(Reading time: 18 - 36 minutes)

 

"வார்த்தைகளை விடாதே மகனே!அவள் ஆதிசக்தியின் அவதாரம்,தன்னிடம் ஒருவர் நெருங்குகையில் அவரை பஸ்பமாக்கும் நெருப்பு அவள்!"

"இப்போது தாம் என்ன தான் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றீர்?"

"வரும் சித்ரா பௌர்ணமி வரை அவள் இங்கே தான் இருப்பாள்.சித்ரா பௌர்ணமி வரை தந்த ஏற்பாடு செய்வாயாக!"

"தாயே!ஆனால்?"

"இது எனது ஆணை!"

"அப்படியே!"

ஷைரந்தரி பாஞ்சாலபுரத்திற்கு வந்தாகி பல தினங்கள் ஆகிவிட்டது. இன்னும் இரு தினங்களில் சித்ரா பௌர்ணமி.அவள் இங்கே வரும் போது பல ஏற்பாடுகள் நிகழ்த்தப்பட்டன.

பார்த்திபனின் தாயானவர் சகல அன்பையும் அவள் மேல் பொழிந்தார்.

அன்றொரு நாள்... சோலையில் அவள் உலவி கொண்டிருந்த வேளையில்,

ஏதோ அரவம் அவள் செவிகளில் கேட்டது.

"கன்னிகையே!"-பார்த்திபன்.

"உனது நாமம் ஷைரந்தரி அல்லவா?"

"ஆம்!"

"நான் பார்த்திபன்.என்னைப் பற்றி நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை.இருப்பினும் உன்னிடத்தில் நான் ஒன்றை உரைக்கிறேன்.நீ சந்திக்க இருக்கும் பரீட்சை விஷ பரீட்சை! இதில் உன் பிராணன் பறி போகும் வாய்ப்புகள் அதிகம்!"

"இளவரசரின் கரிசனைக்கு நன்றிகள்! தம்மை பற்றி நான் அறியாதது அல்ல!நான் மகேந்திர குமாரி ஆவேன்.என்றும் எனது பிராணன் நிரந்தரமானது அல்ல என்பதை நான் அறிவேன். சித்ரா பௌர்ணமி நாளை சந்திக்க தயாராக இருக்கின்றேன்!"-பார்த்திபனுக்கு அவளது தைரியம்,தெளிவான பேச்சு சொல்ல போனாள் அவளையே பிடித்திருந்தது.

"இவ்வுலகில் கன்னிகையாக பிறக்கும் சிசுவானது, கணவனுக்காக வாழ வேண்டும் என்பதல்லவா இயற்கை விதி?"

"உண்மை தான் இளவரசே!தம் வாக்கினை ஏற்கிறேன்.ஆனால், இவ்வுலகில் ஸ்திரீயாக பிறப்பவள் ஒரு ஆணின் அர்த்தநாரியாகவும் விளங்குகின்றாள். ஆதிசிவனாரின் ஆட்டத்தைக் கண்டு மூவுலகமும் அச்சம் கொண்ட வேளையில், ஆதிசக்தி தான் அவர்தம் ஆட்டத்திற்கு ஈடு கொடுத்தாள் அல்லவா?இக்கூற்றை தாம் நிராகரித்தால்,தம் கூற்றை நான் முழுவதுமாய் ஏற்கின்றேன்!"

"அற்புத விளக்கம் கன்னிகையே!உமது பதிலை கேட்டு மெய் சிலிர்த்தேன். உன் கூற்றை தலை வணங்கி ஏற்கிறேன்! இதுவரையில் ஆணால் மட்டுமே அனைத்தையும் வெல்ல முடியும் என்ற எண்ணம் இருந்தது.ஆனால்,இன்று நீ அதை உடைத்தெறிந்தாய்!

உன்னை வாழ்க்கை துணையாய் கொள்பவன் பெரும் பாக்கியம் பெற்று விளங்குவான்!"-சிறு நகையை உதிர்த்துவிட்டு பார்த்திபன் அங்கிருந்து விலகினான்.ஷைரந்தரியின் செவிகளில் அவன் கூறிய வார்த்தைகள் உழன்றன. அவள் இதழ்களில் குறு நகை பூத்தது.

றக்கம் வரவில்லை பார்த்திபனுக்கு,அவன் தனது இல்லாள் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்பினானோ,அப்படியே உருவெடுத்திருக்கிறாள் ஷைரந்தரி.

