(Reading time: 14 - 27 minutes)

 

ன்னும் ஒன் வீக்கில் டெல்லியில் ஒரு நேஷனல் மீட் இருக்குது. நிறைய நேஷனல் லெவல் காம்படிஷன்ல வின் செய்திருக்கேன். ஆனாலும் இது நான் இண்டியன் ஒலிம்பிக் டீமில் செலக்ட் ஆக ஸ்க்ரீனிங் மாதிரி. இதில ஃபர்ஸ்ட் 2 ப்லேஸ்ல வரனும்.

இந்த மேரேஜ் டிராமால லாஸ்ட் மூனு வாரமா ப்ரக்டீஸ் போக முடியலை. அதனால நாளை டெல்லிக்கு சென்னையிலிருந்து ஃப்ளைட் பிடிச்சிரனும்னு நினைச்சிருக்கேன்....”

“நிஜமாவே இப்படியே கிளம்ப போறீங்களா மிர்னா?” சற்று வருதத்துடன் கேட்டான். எதுனாலும் உங்க வீட்டுக்கு போய்ட்டு போகலாமே.....”

“அவ்ளவுதான் அவங்க ப்ளான் எதுவும் பலிக்கலைனா ரூம்ல வச்சு பூட்டி வச்சுடுவாங்க...ஆனா கண்டிப்பா டில்லி போக விட மாட்டாங்க....”

“அப்படித்தான் இப்போ இந்த கல்யாணதுக்காக வச்சிருந்தாங்களா?...”  குற்ற உணர்ச்சியோடு கேட்டான் வியன்.

அவன் குடும்பத்தினர் அத்தனை பேரையும் அந்த நொடியில் மன்னித்தது பெண் மனது.

“கிட்டதட்ட அப்படித்தான்...அதான் இதுக்கு மேல நான் என்ன செய்தாலும் எங்க வீட்டில் இருக்க முடியாதுன்னு தெரிஞ்சிட்டு. பாட்டி அவங்க கடைசி கிஃப்டா எனக்குன்னு ஒரு அமௌன்ட் குடுத்திருந்தாங்க...அதை பேங்கில் போட்டு வச்சிருக்கேன்....எனக்கு தேவையான டாகுமெண்ட்ஸ் இப்போ என்ட்ட இருக்குது...”

“பேக் எதுவுமே இல்லையே..கார்ல போய்ட்டா..?.” அவன் அதிர்ந்து போய் கேட்க,

“என் ஸேரியில் வச்சிருக்கேன்...பத்திரமா இருக்குது..”சற்று கூச்சமாக அவள் சொல்ல ஆச்சிரியத்தில் விழி விரித்தான்.

“ஸ்மார்ட்”

உற்சாகம் பீரிட்டது அவளுக்கு.

ங்க வீட்டை பத்தி தப்பா நினைக்காதீங்க மிர்னா, எங்களுக்கு சம்மதம்னு உங்க பேரண்ட்ஸ்  சொல்றப்ப அதுக்கு பின்னால இவ்ளவு நடந்திருக்கும்னு எங்களுக்கு தோண வாய்ப்பே இல்லயில்லையா?.... பொண்ணு பார்கிறதுக்குனு ரொம்ப ஃபார்மலா வந்தா உங்களால இயல்பா பழக முடியாதுன்னு தான் கேஷுவலா என் பேரண்ட்ஸ் வந்தாங்க....அவங்களுக்கு நீங்க பேசி பழகின விதம் பிடிச்சிட்டு.... கவினுக்கு என் பேரண்ட்ஸ் சாய்ஸில் நம்பிக்கை....அதே நேரம் ஜஸ்ட் த்ரீ வீக்ஸில் மேரஜ்...ஏற்கனவே மேரேஜுக்கு முன்னால எங்க வீட்டில் பழக விட போறதும் கிடையாது...அது என் பேரண்ட்ஸ் நம்பிக்கை...அதான் அவன் மேரேஜுக்கு அப்புறம் பழகிக்கிடலாம்னு இருந்துட்டான். அவன் ஃபக்டரி ஒர்க் ஒன்னு ரொம்ப இம்பார்டன்ட் ஸ்டேஜில் இருக்குது....அதை தாண்டி அவன் எதையும் நினைக்கிறது ரொம்பவும் கஷ்டம்.....உங்க சிட்ஷுவேஷன் இப்படி இருந்திருக்கும்னு யாருக்கும் தெரியாது... எது எப்படியோ எங்களால நீங்க கஷ்டபட்டுடீங்க...வெரி சாரி...”

“இட்ஸ் ஓகே...எங்க வீட்டில் பண்ணதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க...” ஹப்பப்பா...இருந்தாலும் இப்படி அந்தர் பல்டி அடிக்க கூடாது எம்.எம்....பாத்து கழுத்து சுளுக்கிட போகுது. கொஞ்சம் முன்னால மனசுக்குள்ள நீ கொம்பு சீவின அழகு என்ன? இப்ப பல்ல காட்ற பதம் என்ன?

பொழுது புலரும் வரை தொடர்ந்தது அவர்களது உரையாடல்.

அங்கே கவினுடன் கல்யாணம் கண்டவள் மனம் கதற மௌனமாய் அழுதிருக்க, இங்கே கடத்தப்பட்டவள் கண்ணியமாய், கனவாய், கனிவாய், கழித்தாள் இரவை.

திர்ந்துதான் போனான் கவின். இவ்வளவு பிடிவாதமா? இவள் ப்ரச்சனை தான் என்ன? அவள் நிலை புரியாமல் வருத்திவிட்டேனோ? அவள் கேட்டது போல் பிரிந்து இருக்க அனுமதித்தால் புரிதல் உருவாவது எப்போது?

