(Reading time: 16 - 32 minutes)

து வந்து.. எக்ஸாம் வரற்து இல்லையா... நெருக்கதில கண்டிப்பா ரிவைஸ் செய்ய முடியாது! அதனால தான்! உங்களை இப்படி கூப்பிட்டே பழகிடுச்சா.. அதனால தான் அங்கிள்...’

'சரி மா. உன் இஷ்டம்.. ஆனா டிசம்பர் 12ம் தேதியிலிருந்து அங்கிள்னு கூப்பிடக்கூடாது' என்றார் சற்றே கண்டிப்பான குரலில். 

இது இல்ல அங்கிள்...

சரித்துவிட்டு..'சரி மா. விடு விடு.. உங்க அம்மா ஏதோ வேற பெயர் சொல்லி கூப்பிட்டாங்க?'

அது... நிக் நேம் அ..ங்கிள்! அப்பா அப்படிதான் கூப்பிடுவாங்க...

என்ன பெயர் குழலீ?

'சக்தி...'

அதிர்ச்சியுடன்...'என்ன குழலீ சொன்ன? சக்தியா? ம்ம்ம்?'

ஆமாம் அங்கிள். ஏன் இவ்வளவு அதிர்ச்சி அங்கிள்?

அதுவா? சொல்லறேன்! இன்னிக்கு ஈவ்னிங் ஒரு ஐந்து மணிக்கு எல்லாம் வீட்டுக்கு வராப்புல பார்த்துக்கோ.. அப்போ சொல்லறேன்! மற்றபடி பத்திரிக்கையை முடிவு செய்திடலாம். வெள்ளிக்கிழமை ப்ரிண்ட் செய்ய கொடுக்கலாம்..'

அங்கிள் ஐந்து மணிக்கு தான் எனக்கு அப்ரைசல் மீட்டிங்.. முடிய எவ்வளவு நேரமாகும் னு தெரியாது! நீங்க எல்லோரும் எந்த டிசைன் தேர்வு செய்தாலும் எனக்கு சம்மதம்...

இல்ல மா இது தப்பு! என் மகன் இருந்து தேர்வு செய்யும் போது நீயும் இருக்கனும் மா... எவ்வளவு நேரமாகும் குழலீ? சரி ஒன்னு செய்வோம்.. உங்க இரண்டு பேர் ஆப்பீஸும் பக்கத்துல தானே இருக்கு?

பக்கத்தில் தான்.. ஆனா வேற IT park. ஒரு ஐந்து இல்ல பத்து நிமிடம் நடக்கனும் அங்கிள்...

சரி லஞ்ச் டைம்ல... ஒரு 12.30 இல்லைனா ஒரு மணிக்கா உங்க ஆப்பீஸுக்கு சாம்பிள் எடுத்துக்கிட்டு பிரபு வருவான். நீங்க உட்கார்ந்து முடிவு செய்யுங்க! இரண்டு மூணு சாம்பிள் ஷார்ட் லிஸ்ட் செய்யுங்க. சரியா?

... சரிங்க அங்கிள்...

அப்போ இன்னும் ஒன்னு செய்யனும் நீ! ஏன் நான் இப்போ அதிர்ச்சியானேன் கேட்டேல? அதற்கு பதிலும் அவன்கிட்ட இருக்கு! அவன் போட்ட மோதிரம் இருக்குல? அதில இருக்கிற எழுத்துக்கான அர்த்தம் என்ன னு கேளு குழலீ! உனக்கே புரியும்!

...சரிங்க அங்கிள்...' என்றாள் குரல் கம்மியவாறு.

பயப்படாதே குழலீ!

பயமா..? அய்யோ அப்படியேல்லாம் இல்லை அங்கிள்... டைம் எப்படி னு யோசிட்டு இருந்தேன் அங்கிள். பயப்பட்டா இதற்கு சம்மதம் சொல்லிருக்க மாட்டேனே!

சரி மா சரி. உன் நம்பர் அவன்கிட்ட இருக்கானு தெரியலை? அவன் நம்பர் உன்கிட்ட இருக்கா? இல்லைனா எழுதிகோ குழலீ...

கூறினார்... இவளும் எழுதிக்கொண்டு புறப்பட்டாள். செல்லும் போதுதான் யோசித்தாள் 'ஏன் இப்படி பேசினோம்?' மறுபடியும் அதே வார்த்தைகள் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது...'பயப்பட்டா இதற்கு சம்மதம் சொல்லிருக்க மாட்டேனே!'. ஏன்???

பிலடேல்பியாவில்...

அவசர பிரிவில் சேர்க்கப்பட்டு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டாள் யாழினி! 

என்ன நடந்தது...

'நியூயார்க் நகரத்தின் பரம்மாண்டத்தை ரசித்தவாறு பிரபுவிற்காக காத்துக்கொண்டிருந்தாள். அவன் குறிப்பிட்ட விமானம் புறப்பட்ட பின்பும் விமான நிலையத்திலேயே காத்துகிடந்தாள். சட்டேன ஏதோ ஒரு உணர்வு தோன்ற உடனே புறப்பட்டு பிரபுவும் வெற்றியும் தங்கியிருந்த குடியிருப்புக்கு சென்றாள். அங்கேயும் காணவில்லை இருவரையும்! மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்திருந்தனர். என்னதான் செய்வது இப்படி இருவரையும் காணவில்லையே என குமுறிக்கொண்டிருநரதாள்.

