(Reading time: 12 - 24 minutes)

னக்கு மட்டும் இல்ல உங்களுக்கும் இவங்களை நல்லவே தெரியும்! உங்களுக்கும் வந்தியத்தேவனுக்கும் ஏதோ ஒரு வகையா தொடர்பு இருக்குனு எனக்கு தெரியும் பிரபு. பட்...கண்ணனுக்கு இருக்க தொடர்பு தான் புரியல.. - டேவிட்

எனக்கும் வந்தியத்தேவனுக்கும் என்ன தொடர்பு...புரியல தேவ்...' என்றவாறு கண்களை சுழற்றியவன் கருத்தில் நிலைத்தது அந்த புகைப்படம்... கட்டிலின் தலைவைக்கும் பகுதியின் மேல்பக்க சுவரில் மாட்டப்பட்டிருந்த அதெ பெரிய புகைப்படம் தான். நொடி அமைதி... அதற்குள் ஆயிரம் உணர்வலைகள் பிரபுவின் முகத்தில்! அவன் கண்களில் மின்னல்! வந்தியத்தேவன் குந்தவை பிராட்டியாய் பிரபுவும் குழலீயும் இருக்கும் புகைப்படம்! பதினோறாம் வகுப்பு படிக்கும் போது எடுக்கப்பட்டது!

பிரபு... இருக்கீங்களா?

தேவ்...எனக்கும் வந்தியத்தேவனுக்கும்... உங்களுக்கு எப்படி... ?' அவள் தானா என்று தெரிந்துக் கொள்ளும் முயற்சியில் வார்த்தை தடுமாறியது.

உங்கள் குந்தவையின் வாய்மொழி மூலமாய்...' - டேவிட்.

உங்களுக்கு எப்போ குந்தவையை பற்றி தெரியும்? அதாவது என் பூ கவிதை எழுதறது உங்களுக்கு எப்போ தெரியும்? என்கிட்ட அவ சொல்லவேயில்ல! சரி விடுங்க உங்ககிட்ட கேட்டு என்ன செய்ய? நான் அவகிட்டவே கேட்டுக்குறேன்... ஆனா இது எனக்கு தெரியும்னு காட்டிக்காதீங்க..ப்ளீஸ் தேவ்' என்றான் பிரபு.

சரி நான் காட்டிக்கல...

இவ்வளவு தானா... இல்ல இன்னும் ஏதாவது சிக்ரெட்ஸ் இருக்கா? இன்னும் வேற முகம் இருக்கா?

அவ ஒரு தீவிர சமூக சிந்தனை உள்ளவ...கவிதாயினி... எழுத்தாளர்! குந்தவை பெயருல கவிதைகளும்... சக்தி பெயருல மற்ற எழுத்துக்களும் இருக்கு. நிறைய சமூக சேவைகளை சத்தமில்லாம செய்துட்டு வரா..இதுவரைக்கும் எனக்கு தெரியும். பட்...'

பட்....?

அவ ஆர்யன் மாமாவோட சேர்ந்து ஏதோ சிக்ரெட்டா செய்துட்டு இருக்கா... அது தான் எப்போ கேட்டாலும் பதில் வாங்க முடியல மாப்பிள்ள!

சரி டேவிட்.. நான் பார்த்துக்கறேன்..பை... ' என்று இணைப்பை துண்டித்தான் பிரபு.

கோவிலுக்கு சென்று கொண்டிருந்த குழலிக்கும் சரி... அவள் கணவனுக்கும் சரி.. அன்று நடந்தே மறுபடியும் நினைவுக்கு வந்தது.

ன்று...

நான் ஒரு குழந்தையை தத்து எடுக்க போறேன். அதற்கு தான்!' என்று அவன் சொன்னபோதே கிருஷ்ணாவை பற்றி சொல்லியிருக்கலாம்.. இப்பொ வந்து புலம்பறதுல பயனேயில்லை" என்று தன்னை தானே கடிந்துக்கொண்டிருந்தாள் குழலீ.

பெங்களூருவில் இருந்து வந்த மறுநாளே குழலீயின் முன் தன் தாய் தந்தையிடம் இதை பற்றி பேசிவிட்டான்.

அவன் சென்ற பிறகு, மாலதியும் கனகராஜும் குழலியிடம்... 'ஏன்மா.. அவன்கிட்ட நீ கிருஷ்ணாவை பற்றி சொல்லிட்டியா? ரெண்டு பேரும் சேர்ந்து தானே இந்த முடிவுக்கு வந்தீங்க?' என்றனர்.

இல்லை மாமா. அவர்கிட்ட இதை பற்றி பேச சமயம் அமையல.. இது அவரா எடுத்த முடிவு அத்தே. உங்கக்கிட்ட பேசறாமாதிரி தான் என்கிட்டேயும் பேசினார்.

நீ அப்போவே கிருஷ்ணாவை பற்றி சொல்லியிருக்கலாமே??

அவர் கேட்டுக்கற மன நிலையில் இல்லை அத்தே!' என்றாள் சற்றே இறங்கிய குரலில்.

அதுக்குதான் நீ எங்ககிட்ட பேசும் போதே அவனையும் கூப்பிட சொன்னேன். நீங்க யாரும் என் பேச்சை கேட்கல' - மாலதி.

சாரி அத்தே! - குழலீயே தான்.

