(Reading time: 12 - 23 minutes)

ன்???? எதற்கு????யார் இவளை கொல்ல நினைக்கிறார்கள்????

 யோசிக்க வேண்டிய கட்டாயம்.

இங்கு கவின் வேரி வாழ்க்கையும் சில நாட்கள் எந்த மாற்றமுமின்றி சென்றது.

அன்று இரவில் வேரியை கையில் மொபைலுடன் பார்த்த கவினுக்கு ஒரு நொடி ஒன்றும் புரியவில்லை. இவன் சொன்னதற்காக வேரி இப்பொழுதுவரை அவள் பெற்றொருடன் பேசவில்லை என இவனுக்கு தெரியும். அவர்களுக்கு நான் தான் இல்லை என்று ஆகிவிட்டேன்....மீதி உள்ள மிர்னாவாவது அவர்களுக்கு வேண்டும் என்றாளே....

அதோடு மிர்னா இவனுடன் பேச மறுத்ததால் அடுத்து அவளுடன் கூட இவன் மனைவி பேச முயலவில்லையே.....இத்தனைக்கும் தன் சொத்தை அவளுக்கு கொடுக்க தயாராக இருந்தவள்....

பின்..இதென்ன..மொபைல்...? சட்டென புரிய சிரிப்பு வந்தது அவனுக்கு. அலார்ம்.....அவன் விழிக்கும் முன் எழ அலார்ம் வேண்டுமே...

குட்டி பாப்பா....இதுக்காக யோசிக்கிற குட்டி மூளைய என்ன நம்புறதுக்கு யோசிக்க யூஸ் செய்தா நல்லா இருக்கும்.....

சிறிது நாள் போகட்டும் அவளாக வருவாள் என தோன்ற கவினும் அவள் இரவு ரகசியத்தை தானும் கண்டு கொண்டதாக காண்பிக்காதுவிட்டான்.

அன்று வேரி கவினின் அலுவலக அறையில் இருந்தாள்.

கவின் தனது குடும்ப பிஸினஸான ஃஸ்பின்னிங் மில்களை நிர்வகித்தாலும் தன் சொந்த முயற்சியில் பயாலிஜிகல் கழிவுப்பொருட்களை வைத்து எரிபொருள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையை தொடங்கும் வேலையிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தான்.

அந்த தொழிற்சாலை கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் இருந்தது போலும். ஏனோ இந்த எரிபொருள் தொழிற்சாலையில் வேரிக்கு மனம் ஒன்றவில்லை. அதனால் அவள் அதற்கான மீடிங்ஸை தவிர்த்தாள்.

இந்த எரிபொருள் ஆலை பற்றி எந்த மீட்டிங் முடிந்து வரும்போதும் கவின் கொஞ்சம் களைத்துபோனது போல் வேரிக்கு தோன்றும்.

அவளுக்கு அந்த ஃபாக்டரி நிறைய வகையில் அவனை தொல்லை படுத்துவதாக தோன்றும். அவன் திருமணமான மறு நாளிலிருந்தே வேலைக்கு வரவேண்டிய அவசியத்தை உண்டு செய்து வைத்திருப்பதும் அத்தொல்லைகளே என்பது அவளது புரிதல்.

பொதுவாக மீட்டிங் நேரங்களில் தன் அலைபேசியை அமைதி நிலையில் வைக்கும் கவின் இவள் கலந்துகொள்லாத மீட்டிங் செல்லும் நேரம் தன் மொபைலை இவளிடமேவிட்டு சென்றுவிடுவான்.

அன்றும் அப்படித்தான் அந்த எரிபோருள் ஆலை பற்றிய மீட்டிங். இவள் முன் இருந்த கவின் மொபைல் அதிர்ந்து கொண்டு இருந்தது.

வேண்டா வெறுப்பாக இணைப்பை ஏற்றாள்.

“ஹலோ...”

“அ..அண்ணா  இல்லைங்களா...?” என கேட்டது மறுமுனையில் ஒரு பெண் குரல். தொடர்ந்தது உரையாடல்.

கவின் வரவும் இந்த அழைப்பை குறித்துதான் சொன்னாள் வேரி.

அடுத்த ஐந்தாம் நிமிடம் கிளம்பிவிட்டான் கவின் அந்த பெண்ணின் இருப்பிடத்திற்கு.

“நானும் வாறேன்...” சொன்ன வேரியை ஒரு நொடி பார்த்தவன் “சரி வா” என்றபடி தன்னோடு அழைத்துச் சென்றான்.

அவர்கள் சென்றது திருநெல்வேலியிலிருந்த ஒரு குழந்தைகள் காப்பகத்திற்கு. அனைத்தும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள்.

குழந்தைகளுக்குரிய இயல்பான முகமோ சொல்லோ செயலோ இங்கு இல்லை. பார்வைக்கே மனம் வலித்தது வேரிக்கு.

இயல்பாக இருக்க முடியவில்லை அவளால்.

ஆனால் அக்குழந்தைகள் கவினை அடையாளம் கண்டு அவர்களுக்கு தெரிந்த வகையில் கொண்டாடின எனலாம்.

