"என் செல்ல அம்மால சாரிம்மா...."
"போதும் நீ செல்லம் கொஞ்சினது... பிரியா போன் செய்து சொன்னா, நீ செஞ்சதும் நல்ல காரியம் தான். ஆனால் ஒரு போன் செய்து சொல்லி இருக்கலாம்..."
"அப்போ அவங்க எல்லாம் வலில அலறிட்டு இருந்தாங்க அம்மா, எப்படி நான் உட்கார்ந்து...."
"புரியுது விடு... ஆமாம் நீ ஆபிஸ் போக போறேன்னு பிரியா சொன்னாள்"
"அப்படி தான் நினைச்சேன், என் அம்மா, அப்பா, தங்கை கோபமா இருக்காங்களே சமாதானம் செய்யலாம்னு வொர்கிங் ப்ரம் ஹோம்ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்..."
"இப்படியே செய், ஒரு நாள் ஹோம்லேயே இருன்னு அனுப்ப போறாங்க...."
"ஹி ஹி... அதெல்லாம் நான் மேனேஜ் செய்துப்பேன் அம்மா.... ஆமாம் வர்ஷா எங்கே?"
"அவளுக்கு இன்னு
...
This story is now available on Chillzee KiMo.
...
n>னும் அப்பாவும் ஊருக்கு கிளம்பலாம்னு இருக்கோம் விக்கி. மதியம் கிளம்புற பஸ்ல டிக்கட் கிடைக்குமான்னு பாரேன்"
ஏதோ யோசனையுடன் இருந்த விக்கி ஆயிரம் வாட்ஸ் பிரகாசத்துடன் நிமிர்ந்து பார்த்தான்.
"என்னம்மா திடீர்னு? என்னை இங்கே விட்டுட்டு அங்கே போய் என்ன செய்ய போறீங்க?" என்றாள் வர்ஷா.