(Reading time: 20 - 39 minutes)

 

றையில் வாக்கு வாதம் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. யார் குரல் ஓங்கி ஒலித்திருக்கும் என உங்களுக்கு இதற்குள் புரிந்திருக்கும்.

“உங்க ரெண்டாவது பொண்ண வரச்சொல்லுங்க...ஐ’ல் மேரி ஹெர்..” சத்தமாக அறிவித்தான் கவின். ஸ்தம்பித்தது சபை ஒரு நிமிடம்.

“நோ...கவின்...இவங்க கட்டாயத்துக்காக...”

அவன் தந்தை மனோகரன் மறுக்க தொடங்க

“இல்லப்பா...எந்த கட்டாயமும் இல்ல...பட் ஐ’வ் டிசைடட்...”

சில பல கசமுசாக்களுக்கு பின் ஒருவாறு திருமணம்.

மண அறைக்கு  தங்க நிற புடவை அதில் தாமரை வர்ண பார்டர். அதற்கேற்ற கற்களுமாக படோபடமான உடை, நகை கடையை தோற்கடிக்கும் நகை என வந்து சேர்ந்தாள் மணப்பெண். உருவத்தில் இன்னொரு மிர்னா. மிர்னாவின் ட்வின் சிஸ்டர்.

முக்காடிட்டு மறைக்கபட்டிருந்த முகத்தில் மகிழ்ச்சியை தவிர அனைத்து உணர்வுகளும் இடம்பிடித்திருந்தன.

முறைப்படி அத்தனை விருந்தினர்களும் எழுந்து நிற்க அந்த ஹாலுக்குள் அவள் தன் தந்தையுடன் நுழைய, திரும்பி பார்த்த கவின் அவளை நோக்கி சென்று அவள் கைபற்றி  மணமேடைக்கு அழைத்துச்சென்றான்.

அவள் கண்களிலிருந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீர் அந்த முக்காடையும் தாண்டி தெரிந்தது அவன் கண்களுக்கு.

திருமண உடன்படிக்கை. இருவரும் சம்மதிக்க, இப்பொழுது அவள் திருமதி. வேரி கே.சத்யா.

உடன்படிக்கை முடிந்து முறைப்படி அவளை மண அரங்கத்தை விட்டு கை பிடித்தபடி வெளியே அழைத்துச் சென்றவன் மணமகளின் அறையை நோக்கி நடந்தான். அவனோடு அவளும். மௌனமாயிருந்தது உதடுகள் மட்டுமே.

அறைக்குள் அவனோடு நுழைந்தவளுக்கு அவன் அங்கிருந்த சோஃபாவை காண்பிக்க சென்று அமர்ந்தாள் வேரி.

“நமக்கு மேரேஜ் ஆயிட்டுது...”அறிவிப்பு போல் வந்தது கவினின் வார்த்தைகள்.

இதற்குள் அறைக்குள் அனுமதியின்றி உள்ளே வந்தனர் அவளது பெற்றோர்.

அறையை விட்டு, அவளை விட்டு வெளியேறினான் அவன்.

“மாப்பிள்ள... “ வேரியின் பெற்றோரின் அழைப்பு காற்றோடு கரைந்தது.

மிரண்டு போய் பார்த்தாள் வேரி.

தன் காரை எடுத்துக்கொண்டு பறந்தான் கவின்.

பழி வாங்கிவிட்டான். இவள் குடும்பத்தால் அவனுக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு, இவள் அம்மாவின் அத்து மீறிய கொத்தும் வார்த்தைக்ளுக்கு பதில் செய்துவிட்டான்.

அவன் புத்திசாலி. இவள் பலியாடு.

விக்கித்து நின்றாள் புது மணப் பெண்.

பி.கே வா...? அப்படின்னா...?”

ஆங்...அதெல்லாம் உங்கட்ட சொல்லிட்டுதான் வேற வேல பார்ப்போம்..போங்க போங்க போய் வேலய பாருங்க...”

சிறு சிரிப்புடன் அவளைப் பார்த்த வியன்  பாறையில் நகர தொடங்கினான்.

ஷோ ஸ்டாப்பர இப்படி செருப்பில்லாம நடக்க வச்சிட்டியேடா....பிகே...

அந்த செங்குத்து மலையில் பல்லியாய் அப்பி, காலுக்கு கீழ் ஒடிய 15 செமீ அகல குறுக்கு பாறையில்  மெல்ல மெல்ல அவன் கால் வைத்த இடத்தில் கால் வைத்து, அந்த செங்குத்து மலையில் அவன் கை பற்றிய இடத்தில் கை பற்றி அவன் நகர நகர ஒவ்வொரு அடியாய் நகர்ந்து முன்னேற முன்னேற….

குளிரில் அவள் வெற்று பாதங்கள் மரக்கட்டை போல உணர்விளக்க தொடங்கின.