"அவளின் கரம் பற்றும் பாக்கியவான் நானாக இருந்தால்?"-நினைக்கும் போதே சிலிர்த்தது அவனுக்கு!!!!

"மகனே?"

"ஆ...வாருங்கள் அன்னையே!"

"உறங்கவில்லையா?"

"உறக்கம் தன்னை தொலைத்தேன் தாயே!"

"எதனிடத்தில்?"

"ஒரு பெண்ணிடத்தில்!"-சற்று அதிர்ச்சி அடைந்தார் அவர்.

"மகனே??"

"உண்மை தான் தாயே!"

"அவள் யார்?"

"மகேந்திர குமாரி ஷைரந்தரி!"

"பார்த்திபா?"

"எனது இந்த விருப்பத்தில் தவறேதும் உண்டா?"

"அல்ல மகனே!ஆனால்,தகுதி அற்றது... உனது ஆசை நிறைவேறாது பார்த்திபா!"

"தாயே???"

"அவள் வானுயர்ந்த வேள்வித்தீயில் உதித்தவள்.புனிதத்தின் உச்சம் அவள்.மஹாதேவ, தேவியை பெற்றோராய் ஏற்றவள்.சாமானிய நரனின் ஆசைகளை விடுத்தவள். அனைவருக்கும் கானலான கங்கை நீர் அவள்."அவள் மீது விழுந்த உன் ஈடுபாட்டினை அழித்துவிடு மகனே!"

"மாதா??"

"மஹாதேவனின் அருள் இருந்தால் உன் மனம் விரும்பிய வரம் உன்னை அடையும்!"-பெருமூச்சு ஒன்று வெளிவந்தது பார்த்திபனிடத்தில் இருந்து.

சித்ரா பௌர்ணமி....

"இன்று சித்ரா பௌர்ணமி, அதர்வண காளிக்கு நரபலி இடும் நாள் ரணதேவ்."

"அறிவேன்!"

"இன்று ஒரு கன்னிகையை பலியிட்டால்...நாம் தீயசக்தியின் அவதாரமாய் மாறிவிடுவோம்!அந்த ஆதிசக்தியையே கட்டுப்படுத்தும் திறம் பெற்று விடுவோம்!"

"ஸ்திரீயா?"

"ஆம்...அதுவும் ஆண்,பெண் இனசேர்க்கையில் கலக்காத,பவித்ரத்தின் முழு வடிவமாய் இருக்கும்,ஒரு கன்னிகையின் பவித்ரத்தை அழித்து அவளின் செங்குருதியை காளியின் பாதத்தில் பலியிட வேண்டும்!"

"அப்படி ஒரு கன்னிகை எங்கே இருக்கிறாள்."

"விதி...அவளை வலிய நம்மிடத்தில் சேர்க்கும்."

ரண்மனையில்...

"பார்த்திப வர்மருக்கு வணக்கங்கள்...தங்களை உடனே காஞ்சியின் பிரதான வாயிலில் நடக்கும் போரில் கலந்து கொள்ளும் படி தங்கள் மாமா அவர்கள் ஓலை அனுப்பி இருக்கிறார்!"

-பார்த்திபன் தயங்கினான்.

"சரி....அப்படியே ஆகட்டும்!"

"யாரங்கே?"-காவலாளி ஓடி வந்தான்.

"வணக்கம் அரசே!"

"ஷைரந்தரியை நான் சந்திக்க ஏற்பாடு செய்!"

"ஆகட்டும் இளவரசே!"

சிறிது நேரத்தில்...

"இளவரசருக்கு வணக்கங்கள் மகேந்திர குமாரி தங்களின் வேண்டுதலை ஏற்றார்!"

"ம்..."-பார்த்திபன் அவள் அறைக்குள் பிரவேசித்தான்.

திரைச்சீலையை விலக்கி அதன் அப்பால் இருந்த இயற்கை அழகை ரசித்து கொண்டிருந்தாள் ஷைரந்தரி.

"ஷைரந்தரி!"

"பணிகிறேன் இளவரசே!என்னை காண வேண்டும் என்று அனுமதி கேட்டீர்களா?"

"ஆம்...நான் உன்னிடத்தில் ஒன்று கூறவே இங்கு பிரவேசித்தேன்."

"கூறுங்கள்!"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.