ஆனாலும் ஒரு ஓரத்தில் மனதில் அவள் மேல் மரியாதையும் கூடுகிறது.  கத்தாமல் கதறாமல் என்ன வகை போர் முறை இது?

ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ…என்பது இதைத்தானோ?

எழுந்து அவளிடம் சென்றான். அவன் எழுந்து வருவதைப் பார்த்தவள் வேகமாக எழுந்து கொண்டாள்.

“குல்ஸ்...”

“இப்படில்லாம் கூப்டாதீங்க...” அவன் பேச்சை ஆரம்பிக்கவும் வெட்டினாள்.

“வேரி தான் பிடிச்சிருக்கா? சரி உனக்கு பிடிச்ச மாதிரியே கூப்பிடுறேன்...” 

முறைத்தாள்.

“இப்போ உங்களுக்கு என்ன வேணும்?”

“ஹஸ்பண்டுக்கு வைஃப்ட்ட என்ன வேணும்?” கேட்ட அவன் இதழ் கடையில் ஒரு குறும்பு நகை.

சட்டென பதறி பின்னிட்டாள்.

நேற்று அவள் விழுந்த ஞாபகத்தில் வேகமாக அவளை இடையோடு வளைத்துப் பிடித்தான் தன் வலக் கையால் அவன்.

அவளது வலக் கை எப்போது உயர்ந்தது அவன் கன்னம் நோக்கி என அவளுக்கே தெரியவில்லை. ஆனால் அதை தன் இடக் கையால் தடுத்து பிடித்திருந்தான் அவன்.

அவன் கையிலிருந்து தன் கையை உறுவ முழு கவனமாய் போராடி தோற்றவள். தற்காலிகமாக அதை நிறுத்திவிட்டு கத்தினாள். “கட்டாயம தூங்க கூடாதுன்னு நைட் எல்லாம் உங்கள யாராவது உட்கார வச்சா...அப்ப தெரியும்...

என்னை ஏன் இப்படி பாடா படுத்துறீங்க...முட்டாள்..முழு முட்டாள்.”

அவளை பிடித்திருந்த பிடிகளை விலக்கியவன் அங்கிருந்து அகன்று சென்றான். அறையின் ஓரத்திலிருந்த மேஜையில் எதையோ குடைந்தவன் கையில் ஒரு ஸ்டீல் ரூலரோடு வந்தான்.

“இந்தா பிடி....என்னை அடிக்கிறதுதான் சரியான தண்டணைனா இதால அடி...உன் கையாவது வலிக்காம இருக்கும்....”

அவள் கையில் ரூலரை திணித்துவிட்டு அவளிடம் அடி வாங்க வாகாக நின்றான்.

அடுத்து என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. அதிர்ந்து போய்ப் பார்த்தாள் வேரி. இவன் திட்டம் தான் என்ன? ஆனாலும் இவள் அவனை நோக்கி கை உயர்த்தி இருக்க கூடாதோ? குற்றமனசு உறுத்த

“என்ன ஏன் கல்யாணம் செய்தீங்க....?” கொதிப்பும் அழுகையுமாக வெடித்தாள். தூர போய் கலீரென்ற சத்தத்துடன் விழுந்தது ரூலர்.

“அதை இப்போ நான் சொன்னாலும் உனக்கு புரியாது....”

“நான் ஒன்னும் தமிழ் கூட தெரியாத முட்டாள் கிடையாது....”

“ஆனா நான் முழு முட்டாளாச்சே...உனக்கு புரியும்படியா எனக்கு சொல்லத் தெரியாது....”

அடி வாங்கியது போல் இருந்தது அவளுக்கு.

“இன்னைக்கு மட்டும் பகல்ல ரெஸ்ட் எடுத்துக்கோ.....நாளைல இருந்து நீயும் நம்ம ஆபிஸ் வரனும்....இந்த முழு முட்டாள் தனியா கவனிச்சா தொழில் நிலமை என்ன ஆகிறது...?” அவளிடம் சொல்லிவிட்டு அறை வாசலை நோக்கி நடந்தவன்

“இன்னொரு விஷயம்....உலகத்தில உள்ளவங்க நம்மபத்தி என்ன நினைப்பாங்கன்னு கவலைப்பட தேவையில்ல..ஆனா நம்ம வேலைகாரங்க நம்ம மதிக்கிறது நமக்கு அவசியம்...அப்பதான் நம்மட்ட ஒழுங்கா நடந்துப்பாங்கங்கிறது என் அபிப்ராயம்....சரின்னு பட்டா நம்ம விஷயம் நமக்குள்ள...... இந்த நாலு சுவத்துக்குள்ள இருக்கிற மாதிரி பாத்துக்கோ.....இல்ல இந்த முட்டாள் சொல்றத நான் என்ன கேட்கிறதுன்னு நினைச்சா....உன் இஷ்டம்...” நின்று சொல்லிவிட்டு அறைக் கதவை திறந்து கொண்டு சென்றுவிட்டான்.

கோபமாக சொல்லி இருந்தால் ஒருவேளை இவ்வளவாக உறுத்தாதோ? அமைதியாக அவன் சொல்லிவிட்டு செல்ல ஆடிப் போனது அவள் மென் உள்ளம்.

சென்று கதவை உட்தாளிட்டாள் வேரி.

நான் மட்டுமா உன்னை கல்யாணம் செய்தேன், நீயும் தானேன்னு இவன் ஏன் கேட்கலை?

தூங்க படுத்தவளின் மனதில் அலையாடிய அக் கேள்வி தூக்கத்தில் தொலைந்தது.

தொடரும்

Ennai thanthen verodu - 03

Ennai thanthen verodu - 05

{kunena_discuss:831}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.