(Reading time: 13 - 25 minutes)

 

ங்க அம்மானு வந்த ஆவி அந்த சீக்ரெட் கப்போர்டை காண்பிச்சு கொடுத்தது...அப்படித்தானே.....” எதையோ விளக்கும் தொனியில் சொன்னான் அபிஷேக்.

“ஆமா...அதனால?....ஓ..அப்படின்னா அது எங்க அம்மாவாத்தான் இருக்கும்னு நினைக்கீங்களா...?  ஆனா செத்து ஆவியானதும் தான் எல்லா ஆவிக்கும் எல்லாம் தெரிஞ்சிடுதே...எமிலிக்கு சென்னைல நம்ம வீடு, ப்ரியத்தம் வீடு எல்லாம் தெரிஞ்சிருந்ததே...அதேமாதிரி இந்த கப்போர்ட் உங்க அம்மாவுக்கும் தெரிஞ்சிருக்கும்....நம்மள ஏமாத்த இப்படி ட்ரிக் செய்திருப்பாங்க.... ”  தன் நிலையிலேயே நின்றாள் தயனி. காரணம் அவளால் தன் அம்மாவை கருக்கலைப்பு செய்ய சொல்லுபவராக நம்ப முடியவில்லை.

“ஆவிகளுக்கு எல்லாம் தெரியும்னா உன் மரகத வீணையை என் அம்மான்னு வந்த ஆவி நம்ம பெட் ரூம் சேஃபில் எதுக்கு தேடனும்...நீ மரகதவீணையை உன் தலையில  மறச்சு வச்சிருக்கன்னு அதுக்கு ஏன் தெரியல...? “

அதிர்ந்து போய் பார்த்தாள் தயனி.

“அப்படின்னா...?...” இதுக்கு எந்த விளக்கமும் அவளுக்கு புரிபடவில்லை. இதுவரை இவள் இதை இந்த கோணத்தில் யோசிக்கவே இல்லை  “இதுக்கு என்ன அர்த்தம் அபிப்பா...? பரிதாபமாக கேட்டாள்.

“ஏதோ ஒரு விஷயம் உன்னை குழப்ப டிரை பண்ணுது தயனிமா...குழப்ப,  பயம் காட்ட....அதுமட்டும்தான் அதால முடியுது... வேற எதுவும் அதால முடியல...உயிரோட இருந்தப்பவே என் அம்மா உன்னை கொல்ல டிரைபண்ணாங்க...செத்த பிறகு ஆவிக்கு அதிக பலம் சக்தியெல்லாம் வந்துடும்னா இந்நேரம் அவங்க உன்னை என்ன வேணும்னாலும் செய்திருக்கலாம்..

.குழந்தைய கருகலைப்பு செய்ய சொல்லி உன்ன கன்வின்ஸ் செய்ய இத்தனை வேஷமெல்லாம் போட்டுகிட்டு இருக்க வேண்டாம்...அவங்களே செய்திடலாமே...

அதோட எங்கம்மா ஒருத்தர்...அவங்களுக்கு எதிரா என் அப்பா, எமிலி, உன் அம்மா...இப்படி ஒரு படையே இருக்குது...இருந்தும் எல்லோரும் ஏன் உன்ட்ட வந்து கெஞ்சிகிட்டு இருக்காங்க...அவங்களே என் அம்மாவை டீல் செய்யலாமே..

என் அப்பா உடம்பை இறந்த பிறகும் ரூமுக்குள்ள போட்டு அடைச்சு வச்சிருந்ததால அடைபட்டு கிடந்ததா என் அப்பானு ஒரு ஆவி வந்து சொல்லிச்சுல்ல... எங்கப்பா உடலை  எங்கம்மா பூட்டி வச்சிருந்தது உண்மைதான்...ஆனா என் அப்பா ஆவியாகவும் என் அம்மா மனுஷியாகவும் இருந்தப்ப..ஆவிங்கிற பவரை வச்சுகிட்டு என் அப்பா ஏன் வெளிய வரலை, ஏன் உன்னை காப்பாத்தலை...?

உன் அப்பாவுக்கு என் அம்மா ஃஸ்லோ பாய்ஷன்....சாரிடா.....” ஃப்ளோவில் தன் மன ஓட்டத்தைச் சொன்னவன்  திக்கி நின்றான்...மனைவியின் மனம் அடுத்து என்ன வேதனைப்படும் என அவனுக்குத் தெரியுமே...!

“என் அம்மாவோ, எமிலியோ இப்படி நினைச்ச இடத்துக்கு வரமுடியுற மாதிரி இருந்திருந்தாங்கன்னா நிச்சயமா எங்கப்பாட்ட உங்கம்மா சதி பத்தி சொல்லி எங்கப்பாவ காப்பாத்தி இருப்பாங்க...கண்டிப்பா காப்பாத்திருப்பாங்க....” அழுகையினிடையே சொன்னாலும் தயனிக்கும் அவன் சொல்ல வந்த உண்மை தெளிவாகவே புரிந்தது.

“இப்போ என் குழந்தைய கொல்ல சொல்லி  ஆயிரம் காரணம் ஓடி வந்து சொல்ற இந்த ஆவிங்க...அன்னைக்கு ஏன் உங்கம்மா சதிய வெளிப்படுத்த வரல...

இதுங்க எல்லாம் பொய்....பிசாசு......” தன் புலம்பலை நிறுத்தியவள் கேட்டாள்

நீங்க சொல்ல வந்ததை முழுசா சொல்லுங்க அபிப்பா...”.அவன் மார்பில் இறுக்கமாய் புதைந்தாள்....

