(Reading time: 17 - 34 minutes)

ன்னமா குழலீ? ரொம்ப நாழியா உன்னை காணலைனு தேடிக்கிட்டு வந்தேன்.

பிரபுவின் அம்மாவை பார்த்த ப்ரியா சற்று திகைத்துவிட்டாள்.

இப்போ வரலாம் னு தான் திரும்பினேன் அத்தை. இதோ இவங்களோட பேசிக்கிட்டு இருந்தேன். இவர் என் ப்ரண்ட் அர்ஜுன். சிறு வயது முதலே நண்பர்கள். அர்ஜு அப்பாவும் என் அப்பாவும் ஒன்னா வேலை பார்த்தவங்க. இவங்க அர்ஜுனோட வருங்கால மனைவி ப்ரியா.... இவங்க என்னோட மாமியார்..'

வணக்கம் அம்மா' என்றான் அர்ஜுன். வர டிசம்பர் 16 எங்களுக்கு திருமணம். நீங்க உங்க குடும்பத்தோட நிச்சயமா வரனும்' என்று கூறி சட்டென ப்ரியாவுடன் அவர்கள் பாதம் தொட்டு வணங்கினான்.

நல்லாயிருங்க பா! என் மருமகளோட ப்ரண்ட் னு சொல்லிட்டீங்க... இவங்க திருமணத்திற்கு நீங்க கண்டிப்பா வரனும்... உங்க கல்யாணத்திற்கு வருவது பற்றி சிவா தான் முடிவு செய்யனும்..' என்னும் போதே சங்கவையுடன் வந்து சேர்ந்தான் பிரபு.

ஹலோ ப்ரியா! எப்படி இருக்க? நீ இன்விடேஷன் கொடுத்தப்போ பார்த்தது...

ஹாய் பிரபு! ஐ யம் ஃபைன்! ரொம்ப பிசி. மீட் மை ஹப்பி அர்ஜுன்'. திரும்பி அர்ஜுனிடம் ' ஹி யிஸ் மை கல்லீக் மிஸ்டர் பிரபு!' என்றாள் ப்ரியா.

இவர்கள் இயல்பாய் பேசுவதை ஆச்சர்யத்தோடு பார்த்து கொண்டிருந்தனர் குழலீயும் அர்ஜுனும்!

குழல்... இன்விடேஷன் இருக்கா? இவங்களுக்கு கொடுக்கனும்..' அர்ஜுன் ப்ரியா இந்தாங்க... இன்விடேஷன். எனக்கும் குழலீக்கும் மேரேஜ்.. நீங்க எங்க மேரேஜுக்கு கண்டிப்பா வரனும்' என்றான் பிரபு.

சர்ப்ரைஸ்...பிரபு நீங்க தான் குழலீயோட ஃபியான்சியா?! கிரேட்! நீங்க சொல்லவே வேண்டாம்... கண்டிப்பா நான் அங்கே இருப்பேன். இன்னோரு விஷயம் நீங்க ஃப்ரியா இருக்கும் போது கூப்பிடுங்க... உங்ககிட்ட குழலீயை பத்தி பேசனும்...' என்றான் குழலீயை பார்த்து கண்ணடித்தவாறு.

அதற்குள் குழலீக்கு அழைப்பு வர டிஸ்ப்ளேயரை பார்த்தவள் உற்சாகமாய் 'அத்தை ஒரு நிமிஷம்..' என்று அழைப்பை ஏற்றவள் கண்கள் ஒளிர 'ஹலோ ஜிஜு!' என்று ஹிந்தியில் அவள் உறையாடலை தொடங்கினாள்.

'ஹம்ம்.. ஆரம்பிச்சிட்டா! பாஸ் அவட்ட சொல்லிடுங்க.. நாங்க புறப்படுறோம்.. ஒன்னு ஆன்ட்டி அவ இப்போதைக்கு வரமாட்டா.. நீங்க அவளை கடத்திட்டு தான் போகனும்!'

அப்படி யார்கிட்ட பேசறா??' சட்டென கேள்வி வந்தது பிரபுவிடம் இருந்து.

ஒரு நிமிடம் அவனை ஆழ்ந்து நோக்கிய அர்ஜுன் 'அவங்க மாமாகிட்ட பேசறா!' என்றான்.

'மாமாவா?' அடுத்த கேள்வி!

ஆமா.. அக்கா கணவர் ஆர்யன்! எக்ஸ் பாஸ்!'

ஓ!!

சரி பார்ப்போம்! எங்க திருமணத்திற்கு ஷுவரா வந்திடுங்க!' என்று புறப்பட்டனர் அர்ஜுனும் ப்ரியாவும்.

ஹிந்தியில் அவள் உரையாடலை கவனித்துக்கொண்டிருந்தான். அவள் பேசி முடித்து வருவதற்கும் இவர்களுக்கு பில் வருவதற்கும் சரியாக இருந்தது. என்ன வாங்கினார்கள் என்று கூட குழலீக்கு தெரியாது! 

மணி இரவு எட்டு அடிக்க இருந்ததால் சாப்பிட செல்லலாம் என்று எண்ணிய போது குழலீ படபடப்புடன் வந்தாள். அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே முகத்திலும் குரலிலும் தெரிந்த மாற்றங்களை கூர்மையாக கவனித்துக்கொண்டிருந்தான்.

ஏதோ தயக்கமாய் அவள் நிற்க 'என்ன?' என்றான் பிரபு.

அத்தை...'

சொல்லு பூங்குழலீ!

