...

" ஷக்தீஈஈஈஈஈஈ  மாமாஆஆ" என்று ராகமாய்  இழுத்தாள் மித்ரா ..

" ம்ம்ம் ஹாய்" என்று பொறுமையாய் சொன்னவனை பார்த்து கோபம் கோபமாய் வந்தது மித்ராவிற்கு ..

 " நான் எவ்வளோ அழகா மாமான்னு கூப்பிட்டேன் .. இவனும்தான் இருக்கானே ... என்னை கோபப்படுத்தி பார்க்கிறதுல உனக்கென்னடா சந்தோசம் ? " என்று முறுக்கி கொண்டது அவள் மனம் ..

" என்னடி அமைதியா இருக்க ? " என்று கேட்டவனுக்கு அவளின் எண்ணவோட்டங்கள் ஒன்றும் தெரியாமல் இல்லை .. அது என்னவோ அவளை கொஞ்ச நேரம் கோபப்படுத்தி விட்டு அவளை சமாதானப்படுத்துவதில் அவனுக்கு அப்படி ஒரு சந்தோசம் ..

" ஒண்ணுமில்ல டா "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.