அந்த நேரம் பார்த்து அங்கு வந்து சேர்ந்த வெற்றியை பார்த்தவுடன் அழுகை சிரிப்பு கோபம் என பலவகையான உணர்ச்சிகளுடன் படியிலேயே வேகமாக அவனை நோக்கி இறங்கிச் சென்றாள். கண நேர பொழுதில் கால தடுக்கி விழுந்தபோது தலையில் காயம்!

எழுந்து நிற்க முடியாத நிலை! அரை மயக்க நிலையில் பார்த்தவளுக்கு வெற்றியின் முகம் வெகு அருகில்! அவன் கைகளில் இவள்! அந்த நிலையிலும் தன்நிலை பாராது அவளுக்கு முதலுதவி செய்துக்கொண்டிருந்தான். அந்த காட்சியை அப்படியே உள்வாங்கிக்கொண்டு மீண்டும் மயக்கமுற்றாள்!’

உள்காயங்கள் ஏதுமின்றி வெளிக்காயங்களுடன் தலை மற்றும் காலில் கட்டுடன் யாழினி கண் விழித்தது மருத்துவமனையில்! அதுவும் இரண்டு முழு நாட்கள் கழித்து வியாழன் அன்று!

வெற்றி ஆனந்தனை தவிர மற்ற அனைத்து நண்பர்களும் டேக்சாஸில் இருக்கும் அவள் சித்தப்பா குடும்பத்தினரும் இருந்தனர்! அவள் கொஞ்சம் தேறி எழுந்து அமரும் வரையிலும் வெற்றி அவளுக்கு காட்சி கொடுக்கவில்லை ! அவள் கண்கள் வெற்றியை தேடியதை கவனிக்க தவறவில்லை டீனாவும் டேவிடும்!அவள் நினைவு திரும்பும் வரை அங்கே இருந்தவன் அதற்கு பின்பு வரவேயில்லை... அதற்குள் யாழினியின் சித்தப்பா அவளை தன் வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்து கூட்டிப்போவதாக கூறினார்.

குழியிடம் பேசிய வெள்ளியன்றுதான் மருத்துவமனை சென்று யாழினியை பார்த்தான் வெற்றி. அவன் வந்த நேரம் யாருமில்லை அவளருகில்! கால்களை சற்றே தூக்கி வைத்தபடி சாய்ந்த நிலையில் அமர்ந்திருந்தாள் யாழினி.

யாரோ வரும் அரவமுணர்ந்து பார்த்தவள் வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். கால்கள் அவளை நோக்கி செல்லும் போதே கண்கள் அவளைவிட்டு விலகவில்லை!அருகில் வந்து தயக்கத்துடன் நின்றான்..

நான்கு கண்களும் சந்தித்துக்கொண்டன! ஏதோ தயங்கியபடியே கெஞ்சலான பார்வையுடன் நின்றிருந்தான். அதன் வழியே அவர்கள் என்ன பேசிக்கொண்டார்களோ அவர்களுக்குதான் வெளிச்சம்! 

கோபத்துடன் அவனை அசட்டை செய்ய வேண்டும் என்று எண்ணி வேறு பக்கம் கவனத்தை திருப்ப முயற்சி! அதன் விளைவாக அமரும் நிலையை சரி செய்ய எண்ணி கொஞ்சம் நகர... தன்னிச்சையாக வெற்றி அவளை தாங்கிக்கொள்ள.. அவன் கைகளை தட்டிவட்டாள். மீண்டும் அவன் அதையே தொடர இந்த முறை அவன் கைகளைப்பற்றி நிறுத்தி அவன் கண்களை ஊடுருவிப்பார்த்தாள். மீண்டும் ஒரு அரை வெற்றியின் கன்னத்தில்! 

‘ஏய்! என்ன நீ எப்போ பார்த்தாலும் அடிச்சிட்டு இருக்க? நான் திருப்பி தரமாட்டேனு தானே இப்படி செய்யற?’

'நம்ம ஆயுசு முழுவதுக்கும் அடிச்சிட்டு தான் இருப்பேன். உன்னால என்ன செய்ய முடியும்? திருப்பி தருவியா??? ம்ம்...சரி... நான் கொடுக்கிறதை நீ எப்படி திருப்ப கொடுத்தாலும் எனக்கு ஓகே தான். அதை வாங்கிக்கொள்ள எனக்கு முழு சம்மதம் ஆனந்த்!' என்றுவிட்டு கண்ணீரும் சிரிப்புமாய் அவன் மார்பில் முகம் புதைத்து இறுகத்தழுவிக்கொண்டாள் யாழினி!’

அதிர்ச்சியிலிருந்து மீளாத வெற்றி அவள் கூறியதன் பொருள் விளங்க... புன்னகையுடன் அவளது முகத்தை நிமிர்த்தி பார்த்தான்! 

கண்ணீர் அருவியாக வழிந்து கொண்டிருந்தது!

நோ கண்ணம்மா! அழக்கூடாது!' என்று கண்களை துடைத்துவிட்டான். 

அப்படியே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர். 'தேங்கஸ் கண்ணம்மா.. தேங்கஸ்... தேங்கஸ் ஃபார் யுவர் கன்வேஷன்ஸ் செல்லம்!'

சாரி வெற்றி!! நான் உன்னை ரொம்பவே ஹர்ட் செய்துட்டேன்! என்னை மன்னி...' கூறும்போதே தனது மென்மையான இதழ் ஒற்றலால் அவளது வருத்தத்தை தடுத்து நிறுத்தினான் வெற்றி!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.