அடுத்த நொடி அவள் பின் பாதுகாப்பு கவசம் போல் படர்ந்தான் வியன். இப்பொழுதும் இவள் சுவற்றில் பல்லியின் நிலைதான் கொண்டிருந்தாலும், இவளது இரண்டு கைகளும் அவன் கைகளுக்கு நடுவில். அதே போல் இவள் பாதங்கள் அவன் பாதங்களுக்கு நடுவில். முழு உடலோ இவளுக்கு நேர் பின்னாக அவன்.

அவன் அவளை சூழ்ந்திருப்பதை உணர முடிந்தது. ஆனால் கண்ணியச்சூழல்.

ஒன்றன் பின் ஒன்றாக இவள் பாதங்களை தன் பாதங்கள் மேல் ஏற்றினான். மெல்ல மெல்ல நகர தொடங்கினான். இப்பொழுது இவளை சுமந்து கொண்டு அவன் நகர்ந்தான்.

வாலிப ஆணின் தொடுகை, அவனது சரீரத்தின் அருகாமை, இரவும் குளிரும் நிலவும் ஒரு இளம் பெண்ணின் மனதில் எதையெல்லாம் ஏற்படுத்த முடியும் என உலகம் சொல்லிக்கொண்டு இருக்கிறதோ அது எதையும் மிர்னாவிடம் ஏற்படுத்தவில்லை வியனின் இச்செயல். பயம், வெறுப்பு, காதல், ஆசை இப்படி எதையும் கொண்டு வரவில்லை அது.

ஆனால் அவளுக்குள் நிகழ்ந்தது வேறு. மூச்சை அடைத்து கொண்டு வருவதுபோல் ஆரம்பித்த அந்த உணர்வை அவளால் முதலில் இனம் காணமுடியவில்லை அது என்ன உணர்வென்றே.

பெரும் பெரும் மூச்சுகளை வெளியிட்டு, மனதிற்குள் அவ்வுணர்வு  ஒரு அழுத்தத்தை உண்டு செய்திருக்கிறது என முதலில் உணர்த்தியது சுவாசம். தொடர்ந்து பிறந்த விம்மலின் தொடக்கத்தில்தான் அவளுக்கு வெடித்துக் கொண்டு அழுகை வருகிறதென்றே புரிந்தது. காரணம் அவள் மனம் ஸ்பரிசித்தது அவன் தொடுகையை அல்ல. அவனது அக்கறையை.

மிர்னாவின் இத்தனை காலவாழ்க்கையில் இது முதல் அனுபவம். ஒரு மனித உயிர் அவள் மீது அக்கறைப் படுவதும் அதை அவளிடம் வெளிப்படுத்துவதும்.

இவள் பிறந்த பொழுதே இரட்டைப்பிறவி. இருவரை தனியாளாக பார்க்கமுடியாதென அம்மா இவளையும், பாட்டி வேரியையும் பாகம் பிரித்துக் கொண்டனர்.

அம்மாவும் பாட்டியும் ஒத்துபோன ஒரே விஷயம் இவள் வேரியை விட அழகென்பதில் தான். ஐடென்டிகல் ட்வின்ஸில் அப்படி என்ன வித்யாசத்தைக் கண்டுவிட்டார்கள் என இவளுக்கு இந்நாள் வரை புரியவில்லை.

அம்மா இவளை தன்னோடு வைத்துக் கொள்ள விரும்பிய ஒரே காரணம் அந்த அழகு தான் என்பது பாட்டியின் பேச்சின் சாரம்சம். அதை பலதடவை உறுதி படுத்தி இருக்கின்றன அம்மா நடந்துகொண்ட விதம்.

பாட்டியுடன் வேரி எப்பொழுதாவது மதுரையில் உள்ள இவள் வீடு வரும் போதும், இவள் அதிசயத்தில் அதிசயமாக பாட்டி வீடு செல்லும் போதும், பாட்டி இவளிடம் வெளிப் படுத்தியதெல்லாம் கோபமும் எரிச்சலும் தான்.

வேரியோடு ஒப்பிட்டு அவள் அப்பாவி இவள் காரியவாதி என்பதாக இருக்கும் அவரது வார்த்தைகள். தலை கால் புரியாவிட்டாலும் அதில் இவள் மீது அக்கறையை காண முடிந்ததில்லை.

வீட்டில் அப்பாவை பார்க்க முடிவது அதிசயம். உழைப்பதும்  அம்மாவுடன் சேர்ந்து குடும்பத்தின்  சமூக அந்தஸ்த்தை பாதுகாக்க வேஷம் போடுவதிலுமே அவர் நேரம் முடிந்து போய்விடும்.

அம்மாவிற்கு அடுத்தவர்களிடம் இவளைப் பற்றி பெருமை பேச மட்டும் இவள் தேவை.

அடித்து கொடுமைபடுத்தி இவள் வளர்க்க படவில்லை எனினும் வாய் நிறைய பேசி பாராட்டி சீராட்டி, அறிவுரை ஆலோசனை கூறி இவளை வளர்த்தவரும் எவரும் இல்லை.

