(Reading time: 18 - 36 minutes)

ந்திரிகா இரண்டு மூன்று படங்களில் நடித்திருந்த நேரமது. இப்போது இருக்கும் கேரவன் போன்ற வசதிகள். அதிகம் பெருகி இராத காலமது. இதே போன்றதொரு கடற்கரை பகுதியில் தான் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தது. சந்திரிகா நடனமாடும் ஒரு பாடலுக்கான படிப்பிடிப்பு அது.

படப்பிடிப்பு இடைவேளைகளில் யாருமில்லாத ஏதாவது ஓரத்தில் சென்று அமர்ந்து ஓய்வெடுப்பது சந்திரிக்காவின் வழக்கம். சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மறைய துவங்கி இருந்தது. மங்கிய வெளிச்சத்தில் எடுக்க வேண்டிய பகுதிகள் மிச்சமிருக்க காத்திருந்தனர் அனைவரும்

பாடலுக்கு தேவைப்பட்ட உடைகள் கொஞ்சம் கவர்ச்சியாக இருக்கவே, தான் அணிந்திருந்த உடைகளின் மேல் ஒரு ஷாலை போர்த்திக்கொண்டு ஏதோ ஒரு புத்தகத்தில் ஆழந்திருந்தார் சந்திரிகா.

திடீரென ஒருவன் தனது ஆட்டோகிராப் புத்தகத்தை நீட்டியபடி சந்திரிகாவின் அருகில் வந்தான். வெகு இயல்பான புன்னகையுடன் சந்திரிகா கையெழுத்து போட்டுக்கொடுக்க, ஒருவர் பின் ஒருவராக அவர் அருகில் வந்து பேச்சு கொடுக்க துவங்கி இருந்தனர்.. 

என்ன நடக்கிறது என்பதை சந்திரிகா சரியாக உணரும் முன்னமே சந்திரிகாவை பத்து பன்னிரண்டு பேர் சூழ்ந்திருந்தனர். சுதாரித்து விலக முயல்வதற்குள் அவரது வாய் ஒருவனால் மூடப்பட, போர்த்தியிருந்த போர்வை ஒரு பக்கம் சென்று விழ, அங்கே அவர்களது வார்த்தைகளும், கைகளும் அவர் மீது விளையாட துவங்கி இருந்தன.

திமிறி, துடித்து அந்த நரகத்திலிருந்து தப்பித்து ஓட வழி தெரியாமல் திண்டாடிய அந்த நேரத்தில் எப்படி நிகழந்தது என்று அவர் அறியாமலேயே ஒரு கரம் சந்திரிகாவை பிடித்து அந்த கூட்டத்தை விட்டு வெளியே இழுத்து தன்னோடு சேர்த்துக்கொண்டது. கீழே கிடந்த அந்த போர்வையை சந்திரிக்காவுக்கு போர்த்தி விட்டு தனது தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டது. அது நடிகை மேகலாவின் கரம்!!!

அந்த திரைப்படத்தில் மேகலாவுடன் இணைந்து நடித்துக்கொண்டிருந்தார் சந்திரிகா. அந்த நேரத்தில் மேகலவுமே வளர்ந்து வரும் நடிகை.

அடுத்த சில நொடிகளில் மேகலாவின் காரில் இருந்தார் சந்திரிகா. அங்கே இருந்த ரௌடிகளை யூனிட் ஆட்கள் சூழுந்துக்கொண்டிருந்தனர். சரியான நேரத்தில் மேகலா வந்திருக்காவிட்டால் தனது நிலைமை என்னவாகி இருக்குமென நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை சந்திரிகாவால்.

நடந்த சம்பவம் திரும்ப திரும்ப நினைவில் ஆடியது. உடல் நடுங்கியது சந்திரிக்காவுக்கு. பயத்தில் அல்ல. கொதித்துக்கொண்டிருந்த கோபத்தில். கொஞ்சம் கூட கண்ணீர் வரவில்லை. 'என்ன தைரியம் இருக்க வேண்டும் அந்த கயவர்களுக்கு.????

'நீ என்ன பெரிய பத்தினியாடி? கேட்டானே அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன். 'ஏன்? என்னால் பத்தினியாக இருக்க முடியாதா? நடிப்பும் கூட தொழில் இல்லையா.? சினிமாவில் நடிக்க வரும் பெண்கள் பெண்கள் பத்தினியாக இருக்க மாட்டர்கள் என்று என்ன கணக்கு இது? மனம் திரும்ப திரும்ப அதையே சுற்றிக்கொண்டிருந்தது.

