(Reading time: 21 - 42 minutes)

ங்கை வந்ததில் சந்தோஷம் கொண்டவன், ஆதர்ஷ் அவளை திருமணம் செய்ய சம்மதிப்பான் என்றே எண்ணியிருந்தான்…

ஆனால், அவனது பாராமுகம், தங்கையின் கோபத்தைக்கிளறி, அவள் அதனால், சாகரியை அவன் முன் கொண்டு நிறுத்துவாள் என்று அவன் கொஞ்சமும் எண்ணவில்லை…

ஆதர்ஷிற்கு உண்மை அனைத்தும் தெரியும் என்ற தகவலை அவன் தங்கையிடம் சொல்லவில்லை…

அவனுக்கு ஆதர்ஷ் எப்படியும் சாகரிகாவின் வாழ்வை கருதியேனும், தங்கையை திருமணம் செய்ய சம்மதிப்பான் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது…

மேலும், அண்ணனாய், உனக்குப் பிடித்தவனின் சம்மதம் இதோ… என்று தங்கையிடம் சொல்லி அவள் சந்தோஷப்படுவதைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்றும் எண்ணியிருந்தான் அவன்…

ஆனால். அவன் நினைத்ததற்கு மாறாக, சைதன்யா, ஆதர்ஷிடமே சாகரியைக் கெட்டுப்போனவள் என்று சொன்னதையும், அதற்கு அவன் பதில் சொன்ன விதத்தையும் பார்த்து செய்வதறியாது நின்றிருந்தான் அவன்…

ஆனால், இப்படி தங்கையே அனைத்து உண்மைகளையும் அவள் வாயால் சொல்லக்கூடும் என்று நினைத்துப் பார்க்கவில்லை…

சைதன்யாவின் வார்த்தைகள் சாகரியின் காதிலும் விழ, அவள் நம்பமுடியாத சந்தோஷத்துடன் ஆதர்ஷை ஏறிட்டாள்…

சைதன்யா, இதுவரை சொன்னது பொய் என்னும் பட்சத்தில், தான் கெட்டுப்போகவில்லை… என்ற உண்மை அவளது அறிவுக்கு உறைக்க,

அதுநாள் வரை மறைத்து, விலக்கி வைத்திருந்த காதலை விழியில் கொண்டு வந்து ஆதர்ஷைத் தேடினாள் அவள்…

அவள் பார்வை அவனைக் கண்டுகொள்ள, அவனிடம் செல்ல எத்தனித்தாள் அவள்…

அப்போது சைதன்யா அவளின் கரம் பற்றிக்கொண்டு… திருமணம் தானே செய்து கொள்ளுங்கள்…. என்றாள் ஆதர்ஷைப் பார்த்து…

சைதன்யாவின் குணம், கோபம் என அனைத்தும் அறிந்தவனாவான் இலங்கேஷ்…

மேற்கொண்டு தங்கை செய்ய இருக்கும் விபரீதத்தைப் புரிந்து கொண்டவனாக சது, என்ன பேசுகிறாய்..?... என்று அவன் கேட்ட போது,

நீ ஏன் அண்ணா பதறுகிறாய்…?... உண்மையை தானே சொல்கிறேன் நான்… செய்து கொள்ளட்டும்… திருமணம்… என்றாள் அவள் சிரித்துக்கொண்டே…

சது… நீ……. என்றான் அவன் பயத்தில்…

ஆமாம்… அண்ணா… அடுத்த ஜென்மத்தில்…. என்றாள் அவள் சட்டென்று மறைத்து வைத்திருந்த கத்தியை சாகரியின் கழுத்தில் வைத்தபடி…

ஆதர்ஷ்…. எதை நினைத்துப் பயந்து கொண்டிருந்தானோ, அந்த நிமிடம் வந்தே விட்டது…

அவன் அடுத்து செய்ய வேண்டியவற்றைக் கண் மூடி மனதிற்குள் ஒத்திகைப் பார்த்துக்கொண்டான்…

சது…. என்ன காரியம் செய்கிறாய் நீ?... வேண்டாம்… நான் சொல்வதைக் கேள் சதும்மா…

உனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக்கூடாது அண்ணா… என்றாள் அவள் பயங்கரமாய் சிரித்துக்கொண்டே…

ஏய்… என் தங்கையை விடு… என்றான், ஹரி அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்து…

இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தீர்கள் என்றால், இவள் உடம்பில் உயிர் இருக்காது… என்றாள் சைதன்யா…

பாவி… அவளை விடு… ராட்சஸி… சைத்தானாக இருக்கிறாயே… சே… விடுடி… என் தங்கையை… என்றான் ஹரி கெஞ்சல் பாதி, கோபம் பாதியாக…

ஹரியின் பேச்சை காதில் வாங்காதவள், ஆதியை தீர்க்கமாகப் பார்த்தாள்..

