(Reading time: 20 - 40 minutes)

வன் முகத்தில் வந்த பாவம் பார்க்க மனதிற்குள் மாலை நேர சாரல்.

ஆனாலும் முதல் வாய் வாங்கும் போது வெட்கம் வந்தது. சாப்பிட்டு முடிக்கும் வரை எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

“டேப்லட்டாவது போடத் தெரியுமா இல்ல…?” அவன் எடுத்து நீட்டிய மாத்திரைகளை வாங்கி முழுங்கி வைத்தாள்.

“எல்லாத்திலயும் பிடிவாதம் தான் என்ன?”

“பின்னே, பிடிவாதம் பெண்ணுக்கழகு”

“இது எங்கங்க சொல்லியிருக்குது….?”

“நாம சொல்லிக்க வேண்டியதுதான்….நம்ம வாய்…நம்ம டயலாக்…”

அவளை சிரிக்காமல் ஒரு பார்வை பார்த்தான்.

“நல்ல விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான்…இது பைபிள்….எப்டி பார்த்தாலும் நான் செய்றது கரெக்டுதான்…நாங்க ரொம்ப நியாயவாதி யூ நோ”

“ஓ…அப்ப அன்னைக்கு லைப்ரரில என்ன நல்ல விஷயதுக்கு பிடிவாதம் பிடிச்சு எந்திரிச்சு போனீங்களாம்?”

“ம்…அப்ப நீங்க நவ்யா இல்லாத நேரம் மட்டும் என்ட்ட காதல் மழை பொழிஞ்சீங்க…மத்த நேரம் கருங்குரங்க கண்ட கடப்பாரை மாதிரி போனீங்க….லைப்ரரிக்கும் நவ்யா இல்லாத நேரமா பார்த்து வந்தீங்க…..”

“அதென்ன கருங்குரங்கும் கடப்பாரையும்? ஒன்னும் புரியலை…”

“ஹ ஹா ஹா…அத புரிஞ்சுக்கெல்லாம் கொஞ்சம் ப்ரெய்ன் வேணும் மதுர் பையா…..கடப்பாரைக்கு கண்ணே கிடையாது…அது கருங்குரங்க மட்டுமில்ல எதையும் பார்க்காது… அதோட க க எதுகை மோனைலாம் எகுறுதுல….மை தமிழ் புலமை இஸ் எக்ஸ்ட்டார்டினரி யு நோ…”

“ஆமா தமிழோட எதிர்காலம் பலமா இருக்குதுன்னு இப்பவே தெரியுது…அடுத்த ஔவையார் ரெடி…”

“தேங்கு தேங்கு…பைதவே விஷயதுக்கு வாங்க…எதுக்கு ஆரம்பத்துல நவ்யா இல்லாத நேரம் மட்டும் வந்தீங்க…?.”

“ஹேய் அறிவு ஜீவி….சைட் அடிக்றதுக்கும் ஐ லவ் யூ சொல்றதுக்கும் ஆள் சேர்த்துகிட்டா வர முடியும்…அதுவும் அவ எனக்கு முறையில சித்தப்பா பொண்ணு…”

“ஓ…எனக்கு என்னமோ நீங்க என்ட்ட பழகிறத ஒரு செகண்ட்ரி விஷயமா…ஏதோ ஒளிஞ்சு மறைஞ்சு செய்ய வேண்டிய தப்பான விஷயம்போல ட்ரீட் செய்றதா ஃபீல் ஆச்சு…..இப்பவும் அந்த வில்லன்…..” என்றவள் வெளியே எட்டிப் பார்த்தாள்.

  “அந்த வில்லன் போயாச்சா…? அவன் என்ன நாம பார்க்க கூடாதுன்னு சொல்றது..?”

