(Reading time: 12 - 23 minutes)

" ச்ச்ச், நானே என்னைக்காவது தான் இப்படி அதிகமாய் பேசுறன் , சோ , இந்த மாதிரி கேள்விகளை கேட்டு  மீண்டும் என்னை  அமைதியாக்கிடாமல் இருப்பது உன் கையில் தான் இருக்கு " என்றான் அபி .. அப்போதுதான் இருவருமே , அவளது கைகள் அவன் கைகளுக்குள் இன்னும் அடைக்கலமாய் இருப்பதை கவனித்தனர் ..

" என் கோபம் போகணும்னா என்ன பண்ணனும்னு கேட்டிங்களே ?"

" ம்ம்ம் ஆமா ஏன் ?"

" இப்போ நான் சொல்றதை செய்தா , கண்டிப்பா மன்னிசிருவேன் " என்றாள்  அவள் விழிகளை சுருக்கி ...

" அதென்ன இப்போ ? அந்த அளவிற்கு இப்போ என்ன ஸ்பெஷல் ? " என்று புருவம் உயர்த்தினான்  அபிநந்தன் ..

மனதிற்குள் கூறி கொண்டாள்  நந்திதா " உன் அருகில் நான் இருப்பதே ஸ்பெஷல் தானே மக்கு புருஷா !" என்று .. அவள் அமைதியாகவே இருக்கவும் ,

" சரி சொல்லு என்ன பண்ணட்டும் ?" என்றான் அவன் ..

" வேறொன்னும் வேணாம் , நான் கொஞ்ச நேரம் உங்க தோளில்  சாய்ந்து கொள்ளுறேன் ..அது போதும் " என்றபடி தோள்  சாய்ந்து கொண்டாள்  நந்திதா.. மோனநிலையில் லயித்திருந்தனர் இருவருமே .. இங்கு அமைதியின் உச்சகட்டமாய் இருக்க , அங்கு தனது அறையில் திண்டாடி கொண்டு இருந்தார் அருண் ..

" வேஸ்ட் தாத்தா நீங்க .. ஸ்கைப்ல காணாம போனா விட்ருவேனா ?" வாட்ஸ்  ஆப் காலில் அவரை வறுத்து எடுத்து கொண்டிருந்தான் சகி ..

" நான் என்ன பண்ணுவேன் டியூட் ?" என்று கூலாய் கேட்க முயற்சி செய்தார் தாத்தா ..

" ம்ம்ம்கும்ம்ம் .. ஒரு பெரிய மனுஷர் மாதிரியா தாத்தா பிளான் போடுறிங்க நீங்க ?"

" தீப்ஸ் , ப்ளானை  சொதப்பினது உன் அண்ணி .. நீ அவளைத்தான் வையணும் "

" அவளை பற்றி தெரிஞ்சு தானே தாத்ஸ் உங்க கிட்ட படிச்சு படிச்சு சொன்னேன் .. "

" அப்பா , ராஜா , செல்லம் , அப்புக்குட்டி "

" ஆமா அப்புக்குட்டி ..அழகர் சாமி குதிரைன்னு படம் பெயரை சொல்லிட்டு இருங்க நீங்க "

" டேய் !! "

" சரி விடுங்க தாத்ஸ் .. நான் பார்த்துக்குறேன் " என்றான் சகிதீபன் சண்டை போட்டு முடித்த அயர்வில் ..

" சரி என்ன பண்ணுற நீ ?"

" நான் என்ன பண்ண போறேன் தாத்ஸ் ..இங்கு பனி விழும் மலர்வனம் மாதிரி , பனி கொட்டுது " அதை ரசிச்சுகிட்டே  சைட் அடிச்சுகிட்டு இருக்கேன் "

" யாரு தான்யாவையா ?"

" ஐயோ தாத்ஸ் , மைதாமாவு எனக்கு ப்ரண்ட்  மட்டும்தான் ... அவளை என் தலையில் கட்டலாம்னு திட்டம் போடாதிங்க "

" எனக்கு என்னமோ உங்க பந்தயத்தில் அவள்தான் ஜெயிப்பான்னு தோணுது மச்சி " என்றார் அருண் ..

" ஹாஹா .. நாங்க எல்லாம் க்ளைமாக்ஸ்ல கூட ட்விஸ்ட் வைப்போம் தாத்ஸ் .. சோ பொறுத்திருந்து பாருங்க .. சரி அப்பா எப்படி இருக்கார் ?"

" யாரு உன்னை பெத்தவன் தானே ? உனக்கு இருக்குற விவரத்தில் கொஞ்சமாச்சும் அவனுக்கு இருக்கா தெரியல .. எப்படிடா இவன் சைக்கியாட்ரிஸ்ட்  ஆகினான் ?" என்றார் அவர் சலிப்பாய் ..