தனது அருகில் அமர்ந்திருந்த சந்திரிகாவை அணைத்துக்கொண்டு கேட்டார் மேகலா 'என்னமா? ரொம்ப பயந்துட்டியா? நீ ஏன் தனியா போய் உட்கார்ந்தே? எங்களோட இருக்க வேண்டியது தானே??? சரி விடு. ஒண்ணும் ஆகலை எல்லாம் சரியாயிடும். சந்திரிகாவின் தலையை வருடிக்கொடுத்தன மேகலாவின் விரல்கள். அந்த நொடியில் பிறந்தது இருவருக்கும் இடையே ஒரு அழகான நட்பு.

பத்திரிக்கைகள் நடந்ததை ஒரு சாதாரண செய்தியாகவே வெளியிட்டன. யாருமே உணரவில்லை சந்திரிக்காவின் மன நிலையை, மேகலாவை தவிர.!!!!! இதை தைரியமாக எதிர்க்கொள்ள கற்றுக்கொடுத்தது மேகலா மட்டுமே.

அதன் பிறகு இருவரும் பேசிக்கொள்ளாத நாள் என்ற ஒன்று வந்ததே இல்லை. இந்தனிடையே திடீரென்று எங்கிருந்து வந்ததாம் அந்த பிரிவு? எது முறித்துப்போட்டதாம் நட்பை.? நினைக்கும் போதே மனம் கனத்தது சந்திரிக்காவுக்கு. காரின் பின் சீட்டில் கண்களை மூடிக்கொண்டு சாய்ந்துக்கொண்டார் சந்திரிகா.

சில நிமிடங்களுக்கு முன் அருந்ததி வீட்டில் நடந்தது இதுதான்

'இந்த வீடு இனிமே எனக்கு சொந்தம்!!!!' நிதானமான குரலில் சொன்னான் ரிஷி.

அவன் தந்த அதிர்ச்சியின் தாக்கம் மேகலாவின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அதுவரை போட்டிப்போட்டு கொண்டிருந்த அகங்காரமும், கேலிப்பார்வையும் மெல்ல மெல்ல தேய மேகலாவின் முகம் கொஞ்சம் இறுக்கம் கொண்டது. அங்கே கிடந்த பத்திரங்களை எடுத்து அவசரமாக புரட்டியது அவரது கை.

'அஸ்வத்....' அலறியது அவர் குரல். தனது அறையில் இருந்து ஓடி வந்தான் அவன். 'இந்த வீடு இவன் கைக்கு எப்படி டா போச்சு?'

அவனுக்குமே பதில் தெரியவில்லை. அம்மாவின் கையிலிருந்து பத்திரங்களை பிடுங்கி வேகமாக புரட்டினான் அஸ்வத். சோபாவில் மிக ஆயாசமாக சாய்ந்துக்கொண்டு அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தான் ரிஷி.

'ராஸ்கல்.... அவன் மீது பாய்ந்தான் அஸ்வத்.

'ஷ்ஷ்ஷ்..... பீகேவ் யுவர் செல்ஃப்' ஏன் இப்படி சின்ன பிள்ளை தனமா நடந்துக்கறே அஸ்வத் ? நான் இந்த வீட்டு மாப்பிள்ளை ஞாபகம் இருக்கா உனக்கு.? என்றபடியே எழுந்து தனது சட்டையை பிடித்திருந்த அவனது கையை விலக்கினான் ரிஷி.

'யாரு நீ மாப்பிளையா??? தாலி கட்டிட்டா நீ மாப்பிள்ளை ஆயிடுவியா? அப்பாவை ஏமாத்தி வீட்டையும் வாங்கிட்டியாடா  நீ???"

பொங்க ஆரம்பித்த கோபத்தை அடக்கி நிதானமான குரலில் சொன்னான் ரிஷி. 'நான் நினைச்சா ஒரே நேரத்திலே இது மாதிரி பத்து வீடு வாங்குவேன். தெரியுமா உனக்கு?. எனக்கு முக்கியம் இந்த வீடு இல்லை. அதே மாதிரி உங்க யார் கூடவும் சண்டை போடுற  எண்ணத்திலேயும் நான் இங்கே வரலே.'

