(Reading time: 14 - 28 minutes)

 

கௌரி உடம்பைப் பார்த்துக்கோ.  நான் நாளைக்கு காலைல உங்க எல்லாரையும் பார்க்க வரேன்.  ரவியை அரெஸ்ட் பண்ணிட்டு போன் பண்றேன்”, என்று பாலு விடை பெற்று செல்ல, இன்ஸ்பெக்டர்கள் உள்ளே நுழைந்தார்கள்.

“இங்க பாருங்க, இந்த விபத்துல நிறைய அடி படலைன்னாலும், நாம இதை கொஞ்சம் ஹைப் பண்ணி சொல்லணும்.  பல்லி விழுந்தது அப்படிங்கறதை பாம்பு விழுந்தது அப்படின்னு சொல்ற எப்பெக்ட் இருக்கணும்.  உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கப்போற இந்த சமயத்துல விபத்து நடந்திருக்கறது, உங்களுக்கு சாதகமான விஷயம்,  இதை சொல்லியே மீடியாக்காரங்க உங்க சைடு மக்களை அனுதாபப் படவச்சுடுவாங்க”, என்ற இன்ஸ்பெக்டர் அவர்களிடம் மீடியா ஆட்கள் வந்தால் எப்படி பேச வேண்டும் என்று கூறித்  தயார்ப் படுத்த ஆரம்பித்தார். 

ரியின் நண்பன் மற்ற தொலைக்காட்சி நியூஸ் ஆட்களையும் கூட்டிக் கொண்டு வர, சிறிது சிறிதாக விஷயம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.  உடனுக்கு உடன் பிளாஷ் நியூஸ்ஸாக காண்பிக்கப் பட, அதி வேகமாக செய்தி பரவி, அந்த மினிஸ்டர் சார்ந்த கட்சியின் தலைவரை விஷயம்  சென்று அடைந்தது. 

இதற்கு நடுவில், ஆனந்தனும், ராமுவும் தாங்கள் பணத்தை இழந்ததால் அடைந்த கஷ்டங்களைப் பகிர அந்த நேரத்தில் பணம் கிடைக்காமல் இறந்தவருடைய மனைவி வந்து தான் பட்ட கஷ்டங்களை சொல்ல,  எதிர் கட்சி இதை நல்ல வாய்ப்பாகக் கருதி உடனடியாக மறு தினம் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய திட்டமிட ஆரம்பித்தது.

று நாள் காலை மினிஸ்டருக்கு சூனியமாகவும், பணம் போட்டவர்களுக்கு சந்தோஷமாகவும் விடிந்தது.

“நேத்து ராத்திரி அந்த ரவியை அரெஸ்ட் பண்ணிட்டாங்களாம்.  அந்த டிரைவரையும் பிடிச்சுட்டாங்க.  அவன் போனை செக் பண்ணினதுல கடைசியா ரவி நம்பர்லேர்ந்துதான் கால் போய் இருக்கு.  எங்க மாட்டப் போறோம்ங்கற  தெனாவட்டுல அவன் காரைக் கூட மாத்தாம அஜாக்கிரதையா  இருந்து இருக்கான்.   இப்போ எல்லாமே அந்த ரவிக்கு எதிராதான் இருக்கு.  மினிஸ்டர் சப்போர்ட்டும் இல்லை.  அவன் வெளில உடனே வர்றது கஷ்டம்தான் நினைக்கறேன்”, பரபரப்புடன் செய்தியை அனைவரிடமும் சொன்னார் பத்து.

“ரொம்ப சந்தோஷமா இருக்கு சம்மந்தி.  அவன்கிட்ட இருந்து நாளைக்கே பணம் வரும்ன்னு நான் எதிர்பாக்கலை.  ஆனால் நாங்க மனசளவுல பட்ட கஷ்டத்துல கால் வாசியானும் அவனும் அனுபவிக்கனும்”

ராமன் சொல்வதைக் கேட்டபடியே வந்த பாலு, “என்ன ராமன் சார் கால் வாசி அப்படிங்கறீங்க, முழு வாசியே காட்டிடுவோம், நீங்க மனசால மட்டும்தானே கஷ்டப்பட்டீங்க, அவனை உடம்பாலையும் கஷ்டப்பட வச்சுடலாம்.  இனி காலம் முழுக்க இல்லாட்டாலும் அட்லீஸ்ட் இன்னும் ஒரு ஆறு, ஏழு வருஷத்துக்கு களி தின்ன வச்சுடலாம்”, என்று கூற அனைவரும் சந்தோஷம் அடைந்தார்கள்.  மதியத்திற்கு மேல் கௌரியும், கௌஷிக்கும்  அவரவர் வீடு  சென்று  சேர்ந்தார்கள்.

