(Reading time: 20 - 40 minutes)

“ ஆனால் எப்டி பார்த்தாலும் அவன் மோசம் மதுர்……என் கார் டயரை பஞ்சர் செய்தது அவந்தான் தெரியுமா?”

“ம்…தெரியும் இப்பதான் சொன்னார்….உன் கூட ஒரு நல்ல ரப்போ டெவலப் செய்துட்டு உன் வழியா நவ்யாவை ரீச் செய்யலாம்னு நினைச்சாராம்……நீ கவனிச்சுப் பாரு நவ்யா உன்னையும் என்னையும் தவிர யார்ட்டயுமே சேரமாட்டா…..அவ உன்ட்ட பழக காரணமும் உனக்கு புரியும்…..எனக்கு உன் மேல உள்ள இன்ட்ரெஸ்ட்டை புரிஞ்சிட்டு சதீஷ் இப்டி செய்துருக்கார்…….இனி இப்டிலாம் செய்ய மாட்டேன்னு சொல்லிகிட்டு இருக்கார்….அதோட அந்த 150 சி பத்தியும் காதில விழுந்துதான…அவர் சூஸ் செய்ற மெத்த்டாலஜிலாம் இப்டி இருக்கும்னு இப்ப வரை எனக்கு தெரியாது…எதோ நவ்யாவை தூரத்துல நின்னு பார்த்துடு போவார்…அவ தனியா கிடச்சா பேச ட்ரை செய்வார்…. இவ அதனாலயே என்னைவிட்டுட்டு எங்கயும் போக மாட்டா….முதல் தடவை உன் பக்கத்தில் அவரை பார்த்தப்ப உனக்கு ப்ராப்ளம் தருவாரோன்ன்னு தோணிச்சு…பட் இப்போ தங்கைன்னு சொல்லிகிறப்ப நிஜமாவே ஒரு பாசம் தெரியுது….அதனால கொஞ்சம் மரியாதை வந்துது….ஆனா இப்ப தான் சதீஷ் பத்தி தெரிய வருது….அவர்ட்ட ரொம்ப கவனமா இருக்கனும்….“

“ஆனா என்ன இருந்தாலும் அந்த சதீஷ் கூப்டவுடனே இங்க கிளம்பி வந்திருக்கீங்க…என்ட்ட பேசனும்னா மட்டும் “

சின்னதாய் குறும்பும் ஒருவித தாய்மையும் கலந்து ஒரு பார்வை பார்த்தான்.

“குட்டி பாப்பா மாதிரி…எப்பவும் எனக்குன்னா மட்டும்…எனக்குன்னா மட்டும்னு தான் யோசிப்பியா…? ஒரு விஷயம் மட்டும் ஞாபகம் வச்சுக்கோ…உனக்கே உனக்கு மட்டும்தான் நான்… நெக்‌ஸ்ட் டூ காட் நீ தான் எனக்கு ஃபர்ஸ்ட் ப்ரியாரிடி….அதுக்கு இன்னொரு பேர் தான் கல்யாணம் செய்றது ..ஓகே வா?””

குழந்தையாய் குழைந்து அவன் மார்பில் சாய ஆசை வருகிறது அவளுக்கு. தலை குனிந்து மெல்ல ம் என தலை ஆட்டி வைக்கிறாள்.

“பைதவே நான் இப்போ வந்தது என் தம்பிக்காக…நாளைக்கு அவனுக்கு பெர்த் டே….எதாவது வாங்கனும்”

“வாவ்…” என்றவள் அவன் முகத்தை பரிதாபமாக பார்த்தாள். “நான் எப்போ அவங்களலெல்லாம் மீட் பண்றது?”

மென்மையாய் அவளைப் பார்த்தான் அவன். “சீக்கிரமே…இன் ஃப்யூ மன்ந்த்ஸ்..”

பெருமூச்சு விட்டுக் கொண்டாள். “அங்கேயும் இதே கதை தானா?”

“உங்க வீட்டை விட இங்க இன்னும் கஷ்டம் இசை….என் கால்ல நான் நிக்றதுக்கு முன்னால கல்யாணத்தை பத்தி நினைக்கிறதை கூட அவங்களால ஒத்துக்க முடியாது. பட் வேலைக்கு போய்ட்டா மத்த எந்த கண்டிஷனும் கிடையாது…பொண்ணு என் ச்சாய்ஸ்னாலும் சந்தோஷமா சம்மதிப்பாங்க…”

“ம்…அவங்க பாய்ண்ட் ஆஃப் வியூ புரியுது…பட் எனக்கு உங்க வீட்டை பத்தி ஒன்னுமே தெரிஞ்சிக்க கூட வழி இல்லை…”

“ சீக்கிரம் எல்லாம் வரும்…சரி டைம் ஆகுது நீ இப்போ கிளம்புடா…”

“அவ்ளவுதானா…?”

“வேற என்ன வேணும்…?”

“இல்லை…இன்னைக்கு மட்டுமாவது நைட் கால் செய்ங்களேன்……நாளைல இருந்து திருப்பி புத்தகதுக்குள்ளே போய்டுங்க…ப்ளீஸ்…உங்கட்ட பேசனும் போல இருக்குது…”

“கண்டிப்பா….பட் நைட் 12க்கு தம்பிய விஷ் செய்ற வரை வீட்ல எல்லோரும்  பேசிட்டு இருப்போம்..அந்நேரம் கூப்பிட முடியாது…அதுக்கு பிறகு கால் செய்றேன்…ஓகேவா…?”

