(Reading time: 10 - 19 minutes)

 

நினைவில் மட்டும் வாழ்ந்த தன்னவள் தன் எதிரில் வந்து நிற்கிறாள்.

அவர்களை சேர்த்து வைத்த ஆனந்தத்தில்,தன் பணி முடிந்தது என எண்ணி மழை நின்று,வெயில் வந்தது.

அவளின் கூற்றுப்படி, வானவில்லும் பிறந்தது. ரஞ்சித் அதைப் பார்த்தான்...

அவளின் கவனமும் அங்கே சென்றது.

பழம் நினைவுகள் அவளை ஆட்கொள்ள கண்களில் இருந்து கண்ணீர்த்துளி ஒன்று மண்ணில் சிந்தியது.

"நிலா!"-மீண்டும்,அவன் குரல் கேட்க சுயநினைவு வந்தவளாய்,அவனை விட்டு விலகினாள்.

அவனைப் பார்த்தப்படியே, அங்கிருந்து விரைந்து சென்றாள்.அவள் செல்வதையே கூர்ந்து கவனித்தவன் மனதில் ஆயிரமாயிரம் உணர்ச்சிகள்.

ஆயிரமாயிரம் நினைவுகள்.

அமைதியை தேடி இங்கே வந்தவனுக்கு,தன் வாழ்வின் மிக பெரிய செல்வம் கைக்கு எட்டப் போகிறதே!!!

கண்கள் இன்னும் கலங்கியப்படி இருந்தது வெண்ணிலாவிற்கு!!!

வீட்டிற்கு வந்தவள் விஷ்வாவிடம் கூட எதுவும் பேசாமல் தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

கதவை தாழிட்டு, மெத்தையில் படுத்து அழ துவங்கினாள்.

மனதில்,அதுவரை அடங்கி இருந்த ஆதங்கம் பீறிட்டு வெளியே வந்தது.

அவளுக்கு அழுகை வரும் போதெல்லாம்,மனதை தைரியப்படுத்த அவள் தந்தை கூறிய வாசகம்...

"உன்னோட கண்ணீர் உன் கண்களுக்கு மட்டும் சொந்தமானது நிலா!!! அதை                    தகுதியில்லாதவங்களுக்காக

செலவிடாதே!!"-இன்று தன்னவனின் விஷயத்தில் அது மெய்யானதா???பொய்யானதா??என்று அவளுக்கே தெரியவில்லை...

"நிலா!"

".............."

"ஏ...நிலா!கதவை திற!"-விஷ்வாவின்,குரலுக்கு செவி சாய்த்து கண்களை துடைத்து கொண்டு கதவை திறந்தாள்.

"என்னச்சு?"

"என்ன என்னாச்சு?"

"வந்த...கதவை மூடிக்கிட்ட?"

"பல்வலி எப்படி இருக்கு விஷ்வா?"

"உனக்கு என்ன தலைவலியா?"

"இல்லையே!"

"கண்ணு சிவந்திருக்கு?"

"அது...மெட்ராஸ் ஐ மாதிரி கோயம்புத்தூர் ஐ வந்திருக்கும்! எனக்கு டயர்ட்டா இருக்கு,நான் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வரேன்!"-கதவை சாத்திக் கொண்டாள்.விஷ்வாவிற்கு ஏதோ தவறென பட்டது.

வெண்ணிலாவின் நடவடிக்கையில்,ஏதோ வித்தியாசத்தை கண்டறிந்தான் விஷ்வா!!!

வெண்ணிலாவை கண்ட ரஞ்சித்தின் மனநிலை???

பலநூறு வருடங்களாய் மண்ணில் புதைந்த அஜந்தா ஓவியம்,மீண்டும் எந்த சேதாரமும் இன்றி அவன் முன்னே வந்து நின்ற உணர்வு!!!

அவள் பார்த்த நிமிடத்தில், அவள் கண்ணிலிருந்து விழுந்த இரண்டு சொட்டு கண்ணீர்!!!!

அது போதுமே!!!அவள் மனதில்,இன்னும் நான் இருக்கிறேன் என்று!!!

பேச வாயெடுப்பதற்குள் சென்றுவிட்டாள்.

மன்னிப்பு கேட்க கூட சந்தர்பம் தரவில்லையே!!!

அவளைப் பற்றி தெரிந்தும்,அவளிடம் நான் உதிர்த்தவை கடும் வார்த்தைகள் தான்!!!

இனி எங்கே போய் தேடுவேன் அவளை??

என்ன செய்ய போகிறேன்??

சிந்திந்துக் கொண்டிருந்தான் ரஞ்சித்.

ஆனால்,அவன் மனதில் ஒரு நம்பிக்கை உதித்திருந்தது.

இனி,அவள்...என்னை விட்டு விலக மாட்டாள்.

விலகி தான் ஆக வேண்டும்!!!

ஆம்...நிச்சயம் விலகி தான் ஆக வேண்டும்!!!

என்னால்,அவன் வாழ்வில் எந்த தொல்லையும் இருக்க கூடாது.இவ்வாறு, எண்ணியது நிலாவின் மனம்.

என் அழுகைகளில்,துணை நின்றவன் இறுதிவரை ஆனந்தமாக வாழ வேண்டும்!

நிச்சயம்...இந்நேரம் அவனுக்கு திருமணம் ஆகி இருக்கும்! அவன்,அவனது மனைவியோடு ஆனந்தமாய் வாழ வேண்டும்!!!

எனது வாழ்வின் சரிபாதியாய் விளங்கியவள் அவள்.என்றும்,அவள் சொந்தம் எனக்கு வேண்டும்.