உன்னை குற்றம் சொல்லமா... இப்போ பாரு கிருஷ்ணாவை எடுக்கனும்னு நீ ஆசைப்படற... அவனுக்கு வேற குழந்தையை எடுக்கனும்னு ஆசைப்படறான். இரண்டு குழந்தையை எடுத்து வளர்க்களாம்... ஆனா...'

மாலதி... நீ சும்மாயிரு! -கனகராஜ் அதட்டினார்.

இருங்க.. நான் சொல்லிடறேன்! உங்க கல்யாணம் முடிந்து ஒரு மாசம் கூட ஆகலை.. நீ வந்து எங்ககிட்ட தத்து எடுக்கறதை பற்றி பேசின. உன் கருத்தை பற்றியும் சிந்தனை பற்றியும் நான் தவறா சொல்லலைடா சக்தி! புதுசா கல்யாணம் முடிச்சவங்க... உங்களுக்குனு குழந்தை பிறந்தபிறகு தத்து எடுக்கலாமேமா? எதுவும் உங்களுக்குள்ள பிரச்ச்னை இல்லையேமா?

அமைதியாக இருந்தாள் குழலீ. 'உங்க மகனுக்கு என்னை பிடிக்கலைனு உங்ககிட்ட எப்படி உண்மையை எப்படி சொல்லுவேன் அத்தை?' என்று மனதில் மறுகினாள்.

தப்பா நினச்சிக்காத சக்தி. இருவருக்குமே வயசு முப்பது ஆகப்போகுது.... குழந்தையை தள்ளிப்போடலாம்னு நினைக்காதீங்க...

சரி அத்தை. கிருஷ்ணாவை அப்புறமா எடுக்கறதுல இருக்க சிக்கலை பற்றி தான் நான் சொன்னேனே.. இப்போ ஒன்னுமே செய்யமுடியாது அத்தை.. அவர் விருப்பத்துக்கே விட்டுக்கொடுக்கறேன். எப்படியும் ஒரு குழந்தைக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சா அதுவே போதும். கிருஷ்ணா நமக்கு இல்லைனு மனசை திடப்படுத்திக்கலாம்.

தங்கள் மகனுக்காக விட்டுக்கொடுத்து அவன் மனதை புரிஞ்சிக்கற மறுமகளுக்காக ஏதாவது செய்யனும்' என்று முடிவு செய்தனர் அந்த பெரியவர்கள்.

தத்து எடுக்கும் நாளன்று காலையிலேயே கிளம்பி சென்றுவிட்டான். அவளை ஒரு முகவரிக்கு வர சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

அங்கு சென்ற போது தான் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.கிருஷ்ணா இருக்கும் இல்லத்தின் இன்னோரு முகவரி அது. உள்ளே நுழைந்தவளை எதிர்க்கொண்டது அந்த இல்லத்தை நடத்தும் ஐயாவை தான்.

ஐயா...

என்னமா இங்க வந்திருக்க?

ஐயா...கிருஷ்ணா...

இருபது நாளில் வரலைனா கண்டிப்பா காத்திருக்க வேண்டாம்னு நீ தானே சொன்னமா?

சிங்கிள் பேரேன்ட்டாய் வளர்க்க முடியாதா ஐயா?

இப்போ தான கல்யாணம் முடிச்ச? புருஷனோட வரலாமே? ஆனா வந்தாலும் ப்ரயோசனமில்ல மா?

இன்னொருத்தர் வந்து தத்தேடுத்திருக்கார். இப்போ தான் ஃபார்மாலிடிஸ் முடிச்சார். அவரு மனைவி இப்போ வந்திடுவாங்கனு சொல்லியிருக்கிறார். வந்தவுடனே கிளம்பிடுவாங்க. போய் கிருஷ்ணாவை பார்த்துட்டு போ மா...

அவள் கனவில் அடிக்கடி வரும் அதே வார்த்தைகள் நேரில் அவரிடமிருந்தே!

தத்து எடுத்தவரையும் தத்து எடுத்த குழந்ததையை பார்த்த போது ஆனந்த கண்ணீருடன் இடம் பொருள் எதுவும் பார்க்காமல் ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள் தன் கணவனை!

அவனை இறுகி அணைத்துக்கொண்டு முகம் எங்கும் முத்த மழை பொழிந்தாள். கையில் குழந்தை கிருஷ்ணாவும் தோளில் சாய்ந்திருக்கும் மனைவியையும் ஆதரவாய் அணைத்தவாறு நின்றிருந்தான் பிரபு.

எதுக்கு இப்படி ரியாக்ட் செய்யற? இவன் தான் நான் சொன்ன பையன்... இனி நம் மகன்!

என்ன பிரபு தம்பி? குழலீ?

ஐயா.. இவங்க தான் என் மனைவி... பூங்குழலீ!

தெரியுமே! கிருஷ்ணாவை தத்து எடுக்கறதா இருந்ததே இந்த பொண்ணுதான் தம்பி.

பிரபுவின் கண்களில் மின்னல்! இருவரின் எண்ணங்களும் ஒன்றாக!

கிருஷ்ணாவையும் அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.

மகனிடம் நியாம் கேட்க சென்ற மாமியாரை தடுத்து நிறுத்திவிட்டாள். ஏன் என்று கேட்ட மாமியாரிடம் உண்மையை கூறினாள். யோசனையுடன் சென்றுவிட்டார் மாலதி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.