(Reading time: 15 - 29 minutes)

ன்றிலிருந்து ஆபீஸ் போக ஆரம்பித்த ஆதி , அலுவலகத்திலும் சூர்யாவின் பார்வை வாணியை சுற்றுவதைக் கண்டு கொண்டான். ஆனால் வாணிக்கு அது தெரியாமல், எப்போதும் போல் அரட்டையோடு வேலை பார்ப்பதை புரிந்து கொண்டான். ஒரு வாரம் இதை கவனித்த ஆதி, என்ன செய்ய வேண்டும் என்பதையும் முடிவு செய்தான்.

ஒரு வாரம் கழித்து, தன் அப்பாவிடம் சூர்யா வாணி மீது நேசம் கொண்டிருப்பதை சொன்னான். அதைக் கேட்டவர் உடனே சுந்தரத்திற்கு பேச, அவரும் வாணிக்கும் சூர்யாவிற்கும் பிடித்தால் தனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை என்றார். இது வீட்டில் வேறு யாருக்கும் தெரியாது.

இதற்கிடையில் பத்திரிகை மாதிரி எழுதி கொடுத்த ஜோசியரிடம், அதை வாங்க ஆதி சென்றான். அப்போது சில விஷயங்களை அவர் சொல்ல , அவன் மனதில் மிகப் பெரிய மாற்றம் ஒன்று ஏற்பட்டது, ஆனால் அதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.

அன்று இரவு எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது ஆதி “சூர்யா, உனக்கும் ஒரு அல்லையன்ஸ் வந்திருக்கு. பார்க்கலாமா?” என்றான்.

தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த சூர்யாவிற்கு புரையேற, அதிதிய்ம், மதியும் ஒன்று போல் “ஹே கன்க்ராட்ஸ் சூர்யா..” என்றனர்.

அதிதி “அவன் கிட்ட மாட்ட போற அந்த அப்பாவி பொண்ணு யாருன்னா?” என்றாள்

“அது யார் என்று தெரிந்தால் சூர்யாதான் அப்பாவி என்பாய் அதி..” என்றான்

அதற்குள் “அண்ணா , எனக்கு இப்போ என்ன அவசரம்?” என்றான்.

“உனக்கு அவசரம் என்று தோன்றியதால் தான் இப்போ பார்த்தேன்”

வாணியை சைட் அடிப்பதை அண்ணா பார்த்திருப்பானோ என்று தோன்றியது சூர்யாவிற்கு. இருந்தாலும் ஒன்றும் தெரியாத மாதிரி “அதெல்லாம் இல்லை அண்ணா. எனக்கு இன்னும் ஒரு வருடம் போகட்டும்” என்றான்.

“ஆனால் பெண் வீட்டில் இந்த  வருடத்தில் முடிக்க போவதாக சொல்கிறார்களே”

“அப்படி போனா போகட்டும். எனக்கு அண்ணி மாதிரி ஒரு நல்ல பொண்ணு கிடைப்பா”. (நாம் வாணியிடம் பேசும் போது அண்ணியின் சப்போர்ட் அவசியம் என்று மனதிற்குள் எண்ணியபடி) என்று சந்தடி சாக்கில் மதிக்கு ஐஸ் வைத்தான்

“சூர்யா யோசித்து சொல்லு. ஒருமுறை யார் என்ன என்று விவரம் கேட்டு விட்டு முடிவு பண்ணு”

அதெல்லாம் வேண்டாம். இன்னும் ஒரு வருசம் கழிச்சு எனக்கு பார்த்தால் போதும்

அப்பா அப்படினா மாமாகிட்ட வாணிக்கு வேறு மாப்பிள்ளை பார்க்க சொல்லி விடுங்கள்.

இப்போ சூர்யா மட்டுமில்லாமல், மதியும், அதியும் கூட திகைத்து நின்றார்கள். மதி ஆதியை பார்க்க அவன் ஆமென்று தலையாட்டினான்.

சூர்யா அவசரமாக “அண்ணா , நீ என்ன சொல்கிறாய்” .. நாம் கேட்டது சரியா என்று எண்ணத்தில் மீண்டும் கேட்டான்

“உனக்கு வாணியை பார்க்கலாம் என்று எண்ணியிருந்தோம். நீதான் வேண்டாம் என்கிறாயே. அதனால் மாமாவிடம் சொல்ல சொன்னேன்”

சூர்யா உடனே “அண்ணா நான் எங்கே வேண்டாம் என்று சொன்னேன். அண்ணி மாதிரி பொண்ணு ஓகே என்றேனே” என்று அந்தர் பல்டி அடித்தான்

அதிதி “அண்ணா நீ சொன்னது சரிதான் .. சூர்யாதான் பாவம். வாணிகிட்ட மாட்டிகிட்டு என்ன பாடு படப் போறனோ?

சூர்யா “அதெல்லாம் அய்யாவுக்கு தெரியும் அவளைக் கவுத்த. உன்கிட்டயே ஒருத்தன் மாட்டும்போது வாணிகிட்ட நான் மாட்டினா என்ன தப்பு? “ என்று கூசாமல் வழிந்தான்

எல்லோரும் சிரிக்க சூர்யா “அண்ணா, அண்ணி வீட்லே பேசியாச்சா” என்றான்

ஹ்ம்ம். மாமாவுக்கும் அத்தைக்கும் ஓகே. உன் ஆளு கிட்டேயும், என் ஆளுகிடேயும் இன்னும் கேட்கல. அவன் அப்படி சொல்லவும், மதி ஆதியை பார்த்தாள். “சொல்லு மதி . வாணியை சூர்யாவிற்கு கொடுக்க உனக்கு ஒன்னும் பிரச்சினையில்லையே” என்றான்.

