(Reading time: 23 - 46 minutes)

ன்ன நினைத்தாரோ அந்த அதிகாரி.. தன் வாக்கி டாக்கியில் பேசியவர் இவர்களுக்கான வழியை இவர்களுக்கு திறக்க சைகை காட்டிவிட்டு இவர்களிடம் வழி சொன்னார். ப்ரைம் மினிஸ்டரின் வருகைக்காக போக்கு வரத்து தடை செய்யபட்ட சாலையில் இவர்களுக்கு அனுமதி.

ஸ்டேடியத்திற்கு வெகு அருகில்தான் மீண்டும் இவர்கள் ட்ராஃபிக்கிற்குள் நுழையவேண்டி இருந்தது.

அடுத்து வாகனம் நிற்பதை மிர்னா உணர்ந்த நொடி

“இறங்கு மிர்னா..” வியன் குரலில் ஏறத்தாழ குதித்தாள். ஸ்டேடியத்தின் உள்ளே நின்றிருந்தனர்.

இவளை இழுத்துக் கொண்டு ஓடினான்.

இவள் சைன் செய்த நேரம் 10:30.00 என்றது கடிகாரம். ஓர் நொடி கூட முன்னோ பின்னோ இல்லாமல்....குறித்த நேரத்தில் மிர்னா அங்கிருந்தாள்.

நன்றி தெய்வமே.....இதுதான் உங்களுக்கு பிடிச்சிருக்குன்னா.... எனக்கு டபுள் ஒகே....  

நின்று உணர்ச்சி வசப்பட, வியனைப் பாராட்ட எதுவும் தோன்றவில்லை மிர்னாவிற்கு. காரணம் அவள் பார்வையில் தெரிந்தது ஆடுகளம். அதிலிருந்த அந்த ஹை ஜம்ப் பார்.

மையலறையை ஆராய்ந்து கொண்டிருந்தாள் வேரி. அவளுக்கு பிடித்த விஷயங்களில் ஒன்று இந்த சமையல். பாட்டியிடம் கற்றது. லன்சுக்கு நாமளே சமைக்கலாமா?

லாவண்டர் வண்ண சேலை.!  நீண்ட கூந்தலை நுனியில் சிறிதாக மடித்து பாண்ட் மாட்டி இருந்தாள்.

அவளிடமாக வந்து நின்றான் கவின். அவன் உள்ளே வருவதைப் பார்த்ததும் உள்ளே வேரியுடன் நின்றிருந்த சமையலாள் அன்பழகி அவசரமாக வெளியே போனாள்.

“குல்ஸ்...உன் அக்கா காம்படிஷன்ல நின்னுட்டு இருக்கா...ப்ரேயர் பண்ணிக்கோ...” கவினின் குரலில் திரும்பிப்பார்த்தவள் அவன் சொன்ன செய்தியில் விழித்தாள்.

“அது...அக்கா உங்கட்ட பேசுறாளா...? ...அவ எப்படி இருக்கா....தனியா எப்படி சமாளிக்கிறாளாம்?”

“ம்..பரவாயில்லையே இப்பவாவது இதெல்லாம் கேட்கனும்னு தோனிச்சே...” அவளது இரு தோள்களை பின் புறமிருந்து பற்றி அவளை தங்கள் அறையை பார்த்து நகர்த்திக் ஒண்டு போனான் கவின்.

அவன் ஸ்பரிசத்தில் சிலிர்க்க தோள்களை சிறிது குறுக்கியவள் மனம் மிர்னாவிடம் சென்றிருந்தது.  

அவளுக்கு கவினை பிடிக்காதே பின்னே எப்படி கவினிடம் பேசுகிறாள்? இவள் கவினை மணந்திருப்பது அவளுக்கு தெரியுமா? அதுவும் இவளுக்கு அவனை பிடிக்க ஆரம்பித்திருக்கிறது என தெரிந்தால் என்ன சொல்வாள்? முட்டாளுக்கு ஏத்த முட்டாள்னா..?

 சே... பாட்டி வீட்டில் இருந்தவரை மிர்னா என்றால் இவளுக்கு பயம்தான். ஆனால் அம்மா வீட்டோடு வந்த பிறகு இந்த சிறிது காலம்தான் இவளுக்கு மிர்னாவை உண்மையில் தெரியும் என்று சொல்லுமளவிற்கு பழக்கம். இவள் மனம் நோக...ஏன் யார் மனம் நோகவும் மிர்னா பேசமாட்டாள். தப்பு செய்தால் மட்டும்தான் அவளுக்கு பிடிக்காது. இவளை சிரிக்க வைக்கத்தான் எப்பொழுதும் முயற்சித்துக் கொண்டிருப்பாள்.  

