(Reading time: 16 - 32 minutes)

மிரண்டு விழித்துக்கொண்டிருந்தாள் யாழினி! முதல் முறையாக வெட்கத்தில் காது மடல் சிவக்க தலையை குனிந்தாள். 

‘ஹேய்.. வெட்கப்படறியா கண்ணம்மா தட்ஸ் நைஸ் டூ சீ யூ! ரியல்லி க்யூட் டா!' என்று அணைத்தான். 

டேய் சும்மா இரு! அடிவாங்கப்போற!'

நானும் திருப்பி கொடுக்க தயாராத்தான் இருக்கேன் அனி' என்று கண்சிமிட்டினான்.

யாழினி 'என்ன இவன் இப்படி செய்யறான்?' என்று யோசிக்கும் போதே அதை உணர்ந்தவனாக எதிரே அமர்ந்திருந்தவன் நகர்ந்து அவள் அருகில் அவள் தோள் சாயும் வண்ணம் அமர்ந்தான். 

மனதில் இருந்த எல்லா குழப்பங்களையும் ஒதுக்கிவிட்டு வெற்றியின் தோள் மீது தலை சாயத்துக்கொண்டாள்! யாழினியின் தலைமீது கன்னம் வைத்து தோளை அணைத்தவாறு பற்றினான். நீ ஆறுதல்  அடைய இந்த தோள்கள் எப்போதும் இருக்கும் என்றது அந்த பிடி!

‘தேங்கஸ் டா வெற்றி!’

‘நீ சங்கடபடற எதுவுமே நமக்கு வேண்டாம் கண்ணம்மா!’

எப்படி டா கண்டுபிடிச்ச?

உன்னை எனக்கு தெரியாதா? உன் கண் சொல்லிடுமே!

தேங்கஸ் வெற்றி! என்று நகர முற்படும் போது...

‘இப்படியே இரு! கொஞ்ச நேரம் கண்மூடிப்படு!’

தட்டாமல் செய்தாள்...

கூறியவுடன் செயல்படுத்தியவளை ஆச்சர்யமாக பார்த்து அப்படியே கண்மூடி அமர்ந்தான்.  எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்களோ...? டீனாவின் குரல் கேட்டுதான் இவ்வுலகிற்கு வந்தனர்.

ஹலோ...! போதும் போதும் உங்க ரொமான்ஸ்... நாங்கெல்லாம் இங்க தான் இருக்கோம்! ம்ம்ம்...' என்று அதட்டினாள்.

எங்கே இருக்கிறோம் என்று புரியாமல் விழித்துக்கொண்டிருந்தனர் இருவரும்! அவன் கைகள் அவள் தோள்களில் இருந்து விலகவில்லை. டீனா டேவிட் மட்டும் தான் இருப்பதாக நினைத்து அப்படியே இருந்தான் புன்னகையுடன். 

‘டேய்... வெற்றி நகரு... இப்படி வா.. ' என்றாள் டீனா. 

அவள் குரல் கொஞ்சம் கடுமையாக இருக்கவே உடனே கையை விலக்கிக்கொண்டு நகர முற்பட்டான். 

டேய் இருடா! என்ன டீனா? சும்மா மிரட்டாதீங்க! உங்களுக்கு ஏன் பொறாமையா இருக்கு?? என் புருஷன் இப்படித்தான் என் பக்கத்தில் இருப்பார்... அவர் மனைவி நானும் இப்படி தான் இருப்பேன்! டேவிட் அண்ணா கொஞ்சம் இப்படி உங்க பொண்டாட்டியை கவனிங்க!' என்று கூறும்போதே வெற்றியை அமர்த்தி அவன் தோள்மீது சாய்ந்துகொண்டு கைகளோடு கைக்கோர்த்துக் கொண்டாள் புன்னகையுடன்!

திகைத்துப்போய் நின்றிருந்தனர் டீனா டேவிட் இருவரும்!

சரிமா அனிதா... திருமணத்தை எப்போ வைத்துக்கலாம்! அண்ணன்கிட்ட எப்போ பேசரது? என்று டீனாவின் பின்னிருந்து வந்தார்கள் சித்தப்பாவும் சித்தியும்! அப்போது திகைப்பது இவர்கள் முறையானது!

