(Reading time: 17 - 34 minutes)

ன்னடா துணா… மீட்டிங்க் அட்டெண்ட் பண்ணவிடாம போன் மேல போன் போட்டிட்டிருக்குற?...” என்று சற்றே கோபமுற்றான் யுவி…

“அதில்லடா… உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்… அதான்…”

“ஹ்ம்ம்…. சரி… சொல்லுடா என்ன விஷயம்?...”

“அதாண்டா… உன் தங்கை சாரி… சாரி.. மையனோட தங்கை பாலா இருக்காங்கல்ல…”

“ஆமா… பாலாவுக்கு என்ன?...”

“மேடம்க்கு இன்னைக்குத்தான் என் மேல அக்கறை, காதல் வருது போல…” எனவும்

யுவியோ, “தெளிவா சொல்லுடா… புரியலை…” என்றான் துணாவிடம்….

“உனக்குப் புரியும்படி சொல்லுறேன்… நல்லா கேளு…” என துணா யுவியிடம் அவர்களது உரையாடலை சொல்லிவிட்டு, “லெட்டர் ரெடி பண்ண நோட்ஸ் கொடுத்துட்டிருந்தேண்டா.. அந்த நேரம் பார்த்து ஒரு போன் கால், சரின்னு அட்டெண்ட் பண்ணிட்டு பேசிட்டு வந்தா, பாலா அப்படியே என்னையே பார்த்துட்டிருக்குறாடா… எனக்கு அப்போ எப்படி இருந்துச்சு தெரியுமா?...” என ஆர்ப்பரித்தவன் அந்த நேர நினைவில் மூழ்கினான்…

“சரிங்க… நாளைக்கு ஒருதடவை நான் நேரில் வந்து பார்த்துட்டு பதில் சொல்லுறேன்… நீங்க எல்லாம் ரெடி பண்ணி வைங்க… அது போதும்…” என்றபடி போனை கட் செய்துவிட்டு திரும்பிய துணா, பாலாவின் கண்களில் தெரிந்த காதலில் தன்னை மறந்துதான் போனான் ஒரு கணம்…

“மனசு முழுக்க என் மேல இவ்வளவு காதலை வச்சிட்டு இன்னும் என்னடி நாடகம் உனக்கு?... வாயைத்திறந்து என்னைப் பிடிச்சிருக்குன்னு தான் சொல்லிடேன் அன்னைக்குப் பிடிக்கலைன்னு பட்டுன்னு சொன்ன மாதிரி… சொல்லிடேண்டி திரபா…” என அவனும் அவளையேப் பார்த்த வண்ணம் தனக்குள் கெஞ்சினான்…

அவனின் கெஞ்சல் அவளுக்குக் கேட்டதோ என்னவோ, சட்டென்று இருந்த மோன நிலையில் இருந்து வெளிவந்தவள் பார்வையை அவன் புறமிருந்து திருப்பிவிட்டு தலை குனிந்து கொள்ள,

அப்படியே அவள் முகத்தினை கைகளில் ஏந்தி, “உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடி திரபா…” என்று சொல்ல விழைந்தது அவன் உள்ளம்….

இருந்தாலும் பொறுமையைக் கையிலெடுத்து, அமைதி காத்தான் அவன்….

மனதினைக் கட்டுப்படுத்திக்கொண்டு, “பாலா… நான் சொன்னதெல்லாம்… நோட் பண்ணிட்டீங்க தானே?... அதுல எதுவும் டவுட்ஸ் இருக்கா?...” என அவளை சீராக்கும் வண்ணம் அவன் கேட்க..

“இ…ல்….லை…” என்றாள் அவள்…

அவள் பதில் சொன்ன விதமே அவனுக்குப் புரிந்து போனது… அவள் இன்னும் அந்த நிலையில் தான் இருக்கிறாள் என்று…

“சரி பாலா… நீங்க போய் லெட்டர் ரெடி பண்ணிட்டு கொண்டு வாங்க…” என்றதும், சட்டென்று அங்கிருந்து தப்பித்தோம், பிழைத்தோம் என ஓடிவிட்டாள் அவள்…

பின்னர் சிறிது நேரத்திற்குப் பிறகு, லெட்டரை கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்… அவனும் பதிலுக்கு அவனது நன்றியைத் தெரிவிக்க, அதையும் ஏற்றுக்கொண்டு அறையின் வாயில் வரை சென்றவள், பின் திரும்பி நின்று அவனை ஒரு பார்வை பார்த்தாள்..

துணா, என்ன என்று வாயைத்திறந்து கேட்கவில்லையே தவிர, அவன் கண்கள், “என்னடி திரபா… சொல்லு…” என்றது…

அவன் கண்கள் கொஞ்சிய விதம், அவளை ஈர்த்தது மிக… இருந்தாலும் மனதினுள் உள்ள பயத்தை வெளிக்காட்டாமல், “ஹ்ம்ம்… டேக் கேர்…” என்றாள் மெல்ல…

சரி என அவனும் தலை அசைத்து அவளை அனுப்பிவிட்டு மெல்ல யோசித்தான்… எதற்கு டேக் கேர் சொன்னாள் என…

யோசித்து யோசித்துப் பார்த்தும் அவனுக்கு விடை தெரியவில்லை… சரி யுவியிடம் கேட்கலாம் என்றெண்ணி அவனுக்கு போன் செய்தான்…

பாலாவின் பார்வையில் ஆரம்பித்து யுவி என்று அவன் யோசனை முடிவடைந்த வேளையில், அவன் வாய்விட்டு கத்தினான்… “அய்யய்யோ சாரிடா யுவி… சாரி சாரி…” என…

யுவியோ, “என்னடா எங்கிட்ட பேசும்போதே ஒரு ரீகேப் பார்த்துட்டு வந்துட்ட போல?... கலக்குடா…” எனவும்

துணாவிற்கு வெட்கம் வந்துவிட்டது…

“சாரிடா.. உங்கிட்ட சொல்லிட்டிருந்தேனா. அப்படியே நானும் நடந்ததை நினைச்சுப் பார்க்க போயிட்டேண்டா யுவி… அதான்… சாரிடா…”

“பரவாயில்லைடா… சரி எங்கிட்ட சொல்லவந்ததை சொல்லி முடிச்சிட்டியா இல்லையா?...”