“ தேங்க்ஸ் மதுர்” அப்புறம் அவனை அழைத்துக் கொண்டு போய் அவள் தேர்ந்தெடுத்த அந்த யெல்லோ ஷர்ட்டில் அவன் சைஸ் பார்த்து வாங்கி கொடுத்துவிட்டு….அவன் வாங்கி கொடுத்த ரெட் ரோஸையும் வாங்கிக் கொண்டு சந்தோஷமாக கிளம்பினாள்.

அன்று இரவு அவன் எண்ணிலிருந்து அழைப்பு. வெகு நேரம் பேசிக் கொண்டு இருந்தனர் இருவரும்.

மறுநாள் இரவு உணவை முடித்து தன் அறைக்குள் நுழைந்தான் மதுரன். அவன் உள்ளே வரவும் கதவு அவன் பின்னால் தாழிடப்பட்டது.

அவசரமாக திரும்பிப் பார்த்தான். முகத்தில் குறும்புடன் கதவில் சாய்ந்திருந்தாள் நல்லிசை.

“ஹேய்…வாலு இங்க என்ன செய்துட்டு இருக்கே….?” பதறிய கிசுகிசு குரலில் கேட்டான் அவன்.

“காதல் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கிட்டு இருக்கேன்…” தலையை ஒருபுறமாக சாய்த்த படி முகம் முழுவதும் குறும்புடன் அவனை நோக்கி வந்தாள்.

“ஐயோ அம்மா அப்பா ரெண்டு பேரும் வீட்ல இருக்காங்க….முதல்ல நீ வந்த வழியே கிளம்பு…”

அவளோ அவனருகில் போய்  சுவருக்கு முதுகு கொடுத்து சாய்ந்து கொண்டாள். இரு கைகளையும் மார்பிற்கு குறுக்காக கட்டிக் கொண்டாள்.

“இங்க எப்டி வந்த?.....யாராவது பார்த்தா நல்லா இருக்காது இசை….முதல்ல நீ கிளம்பு…”

“பார்ரா…..ஹீரோ சொல்ல வேண்டிய டயலாக்கெல்லாம் நான் சொல்லிகிட்டு இருக்கேன்…புள்ளி மாறாம ஹீரோயின் டயலாகெல்லாம் நீங்க சொல்லிகிட்டு இருக்கீங்க….”

“எதையும் யாரும் சொல்லிட்டு போறோம்…இப்போ இங்க எதுக்கு வந்த…?”

“அதான் சொன்னேனே….சுவாரஸ்யமாக்கும் படலம்…”

சட்டென திரும்பி அவள் இருபுறமும் தன் கைகளை ஊன்றினான் அவன்.

அவள் கண்களில் இன்னும் சிரிப்பு அப்படியே இருந்தது. “சாமியார் சார் எந்த சூழ்நிலையிலும் எல்லை தாண்ட மாட்டார்னு தெரிஞ்சு தான் வந்துருக்கேன்….”

“அப்டின்னு நீயா நினைச்சுகிட்டா நான் என்ன செய்றதாம்…?” அவள் முகம் நோக்கி குனிந்தான். அவன் மூச்சுக் காற்று அவள் முகம் தொட்டது.

இப்பொழுது மிரண்டு போய் விழித்தாள் அவள்.

“என்ன செய்றீங்க மதுர்…விடுங்க நீங்க….?”

“நானும் என் பங்குக்கு சுவாரஸ்யமாக்கிட்டு இருக்கேன்”

“இல்ல…வேண்டாம்…”

“அம்மா…அம்மா கொஞ்சம் இங்க வாங்களேன்…” நிச்சயமாக அவன் அழைப்பு வீட்டில் உள்ள யாவருக்கும் கேட்டிருக்கும்.

“ஐயோ… என்ன செய்றீங்க மதுர்….அவங்களுக்கு கேட்ற போகுது…”

அவன் கைகளுக்கு கீழாக குனிந்து ஓடினாள்.

“அம்மா வந்துடப் போறாங்க மதுர்” அவசரமாக கதவு தாழை திறந்தாள். எதிரில் நின்றிருந்தார் ஒரு மத்திம வயது பெண்மணி. கண்கள் நெற்றி எல்லாம் சொல்லின அது மதுரனின் தாயார் என.

“யார்மா நீ….இங்க எப்டி வந்த?” அவர் கேள்வியில் வியர்த்துக் கொட்டி நாக்கு ஒட்டியது மேலன்னத்தில்  அவளுக்கு.

“மது ஏன்மா கூப்டான்..?”

கேட்டபடி வந்து நின்றார் ஒருவர். மதுரனின் அப்பா. அவர் பார்வையும் இவள் மேலேயே வந்து நின்றது.

திரும்பி அவஸ்தையாய் உதவி வேண்டி அவனைப் பார்த்தாள். அறைக்குள் அவன் இல்லை.

என்ன இப்படி செய்துவிட்டான்…? எங்கு போய்விட்டான்…? இவள் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்????

தொடரும்

Episode # 03

Episode # 05

{kunena_discuss:878}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.