" எனக்கு எப்படி தெரியும் தாத்தா , நீங்க தானே அவரை வளர்த்திங்க .. " என வாரியவன்,

" அவர் அப்படி  இன்னசண்டா இருப்பதற்கு காரணமே அம்மாதானே தாத்தா ... அப்பாவின் காதில் எந்த பிரச்சனையும் எட்ட கூடாத அளவிற்கு பொறுப்பா இருக்காங்க ..மேலும் அப்பாவின் வேலையை இந்த விஷயம் எல்லாம் பாதிக்க கூடாதுன்னு நினைச்சாங்க .. ஏன்னா , உளவியலில் சிகிச்சை அளிக்கிறவங்க  எப்பவுமே  தெளிவான மனநிலையில் இருக்கணும் ..இல்லன்னா , அவர்களின் சிந்தனை மற்றவர்களை பாதிக்கும் .. influence ஆகும் "

" டேய் போதும்டா .. தூங்கவேண்டிய நேரத்தில் க்ளாஸ்  எடுக்காதே .. உனக்கு போர் அடிச்சா , போயி உன் எஸ் பி பீ பாட்டு கேளு .. என்னை ஆளை விடு .. இன்னைக்கு ஆலியா பட் என் கனவுல வரேன்னு சொல்லி இருக்கா "

" அடப்பாவி தாத்தா .. உங்க ரேஞ்சுக்கு ஆலியா பட்டா ? இதெல்லாம் அநியாயம் ..சரி சரி இதுக்கு மேல என்னால எந்த கொடுமையையும் கேட்க முடியாது ,.. நான் போனை வைக்கிறேன் பாய் " என்று போனை வைத்தான் சகி ..

தே நள்ளிரவில் உறக்கம் தொலைத்தபடி நிலவை ரசித்து கொண்டிருந்தாள் மைத்ரேயி ..

" கனவில் வந்தவர் யார் என கேட்டேன்

கணவர் என்றார் தோழி

கணவர் என்றால் அவர்

கனவு முடிந்ததும் மறைந்ததும் ஏன் தோழி ?"  பழைய பாடல் ஒன்று அவளது மனதை வருடித் தந்தது ..

" இது எப்படி சாத்தியம் ? யாரென்று தெரியாமலேயே ஒருவன் மீது நேசம் வந்து விடுமா ?" , " யாரோவா ? அந்த முகத்தை பார்த்தால் யாரோ என்று கூறிவிட முடியுமா ?", " அவன் பேச்சினிலும் தான் எத்தனை உரிமையுணர்வு ?" , " யார் நீ ?" என்று தனக்குள்ளேயே கேள்வி எழுப்பி கொண்டிருந்தாள் மைத்ரேயி .. மறுநாள்  தனக்கு காத்திருக்கும் அதிர்ச்சிகளை பற்றி அறியாமல் உறங்க தொடங்கினாள்  அவளும் ..

" அதுக்காக இப்படியே இருந்துவிட முடியுமா அண்ணா ? குடும்பம்னா சண்டை சச்சரவு இருக்கத்தானே செய்யும் ? அதற்காக இப்படி எத்தனை வருஷம் பிரிஞ்சு இருக்க முடியும் "  என்று யாரோ ஒரு பெண்மணியின் குரல்  வேகமாய் கேட்கவும் கண் விழித்தாள்  மைத்ரேயி .. விடிந்தும் விடியாத அதிகாலை நேரம் .. இந்த   வேளையில் ,யாரது ? என்று சிணுங்கியபடி எழுந்தவள் மண்டியிட்டு அமர்ந்திருந்த  கயல்விழியை கேள்வியுடன் பார்த்தாள் ..

" ஹே இங்க என்னடி பண்ணுற ?"

" நீ ஏன் அக்கா , இப்படி மாறி போயிட்ட ?"

" என்ன ?"

" ஆமா , முன்னலாம் சிறு குண்டூசி விழுந்த சத்தம் கேட்டாலே எழுந்திடுவ .. இப்போ கும்பகர்னி மாதிரி தூங்கற ? " என்றாள்  தங்கை ஆராயும் பார்வையுடன் . என்ன சொல்வாள் மைத்ரேயி ? இரவெல்லாம் அவள் தூக்கத்தை கனவில் வந்த கள்வன் களவாடி விட்டான் என்றா ? விரிந்திருந்த கூந்தலை சரிபடுத்தி கொண்டே பேச்சை மாற்றினாள்  அவள் ..

" யாரு வீட்டுக்கு வந்திருக்காங்க ? ஒரே சத்தமா இருக்கே!"

" எல்லாம் உன்னை தூக்கிட்டு போயி கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக சீமை துறை வந்திருக்கார் " என்றார் கயல்விழி சலிப்பாய் ..

" விளையாடாதே கயல் "

" நானா விளையாடுறேன் .,. வந்துருக்கிறது யார் தெரியுமா ?"

" அதைதானே டீ இம்புட்டு நேரம் கேட்கறேன் நானு ?"

" நம்ம நாச்சியார் அத்தை "

தங்கை பொறுமையாய் சொல்லவும் , மைத்ரேயியின் முகத்தை தீவிரம் படர்ந்தது .. நாச்சியார், வரதராஜரின் ஒரே தங்கை ...பல வருடங்களாகவே சில மனஸ்தாபங்களினால் பிரிந்திருந்தனர் இரு குடும்பத்தாரும் .. என்றாவது தனது அப்பத்தா  அத்தையை பற்றி பேசும்போது  மட்டும் அவர்களை நினைவு கூர்வாள் மைத்ரேயி .. இத்தனை வருடங்களுக்கு பிறகு இன்று ஏன் இங்கு வந்திருக்கிறார்கள்  ? என்று யோசித்தாள்  அவள் .. அதே யோசனையுடன்  நாச்சியாருக்கு காபியை பரிமாறினார் வாசுகி ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.