என்னவளின் விரல் பற்றிய கரம் இன்னொருத்தியை கனவிலும் தீண்டாது.நிச்சயம் அவள் கண்ணீர் வடித்திருப்பாள்.மனதின் தைரியத்தை உடைத்து அழுதிருப்பாள்.அவளை இறுதிவரை கண்ணீர் வடிக்க விடமாட்டேன் என்று வாக்களித்தவன் நான்.இன்று

அந்த வாக்கினை நானே அழித்து விட்டேனே!!!என்றது ஒரு மனம்.

நான் கண்ணீர் வடித்திருப்பேன் என்று அவன் நிச்சயம் கண்டறிந்திருப்பான்.அவன்,மனம் நிச்சயம் அதற்கு வருந்தி இருக்கும்.அவனை, எந்த  நேரத்திலும் துன்பத்திற்கு ஆளாக்க கூடாது என்றல்லவா இருந்தேன்??இன்று... தவறிழைத்து விட்டேனே!!-என்றது இன்னொரு மணம்.

ஆக...காதலில் தத்தளிக்கும் மனமானது,தன்னைக் குறித்து கவலை கொள்ளவில்லை.தன் துணையை பற்றி மட்டுமே கவலைக் கொண்டன.

இதுதான் காதலின் இரகசியம்....

ஒரு காதல் வெற்றி பெறுமோ?பெறாதோ?என்பது...பெற்றோர்கள் எடுக்கும் முடிவினால் அல்ல...

பல காதல் கரம் சேராதிருக்கலாம்...

ஆனால்,அன்புக் கொண்ட இரு மனங்களின் வெற்றியை தடுக்க தான் இயலுமா???

இவனுக்கு,இவள் என்று எழுதிய கணக்கு வெவ்வேறு பாதையில் பிரியலாம்!!!!

ஆனால்,பிரிந்த பாதை சேர வழிவகை உண்டு என்பது ஆண்டவனுக்கு மட்டுமே வெளிச்சம் போலும். அதனால் தான்,அவன் அனைத்தையும் ஆண்டவனாய் இருக்கிறான்.நாம் அற்ப மானிடராய் இருக்கிறனர் போலும்!!!

"விஷ்வா!"

"ம்..."

"நாம ஊருக்கு கிளம்பிடலாமா?"

"எது?"

"கிளம்பிடலாம் விஷ்வா!"

"யோவ்! என்னயா சொல்ற?"

"ப்ளீஸ் விஷ்வா!"

"அடிப்பாவி! வெண்ணெய் திரண்டு வர நேரத்துல, பானையை உடைக்க பார்க்கிறீயே!"-வெண்ணிலாவிற்கு வைஷ்ணவியின் நினைவு வந்தது.

"சரி! நான் மட்டும் போகட்டா?"

"போ! தம்பியை தனியா தவிக்கவிட்டு போறல்ல போம்மா போ!"

"நிலைமையை புரிஞ்சிக்க விஷ்வா!"

"என்ன நீ??ரொம்ப பெரிய பிரச்சனையில மாட்டிக்கிட்டா மாதிரி பேசுற?"

"அது..."

"என்ன எவனாவது பின்னாடி வரானா??டேண்ட் வரி! எவனா இருந்தாலும் வெட்டுவேன்.எவனா இருந்தாலும் வெட்டுவேன்!"

"காமெடி??"

"கண்டுப்பிடிச்சிட்டியா?சிரிச்சிடு பார்க்கலாம்!"

"சிரிப்பு வரலை!"

"ஆடியன்ஸ் யாராவது சிரிங்கய்யா! என் மனசு கஷ்டப்படும்ல??"-அப்போது,திடீரென...

"ஓ...ஓய்!"என்றான் விஷ்வா.

"என்னது?"

"அன்னிக்கு காரை காட்டினேன்ல..இன்னிக்கு ஆளையே காட்றேன் வா!"

"என்னடா உளர்ற?"

"அவர் மேல தான் அன்னிக்கு மோதினேன்.ச்சீ...ச்சீ...அவர் தான் என் மேல மோதினது!"-என்று ரஞ்சித்தை காண்பித்தான்.

அன்றுவரை எதிர் வீட்டில் தான் அவன் இருக்கிறான் என்பதை அறியாதவள், விஷயம் அறிந்ததும் இன்னும் பலவீனமானாள்.

"இவரா?"

"ம்...பாவம்! முகத்தை பார்த்தா நம்ம ரேஞ்சுக்கு வாயாடுவர்னு தெரியுது! ஆனா,ரொம்ப சைலண்ட் டைப்பா இருக்காரு! நான் லவ் பெய்லியர்னு ஃபீல் பண்றேன்.நீ என்ன நினைக்கிற?"

"எனக்கு தூக்கம் வருது!நான் போய் தூங்குறேன்!"

"இத தான் நினைக்கிறீயா?ஆகட்டும்...டும்...போய் தூங்கு!"-வெண்ணிலா அமைதியாக     சென்றுவிட்டாள்.இனி,என்ன செய்ய போகிறோம்???

கடவுளே...! இதற்கு ஒரு தீர்மானம் செய்!

வேண்டிக் கொண்டு உறங்க சென்றாள்.உறக்கம் வருமா???

சந்தேகமே!!!!

அன்றுவரை உறக்கம் வராமல் தத்தளித்தவனுக்கு, இன்று நித்திராதேவி அடிமை ஆனாள்.

இவளிடமிருந்து விடுதலை அடைந்து!!!!

தொடரும்

Episode # 04

Episode # 06

{kunena_discuss:821}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.