(Reading time: 10 - 19 minutes)

 “வா வா மிர்னு குட்டி... வாசல்ல வச்சு சார் பயங்கர அட்வைஸ் போல.... இதுலெல்லாம் ரெண்டு பசங்களும் அப்டியே அவங்க அப்பா மாதிரி..”

“கண்டு பிடிச்சுட்டாங்களோன்னு டென்ஷனா இருக்குதும்மா...முதல்லெல்லாம் தேச பாதுக்காப்பு ரேஞ்சுக்கு பேசுனவங்க கடைசில கிண்டலா பேசின மாதிரி இருந்துது...”

“அதுல்லாம் இவனுங்க இப்டிதான் மிர்னு...ஒன்னுமே தெரியலைனாலும் எல்லாம் தெரிஞ்ச மாதிரி முகத்த வச்சுப்பாங்க....அப்டியே நாம ஏமாந்து எல்லாத்தையும் உளறிருவோம்னு நம்ம பத்தி அவ்ளவு நல்ல நம்பிக்கை....”

“இவ்ளவு தூரம் வந்து.....இப்பவும்  அவங்க இப்டி வாசல்ல இருக்காங்க.. உங்களுக்கு அவங்கள மீட் பண்ண முடியலையேன்னு வருத்தமா இல்லையாம்மா...?”

“அப்டில்லாம் இல்லாம இருந்தா நான் அம்மாவே கிடையாது....அன்னைக்கு ஊர்காரங்கட்ட  வியன் எங்க கார் ஆக்சிடெண்டாகிட்டு... அதனால மாட்டிகிட்டோம்னு சொல்லி இருந்தா.... ஊர்கட்டுபாடுங்கிற பேர்ல.... இப்டில்லாம் ஒரு நிலை வந்தே இருக்காது... ஆனா அவன் மனசுல எதோ ஒரு முடிவோட இதெல்லாம் செய்துட்டு இருக்கான்...அதுக்கு என்னால முடிஞ்ச சப்போர்ட் இது....”

“..............”

“அதோட எனக்கு கவலைபட பிடிக்காது. வாட் நெக்ஃஸ்ட்னு தான் யோசிப்பேன்...நீ என் கூட இருக்கிற நேரத்துல நான் சோக பாட்டெல்லாம் பாட தயாரா இல்லை....”

வியன் தன்னை ஏன் தன் அம்மா போல் என கவினிடம் சொன்னான் என புரிய தொடங்கியது மிர்னாவிற்கு.

“அம்மா சமையல் க்ளாஸ்னு சொல்லிட்டு வந்திருக்கேன்....தினமும் எதாவது சொல்லி தாங்க... இல்லனா அவங்கட்ட பொய் சொன்ன மாதிரி ஆயிடும்....ஆனா முதல்லயே சொல்லிட்டேன்....எனக்கு நீங்க க்ளாஸை ஸ்டவ் எப்டி பத்த வைக்கனும்கிறதுல இருந்து தான் ஸ்டார்ட் செய்யனும்....அந்த அளவுக்கு நான் சமையல்ல எக்ஸ்பெர்ட்....”

சரியாக ஒன்றரை மணி நேரம் முடிய இவள் மொபைல் சிணுங்கியது. “டைம் ஆகிட்டு நீ வெளிய வா” வியன் தான் அழைத்தான்.

“தெரியுதா....?நீ என்னை மீட் செய்ய வந்திருக்கன்னு தெரிஞ்சா இப்படி வா வான்னு பறக்க மாட்டான்...”

சமாதானமாக விடை பெற்றாள் மிர்னா.

காரில் கிளம்பியதும் கேட்டான் வியன்.

“என்னல்லாம் கத்துகிட்ட... மிர்னு...?”

“நிறைய கத்துகிட்டேன் வியன்....க்ளாஃஸ் சூப்பரா இருந்துது....ஃஸ்டவ் பத்த வைக்கிறது எப்டின்னு சொல்லி குடுத்தாங்க...”

“அம்மாடியோவ்...!!!  இங்கெல்லாம் நாப ஆன் பண்ணாலே ஸ்டவ் ஆனாயிடுமே...”

“ஆமா...ஆனா அத கூட சொல்லி தந்தா தானே எனக்கு தெரியும்...”

“மிர்னு...நீ கண்டிப்பா சமைக்க கத்துகிட்டே ஆகணுமா....? “

பரிதாபமாக கேட்டான் வியன்.

“என்ன வியன் சார்...இத நான் உங்கட்ட இருந்து எதிர் பார்க்கலை....எப்பவும் என்னை என்கரேஜ் பண்ற ஒரு ஜீவன்னு உங்கள நான் மிக உயர்ந்த இடத்துல வச்சுருக்கேன்...நீங்க என்னனா...? என் ஃப்யூச்சர கொஞ்சம் நினச்சு பாருங்க .....இது கூட தெரியாம நான் எப்டி என் ஹஃஸ்பண்டுக்கு சமச்சு குடுப்பேன்...?.”

“சரி விடு....வேற என்ன சொல்லி கொடுத்தாங்க......?”

