(Reading time: 18 - 35 minutes)

ண்டிப்பா……வி ஆர் நாட் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்….வி ஆர் ரிலடிவ்ஸ்…..”

என் மாமா உனக்கு சித்தப்பா…..அவனது டயலாக் ஞாபகம் வர சிலீர் என்றது அவளது அட்ரீனல் சுரப்பி. அடுத்த நொடி ஆகயத்தில் பறந்தாள் அவள். கூடவே பயம் பயம் என்றது மனம்.

“என் அப்பாவைபத்தி சொன்ன நல்ல விஷயங்களுக்கு தேங்க்ஸ்….பை…” கட கடவென பள்ளியின் உட்புறம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள் ரேயா.

அப்பொழுதுதான் புனிதா இவர்களைவிட்டு சற்றே விலகி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் கவனித்தாள்.

 நானும் ஆதிக்கும் தனியாகவா பேசிக் கொண்டிருந்தோம்…ஐயோ…யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க..? இந்த ஆதிக் எப்படி உள்ள வந்தான்..? செக்யூரிட்டி என்ன செய்துட்டு இருக்கார்…? இவ்ளவு நியாயம் பேசுற இந்த ஆதிக் செக்யூரிட்டிக்கு தெரியாம எதுக்கு உள்ள வரனும்? ஆ…அப்பா இப்ப வந்தா எப்டி இருக்கும்..?

சூழ்நிலையின் முழு ஆழ அகலத்தை அவள் ஆராயும் போதே கார் ஹார்ன் சத்தம். திடுக்கிட்டு திரும்பினாள்.

அப்பா!!!!!!!

ஆதிக் வரவேற்பறை முகப்பில் நிற்க, அவனை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தார் அப்பா. ஐயோ……என இவள் பதறிக் கொண்டிருக்க ஆதிக்கோ இவளது அப்பாவை நோக்கி கம்பீரமும் புன்னகையுமாக சென்றான்.

நம்பிக்கையுடன் தன் வலக்கையை நீட்டினான்.

“குட் ஈவ்னிங் அங்கிள்…..நான் ஆதிக்…..சன் ஆஃப் டேவிட்….”

அப்பாவோ கை குலுக்காமல் இவள் நம்ப முடியாத காரியத்தைச் செய்தார். எந்த வாலிப ஆண்களை கண்டாலும் ஒரு முகசுழிப்போடு பேசும் அப்பா ஆதிக்கை கட்டி அணைத்தார்.

“டேவியோட சன்னா….உங்கப்பா மாதிரியே படு ஹேன்ட்சம்…பார்த்து எவ்ளவு நாளாச்சு…?...சிமி மேரேஜுக்கு கூட இப்ப நீ வரலையே…லாஸ் ஏஞ்சலிஸ்ல  இருக்றதா சொன்னான் டேவி… ”

“ஆமாம் அங்கிள்….என் லீவ் ஷெட்யூல்லாம் கேட்டுதான் வெட்டிங் டேட் ஃபிக்‌ஸ் செய்தாங்க…பட் லாஸ்ட் மினிட்ல அங்க காலேஜல் ஃஸ்ட்ரக் ஆகிட்டேன்….இப்போதான் வர முடிஞ்சுது…இன்னும் சிமி அதுக்காக என்னை திட்டிட்டு தான் இருக்கா…”

“ம்…வருத்தம் இருக்கத்தான செய்யும்….சிமி எப்டி இருக்கா..?”

“நல்லா இருக்கா அங்கிள்….அப்பா கூட இப்போ அவ வீட்டுக்குத்தான் போயிருக்காங்க….”

“உங்கப்பாவா….அவனுக்கு நேர்ல பார்க்கிறப்ப ரெண்டு அடி இருக்குது….பிள்ளைய இங்க அனுப்பிட்டு என்ட்ட ஒரு வார்த்தை இன்னும் சொல்லலை….”

“அதை நீங்க அவங்கட்டயே கேட்டுகோங்க அங்கிள்..” பேசிக் கொண்டே ரேயாவின் தந்தையுடன் இவளைக் கடந்தவன் இவளை ஒரு பார்வை பார்த்துச் சென்றான்.

டேவிட் இவளது அப்பாவின் கல்லூரி கால நண்பர். மும்பையில் இருவரும் ஒன்றாக படித்தவர்கள். படிப்பிற்கு பின் ரேயாவின் தந்தை ராஜ்குமார் பூர்விகத்திற்கு அருகில் என இங்கு குடியேற, டேவிட்  கோயம்புத்தூரில் குடியேறி இருந்தார். இவ்வளவுதான் இவளுக்கு அவர்களைப் பற்றி தெரியும். தூரத்து உறவினராய் இருக்கலாம்.

ஆதிக்கை அப்பா தழுவுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மகன் இல்லை என அப்பா வருத்தப் பட்டு இவள் பார்த்தது இல்லை. இருப்பினும் மகன் இருந்திருந்தால் அப்பா இப்படித்தான் மகிழ்ந்திருப்பாரோ என்று இல்லாத சகோதரனுக்காக ஏக்கம் வருகிறது.