இவனை கண்டவுடன் அக்குழந்தைகளை பராமரித்துக்கொண்டிருந்த அந்த பெண் இவர்களிடமாக ஓடி வந்தாள்.

“சாரி....அண்ணா....டிஸ்டர்ப் பண்ணிட்டேன்... ஷர்மிலிக்கு நாலு நாளா ஹை ஃபீவர்....அவ உங்களத்தான் சொல்லிகிட்டே இருக்கா.. சாப்பிடவே இல்ல..பயாமா இருக்குது எனக்கு...

..நீங்க இங்க வந்து ரெண்டு மூனு வாரம் இருக்குமில்லையா அவளுக்கு உங்கள ரொம்ப தேடிட்டு போல ...அதான் ஃபீவர்னு தோணுது.....மதர் உங்களுக்கு இப்பதான் மேரேஜ் ஆகி இருக்குது...அதோட இப்படில்லாம் நாமாளா யாரையும் வர சொல்ல கூடாது...அவங்களா வர்றப்ப தான் வருவாங்க....நாம தொந்தரவு செய்ய கூடாதுன்னு சொல்லிட்டாங்க....ஆனா சாரி...நான்..”

பேசிக்கொண்டே அவர்கள் அந்த அறைக்குள் நுழைய கவின் இயல்பாக அந்த குழந்தையை கையில் ஏந்திக்கொண்டான்.

கண்கள் துரித்தி முகம் கோணி, இடுப்பிற்கு கீழ் எந்த வளர்ச்சியும் இன்றி மரகட்டையாய் விறைத்த குச்சி கால்களுடன்...அந்த சர்மிலியை குழந்தை என்று ஒத்துக்கொள்ள ஒரு மனம் தேவை.

ஆனால் கவின் இயல்பாய் அவளை கொஞ்ச தொடங்க அக்குழந்தையோ மகிழ்ச்சி வெள்ளத்தில் வாயிலோடிய கோழையோடு அவன் முகத்தை அடித்து விளையாடியது.

குழந்தையின் முகம் துடைத்து, அதற்கு உணவூட்டி, மருந்திட்டு அவள் தூங்கும் வரை அங்கு இருந்தவன் மற்ற குழந்தைகள் ஒவ்வொன்றிடமும் தனியாக நேரம் செலவழித்துவிட்டே கிளம்பினான்.

முறையாய் விடை பெற்று கவின் அங்கிருந்து கிளம்பும் வரையும் அவனுடன் அமைதியாக வந்த வேரி அவர்கள் காருக்கு அருகில் வரவும் நின்று கொண்டாள்.

நின்று அவள் முகம் பார்த்த கவினுக்கு அவள் முகத்திலிருந்து எதையும் கிரகிக்க முடியவில்லை. இன்னும் அசையாமல் அவள் நிற்கவே அவளிடமாக சென்றான்.

சட்டென ஒரு தூள்ளலோடு அவன் தோள்களில் மாலையாக தன் கைகளால் சூழ்ந்தாள் வேரி. இதை சற்றும் எதிர்பாராத கவின் இந்த மென் தாக்குதலில் சற்றே பின்னோக்கி சரிந்து சிறிதாக தன் காரில் சாய்ந்தான். அவன் வலக்கை அவளை இடையோடு வளைத்தது.

இப்பொழுது அழுத்தமாக ஒரு முத்தம் அவன் கன்னத்தில்.  உபயம் மனையாள். கண்மூடி ஒரு கணம் சுகித்தவன் மெல்ல கண்திறந்து அவள் கண்களைப் பார்த்து சொன்னான் “உணர்ச்சி வசப்பட்டு எந்த முடிவும் எடுக்காத...குல்ஸ்”

“உங்கட்ட உணர்ச்சி வசப்படாம யார்ட்ட படுறதாம்...?”

அவன் கண்களில் ஒரு மகிழ்ச்சி மின்னல்.

“ரொம்ப பெரியாளாயிட்டே என் குட்டி பாப்பா...” குனிந்து அவள் நெற்றியில் தன் நெற்றியை வைத்தான்..

“சோ....எப்ப விஷய்த்த சொல்லுவீங்க சின்ன மேடம்....”

அதுவரை தன் விழி உயர்த்தி அவன் விழிகளை ஊடுருவிக்கொண்டிருந்தவள் பார்வை தாழ்த்தினாள். “எனக்கு இன்னொரு ஹெல்த் இஷ்யூ இருக்குது...”

அவள் நெற்றி மேல் இருந்த தன் நெற்றியை விலக்கி நிமிர்ந்தான். முகத்திலும் சற்று இறுக்கம் வந்திருந்தது.

வேரியின் முகம் விழுந்துவிட்டது. “எங்க வீட்ல....இல்ல.....நான் உங்கள ஏமாத்திட்டேன்னு ...என்னைய விட்டுட்டு போய்டுவீங்களா..?” பயமும் தவிப்புமாக அவள் கேட்ட விதத்தில் இளகிவிட்டது அவனுக்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.