இலங்கேஷ்… அவளின் கழுத்திலிருந்து கத்தியை எடுக்க சொல்… அவள் உடம்பில் சின்னக்கீறல் பட்டாலும் நான் மனிதனாக இருக்கமாட்டேன்… எடுக்க சொல் கத்தியை… என்றான் ஆதி ரத்தமென சிவந்திருந்த விழிகளுடன்…

இப்போது மட்டும் மனிதனாகவா இருக்கிறீர்கள்?... என் காதலை புரிந்து கொண்டீர்களா?... இல்லை என்னைத்தான் புரிந்து கொண்டீர்களா?... எதுவும் தான் இல்லையே… பின் என்ன?... என்றாள் அவள் விரக்தியாக…

அவள் இதுவரை செய்த தவறை தான் நீ திருத்தவில்லை… இப்போது செய்ய இருக்கும் தவறையாவது ஒரு அண்ணனாய் நீ திருத்து இலங்கேஷ்… - ஆதி…

சது… வேண்டாம்… நான் சொல்வதைக் கேள்… என்று கெஞ்சினான் இலங்கேஷ் தங்கையிடம்…

நீ எதற்கண்ணா கெஞ்சுகிறாய்….. கெஞ்ச வேண்டியவர்கள் கெஞ்சட்டும்… நான் யோசிக்கிறேன்… என்றாள் அவள் இலகுவாக…

இலங்கேஷ்…. இத்தனை நாள் அவளை துன்புறுத்தியது போதாதா?... விட சொல்லு அவளை… இல்லையென்றால்…

இல்லையென்றால் என்ன செய்து விடுவீர்கள்?... என்னைக்கொன்று விடுவீர்களா?... கொல்லுங்கள்… சந்தோஷமாக சாவேன்… என்றாள் சைதன்யா…

உன் தங்கை சாக வேண்டாம்…. என்றவன், மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து தன்னையே சுட்டுக்கொள்ளும் வண்ணம் வைத்துக்கொண்டான்…

ராம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்…. வேண்டாம்…………. என்றாள் சாகரி அலறலுடன்…

ஆதர்ஷ்… நீயும் முட்டாள் தனமாய் முடிவெடுக்காதே… கீழே போடு… துப்பாக்கியை என்றான் இலங்கேஷ் ஆதியை நெருங்க முற்பட்டபடி..

இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தாய் என்றால், உன் தங்கையின் முன்னாடியே நான் என்னை சுட்டுக்கொள்வேன்… என்றான் ஆதர்ஷ்….

போதும் ஆதர்ஷ்… நிறுத்துங்க… உங்க நாடகத்தை… இதெல்லாம் நம்ப நான் தயார் இல்லை… என்றாள் சைதன்யா எகத்தாளமாக…

என்னடா… முட்டாள்தனம் இது… விடு என்று ஹரி அவன் கையில் இருந்த துப்பாக்கியை பிடுங்க முற்பட, ஆதி அவனை எச்சரித்தான்..

இலங்கேஷ்… ஒரு நிமிடம் அவகாசம் தருகிறேன்… அவளை விட்டு விட சொல்… இல்லைஎன்றால் சரியாக ஒரு நிமிடம் முடியும் போது என் கதையும் முடிந்து விடும்… நான் உயிரோடு இருப்பதால் தானே இத்தனை வேதனையும் என்னவள் அனுபவித்தாள்… இனி அவளுக்கு அது இராது… என்றான் சாகரியைப் பார்த்து சிரித்துக்கொண்டே…

ராம்…. வேண்டாம்… ராம்… என்றாள் அவள் கண்களினால்… வார்த்தைகள் வராமல்… மௌனமாக…

ஆதர்ஷ்… துப்பாக்கியைக் கீழே போடுங்க…. இல்லைஎன்றால் சாகரியைக்கொன்று விடுவேன்… என்றாள் சைதன்யா…

இலங்கேஷ்… முடிந்தால் செய்யச்சொல் உன் தங்கையை… ஆனால் அதற்கும் முன் என் சாவைப் பார்த்துவிடுங்கள் அனைவரும்… என்றான் புன்னகை மாறாமலே…

உன் கண் முன்னாலேயே நீ நேசித்தவன் சாகணுமா?... வேண்டாம் சது… சொன்னால் கேளு… நீ இப்போ அவளைக் கொன்னாலும், அவன் செத்து போயிடுவான்… அவன் அவனை சுட்டுக்கிட்டாலும், அவளும் அதற்குப்பின் உயிரோடு இருக்க மாட்டா… இப்படி இவங்க இரண்டு பேரையும் கொன்னு நாம வாழணுமா?... உன்னோட இந்த பிடிவாதத்திற்கு நான் தான் காரணமோன்னு எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு சது… உன்னை அவனுக்கு திருமணம் செய்து வைக்கணும்னு நான் நினைச்சேன் தான்… ஆனா, அவன் மனசில நீ இல்லடா… அப்படியே அவனை நீ கல்யாணம் பண்ணினாலும் உங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்காதுடா… ஆறு தலைமுறை கழித்து நம்ம குடும்பத்துல பிறந்த பெண் நீ… உன்னை சந்தோஷமா பார்த்துப்பேன்னு தானே அப்பா, அம்மா, என் கையில் உன்னை ஒப்படைச்சிட்டு போனாங்க… நீ இப்படி மற்றவங்க வாழ்க்கையையும் அழிச்சு, உன் வாழ்க்கையையும் அழிச்சிக்கிட்டு நிக்கிறத பார்க்குறதுக்கு நான் செத்தே போயிருக்கலாம்டா சது… என்றான் இலங்கேஷ்…

அண்ணா…. என்றவளுக்கு அதற்கு மேல் பேச்சு வரவில்லை…

போதும் இலங்கேஷ்… உங்க நாடகமெல்லாம்… ஒரு நிமிடம் முடிந்துவிட்டது… என்றவன், விரல், துப்பாக்கியில் அழுந்தியது…

கணீர் என்ற சத்தத்துடன் தோட்டா வெளிவர, ஆதர்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் என்ற அழைப்புடன் இலங்கேஷ் அவன் அருகில் செல்ல, சாகரி வீறிட்டு அலறினாள்…

தொடரும்

Go to episode # 26

Go to episode # 28

{kunena_discuss:739}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.