(Reading time: 27 - 54 minutes)

 

ண்ணன் முன்னால் திரும்பி, “அனு, தேஜுக்கு போன் பண்ணி எங்க இருக்காங்கனு கேளேன்மா, என்னோட போன்ல சார்ஜ் இல்லை” என்றார்

சரியென அவள் தலை அசைத்து போன் பண்ண அவள் காதில் ஆடும் தொங்கட்டான்கள் அவனை இழுத்தது. அவனின் தோள் தட்டி, “தம்பி கொஞ்சம் நேரா ரோடை பார்த்து வண்டி ஓட்டுப்பா நாங்க உன்னை நம்பி தான் வரோம்” என்று கிண்டல் செய்தார் கண்ணன். அனைவரும் அதில் சிரித்துவிட, கன்னசிவப்போடு அவனை ஒருமுறை பார்த்துவிட்டு குனிந்துக்கொண்டாள் அனு.

ஹ்ம்ம்ம் கொல்லுறாளே என்று மனதில் நினைத்துக்கொண்டான்.

“மாமா, அம்மன் கோவில் பக்கத்துல நம்மளுக்காக வெயிட் பண்றாங்களாம்” என்று கூறவும் கார் வேகம் கூட்டியது. அவ்விடம் சென்றதும் “சரி அஸ்வத் இறங்குப்பா...” என்று கண்ணன் கூறவும் புரியாமல் முழித்தான் அவன். அவனைவிட அனு காரணம் புரியாமல் முழிக்க, “அடடா ஜோடிபுறாக்களை பிரிக்க கூடாதோ அப்போ நீயும் இறங்குமா” என்று கூறவும் புரியாமல் இறங்கினர் இருவரும்.

லதாவும் ரவியும் அவர்கள் வந்த ஸ்விப்ட் காரில் இருந்து இறங்கி இன்னோவாவில் ஏறிக்கொள்ள, அனுவும் அஸ்வத்தையும் அந்த காரில் ஏற்றிவிட்டனர். “எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும் பேச உங்களை வச்சிக்கிட்டு எப்படி பேசுறது போங்க போங்க... பத்திரமாக வாங்க நாங்க பின்னாடியே வரோம்” என்று கண்ணன் கண்ணடித்து சிக்னல் தந்தார். சொன்னதுதான் தாமதம் விர்... என்று பறந்தது ஸ்விப்ட்... innova காரை ரவி,வெங்கட்,கண்ணன் என்று மூவரும் மாறி மாறி ஓட்ட, அவர்களும் இனிமையாக பேசிக்கொண்டு நேரத்தை கழித்துக்கொண்டு வந்தனர்.

“ஹேய்ய்ய்ய்.... நம்பவே முடியலைடா என்ன இருந்தாலும் இவங்களுக்கு இவ்வளவு பரந்த மனசு தாங்காதுடா...” என்று நிரு கூற... “சரி அஸ்வத் தாங்காதாம் நம்ம இதில போகலாம் அவனை அந்த கார்ல ஏத்திவிடலாம் நிறுத்து” என்று தேஜு கிண்டல் பண்ணவும் காரின் வேகம் கொஞ்சம் குறைந்தது. அதை கண்டு பதறிய நிரஞ்ஜன் “டேய் துரோகி இது அடுக்குமா நான் சும்மா ஒரு பேச்சுக்குதானே சொன்னேன் ஏன்டா நீ வேற வேகமா போ..” என்று கெஞ்சி கொஞ்சி வேகத்தை கூட்டினான். அனு கிண்டல் பேச்சுக்கெல்லாம் சிரித்தும் அவர்களுக்கு பதில் சொல்லியும் அவ்வபோது அஸ்வத்தை சைட் அடித்தும் நேரத்தை கடத்தினாள். பார்த்தும் பார்க்காதது போல் அவன் அமர்ந்திருந்தாலும், என்ன சொல்லி இவளை சண்டைக்கு இழுப்பது என்று யோசித்துக்கொண்டே வந்தான். பின்னால் அமர்ந்திருந்த தேஜுவும் நிருவும் சண்டை போடுவதும் அடித்துகொள்வதுமாக வர, முன்னால் இருந்த இருவருக்குமே பொறாமையாக தான் இருந்தது.

“டேய் பாருடா இவளை என்ன எப்படி அடிக்குராள்னு என்னனு கேளு மச்சா...”

“இந்த பொண்ணுங்களே இப்படி தான்டா நம்மகூட சண்ட போடுறதே வேலை” என்று அனுவை பார்த்தவாறே கூறினான் அஸ்வத்.

தேஜுவுக்கு புரிந்து போனது, “யாரு நாங்க சண்டை போடுறோமா? நீங்க தான் சண்டை போடுற மாதிரி நடந்துக்குரிங்க... சொல்லு அனு..”

“அதானே நம்ம சொன்னா ஒத்துக்க மாட்டாங்க தேஜு... சண்ட போடுறதெல்லாம் இவங்க அப்பறம் நம்மளை கை காட்டுறது...”

“யாரு நாங்க சண்ட போடுறோமா? எப்போ நான் உன்கிட்ட சண்ட போட்டேன்” என்று ஒரேடியாக அனைத்தையும் மறந்து பேசினான் அஸ்வத்.

“எப்போவா??” என்று வாய் பிளந்து ஏதோ சொல்வதற்குள் அஸ்வத்தே ஆரம்பித்தான், “ஆமாம் சின்ன வயசுல கூட நீதான் என்கூட பேசலை...”

இதை கூறியதும் எங்கிருந்துதான் மனதிற்கு இதம் வந்ததோ இதழோர முறுவலுடன் “நீ கூடத்தான் நான் தொட்ட writing pad தொடவே மாட்ட...”