திடீரென இப்பொழுது தோன்றுகிறது அவளிடமாவது இவள் ப்ரச்சனையை சொல்லி இருக்கலாமோ..? ஏதாவது உதவி செய்திருப்பாளோ...?  

 இவள்தான் முட்டாள்தனமாக எல்லோரையும் பார்த்து பயந்து போய் இருந்திருக்கிறாளோ?  

உண்மையில் இவளிடம் மிர்னா அன்பாகத்தான் இருந்திருக்கிறாள். தன் ரகசியங்களை நம்பி பகிர்ந்திருக்கிறாள்.  

மனதில் மிர்னாவை பார்க்கவேண்டுமென்று ஒரு ஏக்கம். பிறந்த வீட்டில் இருக்கும்போது புரியாத பாசம் இப்பொழுது புரிகிறதே!!

மனதிற்குள் மிர்னாவிற்காக ஜெபித்தாள்.

இவள் கண் திறக்கவும் ஆமென் என்றான் கவின்.

“ஜெபம் பண்றதுக்கு கூட என்ன சேர்த்துக்க மாட்டியா....?” அவன் கிண்டலாகத்தான் கேட்டான்.  இவளுக்குள் டென்ஷன்.

“அது...வந்து...அப்படி இல்ல....நான்... உங்கள.. எல்லாத்துக்கும்....”  அவள் தந்தி அடிக்க அவன் சிரித்தான்.

“உனக்கு என்னை பிடிச்சிருக்குன்னு அப்பப்ப இப்டி அழகா காமிச்சிகொடுக்ற குட்டி பாப்பா”

முழு கண்ணையும் திறந்து புரியாமல் விழித்தாள்.

“கோபம் வர்றப்ப என்னமா பொரிஞ்சி தள்ளுவ...?...இப்ப இப்டி....?”

அவளுக்கே அது அப்போதுதான் உறைக்க மெல்ல தலையை குனிந்து கொண்டாள்.

அவள் கன்ன கதுப்பில் ஏறிய செம்மையை கண்டவன் வல கை ஆள் காட்டி விரல் அங்கு ஒற்றை பயணம்.  

“அழகுடா நீ....”

மகிழ்ச்சியின் உச்சத்தை ஒரு நொடி உணர்ந்தவள் மறு நொடி பயந்தாள். இது நிலைக்குமா???  

முதன் முறையாக தன் பிரச்சனையை யாரிடமாவது மனம் விட்டு பேசவேண்டும் என்று வேரிக்கு தோன்றிற்று..

உண்மையாய் இவளை நேசிப்பவர்கள், சூழலை புரிந்து கொள்ள கூடியவர்கள் புத்திசாலித்தனமாக தீர்வு சொல்லகூடியவர்கள் யாராவது வேண்டும். மனதில் மிர்னாவின் முகம் நிழலாடியது.

“எனக்கு மிர்னாவ பார்க்கனும்”  

“ஹேய்...”என்ற கவின்..”.கண்டிப்பா ட்ரை பண்றேன்....சீக்கிரம் கூட்டிட்டு போறேன்” என வாக்குறுதி கொடுத்தான்.

இவனோடா....? வெளியூர் போனல் இப்படி தப்பி போய் படுக்க அடுத்த அறைக்கு எங்கு போக? நிதர்சனம் புரிய அழுகையும் எரிச்சலும் வந்தது வேரிக்கு.

“இல்ல வேண்டாம்....” திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

அவளாக சொல்லாதவரை அவள் ஷூ காலை பார்க்காத வரை அவள் காலில் குறை என யாரும் உணரகூட முடியாது. ஆனால் இவள் ஏன் தன்னுள் இப்படி ஒழிந்து கொள்கிறாள்? கவின் அவள் செல்வதை பார்த்துக்கொண்டு நின்றான்.   

டுத்த 27ம் நிமிடம் 43 வது நொடியில் தன் முதல் ஜம்பில் உலக சாதனையை முறியடித்தாள் மிர்னா இந்தியமண்ணில்.

தங்கள் முதல் ஜம்பில் உலகசாதனைக்கு முயற்சிப்பது அபூர்வம். ஆனால் அதுதான் மிர்னா.  

அன்பு வாசகர்களே!!! இக் கதையும், இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்க தேர்வு விதிகள் முறைகள் என நான் இங்கு குறிப்பிட்டிருக்கும் அனைத்தும் கற்பனையே.

தொடரும்

Ennai thanthen verodu - 05

Ennai thanthen verodu - 07

{kunena_discuss:831}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.