உடனே மதி “எனக்கு என்ன பிரச்சினை? வாணிக்கு ஓகே என்றால் போதும்” என்றாள்.

“ஷப்பா .. அண்ணி தேங்க்ஸ். மெயின் கேரக்டர் எல்லாம் ஓகே ஆயாச்சு ... இனிமே என் சைட நான் சமாளிச்சுக்கிறேன்”

“ஏய் சூர்யா .. மெயின் ஹீரோயினே வாணிதான் “ என்றாள் அதிதி

“ அது ஜுஜுபி மேட்டர் டா செல்லம். அவள் கிட்ட நான் பேசிக்கிறேன்” என்றவன் “ஆதி அண்ணா நீ வாழ்க .. நாளைக்கு நான் ஆபீசெக்கு லேட்டாத்தான் வருவேன். கண்டுக்காதே”

“நேரம் டா.. “ என்றவன் சிரித்துக் கொண்டே கிளம்ப , எல்லோரும் கலைந்தனர்.

“அதிகுட்டி .. இதை தயவு செய்து பிபிசி வாசிச்சிராத.. நான் நாளைக்கு நேரா என் செல்லத்தோட ரியாக்ஷன் பார்க்கணும். சோ அடங்கு..

“டேய்.. உன்னை ...” என்று அடிக்க வந்தவள் .. சிரித்துக் கொண்டே போய் தன் மணவாளனிடம் செய்தி சொல்ல சென்று விட்டாள்.

ன்று இரவு தங்கள் அறைக்குள் நுழைந்த மதி, ஆதியை பார்த்து “நான் இதை எதிர் பார்க்கவேயில்லை. உங்களுக்கு கோபம் வரவில்லையா “ என்று கேட்டாள்”

அதற்கு ஆதி “நான் என்ன துர்வாச முனிவரா அடிக்கடி கோபப்பட ? “ என்றான். மதிக்கு புரை ஏறியது. தான் மனதிற்குள் நினைப்பது எப்படி தெரியும் என்று .

ஆதி மறுபடியும் “ஏன் உன் மனசுக்குள்ள நினைச்சா என்னால கண்டு பிடிக்க முடியாதா? என்ன? “என மீண்டும் திகைத்தாள்.

அவன் சிரித்துக் கொண்டே “சரி சரி ரொம்ப முழிக்காத. எல்லா விஷயத்துக்கும் எனக்கு கோபம் வராதும்மா. இது சூர்யாவோட வாழ்க்கை. அவன் விரும்பற பொண்ணு கூட வாழ்ந்தாதான் நல்லாருக்கும். வாணி நல்ல சாய்ஸ் தான். யாரோ தெரியாத பொண்ணு இல்ல. சோ வாணிக்கும் பிடிச்சிருந்தா கல்யாணம்தான்.” என்றான்.

“சப்போஸ் வாணிக்கு பிடிக்கலைனா?”

“நிச்சயம் பிடிக்கும். எனக்கு சூர்யா மேல நம்பிக்கையிருக்கு” என்றான்

“வாணி நல்ல சாய்ஸ் சரி. வாணியோட அக்கா எப்படியோ?” இதை கேட்க வேண்டும் என்று எண்ணவில்லை. ஆனால் ஏதோ உந்துதலில் கேட்டு விட்டாள்.

அதற்கு அவன் அவளை ஏற இறங்க பார்த்து “கொஞ்சம் சுமார்தான். பட் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்” என்றான் சிரித்துக் கொண்டே.

அவள் அவனை முறைக்கவும், அவன் அவள் மூக்கை பிடித்து ஆட்டினான். இன்றைக்கு ஆதிக்கு என்ன ஆயிற்று என்று முழித்தாள் மதி. பிறகு இருவரும் உறங்கினர்.

காலையில் எழுந்தவுடன் சூர்யா வாணிக்கு போன் செய்ய , வாணி எடுக்கவும், “வாணி இன்னிக்கு நீங்க ஆபீஸ்க்கு போக வேண்டாம். என்னோட ஒரு சைட்க்கு வரணும். சோ நீ கிளம்பி ரெடியா இரு. நான் உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன்.” என்றான். வாணியும் சரி என்றாள்.

சரியாக ஒன்பது மணிக்கு அவன் வர, வாணியும் அவன் காரில் ஏறினாள். கார் நேராக ஈசிஆர் ரோட்டில் உள்ள ஒரு சைட்க்கு செல்ல வாணி அவன் காரில் உள்ள சிடிக்களை நோண்டி கொண்டு வந்தாள்.

சைட்டிற்கு வரவும் அங்கே உள்ள வேலைகளை இருவரும் மேற்பார்வை செய்து முடித்து அங்கே உள்ள அலுவல் அறைக்கு வந்தனர்.

அவள் அங்கே சுற்றி பார்த்துக் கொண்டிருக்கவும் சூர்யா “வாணி ... ஐ லவ் யூ.. “ என்றான்.

அவள் புரியாமல் பேந்த பேந்த விழிக்க .. சூர்யா சிரித்துக் கொண்டே “ஏய் .. குட்டி பிசாசு .. உன்கிட்டதான் சொல்றேன் ஐ லவ் யு” என்றான்.

அவள் மற்றதை விட்டு விட்டால் . “யாரை பார்த்து குட்டி பிசாசுன்னு சொல்றீங்க.. “ என்று சண்டைக்கு கிளம்ப ... பிறகுதான் அவன் என்ன சொல்கிறான் என்று புரிந்து கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.