(Reading time: 17 - 34 minutes)

12. வாராயோ வெண்ணிலவே - சகி

றைவனானவன் பெரும் இரசிகன்.

எதிலும் அவன் காட்சி!!!

எடுத்துக்காட்டாக,

Vaarayo vennilave

இயற்கை தனை படைத்தான்.அழகின் சாட்சியை வைத்தான்.

அன்று புதியதாக தோன்றிய விடியலை கண் இமைக்க மறந்து பார்த்தாள் வெண்ணிலா.

எவ்வளவு பிரகாசம்???

ஆதவனானவன் தன் கிரணங்கள் கொண்டு இருளை அகற்ற மட்டுமல்ல காலத்தையே மாற்றும் வல்லமை பெற்றுள்ளான்!!!!

மனம் சாந்தியடைகிறது அவனது உஷ்ணத்தில்!!!

கோபம் என்றும் சிறந்ததல்ல!!!

ஆனால் இரட்சிக்க பிறந்த கோபம் உரிமையை கொண்டு உறவை வெல்கிறதல்லவா???

புதியதாக கிடைக்கும் பாதுகாப்பு தொடக்கத்தில் அச்சம் தந்தாலும்!!!

உணர்வை காக்கிறது என்பது உண்மையே!!!!!

விசித்ரமான விதி தான் காலத்தின் விதி!!!!

"காலையில எழுந்தவுடனே சூரியன் கூட டூயட்டா?"-மீனாட்சி வம்பிழுத்தார்.

"சூரியன் கூட தானே பாட முடியும்?"

"அம்மாடி!அதுக்குள்ள ஆசை வந்துடுச்சா?சீக்கிரமே உனக்கு மேளம் கொட்டுறோம் இரு!"-நிலா அமைதியாக,

"கடைசிவரை கூட எந்த உறவும் நிலைக்க போறதில்லை!!!ஆனா,இருக்கிற வரைக்கும் கிடைக்கும் உறவு இறக்கவும் போறதில்லம்மா!"-அவர் கேள்வியாய் பார்த்தார்.

"விஷ்வா பற்றி கொஞ்சம் பேசணும்!"

"என்னடா?"-நீண்ட நேரம் எதையோ பேசினாள்.அதைக் கேட்ட மீனாட்சி விழிகள் விரிந்தன.

"அவனா??நிஜமாவா?"

"ம்..."

"அவர் இதை ஏற்றுப்பாரான்னு தெரியலையே!"

"உங்களுக்கு சம்மதமா?"-மீனாட்சி ஆசையோடு அவள் கன்னத்தை வருடினார்.

"என் நிலா சொல்றான்னா!அதுல,ஒரு இடத்துல கூட பிழை இருக்காது!எனக்கு சம்மதம்!"

"தேங்க்ஸ்மா!அப்பாக்கிட்ட நான் பேசிக்கிறேன்!

விஷ்வாக்கிட்ட சொல்லாதீங்க!கொஞ்ச நாள் போகட்டும்!"

"சரிம்மா!"-(இதோ வழங்கிட்டார்ல சூரிய தேவர் முதல் பிரகாசத்தை.)

"டேய் தடியா!"-எதையோ யோசித்தவனின் எண்ணத்தை கலைத்தது நிலாவின் குரல்.

"ம்....!"

"வெளியே போகலாம் வா"

"நான் வரலைடி!"-எப்போதும் வெளியே செல்வது என்றால் முதல் ஆளாய் நிற்பவன் இப்போது இப்படி பேசுகிறான்!

"ஏன்டா கப்பல் கவுந்தா மாதிரி இருக்க?"

"அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை!"

"வாடா!"

"வரலைடி!"-அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு சென்றாள்.

எதிலும் ஈடுப்பாடில்லாமல் இருந்தான் விஷ்வா.

"விஷ்வா கைக்காட்டு!"-நீட்டினான்.

ஒரு கடிகாரத்தை அணிவித்தாள்.

"நல்லா இருக்கு!"

"எனக்கு எதுவும் வேணாம்!"-கடையில் இருந்தவர்,

"ஏன் சார் மேடம் உங்களுக்கு என்ன வேணும்?"என்றார்.

"அக்கா!"

"ஊர்ல உலகத்துல எனக்கு தெரிந்து எந்த அக்காவும் தம்பிக்கு வாங்கி தர மாட்டாங்க!நீங்க ரொம்ப லக்கி!வாங்கிக்கோங்க சார்!"

"உங்களுக்கு வாட்ச் வாங்கணும்னு கவலை!"

"வாங்கிக்கோங்க சார்!"

"பேக் பண்ணுங்க!"-தலை எழுத்தே என்று கூறினான்.

"அடுத்து என்ன?"

"டிரஸ்!"அவன் முறைத்தான்.

"உனக்கில்லை எனக்கு!"

"வா!"-டிரஸ் செக்ஷனுக்கு செல்லும் வழியில்,

"டேய் விஷ்வா"-தடுத்தாள் நிலா.

"என்ன?"

"அங்கே பார்!"

"எங்கே?"

"அங்கே"-விரல் வைத்து சுட்டினாள்.பார்த்த இடத்தில் வைஷ்ணவி!!!

"நீ வா வீட்டுக்கு போகலாம்!"

"இருடா பேசிட்டு போகலாம்!"

"வேணாம் வா!"-நிலாவை கவனித்த அவள் கை காட்டினாள்.

இவளும் பதிலுக்கு கை காட்டினாள்.

"நீ பேச தேவையில்லை நான் பேசிட்டு வரேன்!"-அவன் தலையில் ஒருமுறை அடித்து கொண்டான்.

"எப்படி இருக்க வைஷ்ணவி?"

"நல்லா இருக்கேன்.என்னங்க அன்னிக்கு அவரை அப்படி திட்டுனீங்க?இன்னிக்கு..."-குழப்பமாய் கேட்டாள்.

"அவன் என் தம்பி!"-சிரித்தப்படி நிலா கூறிய பதிலில் வைஷ்ணவியின் கரும்விழிகள் மலர்ந்தன.

"நிஜமா தான்!"

"ஆனா!"

"உன் கூட கொஞ்சம் தனியா பேசணும்!ஒரு  அரை மணி நேரம் 

எனக்காக?"

"தாராளமா!"

"இங்கே வேணாம்!காப்பி ஷாப் போகலாம்!"

"சரி!"-விஷ்வாவை கடந்து செல்லும் போது,

"விஷ்வா அம்மா ஒரு மொபைல் வாங்கி வர சொன்னாங்க!நீ வாங்கிட்டு பக்கத்துல இருக்கிற காப்பி ஷாப்க்கு வா!"

"நீ?"

"கொஞ்சம் பர்ஸ்னல்!"

"ம்"-அரை மனதோடு தலை அசைத்தான்.

வெண்ணிலாவும்,வைஷ்ணவியும் காப்பி ஷாப்பிற்குள் நுழைந்தனர்.

நிலா இரு காப்பியை வரவழைத்தாள்.

"சொல்லுங்க என்ன விஷயம்?"

"நான் சொல்ல போறது உனக்கு எப்படி இருக்குமோ!ஆனா,எனக்கு சரியான பதில் சொல்லணும்!"-புதிர் போட்டாள்

"ம்..."

"விஷ்வா பற்றி என்ன நினைக்கிற?"-அவள் முகத்தில் ஏதோ ஒரு ரேகையில் நாணம் படர்ந்ததை நிலா கவனிக்க தவறவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.