தனிமையில் தனக்குள் பேசி, தன்னைத் தானே உற்சாகமூட்டி, தானே தனக்கான தோழியாய் துணையாய் இவள் மறிவிட்டதின் மூலகாரணம், இவள் வளர்ந்த சூழலும்..என்நிலையிலும் சந்தோஷமாக மட்டுமே இருக்கும் அவளது மனோநிலையும் தான்.

ஆனால் இன்றைய இந்த அக்கறை அவளுக்குள் இருந்த ஏக்கத்தை அதை அவள் மறைத்து ஒளித்து வைத்திருந்த மனதின் அடி ஆழத்திலிருந்து  தொட்டு தாக்கியது.  தொடங்கியது ப்ரளயம்.

வந்த விம்மலை வாயோடு நிறுத்தினாள்.

“ஆர் யு ஆல்ரைட்...?”  “குளிர்ல்ல இவ்ளவு தூரத்துக்கு மேல உங்களுக்கு கஷ்டம்னு தோணிச்சு...” வியன் நலம் கேட்பதுபோல் காரணம் சொல்ல

தலை மட்டும் திருப்பி அவன் முகம் பார்த்தாள். அவள் பார்வையில் என்ன புரிந்தானோ?

மீண்டுமாய் பாறைப் புறமாக திரும்பிக் கொண்டாள்.

அடுத்து இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

பின் இருபதுகளிலோ, முன் முப்பதுகளிலோ மிர்னா இருந்திருந்தால் வியனின் செயலிற்கும் தன் மனதின் அலையடிப்பிற்கும் உள்ள தொடர்பை ஒருவேளை  உணர்ந்து, இது தான் வளர்ந்த விதத்தின் பின்விளைவு என ஒரு முடிவிற்கு வர வாய்ப்பிருந்திருக்கலாம். வியன் மீது மரியாதை வந்திருக்கலாம்.

பதின் வயதுகளில் இருந்திருந்தால் தற்காலிக கிளர்ச்சி அலை தோன்றி அதை காதலென நம்பி இருக்கலாம். பின் நாளில் அது வெறும் இன்ஃபாக்ஷுவேஷன் என நிராகரிக்க பட்டிருக்கலாம்.

ஆனால், குழந்தை உள்ளமும் தான் குமரி என்ற எண்ணமுமாய் இருக்கும் மிர்னா போன்ற 21 வயதில் , ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காதல் எற்படும் என்பதைத் தவிர, காதலை பற்றியோ ஆணை பற்றியோ எதுவும் அறியாத பொண்ணுக்கு என்ன தோன்றும்?

இவன் நல்லவன். என் வாழ்க்கைக்கும் துணைவனாக வர தகுதி உள்ளவன் என்று தோன்றலாம்..

அந்த எண்ணத்திற்கு காரணம் நிச்சயமாக காதலோ அல்லது வெறும் கிளர்ச்சியோ  இல்லை எனினும், இவன் என் வாழ்க்கைத்துணை என்ற அந்த ஒற்றை நினைவு போதும் ஊர் கொள்ளா உலகு கொள்ளா உணர்வு அலைகளை உள்ளத்தில் கொண்டு வந்து கொட்ட.

இதில் மிர்னாவுக்கு என்ன நடந்ததாம்?

எதுவும் இல்லை.

மாறாக தனியாய் இருப்பதைவிட துணையோடு இருப்பது சுகம் என்ற ஒரு புரிதலை கொண்டு வந்தது அவ்வளவே.

இதுவரை அவள் தனிமையை உணர்ந்ததும் இல்லை...அதற்கு தீர்வு நாடியதும் இல்லை. கவினோடு திருமண பேச்சு வந்த போதும் திருமணத்தில் தனக்கு என்ன நன்மை இருக்கும் என்று சிறு சிந்தனைகூட வரவில்லை அவளுக்கு. அதோடு அது வேண்டாம் என சொல்ல பெரும் காரணமும் இருந்தது. இன்னும் அந்த காரணம் அப்படியேத்தான் இருக்கிறது. ஆனால் இப்பொழுதோ தனிமையும் புரிகிறது. நல்ல துணை இருந்தால் வாழ்க்கை சுகமாய் இருக்கும் என்ற எண்ணமும் வருகிறது. அப்படி ஒரு நிரந்தர துணையை பெற என்ன வழி என அலசும் மனதிற்கு திருமணம் முதன் முறையாக நல்லவிஷயமாக தோன்ற தொடங்குகிறது. 

அதைத்தான் சிந்தித்துக் கொண்டிருந்தாள் மிர்னா.

சில ஆயிரம் ஆண்டுகள் போல் தோன்றிய ஒரு மணி நேரத்தில் அவன் குறிப்பிட்டிருந்த அந்த சரிவை அடைந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.