ரவிக்கு எதிராக குற்றங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட, அவன் வெளியில் வர மினிஸ்டர் உதவியை நாட,  அவர் எலெக்ஷன் காரணம் காட்டி உதவ முடியாததை சொல்ல, கோர்ட்டில் ஜாமீனும் மறுக்கப்பட பாலு சொன்னதைப் போலவே களி தின்ன ஆரம்பித்தான். 

அதன் பிறகு கௌரி கல்யாணம் எந்தத் தடங்கலும் இல்லாமல்  கௌஷிக்கின் கால் வாரல்களுடனும்,  கௌரியின் அட்டகாசத்துடனும், ஜானகியின் BP எற்றத்துடனும், ஸ்வேதாவின் ஏக்கப் பார்வைகளுடனும், ஹரியின் எஸ்கேப் பார்வைகளுடனும்  அமோகமாக நடைபெற்றது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு......

“அடடே வாங்கோ சம்மந்தி எப்படி இருக்கேள்.  வாப்பா ஹரி அமெரிக்காலேர்ந்து எப்போ வந்தே?”

“நான் நேத்து கார்த்தால வந்தேன் மாமி.  அதுதான் உங்க எல்லாரையும் பார்த்துட்டு போலாம்ன்னு வந்தேன்”

“இப்போதான் நீ போனா மாதிரி இருக்கு.  அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப் போச்சு பாரு.  இரு உங்க அக்காவை கூப்பிடறேன்.  அவளும் வந்து ஒரு வாரமா சென்னையவே பாக்காத மாதிரி சுத்திண்டு இருக்கா.  பாண்டி பஜார் ரோடு சைடு கடை போட்டு இருக்கறவா எல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்காளாம்.  இவளால அவா வியபாரம் செமையா நடக்கறதுன்னு”

“மாமி, கௌரி எப்பவுமே இப்படிதான்.  பெரிய பெரிய ஷோரூம் போலாம் அப்படின்னா, அம்மா அதைவிட இவாக்கிட்டதான்ம்மா  நன்னா இருக்கும்.  பாவம் அவாளும் பிழைச்சுப் போட்டுமே அப்படின்னு முக்காவாசி சாமான் ரோடு சைடு கடைலதான் வாங்குவா”

“நல்ல விஷயம்தான் மாமி, நாம பெரிய கடைன்னு போறோம் அங்கதான் இருக்கற சொத்தையும், சொள்ளையும் வச்சிருக்கான்”, இரு மாமிகளும் வால் மார்ட்டை குறி வைத்து தகர்க்கும் உத்தேசத்துடன் பேசிக்கொண்டிருக்க மாமாக்கள் இருவரும் இதில் தாங்கள் ஏதேனும் அபிப்ராயம் சொல்ல முடியுமா என்று பார்த்தார்கள், அப்படி ஒரு விஷயம் நடக்காது என்று தெரிந்த பின்பும். அதற்குள் கௌரி, கௌஷிக் வர நலவிசாரிப்புகள் நடக்க ஆரம்பித்தது. 

 “உங்ககிட்ட  ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லிட்டு போலாம்ன்னுதான் வந்தோம்”

“என்ன ஹரிக்கு ஏதானும் வரன் வந்திருக்கா?”