ஆதிக்கும் அப்பாவும் பள்ளியின் உள்ளே சென்று கொண்டிருந்தனர். செக்யூரிட்டி இப்பொழுது அவர்களுக்கு முன்னதாக ஓடிக் கொண்டு இருந்தார். அவள் மனம் நடப்பிற்கு வருகிறது. செக்யூரிட்டி ஏன் இப்படி ஓடுகிறார்?

இந்த ஸ்கூல் டேவிட் அங்கிளுடையது என்பதே இப்பொழுதுதான் ஞாபகம் வருகிறது. அதாவது ஆதிக்கினுடையது.

இவள் தந்தை முன்னால் செல்ல, ஆதிக் அவர் பின் சென்று கொண்டிருந்தான். அவர்களை தொடர்ந்து உள் நோக்கி நடக்க தொடங்கினாள் ரேயா.

அந்த ட வடிவ ஹாலில் இவளது தந்தை திரும்பி நடக்க, அவரது பின் சென்ற ஆதிக்கோ திருப்பத்தில் திரும்பாமல் சட்டென இரு எட்டு பின்னால் வைத்து இவள் எதிர்பாராத வகையில் இவளுக்கு மிக அருகில் வந்தவன் “மருமகனும் மகன் போலத்தான் “ என ரகசியம் போல் சொல்லிவிட்டு வேகமாக முன்னால் சென்றுவிட்டான்.

அடிவயிற்றிலிருந்து எழுந்த அதிர்ச்சி அலை காதுமடல் வரை காந்தியது. இவள் நினைவை படித்திருக்கிறான்…அதைவிட இது என்ன மருமகன்..? தவித்துப் போனவள் சட்டென புனிதாவின் நினைவு வர அவளை திரும்பிப் பார்த்தாள்.

குறுகுறுவென இவளையே பார்த்துக்கொண்டிருந்தாள் புனிதா.

 

ஷாலு பயந்து தவிக்க தொடங்கி சில நிமிடங்கள்தான் ஆகின்றன. ஆனால் ஒரு யுகமாய் தோன்றுகிறது.

இருட்டில் யார் யாரோ எதை எதையோ சொல்லிக் கொண்டும் சிரித்துக் கொண்டும்…அவன் காரை நிறுத்தி இருந்த இடத்தை தோராயமாக கணித்து ஓடினாள்.

இருந்த பதற்றத்தில் யார் மீதோ மோத….

“ஏய் பார்த்து போ…கண்ணு என்ன பின்னாலய இருக்குது உனக்கு…?” யாரோ திட்டினார்கள். அப்பொழுதுதான் கவனித்தாள். ஒரு பெண்ணை இவள் மோதி இருக்க அவளுடன் வந்தவன் இவளிடம் காய்ந்தான்.

“சாரி…சார்…” இவளுக்கு முன்பாக சாரி கேட்டது அவனது குரல். அவன் தான் அந்த அவன்.

“எங்க போய்ட்டீங்க….?” அழுகையும் கோபமுமாக இவள்.

“ஹேய்…பயந்துட்டியாமா….சாரி…..வெரி சாரி…நீ வா…முதல்ல வந்து உட்கார்” அவளை அழைத்துக் கொண்டு சற்று தள்ளி இருந்த மணல் பரப்பில் அமர்த்தினான்.

இன்னும் அழுகை மாறாமல் அவள்.

“எங்க போய்டீங்க…?”

“காருக்கு போய் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வர போனேன்மா….நீ இன்னும் எதுவும் சாப்டலையே….பசிக்குது தான….நீ விளையாடிட்டு இருந்ததால அதுவும் 2 நிமிஷத்துல காருக்கு போய்ட்டு வந்துடலாம்னு..சொல்லாம போய்ட்டேன்……சாரி….இனி எப்பவும் எங்க போனாலும் சொல்லிட்டு போறேன்…”

“………..”

“ப்ளீஸ் அழாத ஷாலு…”

“……………….”

“பக்கத்துல இருந்து பார்க்கிற என் நிலைமையையும் யோசிச்சுப் பாரு… பயமா இருக்குல்ல…”

திரும்பி முறைத்தாள். இரு நொடி தான். குனிந்து தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

“ஹப்பா…சிரிச்சுட்டாப்பா….உண்மையிலே ரொம்ப பயந்துட்டேன் நீ அழுததைப் பார்த்து…”

“ம்”

“இப்ப கூடவா உங்க பேர் என்னனு கேட்க மாட்ட…?”

“ம்…சொல்லுங்க…”

“சரித்ரன்….வீட்ல சரன்னு கூப்டுவாங்க….இப்பவாவது ஞாபகம் வருதா….?”

“ம்…சித்தியோட அண்ணனோட சன்…”

“இவ்ளவுதான் ஞாபகம் வருதா….டூ பேட்….அத்தான்……என் அத்தான் ன்னு எதேதோ சொல்லுவன்னு நினைச்சேன்….சின்ன வயசில் ரொம்ப விளையாடி இருக்கோம்….”

“ம்… ஞாபகம் இருக்குது….யார் என் கூட சண்டை போட்டாலும் நீங்கதான் எனக்கு சப்போர்ட் செய்வீங்கன்னு சித்தி சொல்லுவாங்க…”

“சித்தி சொன்னதுதான் ஞாபகம் இருக்குது…என்னை ஞாபகம் இல்லை…”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.