“சதீஷை உனக்கு பிடிக்காமலே இருந்துட்டு போகட்டும்…அவர் அண்ணன்னு தான சொல்றார் அதுக்காகவாவது கொஞ்சம் மரியாதை கொடுக்கலாம்ல…”

“சரி….அந்த வில்லன் சார் போய்ட்டாரா? அவர் நாம பார்க்க கூடாதுன்னு ஏன் சொல்றார்?..இவ்ளவு மரியாதை போதுமா….? இன்னும் வேணுமா?”

சிரித்தான் மதுரன். அதில் நிலைத்துப் போனாள் பெண்.

“அவர் சொல்றார்னு இல்லை…..உங்க வீட்டுக்கு விஷயம் போனா என்ன செய்யன்னு இருக்குது..?”

“நீங்க எங்கப்பாவ பார்த்து பயப்படுறீங்களா மதுர்?” வருத்தம் இருந்தது அவள் குரலில். அப்பா இவளுக்காக எதையும் செய்பவர். இவள் சந்தோஷமே அவர் வாழ்வின் நோக்கம் என்றிருப்பவர். அவர் எப்படி இவனை வேண்டாம் என்று சொல்லுவார்? ஆனால் இவன் அவரை நம்பவில்லையோ?

“பயம்னு இல்ல…..முக்கியமான எதை செய்றதுக்கும் முன்னால ப்ரிபர்டா போகனும் இல்லையா….?”

“அதுக்காக என்னை அங்க என்கொயரில கிழிக்கிறப்பவும் மௌன சாமியார் மாதிரி நின்னுகிட்டு இருக்கனுமா….அந்த ஹோர்டிங்க் வச்சதே நான் தான்னு…என்னல்லாம் பேசுனாங்க….?” நினைவில் இப்பொழுது கூட கண் நிறைக்கிறது கண்ணீர்.

“ஹேய்….என்னடா நீ……நம்ம காலேஜ் பத்தி உனக்கு தெரியாதா….? இப்ப நான் வாய மூடிட்டு வந்ததால நம்ம ரெண்டு பேருக்கும் சண்டைனு மட்டும் நினச்சுட்டு விட்டுடாங்க…..நான் ஒரு வார்த்தை உனக்காக அவங்கட்ட பேசி இருந்தாலும்….இரெண்டு பேருக்கும் காதல்…கேம்பஸை டிஸ்டர்ப் செய்துட்டாங்க, டிசிப்ளினரி ஆக்க்ஷன்னு, நீ ஃபர்ஸ்ட் செம்ங்க்றதால உனக்கு டி சி…எனக்கு ஃபைனல் இயர்ங்கிறதால சஸ்பென்ஷன் கொடுத்றுப்பாங்க….கேம்பஸ்குள்ள லவ் மேட்டர் எதுவும் உள்ள வரக் கூடாதுன்னு ரூல் தெரியும் தானே…”

“அதுக்காக… ரூம் ஐ விட்டு வெளில வந்த பிறகாவது பேசிருக்கலாம் தானே…..”

“ வெளில வந்துமட்டும் அவங்க முன்னால பேசினா ஒன்னும் நினைக்க மாட்டாங்களாமா?...நீ ஹாஸ்டல் போனதும் கால் செய்யனும்னு நினைச்சிருந்தேன்…. ”

“அப்ப காலேஜ்ல வச்சு பேசவே மாட்டீங்களா?” வலியோடு ஒரு கெஞ்சலாய் வந்தது அவள் குரல்.