எனக்கு முக்கியம் என் பொண்டாட்டி இனிமே அவ இருக்கிற இடத்திலேதான் நான் இருக்கப்போறேன். நான் இந்த வீட்டை வாங்கினதும் அதுக்குதான். புரியுதா?' ஆமாம் எங்கே என் பொண்டாட்டி. அவ ரூம் மாடியிலே தானே??? என்று அவன் மாடி ஏறிய நேரத்தில் உள்ளே நுழைந்தார் இயக்குனர்.

வீட்டில் நிகழ்ந்துக்கொண்டிருக்கும் பூகம்பம் மெல்ல மெல்ல புரிய விழி நிமிர்த்தி அங்கே நின்றிருந்த ரிஷியின் கண்களை நேராக சந்தித்தார் இயக்குனர். நம்பிக்கை!!!! ரிஷி செய்வது எதுவுமே சரியாக தான் இருக்குமென்று ஒரு நம்பிக்கை அவருக்கு. எதுவுமே பேசவில்லை. அவனிடம்.

கொதித்து பொங்கிக்கொண்டிருந்த மேகலாவை நோக்கி திரும்பி அழுத்தமான குரலில் சொன்னார் இந்திரஜித் ' இது இனிமே ரிஷி வீடுதான். இங்கே இருக்க விரும்பறவங்க இருக்கலாம். விருப்பம் இல்லாதவங்க எங்கே வேணும்னாலும் போகலாம்.

இயக்குனர் இப்படி பேசுவார் என கனவிலும் நினைத்திருக்கவில்லை மேகலா.!!!! அதிர்ந்து தான் போனார் அவர்.

டந்தது எதையுமே அறியாமல் எல்லோரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள் அருந்ததி.

'எல்லாத்தையும் உன் புருஷனை கேளு. நம்மளை எல்லாரையும் பழி  வாங்குறது மட்டும் தான் அவன் குறிக்கோள். நீ அவனுக்காக இத்தனை நாள் எங்ககூட பேசாம இருந்தே, ஆனா அவன் உன்னையும் சேர்த்து பழி வாங்குறான்.' சொன்னான் அஸ்வத்.

'என்னாச்சு ரிஷி?'  அவளது புரியாத பார்வை அவனிடம் சென்றது..

பதில் பேசவில்லை அவன். அவளிடம் சொல்லிவிட்ட வார்த்தையை மீறும் எண்ணம் இல்லை.

'பதில் பேசறானா பாரு. இந்த வீட்டை வாங்கிட்டான் அவன், இனி நாங்களெல்லாம் எப்படி இந்த வீட்டிலே இருக்கிறது. கிளம்பறோம்.....' அவனை எரித்துவிடும் பார்வை பார்த்து விட்டு  திரும்பி நடந்தனர்  அம்மாவும் மகனும்.

தெரியும் அவனுக்கு!!!! மேகலாவால் இந்த வீட்டை விட்டு எங்கேயும் போக முடியாது என்பது தெரியும். வீட்டை விட்டு அவர் வெளியேறினால் சமூகத்தில் அவர்களுக்கென  இருக்கும் மரியாதை தகர்ந்து போகுமெனவும் தெரியும். இந்த வீட்டை இன்னொருவருக்கு விற்கும் போது கூட. இதே வீட்டில் வாடகைக்கு தாங்கிக்கொள்ளும் அனுமதியை பெற்றுக்கொண்டு தான் இந்திரஜித் விற்றிருந்தார் என்பதையும் அறிவான் அவன்.

'எவ்வளவு தூரம் போகும் இந்த அகங்கார நாடகம்?.' உள்ளக் கொதிப்பை அடக்கிக்கொண்டு மார்புக்கு குறுக்காக கையை கட்டிக்கொண்டு அவர்களை பார்த்தபடியே இருந்தான் ரிஷி. இதற்கு முடிவுதான் என்ன? தெரியவில்லை அவனுக்கு.

ஆனால் இவையெல்லாம் எங்கே போய் முடியப்போகிறது என்பது இறைவனை தவிர இன்னொருவருக்கும் இப்போது தெரிந்து விட்டிருந்தது. அவர் சந்திரிகா.!!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.