(Reading time: 20 - 40 minutes)

 

" ஹே வைட் வைட்.. பொதுவா இந்த மாதிரி சீனுக்கு பால் கொடுத்து அனுப்புவாங்களே எங்கடீ ? " என்றான் .. அவன் கேட்டப்போதுதான் அவளும் அதை உணர்ந்தாள் ..திருதிருவென விழித்துக் கொண்டே

" அச்சோ ... கிச்சன்லையே இருக்கு கண்ணா .. மறந்துட்டேன் " என்றாள் ... அவனோ மீசையை முறுக்கிக் கொண்டு

" கிறுக்கு பயபுள்ள எப்போ பார்த்தாலும் மாமன் நெனப்புலேயே எதாச்சும் மறந்துட வேண்டியது " என்று சொல்லி கண்சிமிட்டினான்...

" வெவ்வெவ்வெவ்வெவ்வெ  நெனப்புத்தான் பொழப்பை கெடுக்குது உங்களுக்கு .. எல்லாம் இந்த நித்துவால  வந்தது .. "

" ஏன் என்னாச்சு ??"

" என்ன ஆச்சா ? நீங்க பாட்டுக்கு ஹாயா இங்க வந்துட்டிங்க .. அவ என்னை அலங்காரம் பண்றேன்னு சொல்லி எப்படி ஓட்டினா  தெரியுமா ? " என்று சொல்லி அதை நினைவு கூர்ந்தவளின் முகம் மீண்டும் சிவந்தது ..

" அஹா ... என்னமா வெட்கப்படுறா என் பொண்டாட்டி " என்று சொல்லி சிரித்தான் கிருஷ்ணன் .. அவன் அவளை " பொண்டாட்டி " என்று இதற்கு முன்பும் அழைத்திருக்கிறான்தான் ... ஆனால் இன்று முழு உரிமையோடு அழைக்கிறான் அல்லவா ? அந்த அழைப்பு அவள் மனதை சிலிர்க்க வைத்தது .. சேமித்து வைத்த காதல் உள்ளம் துள்ளி குதிக்க, மின்னும் விழிகளுடன் அவனை நோக்கினாள்  மீரா .. அதற்குமேல் பேச ஏதுமில்லை என்று உணர்ந்தவனாய் அவளை கைகளில் ஏந்தி சந்தோஷத்தில் சுற்றினாள் .. அவன் கழுத்தை கட்டிக் கொண்டவளோ உலகையே வென்ற பெருமிதத்தில் இருந்தாள் .. அவன் கன்னத்தில் தன் முத்தத்தை பதித்தாள்  அவனது மனைவி ...அவளின் ஸ்பரிசம் அவளது காதலையே பறைசாற்ற, தானும் அவளை அதிகமாய் காதலிப்பதை ஸ்பரிசத்திலேயே பதிலாய் சொன்னான் கிருஷ்ணன் .. கிருஷ்ணன் மீராவின் காதல் பயணம் திருமண பந்தத்தின் துணையோடு அடுத்த கட்டத்திற்கு சென்றது ..

( ரகுராம் - ஜானகி )

ந்த அறைக்குள் வெட்கத்துடன் நுழைந்த ஜானகி, அங்கு ரகுராமை தேடினாள்  ... பார்வையை அங்கும் இங்கும் சுழலவிட்டவள்  அருகில் இருந்த நாற்காலியில் அவன் அமர்ந்திருப்பதை பார்த்து அவனருகில் வந்தாள் .. இளமஞ்சள் நிறத்தில், புதிதாய் அவன் அணிவித்த தாலி ஜொலிக்க, கண்களை வெட்கத்தையே ஏந்தி அவன்முன் நின்றாள்  ஜானகி ..

அதுவரை ஏதேதோ சிந்தனையில் இருந்து முடிவெடுத்துவிட்டு அவள் புறம் திரும்பியவன் சட்டென மயங்கியே விட்டான் .. அவன் எடுத்த முடிவுகளோ " ஹா ஹா நீ ஓவரா யோசிக்கும்போதே நெனச்சேன்டா  என்னை மறந்திடுவேன்னு .. போடா நீயும் உன் முடிவும் " என்று பரிகாசித்து விட்டு சென்றது .. அப்படி என்ன முடிவு ? அதை அவனே சொல்வான்  கேட்போம் வாங்க ...