என்னோட எக்ஸ் பாஸ் பேசினார்... பார்ட் டைமா சில வர்க்ஸ் அவருக்கு செய்து கொடுப்பேன்.. இப்போ அவருக்கு ஒரு கான்ஃபிடேன்ஷியல் வேலை செய்து தரனும்... அவங்க வைஃப்க்கு இன்னும் இரண்டு நாளில் டெலிவரி.. அதனால நாளைக்கு காலை 6 மணிக்கு புறப்பட்டுவார். வேலை அர்ஜன்ட் இல்ல ஆனா இப்போ மீட் செய்யலைனா திருமணத்திற்கு அப்புறம் விருந்து அது இதுனு டிலேவாகிடும். அவர்க்கூட ஒரு அரைமணி நேரம் மீட்டிங் இருக்கு... டிடேய்ல்ஸ் வாங்கிட்டு நாம புறப்படலாமா? இங்க தான் தி. நகர்ல தான் தங்கியிருக்கார். பார்த்திடலாமா? என்று கேட்க மாலதியோ மகனை பார்த்தார்.

கோபத்துடன் நின்றிருந்தான் பிரபு. அவனிடம் கேட்காமல் தாயிடம் நேராக சென்று கேட்டுவிட்டாள். அவனிடம் கேட்டால் ஒப்புக்கொள்ள மாட்டான் என்று தெரிந்து தாயிடம் சென்று விளக்கவுரை! அனுமதியும் கேட்கவில்லை அதற்கேன்று மதிக்காமல் போகப்போகிறேன் என்றும் கூறவில்லை! அவ்வளவு பேச்சுத்திறன்!

மாலதி சரி என்று சொல்ல அவர்கள் புறப்பட்டு ஆர்யன் தங்கியிருந்த அந்த நான்கு நட்சத்திர ஓட்டலை அடைந்தனர்.

அதிலிருந்த உணவகத்திற்கு சென்று மாலதியையும் சங்கவையையும் சாப்பிட அமர வைத்துவிட்டு பிரபுவை அழைத்துக்கோண்டு ஆர்யனை தேடிச்சென்றாள் குழலீ.

அவனை பார்த்தவுடன் வேகமாய் சென்று கைகளை பிடித்துக்கொள்ள லேசாக தோள் அணைத்தவாறு ஹக் செய்தார் ஆர்யன். அதையே அவளும் செய்ய அதை பார்த்து நின்றிருந்தவன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்!

ஏற்கனவே பத்திரிக்கை அனுப்பியிருந்ததால் அவரும் புன்னகையுடன் வரவேற்று பேசினார். குழலீயிடம் பேசவேன்று அழைத்துவிட்டு ஆர்யனும் பிரபுவும் மட்டுமே பேசினார்கள் அரைமணி நேரம்!

ஆங்கிலத்தில் சரளமாய் பேசிக்கொண்டிருந்த பிரபுவை பார்த்திருந்தாள் குழலீ! அவள் அறிந்த வரை ஆர்யனின் பேச்சு திறனுக்கும் ஆங்கில ஆளுமைக்கும் பன்மொழி வல்லமைக்கும் ஈடு இணை யாரும் கிடையாது. ஆனால் இன்று ஏனோ புதியதாய் பிரபுவின் திறமைமீது மதிப்பு கூடியது! தான் வைத்திருந்த ஆர்யன் என்ற ஸ்டாண்டர்டுக்கு இவன் குறைவுதான் என்றாலும் தகுதியில்லாதவன் அல்ல! உரையாடல் செல்லும் திசையை உண்ர்ந்தவளுக்கு ஏதோ புரிந்தும் புரியாமலும்!

பின் பேச்சு திசை மாறி குழலீயிடம் வந்தது. தமிழ் தெரியாத காரணத்தால் ஆங்கிலத்தில் பேசிய ஆர்யன் இடையிடையே தான் கற்றுக்கொண்ட தமிழ் வார்த்தைகளை உபயோகப்படுத்தி கலகலக்க செய்தார். குழலீ ஆர்யனின் உரையாடல் ஆங்கிலத்தில் ஆரம்பித்து இடையே ஆர்யனின் தாய்மொழியான பெங்காலி தொட்டு ஹிந்தி, ஸ்பானிஷ் என்று பயணம் செய்தது. பதினைந்து நிமிடம் இவர்கள் பேசியது ஏதும் புறியவில்லை என்றாலும் ஏதோ ரகசிய வேலை நடக்கிறது என்பது மட்டும் புரிந்தது. வெளியே வந்து குழலீ தன் மாமியாரை அறிமுகம் செய்து வைக்க பேச்சு தொடர்ந்தது.

லாபியில் நின்று பேசிக்கொண்டிருக்கையில் குழலீயின் கல்லூரித்தோழியான ஷாஜித்தா அவளை பார்த்துவிட்டு வந்து கட்டிக்கொண்டாள்.

ஏய் குழல்! கங்க்ராட்ஸ் டீ' என்று கட்டிக்கொண்டாள்.

அவளுடன் வந்த ராமசந்திரனும் 'ஹேய் வாத்து கங்க்ராட்ஸ் டீ!'

ஹேய் ஷாஜி! டேய் வாத்து!' என்று உற்சாகமானாள் குழலீ.

பரஸ்பரம் எல்லோருக்கும் அறிமுக படலம் நடக்க சிறிது நேரத்தில் ஆர்யன் விடைப்பெற்று சென்றார். திருமணம் முடிந்து குழலீயும் பிரபுவும் பெங்களூர் வருவதை உறுதிப்படுத்திக்கொண்டு!

ஷாஜி... நாளைக்கே வந்திடுவல்ல.. உன்னை நம்பி தான்டீ இருக்கேன்.

ஷாஜி பேசும் முன்னர் இடைமறித்தான் ராமசந்திரன்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.