(Reading time: 19 - 37 minutes)

சார்! இப்படி தனியாய் போஸ் கொடுத்து எடுத்தால் பார்ப்பதற்கு இயற்கையாய் இருக்காதுனு சொல்லித்தான் எங்களை கேன்டிட் ஷாட்ஸ் எடுக்க சொன்னேன். இப்போ போஸ் கொடுக்க சொல்லறீங்களே? அதேல்லாம் முடியாது சார்! ஏற்கனவே ரொம்ப டயர்டா இருக்கு சார். நாளைக்கு காலையில் திரும்பவும் எழுந்து ஓடனும்! இதுல நீங்க வேற இம்சை பண்ணுறீங்களே!' என்று அலுத்துக்கொண்டான் பிரபு.

'நான் என்ன சார் செய்வேன்? நீங்க ஏதாவது ரொமான்டிக்கா போஸ் கொடுத்தா பரவாயில்லை... நெருக்கத்தில் கூட நிற்க மாட்டறீங்களே! அதனால இப்போ நான் சொல்லறா மாதிரி போஸ் கொடுங்க!'

சரி சொல்லுங்க!

இதோ இப்படி மேடத்தோட இரு தோள்களையும் பிடித்து சற்றே அணைத்தாற் போல பிடியுங்க! இல்லைனா இந்த கோட்டை ஒரு கையில் பிடியுங்க.

அச்சச்சோ! - பிரபு தான்.

என்ன சார் கொலை செய்ய சொன்னது போல் பதறரீங்க?

நீங்க சொன்னதை செய்தா இங்கேயே ஒரு கொலை விழும் சார்.. நான் உயிரோட இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா? மேடம் என்னை முறைத்தே எரித்து விடுவாங்க சார்' என்று அவன் இயல்பாய் கூறி திரும்ப அங்கே சக்தி விஸ்வரூபம் எடுத்து நின்றாள்.

அண்ணா.. அவரை விடுங்க! நீங்க சொல்லுங்க.. அதுபோல் போஸ் கொடுக்கிறோம். ஆனா ஒரு ஐஞ்சு போட்டோஸ் தான் ஒகே வா? ஏற்கனவே மணி ஆகிடுச்சு! ப்ளீஸ்!' என்றாள் குழலீ பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு!

சரிமா! அப்போ நான் சொன்னதை செய்யுங்க!' என்று கூற பிரபுவை பார்த்தாள் குழலீ.

எனக்கொரு பிரச்சனையும் இல்ல குழல்! நீ தான் தொட்டு பேசினா பிடிக்காது னு சொல்லுவ... அப்புறம் என் கன்னம் பழுத்திடும்! தனிமையில் அடிச்சா கூட பரவாயில்லை.. இங்க பொது இடத்தில அடிச்சா நல்லா இருக்காது!' என்று கண் சிமிட்டினான்.

இதை பார்த்து கொண்டிருந்த நண்பர்கள் கூட்டம் இவர்களை கின்டல் செய்தனர். 'தனிமையில் அடிச்சா வாங்கிப்பீங்களா? பொது இடத்தில நீங்க கையை பிடிச்சா... அதுவும் உங்க பேரன்ட்ஸ் முன்னாடி செய்தா எதுவும் சொல்லமாட்டாங்க மேடம்! பட் தனிமையில் இதை செய்தா... உங்க பாடு அந்தோ பரிதாபம் தான்!' என்றாள் ஷாஜித்தா.

ஏய் சும்மா இருடீ! உனக்கு தான் என்னை பற்றி தெரியுமே! அப்புறம் எதுக்குடீ இப்போ வம்பிழுக்கிற? இதுக்கு நான் சொன்ன பதிலும் நினைவிருக்குல?

'என்ன பதில்?' என்று கேட்டான் குழலீயிடம் போட்டோவிற்கு போஸ் கொடுத்தவாறே!

குழலீயின் இதழ்களில் ரகசிய புன்னகை ஒன்று இருந்ததை அவனும் கண்டுக்கொண்டான்.

ம்ம்.. சொல்லு பூ!'

நான் சொல்லறேன் பிரபு... அவ சொல்ல மாட்டா...' என்னும் போதே ஷாஜித்தாவின் வாய் போத்திக்கொண்டு இருந்தாள் பூங்குழலீ. 

ஏய் விடுடீ என்னை! நா....ன் நிச்சயமாய் சொல்லிடுவேன்....!

நாங்க சொல்லிக்கிறோம்.. நீ அடங்கு!

அப்போ சொல்லு!

எப்போ சொல்லனும்னு எங்களுக்கு தெரியும்! அப்போ சொல்லறேன்... நீ போய் உன் வேலையை பாரு!

அடாவடி! போடீ ஸ்வர்ணாக்கா!...ஆனா உங்க பாடு திண்டாட்டம் தான் பிரபு!' என்றாள் ஷாஜி.

ஒருவழியாக புகைப்படம் எடுத்து முடிக்க பிரபுவின் நட்பு வட்டம் அவனிடம் வந்தது.

என்ன மச்சி? யாரை விரட்டுனு விரட்டனியோ கடைசியில் அவகிட்டையே சிக்கிட்டியே?!

டேய்! சும்மா இருங்க டா!

நாங்க ஏன் டா சும்மா இருக்கனும்? இப்படி தான் பேசுவோம்... என்ன பண்ணுவா அவ?' என்றான் முரளி- பிரபுவின் நண்பன்.