" சகீ "

" ம்ம்ம்ம்ம் "

" சான்ஸ் ஏ  இல்ல .. ரொம்ப அழகா இருக்க " அவனின் பாராடுதளுக்கு வெட்கபுன்னகையால்  பதில் தந்தாள் அவனது மனையாள் .. அவளின் மௌனத்தை தவறை புரிந்துக் கொண்டான் ரகுராம் .. ( அதானே என்னாடா எல்லாம் கை கூடி வந்ததும் பாஸ் ரொம்ப தெளிவா ஆகிட்டாறேன்னு நெனச்சேன் ...இருங்க பாஸ் உங்களை நம்ம பஞ்ச பாண்டவர் டீம் கிட்ட மாட்டி விடுறேன் )

" ஜானும்மா " என்றான் கனிவுடன் .. அவன் குரலில் ஏதோ வித்தியாசத்தை கண்டு நிமிர்ந்து பார்த்தாள்  ஜானகி .. அவளது விழி பார்த்து அவனால் பேசவே இயலவில்லை .. அவளுக்கு முதுகு காட்டி திரும்பி கொண்டான் ரகுராம் ..

" ஜானும்மா என்னை பொருத்தவரை திருமணம் முதலில் இரு மனங்களின் சங்கமம் .. அதன் பிறகுதான் மத்த எல்லாமே "

( அதான் நாம் மனத்தால் இணைந்துவிட்டோமே ) என்றாள்  மனதிற்குள் ..

" நாம மனதால்  இணைந்துட்டோம்தான் .. ஆனா "

( ஆனா ? )

" நான் எப்பவும் உன் மனசு கஷ்டபடாமல்  உன்னை  பார்த்துக்கணும்னு  விரும்புறேன் .. நம்ம ஒவ்வொரு முடிவிலும் சரி செயலிலும் சரி உன் சம்மதம் வேணும் எனக்கு "

( சரீ ...???)

" உனக்கு இதில் இஸ்டமா டா ?? அதாவது நீ இனி கல்யாணம் வேணாம், வாழ்க்கையே இல்லன்னு இருந்த.. நான் சொல்லி காட்டலை டா .. ஆனா ஒருவேளை மனதளவில் நீ இதை பத்தி எல்லாம் நினைக்காமல் இருந்திருந்திருக்கலாம்  .. இப்போ இந்த கல்யாணமும் நம்ம இணைதலும் உன் மனசுக்கு ரொம்ப சீக்கிரமா நடக்குற மாதிரி  இருக்கலாம் .. உனக்கு ஏதும் டைம் தேவ பட்டா " என்றவனுக்கு என்ன சொல்லி முடிப்பது என்றே தெரியவில்லை ..

ஜானகியோ அவனை விந்தையாய் பார்த்தாள் .. எங்கிருந்து வந்தான் இவன் ? இப்படியும் ஒரு ஆண்மகனால் இருக்க முடியுமா ? காதல் தொடங்கிய தினம் முதல் இன்றுவரை தன்னையே அனைத்திலும் முன்னிறுத்தி தன் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுத்து இருக்க முடியுமா ? எத்தனையோ திருமணங்களில்  இதற்கு முன்பு பார்த்திராமல் இருந்து சட்டென கணவன் மனைவியாய் மாறியவர்கள் கூட அடுத்த நாளிலே தாம்பத்ய உறவை தொடங்கி விடுகின்றனர் .. இதில் உனக்கு விருப்பம் இருக்கிறதா என்று கணவன் கேட்பதும் இல்லை .. கேட்க வேண்டும் என்ற விதிமுறையும் இந்த உறவுக்கு இல்லை .. இதயம் இணையும்முன்னே சரீரத்தால் இணைந்தவர்களும் உண்டு .. ஆனால் இதயம் இணைந்த பிறகும் இதற்கு அனுமதி கேட்கும் ஆண்மகன் உலகில் இருக்கிறான் என்று இதுவரை யாரும் சொல்லி இருந்தால் அவள் நிச்சயம் நம்பி இருக்க மாட்டாள் .. ஆனால் இன்றோ அவளின் கணவன் இருக்கிறான் கண்முன்னே .. பெருமையும் காதலும் போட்டிபோட்டு அவளின் எண்ணங்களை விழித்தெழ வைக்க, அவனை பின்னாலிருந்து கட்டிக் கொண்டாள்  ஜானகி .. அவளின் சூடான கண்ணீரில்விடுக்கென திரும்பி