உடனே சுதாரித்து இருவரும் விலகிக்கொண்டார்கள்.

தம்பி... நீ..ங்க... எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கு.. என்றார் சித்தப்பா.

சேகரன் அங்கிள் ஞாபகம் இருக்கா சித்தப்பா? பக்கத்துவீட்டு அங்கிள்??

ஆமாம் ஞாபகம் இருக்கு! சேகரன் அண்ணாவையும் மதனியையும் மறக்க முடியுமா? அவர் சொந்தமா??

ஆமாம் சார். அவர் மகன் வெற்றி ஆனந்தன் நான்.

ரொம்ப சந்தோஷம் வெற்றி.' என்றுவிட்டு சிறிது நேரம் பேசிவிட்டு புறப்பட்டனர்.

நாட்களும் நகர்ந்தது! வெற்றியின் வீட்டிலேயே யாழினிக்கு துணையாய் தங்கியிருந்தனர் டேவிட் தம்பதியினர். மதி, கவி, சலீம், ராம் என அனைவரும் ட்ரேயினிங் முடிந்து சென்னை புறப்பட்டு விட்டனர் அடுத்து வந்த ஞாயிறு!

அந்த வியாழன்...

‘வெற்றி... குழலீகிட்ட பேசனியா?’ – டீனா

யாழினியை ஹாஸ்பிட்டல பார்த்துட்டு வந்து பேசினேன். முதல்ல திட்டினா.. அப்புறம் 'நீ தூங்கு.. நான் விடிஞ்சதும் கால் செய்யறேனு சொன்னா... அதுக்கப்புறம் ஸ்விட்ச் ஆப்! எந்த ஒரு மீன்ஸ் ஆப் கம்யூனிகேசனும் இல்ல! அதுவே எனக்கு கொஞ்சம் டிஸ்டர்பிங்கா இருக்கு!

‘ஏன் டிஸ்டர்பிங்கா இருக்கு??' என்றாள் யாழினி கோபமாய்.

‘ஏன்னா?? அவ என்னோட ப்ரண்ட் கண்ணம்மா! ஏதோ அவசரமா பேசிட்டு வைச்சா.. என்ன பிரச்சினைனு தெரியலை? இந்த பிரபுவினால ஏதாவது...? ஏன் அவனை இன்ட்ரோ கொடுத்தேனு இருக்கு?’ - வெற்றி. 

‘ஏன்? அவன் என்ன பிரச்சனை பண்ணப்போறான்? ஏன் இப்படி சொல்லற?’

அச்சச்சோ...! உளரிட்டேனா?

டேய் அடி வாங்கப்போற! மரியாதையா சொல்லிடு... என்ன ரகசியம்?

‘ஒரு விஷயம் இருக்கு! காரணமில்லாம அவன் ஏன் யாழினிகிட்ட பேசி பழகினான்? எதுக்கு குழலீக்கிட்ட இன்ட்றோ? எல்லாதுக்கும் காரணமிருக்கு!’ - வெற்றி

எல்லாத்துக்கும் காரணமா? ரொம்ப சஸ்பென்ஸ் வைக்காதே டா!

இரு சொல்லுறேன் அனி! முதல்ல அவன் என்ன செய்து வெச்சிருக்கானு பார்க்கனும்! இரு அவனுக்கு ஃபோன் போடறேன்!

ஆமா வெற்றி! பிரபுவும் எங்க ஏரியா தான்! அதனால முடிஞ்சா அவளை போய் பார்த்துட்டு வர சொல்லுங்க! என்ன ஆனா னு தெரியலை?- டீனா

கிழிந்தது போங்க! அவன் போய் குழலீய பார்த்துட்டு வர?? இருங்க சொல்லறேன்! லைன்ல வரான்..இருங்க..

காலர் டியூன்... 'பூவே செம்பூவே உன் வாசம் வரும்...' என்று ஒலித்தது. 

ஹலோ பிரபு!

சொல்லு மச்சான்! எப்படி இருக்க?

நான் வெற்றி டா!

சொல்லு மச்சான் தெரியுது.. எப்படி இருக்க? யாழினி எப்படி இருக்காங்க?

