(Reading time: 22 - 44 minutes)

" னாலும் "

" சொல்லு டீ ...ஆனாலும் ??"

" ஆனாலும் ஐ லவ் யூ டூ டா கிறுக்கா " என்றபடி அவனை அணைத்து  கொண்டாள்  அவள் .. அவளது வெட்கமும் , அணைப்பும் வார்த்தைகளும் தன் வசம் வந்துவிட்ட மகிழ்வில் அவளை தட்டாமலையாய்  சுற்றினான் அவன் ..

" ஹே விடு விடு ...யாரச்சும் வந்திடுவாங்க ..விடு " என்று அவள் கத்தவும் அவளை சுற்றி சிரிப்பொலி கேட்டது ...

"எல்லாரும் வந்தாச்சும் அக்கா .. நீதான் உன் கனவை விட்டுட்டு கண் விழிக்கனும் " என்று சிரித்தாள் மைத்ரேயியின் செல்ல தங்கை  கயல்விழி .. தங்கையின் குரல் கேட்டு திடுகிட்டு கண்திறந்த மைத்ரேயி அப்போதுதான் கண்டது கனவென்பதை  உணர்ந்தாள்  .. அப்பா , அம்மா , அண்ணன் , தங்கை , அப்பத்தா  என மொத்த குடும்பமும் தன்னை சுற்றி நிற்பதை கவனித்தவள்  வெட்கத்துடன் எழுந்து அமர்ந்தாள் ..

" அப்பா , நேத்துதான் கல்யாண பேச்சை எடுத்தோம் .. இன்னைக்கே என் தங்கச்சிக்கு கல்யாண கனவு வந்திருச்சு போல " என்று அவள் தலையை வருடிகொண்டே கூறினான் ஸ்ரீராம் , மைத்ரேயியின் தமையன் ..

" ஐயோ போங்க அண்ணா ... " என்று சிணுங்கினாள் அந்த வீட்டின் தேவதை ..

" அடடே அக்காவுக்கு வெட்கம் வேற வருதே " என்று கண் சிமிட்டினாள்  இளையவள் ..

" வாசுகி , நம்ம பொண்ணுக்கு இன்னைக்கு மறக்காமல் திருஷ்டி சுத்தி போட்டுடு " என்றார் தந்தை வரதராஜன் ..

" ஏன் அப்பத்தா அமைதியா இருக்கீங்க ? உங்களுக்கும் ஏதாச்சும் இப்ப சொல்லனும்னு தோணுமே " என்று  செல்லமாய் அனைவரையும் முறைத்தாள்  மைத்ரேயி ..

" அட ,எந்த சீமைதுரை என் பேத்திய கட்டிக்க போறான்னு நானும் கொஞ்சம் கனவு கண்டுட்டு இருந்தேன் " என்றார்  வரதராஜனின் தாயார் ..

" சரி போதும் போதும் எல்லாரும் என் முகத்தையே பார்த்தது .. எனக்கு ஸ்கூலுக்கு போகணும் .. எல்லாரும் வழி விடுங்க   " என்றாள்  மைத்ரேயி ..

" உன் ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் எப்பவோ ஸ்கூலுக்கு போயிருப்பாங்க .. ஆனா ஒரு கணக்கு டிச்சர் நீ இவ்வளவு லேட்டா போறியே அக்கா .. போ போயி ஸ்கூலில் முட்டி போடு " என்று வாரினாள்  கயல்விழி .,.

" ச்சி  போடி அருந்தவாலு  .. " என்று தங்கையை திட்டியபடி நடந்தவள் கற்பனையில் தான் முட்டி போடுவது போல நினைத்து பார்த்து  தலையை உலுக்கி கொண்டாள் ... கூடவே இலவச இணைப்பாய்  சற்று முன்பு கனவில் வந்தவன்  மீண்டும் கண்முன்னே வந்தான் ..

" யார் இவன் ? எல்லாரும் காதலிச்சு கல்யாணம் பண்ணுவாங்க .. நான் என்ன கல்யாணம் ஆனா பிறகு  காதலை சொல்லுறேன் ? முருகா , அந்த மாதிரி யாரையும் அனுப்பி வெச்சு உன் பக்தையை சோதித்து விடாதே ..நாம எல்லாம் கல்யாணம் ஆகாமல் இருக்குற வரைதான் ராஜாத்தி மாதிரி இருக்க முடியும் .." என்று முருகரிடம்  மனு கொடுத்தாள் ..

" அதென்ன நாமெல்லாம் ? நானே ரெண்டு மனைவியின்  சண்டையில் நொந்து நூடல்ஸ் ஆகி இருக்கேன் .. என் பக்தை  நீ , என்னில் பாதி சவாலை கூட சமாளிக்களைன்னா எப்படி ? உன் ஆளு வேற இப்போதான் நீ எப்படி இருக்கன்னு   என்கிட்ட கேட்டான் ..கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு நல்ல நாடகத்தை தொடக்கி வைங்க " என்று அருள் புரிந்தான் ஷண்முகன் !

யோகா வகுப்பு முடிந்தவுடன், உற்சாகமாய் வெளிவந்தாள்  விஷ்வாநிகா .. மீண்டும் அவளது நினைவுகள் தன் வீட்டையே சுற்றி வந்தது .. அதுவும் அவள் கவலை எல்லாம் நந்திதா மீதுதான் .. நந்திதா விஸ்வநிகாவை விட இரண்டு வயதுதான் மூத்தவள். சகிதீபனுடன் ஒன்றாய் படித்தவள். இயல்பிலேயே கலகலப்பானவள். ஆனால் தனது அண்ணனை திருமணம் செய்து கொண்ட பிறகு , அவனை தனது இயல்பு கொண்டு வருவதாய் நினைத்தவள் அவனைப்போலவே கல்லாய் மாறிவிட்டாள்..

