(Reading time: 23 - 45 minutes)

12. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - புவனேஸ்வரி கலைச்செல்வி

ன் மேஜை மீது இருந்த அந்த புகைப்படத்தையே பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள்  தேன்நிலா.. புத்தாண்டு அன்று, அவனும் பாட்டியும் தன் குடும்பத்தோடு நின்று எடுத்திருந்த புகைப்படம் இது ... மதியழகன் கண்களில் வழிகிற நேசத்தை அந்த புகைப்படம் மிக அழகாய் பிரதிபலித்தது.. தனக்காக அவன் பார்த்து பார்த்து செய்யும் ஒவ்வொரு செயலும் அவளை வியப்பில் ஆழ்த்தாமல் இல்லை .. இப்படித்தான் முன்பொரு நாளும் நடந்தது ... என்னதான் அவள் ஒரு மருத்துவர் என்றாலும் கூட உணர்சிகளுக்கு கட்டு பட்டவள் அல்லவா அவள் ?

அன்றொரு நாள் ,

" ஹெலோ பேபி "

Ithanai naalai engirunthai

" ம்ம்ம்ம் சொல்லுங்க "

" ஹேய் என்னாச்சு குட்டிமா.. உன் குரல் சரி இல்லையே "

" ஒண்ணுமில்ல ... என்ன  விஷயமா கால் பண்ணிங்க ? ஒன்னும் இல்லன்னா நான் அப்பறமா பேசவா  ? " என்று சொல்லி அவன் பதிலுக்கும் காத்திருக்காமல் போனை வைத்தாள்  தேன்நிலா ..அடுத்த பதினைந்தாவது நிமிடம் அவள் கண்முன்னே நின்றான் அவன் ...

" இவன் ஒருத்தன் எனக்கு ஒண்ணுன்னா உடனே ஜி பூம் பா போட்டாவது இங்கு வந்திருவானே " என்று மனம் ஒரு பக்கம் சிரித்தாலும்   இன்னொரு பக்கம்  அவனது வருகை அவளுக்கு இதமாகவே இருந்தது ...

" குட்டிமா " என்று அழைத்து கைகள் இரண்டும் நீட்டி அவன் வா என்றழைக்க அவனுடன் ஒன்றிக் கொண்டாள்  தேன்நிலா .. அவளுடைய கேவல் அதிகம் ஆகவும் " அழாதே "என்று அவளை தடுக்காமல் " ஒண்ணுமில்ல டா ... ஒன்னும் இல்லை " என்று சமாதானம் படுத்தினான் மதியழகன் .. சிறிது நேரத்தில்   தெளிந்த நிலா, அவனை அமர வைத்து விட்டு அவனுக்கு சேர்ந்து காபி  கொண்டு வந்தாள் ...

" ஹப்பாடா தவிச்ச வாய்க்கு தண்ணி கிடைக்குமா நினைச்சேன் ...என் தேவதை எனக்கு காபியே தந்துட்டாளே  "

" ஹ்ம்ம்ம்ம்ம்ம் " என்று புன்னகைக்க முயன்றாள்  அவள்

" முடிலன்ன விட்டுடு பேபி .. முயற்சி பண்ணுறேன்னு என்னை கொல்லாதே  "என்றான் மதி பயந்தவன் போல ..பிறகு

" என்னாச்சு டா ????"

" இல்ல மதி இன்னைக்கு பிரசவ வலின்னு வந்த ஒரு பெண்ணுடைய குழந்தை இறந்துடுச்சு "

"..."

" எப்பவும் இந்த மாதிரி சிட்டிவேஷன் ல நான் ஸ்ட்ராங் ஆ தான் இருப்பேன் ... ஆனா நானும் பெண் தானே மது ? எனக்கும் மனசு இருக்கு ... என்னால எப்பவும் ஒரே மாதிரி இருக்க முடில "

" அப்படி நீ இருக்கவும் வேணாம் நிலா "

" ...."

" உனக்கு என்ன தோணுதோஅதை நீ கண்டிப்பா எக்ச்ப்ரெஸ் பண்ணனும் .... பட் "

"...."

" உனக்கு நான் இருக்கேன் ... எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லலாமே "

"..."

" நாம லவ் பண்றோம் ..அதுக்காக டூயட் பாடறது ...கவிதை சொல்லுறது , கொஞ்சல் இப்படி சந்தோஷமான பக்கங்களை மட்டும்தான் பகிர்ந்துக்கனுமா என்ன?"

"..."

" இனி எப்பவும் எனக்கு நீ உனக்கு நான் .... எனக்கொரு தோல்வின்ன நான் உன்னை தானே தேடுறேன் ... அந்த மாதிரி நீயும் மனசு கேட்காதப்போ என் கிட்ட தாராளமா சொல்லலாம் பேபி "

"...."