“ம் காஃபி போடுறது எப்டின்னு சொல்லி கொடுத்தாங்க...அந்த மேடமும் வீட்ல உங்க காஃபி பவ்டர் தான் யூஃஸ் பண்றாங்க....ரொம்ப நல்லவங்க அவங்க...”

“ஓ...உலகத்துல நம்ம காஃபிய யூஃஸ் செய்றவங்கல்லாம் நல்லவங்கன்னு இப்ப தான் எனக்கு தெரியுது.... சரி போகட்டும்.....காஃபி போடுறது எப்டின்னு கத்துகவா க்ளாஃஸுக்கு போற...இதெல்லாம் நானே சொல்லி தருவேனே....”

“எப்ப...நான் மெடல் வாங்கின பிறகா...? மெடல் வாங்கினதும் நான் கல்யாணம் செய்யனும்னு முடிவு செய்துருக்கேன் வியன் சார்...சோ இப்பவே கத்துகிறதுதான் கரெக்ட்...அதோட சப்பாத்தி செய்ய சொல்லி  குடுத்துருக்காங்க...இன்னைக்கு நைட்  சப்பாத்தி செய்யபோறேன்...என் சமையல்... நீங்க நைட் எங்க வீட்ல சாப்பிட்டுட்டுதான் போகனும்...”

சி.வெ வீட்டை அடைந்ததும் தான் கற்ற காஃபியை வியனுக்கு கலந்து கொடுத்தாள் மிர்னா.

“எப்டி இருக்கு?”

“சூப்பரா இருக்குது...”

“நிஜமா...? உங்கம்மா செய்றது மாதிரி இருக்கா....?” முகம் பளபளக்க கேட்டாள் மிர்னா.

“எங்கம்மாவெல்லாம் தூக்கி சாப்டுட்டு உன் காஃபி...எங்கம்மா கலந்தா காஃபி காஃபி மாதிரி மட்டும் தான்  இருக்கும்....டீ டீ மாதிரி மட்டும் தான் இருக்கும்....ஆனா நீ போட்ட இது இருக்கே ரெண்டு மாதிரியும் இருக்கு...டூ இன் ஒன்...” புகழ் பாடும் தொனி.

“இது காஃபி தான்...” சிணுங்கலாய் வந்தது மிர்னா குரல்.

“அதான்மா நானும் சொல்றனே காஃபி மாதிரியும் இருக்குதுன்னு....”

காஃபி தான சொதப்பிட்டு நைட் சப்பாத்தி. செய்து அசத்திடுறேன்...

முடிவோடு மிர்னா சமைத்து பரிமாறினாள். 

“நல்லா இருக்கா...?”

“ஏ ஒன்...சூப்பர் ஃஸ்ட்ராங் சப்பாத்தி....”

“ஆனா ரொம்ப மெதுவா சாப்டுறீங்க...”

“அது...பிய்க்க கொஞ்சம் கஷ்டமா இருக்குது...எப்டியும் நைட்டுகுள்ள சாப்டு முடிச்சிறுவேன்...”

இப்படி ஆரம்பித்த மிர்னாவின் சமையல் 15 நாளில் படு முன்னேற்றமடைந்து ரசித்து சாப்பிடும் அளவிற்கு முன்னேறி இருந்தது.

உண்மையில் மிர்னா சமையல் கற்றுகொள்ள முக்கிய காரணம் வியனின் அம்மா அவன் சாப்பாட்டு விஷயத்தில் மிகவும் சென்சிடிவ் என்று சொன்னதுதான். இப்பொழுது இவர்கள் சமையலுக்கு ஆள் வைத்துக்கொள்ளும் நிலை இல்லை, வியன் சாப்பிட கஷ்டபடுவதை காண்பித்துக்கொள்ளவில்லை எனினும் அவளுக்கு புரிந்தது.  

மூன்று வேளையும் சமைக்க அவளுக்கு நேரமில்லை என்றாலும் இரவு உணவு வியனுக்கு இவள் கையால் என பார்த்துக்கொண்டாள் மிர்னா.

ன்று சனிக்கிழமை மாலை. வியன் மிர்னா மிஹிர் சின்ன வெங்காயம் எல்லோரும் போட்டிங் சென்றிருந்தனர். நகரின் ரைன் நதியில் ஒரு படகு பயணம். 25 பேர் பயணம் செய்திருப்பர் அப்படகில். வியன் அருகில் நின்றபடி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த மிர்னா தன்னை யாரோ பின்னிருந்து பலமாக தள்ளுவது போல் உணர்ந்தாள். எதிர்பாராத அத்தாக்குதலால் அவள் வெள்ளம் கரைபுரண்ட அந்நதியில் சென்று விழுந்தாள். குளிரில் இன்னும் சில நிமிடங்களில் அவள் உயிர் போய்விடும் என தெளிவாக புரிந்தது மிர்னாவிற்கு.

தொடரும்

Ennai thanthen verodu - 10

Ennai thanthen verodu - 12

{kunena_discuss:831}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.