" அச்சோ என்னடா ?" என்று அவன் கேட்க, சட்டென சிரித்தவள்  , அவனது இதழ்களை சிறைபிடித்து அவனது தேவையற்ற கவலைக்கு முற்றுபுள்ளி வைத்தாள் ... காதல் குரு பாடங்கள் கற்றுத்தர, இணைந்து விட்டனர் இருவரும் மாணவர்களாய் .. இனி வாழ்வெங்கும் வசந்தம் வீசட்டுமே !

( அர்ஜுன் - சுபத்ரா )

விட்டால் பொதும் அப்பா என்பதுபோல பெருமூச்சுடன் அங்கு வந்த சுபத்ராவை வரவேற்றது அந்த பூக்கள் தான் .. அவர்களுக்காக இருந்த அந்த அறையில் வாசலில் பூக்களால்  பாதை அமைத்திருந்தான் அர்ஜுனன் .. அந்த பூக்களுக்கு வலிக்குமோ என்று முகத்தை சுருக்கி கொண்டே மெல்ல அடி எடுத்து வைத்துக் கொண்டே நடந்துவந்தவளை  இடைவரை குனிந்து

" வாங்க இளவரசி " என்று வரவேற்றான் அர்ஜுன் .. அவனை பார்த்ததுமே மனதிற்குள் துள்ளி குதித்தாள்  சுபத்ரா .. அவர்களது திருமணத்தில் அவள் ஆசைபட்ட அனைத்தையுமே  ஏற்பாடு செய்து வைத்திருந்த தனது ஆசை கணவனை பாராட்டி தன் மகிழ்ச்சியை தெரிவிக்க தனிமையை தேடிக் கொண்டிருந்தாள் அவள் .. ஆனால் நம்ம மித்ரா,மது , மீனு போன்ற ஜகஜால கில்லாடிகள் இருக்கும்போது இது சாத்தியமா என்ன ?  அதனால்தான் இரவுவரை காத்திருந்தவள் அந்த அறைக்கு வந்து அவனை பார்த்ததுமே துள்ளி குதித்தாள் ...

" அஜ்ஜு  " என்று ஓடி வந்தவள் அவனது கழுத்தில் பூமாலையாய் கரங்களை கோர்த்து விழிநோக்கி " எல்லாத்துக்கும் தேங்க்ஸ் " அஜ்ஜு  என்று சொல்லி அவனது கன்னத்தில் இதழ் பத்தித்தாள் .. தனக்கு முதல் பரிசை தந்தவளின் இதழை  விரல்களால் வருடிக் கொண்டே " உனக்கு தேங்க்ஸ் கூட சரியா சொல்ல தெரில குட்டிமா ... இப்படியா கன்னத்தில் முத்தம் கொடுப்பாங்க " என்று சொல்லி கண்சிமிட்டினான் ..

"ச்சி  போங்கப்பா " என்றவள் அழகாய் முகம் சிவந்தாள் ...

"அடடா என் இளவரசி எவ்வளோ அழகா இருக்கா, உன் அழகி ஜாஸ்தி பண்ணுற மாதிரி .. உன்னை சந்தோஷபடுதுற  மாதிரி ஒரு விஷயம் சொல்லவா ? "

" என்ன ??"

" சென்னைக்கு போனதும் நானும் அம்மாவும் உன்னோடவே அங்க வீட்டுல ஒண்ணா இருக்க போறோம் "

" அப்படின்னா ?"

" மக்கு இளவரசி .. அப்படின்னா நீ உன் வீட்டை விட்டுட்டு தனியா வரவேண்டாமே " என்று மிருதுவாய் புன்னகைத்தான்  அர்ஜுனன் .. அவனின் பதிலில் அதிர்ந்துதான் போனாள்  சுபத்ரா ..

" ஆச்சு  ..நே ... நேத்து ???"

" நேத்து நீ பேசினதை நானும் கேட்டேன் டா கண்மணி " என்றான் அர்ஜுனன் .. அப்படி என்னதான் நடந்தது .. நம்ம சுபத்ர பண்ணின லூட்டினு சொன்னேனே அது இதுதான் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.