ஆல் இஸ் வெல்! ஒரு ஹெல்ப் மச்சி! என் ப்ரண்ட் பூங்குழலீ இருக்கால...

ஆமா ஆமா 'உன் ப்ரண்ட் பூங்குழலீ இருக்கா...'

என்ன டா நக்கலா பதில் வருது? மறுபடியும் ஏதாவது ஹர்ட் செய்தியா அவளை?

இந்த பக்கம் பிரபு சிரித்துக்கொண்டிருந்தான்.

டேய் எதுக்கு டா சிரிக்கற??

யாரு..? நான் ஹர்ட் செய்யறேனா? ம்ம்..'என்று பெருமூச்சுவிட்டு, 'எல்லாம் என் நேரம்! சரி சொல்லு மச்சி என்ன ஹெல்ப்?'

டேய் அடி வாங்கப்போற! இல்ல இங்க இருந்து புறப்பட்ட பிறகு அவளை காண்டாக்ட் செய்ய முடியலை! எல்லோரும் ரொம்பவே தவிச்சுப்போயிருக்கோம்! அவ பத்திரமா போய் சேர்ந்தாளா னு தெரியலை? அப்புறம் நீ பேசனும்னு சொன்னதையேல்லாம் சொல்லியாச்சா?

‘நாங்களும் தான் வந்தோம்! வந்தியா இல்லையானு கேட்க ஒரு ஆள் இல்லை?’

டேய்... பிரபு...! சத்தியமா அடிதான்...

சரி...சரி அடிக்கலாம். எல்லாம் பத்திரமா  வந்தாச்சு! நான் பேச வேண்டியது எல்லாம் பேசியாச்சு! அவகிட்ட வாங்கி கட்டியாச்சு!

சரி ஓகே! இதுக்கு மேல நான் எதுவும் கேட்கல. இப்போ புரியுது அவ ஏன் ரீச்சபல்லா இல்லைனு!

சரி நான் அவகிட்ட… இல்ல… இல்ல… கலெக்டர் மேடம் கிட்ட சொல்லறேன்.. உங்ககிட்ட பேச சொல்லறேன்.

டேய் என்ன நக்கலா? நீ உதவி செய்யலனாலும் பரவாயில்லை உபத்திரம் செய்யாதே! நீ செய்த வேலைக்கேல்லாம் உன்னை கண்டிப்பா அவங்க வீட்டுல சேர்க்க மாட்டாங்க அப்போ எப்படி சொல்லுவ?

கவலையை விடு! உன் ப்ரண்ட் உன்கிட்ட பேசுவா... ஓகேவா? அதுக்கு நான் பொறுப்பு! நான் பிங் செய்யறேன் அப்போ கூப்பிடு ஓகேவா? பட்.. நேக்ஸ்ட் மந்த் ஃபர்ஸ்ட் வீக் இங்க இருக்கிறாப்புல பார்த்துக்கோ! நீங்க எல்லோருமே தான்! விவரம் ஈவ்னிங் சொல்லறேன்! டிக்கட்ஸ் ப்ளாக் பண்ணு! நான் அப்புறமா கூப்பிடுறேன். பை!' என்று வைத்துவிட்டான். 

என்ன ஆச்சு வெற்றி? பிரபு என்ன தான் சொல்லறார்? நோ சஸ்பன்ஸ் ப்ளீஸ்...' என்றாள் டீனா. 

இருங்க டீனா சொல்லறேன் என்று பிரபு இப்போது பேசியதை கூறினான். 

சரி ஏதோ காரணமாகதானு சொன்னியே அது? - யாழினி

அதை அவன் கால் செய்த பின்பு சொல்லறேன். இப்போ நேரமாச்சு நீ போய் தூங்கு!

பூங்குழலீ பிரபு என்ன பேசப்போகிறார்கள்? ஆனந்த் காரணத்தை கூறுனானா? எப்படி நடக்கப்போகிறது இவர்கள் திருமணம்? மனது ஒன்றுபடுமா? காத்திருப்போம் விடைகளுக்கு!!!

தொடரும்...

Episode # 06

Episode # 08

{kunena_discuss:833}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.