" உன் சிட்டிவேஷன் எனக்கு .புரியுது..இந்த உலகத்தில் காரணம் சொல்லி நியாயபடுத்த முடியாத ஒரு கொடுமை மரணம் !.... ஆனா இப்போ உள்ள உலகை நினைச்சு பாரேன்.. ஊழல், பொய், நயவஞ்சகம், போட்டி பொறாமை , நடிப்பு இதற்கு நடுவில் கொஞ்சம் நல்லவங்க ..அப்படிபட்ட கலியுகத்தில் இருக்கோம் ... இந்த குழந்தை  கடவுளின்  தேவதையா இருக்கலாம் ...

அவங்க அம்மாவுக்கு கொஞ்ச நாள்  தாய்மையின் சுகத்தை தர அது பிறந்திருக்கலாம் .. இப்போ அது இந்த உலகத்தில் வர்றதுக்கு சரியான நிலைமை இல்லை போல ... கண்டிப்பா மீண்டும் அந்த பொண்ணு தாயாகலாமே! அன்னைக்கும் நீயே அவங்களுக்கு டாக்டர் அம்மா ஆகலாம் " என்று ஒருவாறு அவளை சமாதானப்படுத்தியவன், அவளே தன் வாயால்

"ஷாபா  கொஞ்சம் சோகமா இருந்தா இருந்துதான் சான்ஸ் நு சைட் அடிக்க வந்துருவிங்களே ... போங்க பாஸ் போயி வேலைய பாருங்க " என்று சொல்லும் வரை அங்கேயே இருந்தான் ... அன்றைய நினைவில் இருந்து விடுபட்டவள் மீண்டும் அதே போட்டோவை பார்த்தாள் .... ஏதோ  ஒன்று மனதை அழுத்த சட்டென அவனை அழைத்தாள் ..

" மது "

" சொல்லு குட்டிமா "

" அத்தை மாமா எங்க இருக்காங்க ?"

" வாட் ?"

" உங்க அம்மா அப்பா எங்க இருக்காங்க "

" உனக்கு தெரியாதா ? "

" அட்ரஸ் தெரியாதே "

" அது எதுக்கு தேன்நிலா உனக்கு "

" ம்ம்ம்ம்கும்ம்ம்ம் கொஞ்சம் கோபம் வந்திட கூடாதே உடனே குட்டிமா போயி தேன்நிலான்னு கூப்பிடுவானே " என்று அவன் கோபத்தை ரசித்தாள்  நிலா...

"எனக்கு தெரிஞ்ச ஒரு வளர்ந்த குழந்தைய அதுடைய அம்மா அப்பாகிட்ட சேர்க்கணும் "

" அதெல்லாம் ஒன்னும் வேணாம் ...... உனக்கு என்ன நடந்துச்சுன்னு ஓரளவுக்கு தெரியும் தானே "

" தெரியும் சோ ?"

" என்ன சோ ? போதும் வேணாம் "

" காம் ஆன் மது ..குடும்பம்ன்னா  இதெல்லாம் சகஜம் தான் "

"..."

" அடம் பண்ணாதிங்க மது .. இப்போ சொல்ல முடியுமா முடியாதா ?"

" நிலா நீ ஏன் புரிஞ்சுக்க மாட்டுற ? எனக்கு இத பத்தி பேச பிடிக்கல "

" அவங்க உங்களை பெத்தவங்க மது ...நான் என் அம்மா அப்பாகிட்ட சண்டை போட்டா , சரிம்மா இப்படியே உன் குடும்பத்தை பிரிஞ்சு வான்னு சொல்லுவிங்களா  ? அதையே நான் செய்யுறது ல என்ன தப்பு  ?"

" தப்பு இல்லைதான் .. ஆனா அதே நேரம் உன் கோபம் நியாயமானதான்னு கன்சிடர்  பண்ணுவேன் "

" இப்போ நான் உங்க கோபத்தை கன்சிடர் பண்ணலைன்னு சொல்ல வர்ரிங்களா ?"

" தேன்நிலா  !!!" என்று ஒரு அதட்டல் போட்டான் மதியழகன் ..

" சாரி மது .. உங்க அதட்டலுக்கு பயப்பட நான் குழந்தை இல்லை .. நீங்க உங்க அம்மா அப்பா பத்தி  விவரம் சொல்ல மாட்டிங்க .. அவ்ளோதானே ? இதை எப்படி ஹென்டல் பண்ணனும்னு எனக்கு  தெரியும் ... நான் அப்பறமா பேசறான் .. ஐ லவ் யூ " என்று சொல்லி போனை வைத்தாள்  நிலா .. அவளது கோபத்தையும்   மீறி, அவன் மீது அவள்  காட்டும் அக்கறையை அவன் உணராமல் இல்லை ..

" தாய் தந்தையாய்  நீ இருக்கும்போது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.