" எப்படி பட்ட பெண்ணின் வாழ்வையும் தலை கீழாய் மாற்றி விடுவார்கள் இந்த ஆண்கள் .,.என் அண்ணன் மட்டுமென்ன , இதற்கு விதி விலக்கா ?" என்று கேலியும் விரக்தியுமாய் சலித்து கொண்டவள் தனது ஸ்கூட்டியை பார்த்ததும் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாள் .. மிக அழகான வேலைப்பாட்டுடன் சிவப்புரோஜா பூங்கொத்து ஒன்று அவள் ஸ்கூட்டி மீது இருந்தது .. அதை தொட்டு கூட பார்க்காமல் பார்வையாலேயே அவனை தேடினாள்  அவள் .. எங்கே அதிகம் சுழன்றால் அவளது விழிகளுக்கு அயர்வாய்  இருக்குமோ என்று பதறி அவளுக்கு சிரமம் கொடுக்காமல் எதிரில் வந்து நின்றான் கௌதம்.

கௌதம், தந்தையின் நிறுவனத்தை பொறுப்புடன் கவனிக்கும் திறமையான இளைஞன். எத்தனை வேலை இருந்தாலும் அவனை கடந்து செல்லும்போது ஒருமுறை நின்று அவன் முகம் பார்த்துவிட்டு போகும் அளவிற்கு வசீகரமானவன். எல்லையில்லா அன்பு , என்றும் மாறா புன்னகை அனைத்தையும் குத்தகைக்கு எடுத்து வைத்து கொண்டவன் கெளதம் . ஆனால் கோபம் மட்டும் அழையா விருந்தாளி போல அடிக்கடி வந்துவிடும் . சட்டென கோபம் கொண்டு விடுவான் அதே நேரம் சிறு நேரத்தில் சமாதானமும் ஆகி விடுவான் .. அபிநந்தன் - நந்திதா திருமணத்தில் விஷ்வாநிகாவை பார்த்தவுடனேயே தன் இதயத்தை அவளிடம் பறிகொடுத்தான் அவன். கடந்த ஒரு வருடமாகவே விஷ்வாநிகாவிடம் தனது காதலை உணர்த்தி விட போராடி கொண்டிருக்கிறான் .. ( என்னப்பா கெளதம் , போதுமா விளம்பரம் ? )

" குட் மோர்னிங் விஷ்வா "

" உனக்கென்ன வேணும் ?"

" வாவ் , என்ன இன்னைக்கு வரம் தர போகிற தேவதை மாதிரி நேரடியா கேள்விக்கே வந்துட்ட ? எப்பவும் போல திட்டலயா ? நல்ல முன்னேற்றம் தான் !"

" உன் தலை ! எவ்வளவு திட்டினாலும் உனக்குத்தான் மண்டையில எதுவும் ஏறல! அப்போ எதுக்கு திட்டணும்னு விட்டேன் ..  " என்றாள்  அவள் எரிச்சலாய் .. அவளது கோபமான முகம் கூட அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

" என்ன பார்வை வேண்டியது கிடக்கு இப்போ ?" - விஷ்வா ..

" வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்குதான் .,..ஆனா நீதான் வழி விட மாட்டுறியே !"

" இது பாரு கெளதம் , இந்த இருபொருளில் பேசுற வேலை எல்லாம் என்கிட்ட வேணாம் .. நீ பெரிய இடத்து பையன் ..உனக்குன்னு மரியாதை இருக்கு என்பதுக்காகத்தான் நான் அமைதியா இருக்கேன் ..இல்லனா எப்பவோ போலிஸ் கிட்ட போயிருப்பேன் .. உன் பூவை எடுத்துகிட்டு வழியை விடு" என்று எரிந்து விழுந்தாள்  விஷ்வா ..

" எப்போதான் என்னை புரிஞ்சுக்க போற விஷ்வா ?"

" என்னை நானே புரிஞ்சுக்க முடியல .. இதில் நீ எப்படி புரிஞ்சுக்க முடியும் ?" என்றாள்  விஷ்வாநிகா வேதனையாய் .. அவள் கண்களில் தேக்கி வைத்திருந்த வலி அவனது இதயத்தை துளைத்தது ..

" என்கிட்ட சொல்லிடு விஷ்வா .. உன் மனசுல இருக்குற பயம் கவலை  ஆற்றாமை எல்லாத்தையும் என்கிட்ட இறக்கி வெச்சுடு " என்றான் அவளது கண்ணோக்கி .. அவனை பார்த்து மிக மெலிதாய் புன்னகைத்தவள்

" நீ என் வலியை  போக்க நினைக்கிறது தப்பு இல்லை கெளதம் ..பட் அதுக்காக நீ தேர்ந்து எடுத்து இருக்குற உறவுதான் சரியில்லை .. உனக்கு என் மேல இருக்குறது பரிதாபம் தான் காதல் இல்லை " என்றாள் ..

" நான்சென்ஸ் ... இதெல்லாம் நீயே கற்பனை பண்ணி இருக்க விஷ்வா .. என் மனசை பற்றி உனக்கென்ன தெரியும் ? உனக்கு தோணுறதை எல்லாம் கண் மூடி தனமா பேச வேணாம் " என்றவன் கோபமாய் அந்த பூக்களை எடுத்து கொண்டு இரண்டடி முன் வைத்து செல்ல எத்தனிக்க அவளும் பதிலுக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.