“சோ எனக்கு புரிஞ்சவரை இது எதோ டிராமா...  இதுல ஃஸ்பிரிஷுவல் வேர்ல்டு இன்வால்வாகி இருக்குது தான்...அதுக்கு என்ன செய்றதுன்னு பார்ப்போம்...ஆனா அதுங்க சொல்றதை நம்பாத...உன்னை நம்ப வைக்கதான் அதுங்க டிரைப் பண்னுது... ஆக இதை நம்பிட்டன்னா அதுங்க ப்ளான் ஜெயிச்சிடும்....” தான் சொல்ல வந்ததை சொல்லி முடித்துவிட்டது போல் நிறுத்தினான் அவன். அவசரமாக அவன் மார்பைவிட்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.

“நான் கண்டிப்பா அபார்ஷன் செய்ய மாட்டேன் அபிப்பா....” வேகமாக சொல்லியவள் சொன்ன பின் உணர்ந்து மெல்ல திரும்பி அவன் முகம் பார்த்தாள்.

இம்முறை அவள் பார்வை விழி மொழி எல்லாம் மாறி இருந்தது. வெட்கம் ஆசை எதிர்பார்ப்பு எல்லாம் கலந்த கலவையாகி இருந்தாள்.

“நமக்கு பாப்பா வரப்போதா அபி..?” தன் வயிற்றின் மேல் கை வைத்துக் கொண்டாள்.

தாய்மையும் குழந்தைத்தனமும் ஒர் முகம் தங்குமா? தயனி அப்படித்தான் தெரிந்தாள் கொண்டவன் கண்ணுக்கு.

அருகில் தெரிந்த அவள் கன்னத்தில் ஒரு பாச முத்தம்.

 “இருக்கலாம்...” மென்மையாய் சொன்னான் அபிஷேக். “இன்னும் ஒன் வீக் போகட்டும் கன்ஃபார்ம் செய்துகிடலாம்.”.

“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது அபிப்பா..” துள்ளியது அவள் மனது.

அவன் முகத்தைப் பார்த்தால் அதில் இவள் கொண்ட அளவு சந்தோஷம் இல்லை. ஏன்?

“என்னாச்சு அபி...?”

“இந்த சூழ்நிலையில குழந்தை ...நீ எப்படி ஹண்டில் செய்ய போறன்னு தெரியலை...சீக்கிரமா இந்த ஃஸ்பிரிஷுவல் ட்ரபுல்க்கு சொலுஷன் கண்டு பிடிக்கனும்....” அவன் முகத்தில் தவிப்பு தெரிந்தது.

“நான் சொல்றேன்னு தப்பா எடுத்துகிடாதீங்க அபிப்பா...உங்க அம்மா மேல உள்ள கோபத்தில இதை சொல்ல்லை.....ஆனா எதோ ஒரு வகையில் இந்த ப்ரச்சனைக்கு உங்க அம்மா காரணம்னு தோணுது...அவங்க உண்மையில் என்ன எதிர் பார்த்தாங்க ஏன் இப்படில்லாம் செய்தாங்கன்னு தெரிஞ்சா ஒருவேளை இந்த ப்ரச்சனைக்கும் விடை கிடைக்கலாம் இல்லையா....?” தயனி கேட்க

மறுநாள் அபிஷேக்கின் அம்மா வாழ்ந்த வீடு அதாவது தயனியை அவர் அடைத்து வைத்து பாடாய் படுத்திய வீட்டிற்கு செல்லலாம் என முடிவு செய்தனர் தம்பதியினர். உண்மை அறிய எதாவது வழி கிடைக்குமா???

ஜெபம் செய்துவிட்டு தூங்கவென படுத்தனர்.

தயனியின் மொபைல் சிணுங்கியது. இத்தனை மணிக்கு யார்?  அழைப்பு சுகந்தினியிடமிருந்து.

சில நிமிடங்கள் தயனியும் சுகந்தினியும் பேசிக் கொண்டனர்.

பேச்சை முடித்து கணவன் அருகில் வந்த தயனியின் முகத்தில் சற்று முன்னிருந்த தாய்மை குழந்தைத்தனம் எல்லாம் போய் மொத்தமாய் குடிவந்திருந்தது வெட்கம். பருவம் கொண்டாடியது பெண்மை.

“என்னாச்சு...தயூ..”

“அது ...வந்து...அது..எப்படி சொல்லனு தெரியல..?”

“விஷயம் சொல்லாமலே புரியுது...ஆனா ஏன்னு தான் புரியல..” அவனின் முகத்தில் அவளுக்கு துணைபோகும் ரசம்.

“அது... ரொம்ப நாள் ஹஃஸ்பண்ட் அண்ட் வைய்ஃப் சேராம  இருக்க கூடாதாம்....அது டெவில்க்கு ஃபூட் ஹோல்டாம்...அப்படின்னு..”

அதற்கு மேல் அங்கு விளக்கம் ஏதுமில்லை.

சுகம் சுகமே.               

பிஷேக் நடந்து கொண்டிருந்தான். எங்கு போகிறான்?  கருமை படிய தொடங்கிய மாலை நேரம். அத்தெருக்கள் அவனுக்குப் புதியவை.

சாம்பல் நிற மண். அதே நிற மண் சுவர்கள். கடைத் தெருக்கள் போலும். முட்டுக்கும் கீழாக தொங்கும் பலவர்ண அங்கிகள் அணிந்த ஆண்கள். சிலர் கழுதையின் மேல் பயணிக்கின்றனர். சிலர் கழுதையை நடத்திக் கூட்டிக் கொண்டு. பழங்காலம் போலும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.