'அவளா?' அவ.. இவ னு பேசுற வேலையேல்லாம் வேண்டம்டா தம்பி! மரியாதையுடன் பேசு! பூங்குழலீ என் மனைவி!

'போடா இவனே! கல்யாணம் முடிஞ்சவுடனே பொண்டாட்டி தாசன் ஆயிட்டியா?' என்றான் அந்த முரளி பதிலுக்கு.

அவர்கள் வழக்கடித்ததை ஓரமாக இருந்து கவனித்து கொண்டிருந்தாள் குழலீ.

மேடம் இவ்வளவு டீஸ் செய்தும் அவமானப்படுத்தியும் அவ இயல்புக்கு மாறாய் அமைதியின் சுயரூபமாய் இருக்காளே? இது சரியில்லையே! ஏதோ தவறாயிருக்கு! பெரிசா ஏதோ பிளான் செய்யறானு நினைக்கிறேன்' என்றாள் யாழினி மற்ற நண்பர்களிடம்.

குழலீ கோபக்காரிதான்! ஆனா அவ கண்மூடித்தனமா ஒருவர் மீது அன்பு வைத்திருந்தா.. அவங்களுக்காக எதையும் எவ்வளவு துன்பத்தையும் தாங்கிக்கொள்வா! தன்னை தாழ்த்திக்க, தியாகம் செய்ய கூட தயங்காமாட்டா என் பூங்குழலீ! நாங்களே அதற்கு ஒரு உதாரணம்!' என்றாள் பொன்மலர் உணர்ச்சிகள் பொங்க. 

அப்போ குழலீ பிரபு மேல கண்மூடித்தனமா அன்பு வைத்திருக்கானு சொல்லறீங்களா மலர்?' - யாழினி.

என் வியூகம் சரியா இருந்தா பூங்குழலீ இஸ் மேட்லி டீப்லி இன் லவ் வித்து பிரபு! என்ன ஷாஜி.. நான் சொல்லுறது? - மலர்

ஆமாம் மலர்! ஆனா பிரபுவுக்கு தான் இவளை பிடிக்கவில்லைனு நினைக்கிறேன்!- ஷாஜி

மலர் சிரித்துக்கொண்டே எழுந்து சென்றுவிட்டாள்!

பின் இரவு உணவு முடிந்து மண்டபத்தை காலி செய்து புறப்பட்டனர். பார்ட்டி முறையில் இருந்ததால் ஒன்பது மணிவாக்கில் அவ்வளவாக கூட்டம் இல்லாமல் குறைந்திருந்தது. குழலீயும் பிரபுவும் உடன் பிறந்தவர்கள் நண்பர்கள் உடன் முன்னே புறப்பட மற்ற உறவுகள் அனைத்தும் பின்னே புறப்பட்டது. காலையில் அழைத்து செல்ல முடியாததால் விட்டுப்போன சடங்காக மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

மணமாலையை அணிந்துக்கொண்டு வீட்டு வாசலில் இவர்கள் நிற்க கீதா ஆரத்தி எடுக்க வலது கால் எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள் குழலீ! பால் காய்ச்சி விளக்கேற்ற சொன்னார்கள். பின்பு பாலும் பழமும் கொடுக்கப்பட்டு மறுவீட்டிற்கு குழலீயின் பிறந்த வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.

குழலீயின் சர்வீஸ் எக்ஸாம் முடிந்தவுடன் தான் மற்ற சடங்குகள் என்று முடிவு செய்யப்பட்டதால் இன்னும் இரண்டு நாட்களுக்கு குழலீ அவள் வீட்டில் தான் வாசம். அதன் பிறகு தான் புகுந்த வீட்டிற்கு செல்கிறாள். பிரபுவும் அவன் வீட்டில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. இங்கும் பால் பழம் மணமக்களுக்கு கொடுக்கப்பட்டது. இதுவரையும் கூட அவளாய் வாய் திறந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை.

பிரபு வரவேற்பறையில் அமர்ந்து எல்லோருடனும் கதை அளந்து கொண்டிருக்க.. குழலீ சென்று உடை மாற்றி படுக்கையில் விழுந்துவிட்டாள். மனதில் ஆயிரம் சிந்தனைகள்.. தூக்கம் வரவா என்று காத்திருந்தது ஆனால் கண்முன்னே தோன்றிய ஒரு முகம் அனைத்தையும் கலைத்துவிட்டது. மந்தகாச புன்னகையுடன் இருந்த முகத்தை பற்றி எண்ணியவாறே உறங்கியும் போனாள். அதிகாலை மூன்று மணிவரை கதையளந்து அப்படியே உறங்கியும் போனான் பிரபு.

புது மாப்பிள்ளை அங்கேயே இருந்ததால் குழலீயின் தாய் லஷ்மிக்கு தலைக்கால் புரியவில்லை. தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். மீதம் இருந்த இரண்டு நாட்களும் யாருக்கும் எந்த சந்தேகமும் வராமல் சுமூகமாகவே சென்றது. முந்திய நாட்கள் போலவே மற்ற இரண்டு நாட்களும் காரை நண்பர்களில் யாராவது ஓட்டி வர பிரபுவும் குழலீயும் சென்று வந்தார்கள். கலகலப்பாய் அல்லாமல் இருவரும் ஏதோ ஒரு மாய திரையின் பின்னே இருக்கமாய் இருந்தனர். இதனை மலரும் டேவிடும் துல்லியமாக கண்டுகொண்டனர். இருவரும் கலந்தாலோசித்து புதுமணத் தம்பதிகள் இருவரையும் தனித்தனியே சந்தித்து பேசினார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.