“லாஸ்டா டேக் கேர்ன்னு சொல்லிட்டுப் போனாடா… அதுதான் ஏன்னு எனக்கு தெரியலை…”

“அடப்பாவி இதுக்காடா என்னை மீட்டிங்கில் டிஸ்டர்ப் பண்ணுற?...”

“டேய்… டேய்… எனக்கு நீதானடா ஹெல்ப் பண்ணணும்… அதான்…” என துணா பாவமாக சொல்லவும்,

“பாலா மனசுல நீ வந்து போக ஆரம்பிச்சிட்ட… அதனால தான்…” என்றான் யுவி சட்டென…

“ஹ்ம்ம்… நானும் அப்படித்தான் நினைக்கிறேன்… ஆனா இந்த டேக் கேர்??...”

“அது எதாவது கெட்ட கனவு கண்டிருப்பாடா உன்னைப் பத்தி… அதனால தான் டேக் கேர்ன்னு சொல்லிட்டு போயிருப்பா…” என யுவி, நடந்ததை கண் முன் கண்டவன் போல் பாலாவின் மனதை அப்படியே சொன்னான் மிக தெளிவாக…

“ஓ… அதான் அவ முகமே இன்னைக்கு கொஞ்சம் சரியில்லையா?...” என்ற துணா, “ஹ்ம்ம்… இதுக்குத்தான் மேடம் டேக் கேர் சொன்னாங்களா?... சரிதான்…” என்று சிரிக்க…

“ஹ்ம்ம்… உன் நலத்தை அவ விரும்புறாடா… அவ உன்னை விரும்ப ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆச்சுடா… ஆனா, உங்கிட்ட தான் சொல்ல மாட்டிக்குறா… பட் எனக்கென்னவோ சீக்கிரம் அவ சொல்லிடுவான்னு தோணுது…” என யுவி அமைதியாக சொல்ல,

துணாவோ ஆர்ப்பரித்தான்… “ஹேய்… யுவி… நிஜமாவாடா சொல்லுற?... நானும் சொல்லிடமாட்டாளான்னு தான் ஏங்குறேன்… ஹ்ம்ம் எங்க???...” என்றபடி பெருமூச்சு விட்டான் அவன்…

“துணா… சொல்லுவாடா.. வெயிட் பண்ணு… அவளோட இந்த மாற்றமே உன் காதல் உனக்கு கைகூடின மாதிரி தான்… சீக்கிரம் அவளும் உன் கை சேருவாடா… டோன்ட் வொர்ரி…”

“ஹ்ம்ம்… அந்த நம்பிக்கை தான்டா எனக்கும் பலம் கொடுக்குது…”

“ஹ்ம்ம் அப்புறம் என்னடா… ஃப்ரீயா விடுடா…”

“ஒகேடா… யுவி…”

“இப்பவாச்சும் நான் மீட்டிங்க்கு போகவாடா?...” என யுவி கெஞ்சலாக கேட்க,

“அடடா… ஆமால்ல… நான் அதை மறந்துட்டேன்…” என்று உச்சு கொட்டிய துணா, “யுவி நான் உங்கிட்ட ஒன்னு கேட்பேன்… நீ அதுக்கு பதில் சொல்லிட்டு உன் வேலையைப் பார்க்க போடா…” என்று சொல்ல…

யுவியோ, “கேளுடா…” என்றான்…

“நீ எதுக்குடா கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லுற?... இந்த கேள்வியை நேர்ல கேட்டா நீ என்னை அடிச்சாலும் அடிப்ப… அதான் போன்ல கேட்குறேன் யுவி… சொல்லுடா… யாரையாவது நீ…?...” என அவன் கேட்டு முடிக்கும் முன்னமே,

“இங்க கூப்பிடுறாங்கடா துணா…. நான் அப்புறமா பேசுறேண்டா… வச்சிடுறேன்…” என்றபடி போனை கட் செய்துவிட்டு மீட்டிங்க் நடக்கும் அறையை நோக்கி நடந்தான் யுவி…

யாரை இன்று பார்க்கக்கூடாது என்று எண்ணி அலுவலகம் வந்தானோ, அது கொஞ்ச நேரத்தில் தவிடு பொடியாகி இருந்த இடம் தெரியாமல் மறைந்தும் போனது… வள்ளியைப் பார்த்ததில்…

“இவளைப் பார்த்தாலே… என் மனம் என்னிடம் இருக்க மாட்டேன் என்கிறதே…” என்று அவன் புலம்பிய நேரத்தில் தான் துணா யுவிக்கு போன் செய்தான்…

இப்பொழுது துணா கேட்ட கேள்வியில் சற்றே தடுமாறி தான் போனான் அவன்…

சட்டைப் பையின் மேல் கைவைத்து தடவி பார்த்தவன், மெல்ல தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயன்றான்…

அப்பொழுது கண்ணாடி சுவரின் வழியாக வள்ளியின் பிம்பம் தெரிய, அவனது முயற்சியும் தோல்வியில் முடிந்தது… அவனது மனதை கடிவாளமிடும் எண்ணத்தைப் போல…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.