“ஐ ஆஃப் த ஸ்டார்ம் கடக்கிற வரைக்கும் தான் அப்படி….அதுக்கு பிறகுமே இப்போதைக்கு உன்ட்ட ஃப்யூச்சர் பத்தி பேசுறதா ப்ளான் கிடையாது…ஆனால் நீதான் எல்லாத்தையும் ஒட்டு கேட்டு வச்சிருக்கியே……அவசரகுடுக்கை….எனக்கு இந்த ஸ்டேஜல உங்கப்பா முன்னால வந்து நிக்றதுக்கு இஷ்டம் இல்லை….அதோட உங்கப்பாவுக்கு தெரியாம உன்ட்ட பழகவும் எனக்கு விருப்பம் இல்லை…அது எதோ திருட்டுத்தனம் செய்ற மாதிரி இருக்குது….நவ்யாவுக்கு நம்ம மேல எந்த உரிமையும் கிடையாது…அவளுக்கு தெரியாம வந்ததே உனக்கு திருட்டுத்தனம் செய்ற மாதிரி தெரிஞ்சிதுன்ற….நீ இப்போதைக்கு முழுக்க முழுக்க உங்க அப்பாவை மட்டுமே சார்ந்திருக்கிற அப்பா பொண்ணு…..அவருக்கு தெரியாம உன்ட பழக எனக்கு கில்டியா இருக்கலாம்தானே…..இன்னொரு விஷயம் …உனக்கு என்னைப் பத்தி என்ன தெரியும்னு நீ இவ்ளவு பெரிய டெஷிஷன் எடுத்த….உனக்கு முடிவு எடுக்க டைம் கொடுக்கனும்னு ஒரு தாட்….இதுல எனக்கு இந்த மந்த் என்ட் ப்ரிலிம்ஸ் எக்‌ஸாம்…இதை க்ளியர் செய்தாதான் டிசம்பர்ல மெயின்ஸ் எழுத முடியும்….இதுக்கெல்லாம் படிக்க டைமும் மனமும் வேணும்…”

மத்த விஷயங்களெல்லாம் ஆமோதிப்பாக கேட்டு வந்தவள், அவளுக்கு டைம் கொடுக்கனும் என்ற உடன் தன் இதழ்களை இழுத்து பழிப்பம் காட்டினாள். “ஓ நீங்க எடுத்தா அது பெர்மனென்ட் டெஷிஷன் நாங்கன்னா யோசிக்காம எடுத்துடுவோமோ?”

“அப்டி இல்லை…உனக்கு என்ன கிடச்சாலும் அது பெஸ்ட்டா இருக்கனும்னு எனக்கு ஆசை….”

“…………..”

“இப்டில்லாம் லுக் விடுவன்னா நீ இப்போதைக்கு என் முன்னால வராத….கண்ணப்பாரு…சரி நான் கிளம்புறேன்…”

“ அடுத்து எப்ப மீட் பண்ணலாம்…அத சொல்லிட்டு போங்க….”

“ எனக்கு செலக்க்ஷன்  லெட்டர் வந்த பிறகு….”

“அட கேடிஎஸ்”

ஹாஸ்டல் வந்துவிட்டாள் நல்லிசை. அவ்வப்போது உதவி என நவ்யா தான் வந்து போய் கொண்டிருந்தாள். அவனுக்கு எக்‌ஸாம் பக்கத்தில் இருந்தது.

மீண்டும் இவள் கல்லூரி செல்ல தொடங்கியாகிவிட்டது. ப்ரிலிம்ஸ் எக்ஸாம் முடிந்தது அன்று.

நல்லிசைக்கு படு குஷியாக இருந்தது. நவ்யாவும் அவளுமாக கிளம்பி ஃபோரம் மால் சென்றனர். அவனுக்கு எதாவது கிப்ட் கொடுக்க வேண்டும் என்ற ஆசை.

ஷர்ட் வாங்க முடிவு செய்து அதை தேடிக் கொண்டிருந்தாள். நிறத்தை முடிவு செய்துவிட்டாள். யெல்லோ. அவனது அளவு? உதவிக்கு நின்ற கடை ஊழியர் சொன்னார் “அவர் அளவு சரியா வருமா?”

திரும்பிப் பார்த்தாள். சற்று தொலைவில் நின்று யாரிடமோ பேசிக் கொண்டிருந்தது அவனே தான். யாருடன் பேசிக் கொண்டிருந்தானோ அந்த நபர் முகம் தெரியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.