“ஹையோ அதெல்லாம் இல்லை மாமி.  அந்த சிட்பன்ட்ல போட்டப் பணம் கடைசியா கைல கிடைக்க தீர்ப்பு வந்துடுத்து”

“நிஜமாவே ரொம்ப சந்தோஷப்படறா மாதிரி விஷயம்தான் சொல்லி இருக்கேள் ராமன்.   ஒரு மாசத்துல அவன் ஜாமீன்ல வந்து பணம் தராம இருக்க கேஸை எத்தனை தூரம் இழுத்து அடிச்சான்.  கடைசியா கடவுள் கண்ணைத்  தொறந்துட்டார்”

“ஆமாம் பத்து.  இன்னைக்குதான் தீர்ப்பு வந்தது.  பணம் எப்படியும் கைக்கு வந்து சேர இன்னும் ஒரு மாசம் ஆகிடும்ன்னு நினைக்கறேன்”

“அது வர்றப்போ வரட்டும்.  இப்போதான் ஹரியும் நன்னா சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டானே.  அப்பறம் என்ன.  அவன் வேலைக்குப் போக ஆரம்பிச்சதுலேர்ந்து கொஞ்ச கொஞ்சமா சேர்த்து நீங்களும் கௌரிக்கு செய்யாம விட்டது எல்லாம் நாங்க வேண்டாம்ன்னு சொல்லியும் கேக்காம செஞ்சுட்டேள்”

“அது எங்க கடமைதானே.  நாங்க சந்தோஷமாதான் செஞ்சோம்.  ஆமாம் மாமி, ஸ்வேதா எங்க?  இன்னும் ஆபீஸ்லேர்ந்து வரலையா?  ஏதானும் வரன் செட் ஆச்சா அவளுக்கு”

“இப்போ வர்ற நேரம்தான்.  எங்க மாமி.  நிறைய பேர் கேட்டுண்டேதான் இருக்கா.  இந்தப் பொண்ணுதான் ஒரு ஒரு வரனுக்கும் ஏதோ நோட்டை, நொள்ளை காரணம் சொல்லி தள்ளிப் போட்டுண்டே இருக்கா.  ஏதானும் ரொம்ப கேட்டா, நான் வேலைக்குப் போய் ஒரு வருஷம்தான் ஆறது, இன்னும் ரெண்டு வருஷம் போட்டும்ன்னு ஒரே அழுகை”, என்று  லக்ஷ்மி சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஸ்வேதா உள்ளே நுழைய ஹரியைப் பார்த்து ஷாக் அடித்து நின்றாள்.

“வாம்மா வா வா.  உன்னைப் பத்திதான் கேட்டுண்டு இருந்தேன்.  எப்படி இருக்கே?”

“நான் நன்னா இருக்கேன் மாமி.  நீங்க எல்லாரும் எப்படி இருக்கேள்? ஒரு நிமிஷம் நான் போய் கை கால் அலம்பிண்டு வந்துடறேன்”, பதட்டத்தில் வார்த்தைகள் தந்தி அடிக்க ஜானகியின் பதிலிற்கு கூட காத்திருக்காமல் தன் ரூமிற்கு ஓட்டம் எடுத்தாள்.  அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த ஹரியை அழைத்த கௌஷிக், “ஹரி கொஞ்சம் மாடிக்கு வரியா, உன்னோட பேசணும்”, என்று அழைக்க இருவரும் மாடிக்கு சென்றார்கள்.

ரி ஸ்வேதா உன்னை லவ் பண்றதா உன்கிட்ட சொன்னாளா?”, எந்த வித மேல்பூச்சும் இல்லாமல் கௌஷிக் கேட்க,  இது இவருக்கு எப்படி தெரிந்தது என்று ஹரி முழித்தான்.

“கௌஷிக், அது படிக்கற வயசுல விளையாட்டுத்தனமா ஏதோ சொன்னா.   உங்களுக்கு எப்படித் தெரியும்.  அதுக்காக அவளைத் திட்டினேளா?”, பதைப்புடன் ஹரி கேட்டான்.  (அட நம்ம சாமியாருக்கும்  நம்தன நம்தன வொர்க் அவுட் ஆயிடுத்து போல)

“ஹேய் ரிலாக்ஸ் ஹரி.  யாரு ஸ்வேதாவை நான் திட்றதா? அவ நீ அட்வைஸ் பண்ணின அன்னைக்கே வந்து உன்னை பத்தி ரொம்பப் புகழ்ந்து திட்டோ திட்டுன்னு திட்டி அத்தனை விஷயத்தையும் சொல்லிட்டா.  நானும் நீ சொன்னதையேதான் சொன்னேன். உனக்கு நிஜமாவே அவளை கல்யாணம் பண்ணிக்கற ஐடியா இப்பவும் இல்லையா? இல்லை வேற யாரைப் பார்த்தானும் பல்பு எரிஞ்சு, மணி அடிச்சுடுத்தா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.