“நீ மட்டும் என்ன சின்ன சண்டையை பெருசாக்களை, எல்லார்கிட்டயும் இவன் என்கூட சண்ட போடுறான்னு சொல்லி திட்டு வாங்க வைக்கலை...”

“நீ கூடதான் நான் பர்த்டே அப்போ சாக்லேட் குடுத்தா வாங்கிக்கவே இல்லை, அப்போ எனக்கு கோவம் வராதா?”

“நீயும் தான் பாவம் போல எல்லா மிஸ்கிட்டயும் நடிச்சு எனக்கு அடிவாங்கி தந்த... அப்போ எனக்கு கோவம் வராதா?”

“சின்ன வயசை விடு, தேஜு அம்மா அப்பா வீட்டு functionக்கு வந்து நீ என்னை கோவப்படுத்தல..”

“நீ கூடதான் பதிலுக்கு சண்ட போட்ட... எல்லா சண்டையும் உன்னாலதான்..”

“உன்னால தான்”

“உன்னால”

“உன்னால...” என்று மாறி மாறி இருவரும் பேசிக்கொள்ள பின்னால் இருந்த இருவரும் தாங்க முடியாமல் சிரித்துவிட்டனர்.

அவர்கள் சிரிக்கவும் தான் இயல்புக்கு வந்தனர் இருவரும். தங்களின் செயல்களை நினைத்து இருவரும் சிரித்துகொள்ள, வெகுநாட்களுக்கு பிறகு மீண்டும் பிறந்த உணர்வு வந்தது அவளுக்கு, அவனிடம் விளையாட்டாக சண்டை போடாமல் இருப்பது இவ்வளவு பெரிய ஏமாற்றத்தை தருமா என்று அவளுக்கே அப்போது தான் புரிந்தது. அவனுக்கும் தான் பல நாட்களுக்கு பிறகு தன் அனு வெளியே வந்த உணர்வு.. இனி எல்லாம் மாறிவிடும் என்று தோன்றியது அவனுக்கு.

அதன் பின் நேரம் கொஞ்சம் நன்றாகவே கடந்தது. ஏதாவது சொல்லி தேஜு வம்பிழுக்க அதற்கு இருவரும் போட்டிபோட்டு பேச என்று நேரம் நன்றாக சென்றது.     

காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு... “என்னங்க கதவை திறங்க” என்று சமையல் அறையில் இருந்து கூறினாள் அஹல்யா.

கதவை திறந்தது எதிரே நின்றவர்களை பார்த்ததும் சந்தோஷத்தில் “ஹே...” என்று வாய்திரந்தவன் அஸ்வத்தும் அனுவும் வாய் மீது விரல் வைத்து காட்ட அமைதியானான். ரகசிய குரலில் “எங்க அக்கா?”

“உள்ள...” என்று சிக்னல் தர, அனுவும் அஸ்வத்தும் மெதுவாக சென்றனர்.

“வாங்க மாமா, அத்தை, வாங்கபா, அம்மா... என்ன எதுவுமே சொல்லாம திடிர்னு வந்து நிக்குரிங்க” என்று மெதுவாக பேசிக்கொண்டிருக்க, அவர்கள் இருவரும் மெதுவாக சென்றது வீணாக போவது போல் பக்கத்து அறையில் இருந்து வெளியே வந்த குட்டி விபுன், “அத்த.... அனு அத்த...” என்று கத்திக்கொண்டே அவள் காலை சேர்த்து கட்டிக்கொண்டான். அவ்வளவு தான் சமையல் அறையில் போட்டது போட்டபடி அஹல்யா வெளியே வந்து “ஹேய்ய்ய்ய் வா அனு, வாடா மாப்பிள்ளை...”

“அக்கா நீயுமா அஸ்வத்னு சொல்லுக்கா...”

“இன்னும் கொஞ்ச நாளைக்கு தான் மாப்பிள்ளைன்னு கூப்பிடுவோம் சந்தோஷ பட்டுக்க.. ஆமா வேற யாரு அப்படி கூப்பிட்டது?”

“வேற யாரு உன் தோழி அர்ச்சனா அக்காதான்...”

“ஒ... அவளை போய் பார்த்துட்டு வந்திங்களா? எங்க இன்னொரு மாப்பிளையை காணோம்?”

“எப்பா... எத்தனை கேள்வி அண்ணி கேட்பீங்க?? நிரு,தேஜு,ரவி அங்கிள்,லதா ஆன்டி எல்லாம் அர்ச்சனா அக்கா வீட்ல ஸ்டே... நாங்க இங்க ஸ்டே” என்று கூறிக்கொண்டிருக்க, வெளி அறையில் பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தது அப்போது தான் கேட்டது.

“உங்க எல்லாரையும் பார்த்து ரொம்ப நாள் ஆன மாதிரி இருந்தது, பொண்ணுங்களும் சென்னைல தான் நகை துணியெல்லாம் எடுக்கனும்னு சொன்னாங்க.” அதான் கிளம்பி வந்தாச்சு என்று கூறவும் அர்ஜுன் அஹல்யா குட்டி விபுன் அனைவருக்குமே மகிழ்ச்சி...

“டேய் எழுந்திரிடா, இவ்வளவு நேரம் தூங்கினா இந்த சென்னை கூட்டத்துக்கு எப்போ கிளம்பி எப்போ திரும்பி வரது” என்று நிருவை அடித்து எழுப்பிக்கொண்டிருந்தாள் அர்ச்சனா.

“அக்கா.... கொஞ்ச நேரம் அக்கா ப்ளீஸ்...”

“உதய் வாங்குவ எழுந்திரி..”

“அக்கா நைட் தூங்கவே இல்லை...”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.