(Reading time: 12 - 24 minutes)

சொல்லவில்லைதான்.. ஆனா, இதை தவிர அவன் என் மேல கோபப்பட வேறு காரணமில்லையே பாட்டிம்மா … வேறு காரணம் இருக்கும்ன்னு சொல்லுறிங்களா ?”

“ஐக் …ஐக்….எல்லாத்தையும் நானே சொல்லிட்டா,அப்பறம் உனக்கெதுக்கு பகுத்தறிவு ? காரணத்தை நீயே கண்டுப்பிடி… ஆனா, உண்மை இதுதான்…எனக்கு உன்னையும் உன் சகீ அண்ணாவையும் தெரியும்.. உன் சேது அண்ணன் ..அஹெம் அஹெம்…சாது அண்ணன் அபிநந்தனையும் தெரியும்… இவ்வளவு ஏன் ? நம்ம வீட்டு மஹாலக்ஷ்மி, நந்திதாவைபற்றியும்  நன்றாகவே தெரியும் …”

“ அண்ணி பாவம் பாட்டி”

“உன் அண்ணனும் தான் பாவம்”

“ அவரென்ன பாவம் ? கட்டினவளுக்காக அவருடைய சிடுமூஞ்சி குணத்தைமாற்றிகொண்டாரா ? ஆண்களின் குணமே இதுதான்… யாருக்கும் வளைந்து கொடுக்காத திமிர்,,”

“ போதும் விஷ்வா…..! உன் அண்ணன் சிடுமூஞ்சின்னு யார் சொன்னது ? அவன் அமைதியாய் இறுக்கமாய் வளர்ந்ததற்கு யார் காரணம் தெரியுமா ?”

“..”

“சகீதீபன்”

“பாட்டி!!!!!!!”

“பதராதே… சகீ பிறக்குறதுக்கு முன்னாடி, அபி வீட்டுக்கு ஒரே மகன்.. வேணு, சாரதா ரெண்டு பேரின் அன்பும் அவனுக்கு மட்டும்தான் கிடைத்தது.. ஆனா சகீ பிறந்ததும், அப்பாஅம்மாவின் அன்பை அபி பகிர்ந்து கொள்ளும் நிலை வந்தது… இது எல்லா வீட்டிலும் நடக்குற இயல்பான விஷயம் தான்.. ஆனா, ஒரு வகையில்,இது கூர்மையான கத்தியை பயன்படுத்துற மாதிரி,கவனம் அவசியம்… அந்த கடமையை உன் அம்மா அப்பா ரெண்டு பேருமே சரியாய் கவனிக்கல… சகீ எட்டு மாதத்தில் பிறந்த குழந்தை.. அதனால் சாரதா வேணு ரெண்டு பேருமே அவனை சரிபண்ணத்தான் போராடினாங்க… என்னத்தான் தாத்தா கவனிச்சாலும் , அபி பெற்றோரின் பாசத்துக்குதான்  ஏங்கினான்… அதை வெளியில்சொல்ல தோணாமல் மனசுகுள்ளேயே மறைச்சு வைக்க பழகினான்..”

“ அதன் பிறகு சகீ ரொம்ப துருதுருன்னு வளர ஆரம்பிச்சான்..அனைவருக்கும் அவனே செல்லமாகிட்டான்… அதென்னவோ மூத்தபிள்ளைன்னா, அவங்களை பெற்றோர்க்கு அடுத்த பிரதினிதியாய் தான் பார்க்குறோம்.. அபி வளர வளர அவனோடு சேர்ந்து பொறுப்புகளும் வளர்ந்தது… அபினந்தன் என்பவன் எப்படி

இருக்கனும் என்பதை விட,ஒரு மூத்த மகன் எப்படி இருக்கனும்? ஒரு அண்ணன் எப்படி இருக்கனும் என்பது போலதான் அவன் வளர்ந்தான்..”

“ இதை ஏன் பாட்டி ஆரம்பத்துலேயே சரி பண்ணல..  பெசிய்?”என்று கேட்டவளுக்கு பதிலும் தெரிந்துதான் இருந்தது…பாட்டியின் கண்களும் அதையே ப்ரதீபலிக்க, விஷ்வானிகா மௌனமானாள்… ஆனால்,அவரிடம் மனம் விட்டு பேசியதின் பலனாய் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் சற்று தெளிவாகவே இருந்தாள் அவள்… 

வேலை முடிந்து விரைவாகவே வீடு வந்து சேர்ந்தான் அபினந்தன் .. வீட்டுக்குள் நுழைந்தவனின் கண்கள் தானாகவே நந்திதாவை தேடின.. அதை கவனித்தவராய் அவனது முகம் பார்த்தார் தாயார் சாரதா..

“அம்மா”

“என்னடா?”

“நந்திதா எங்க ?”

“தாத்தா ராமாயனம் வாசிக்கிறார் ..அதை கேட்டுட்டு இருக்கா… இரு நான் காஃபி கொண்டு வரேன்”

ஹ்ம்ம்ம்ம்…இது அவன் எதிர்பார்த்த பதில்தான்..இந்த ஒரு வாரமாய், அவன் விரைவாய் வீட்டுக்கு வருவதும்,அவள்  தாத்தாவோடு சேர்ந்து கொண்டு அவன் கண்களில் அகப்படாமல் கண்ணாம்மூச்சி ஆடுவதும் வாடிக்கை ஆனது… ஆனால், இன்று அவன் வழக்கதிற்கு மாறாய் இன்னும் சற்று சீக்கிரமாகவே வந்ததற்கு காரணம் நேற்று இரவு அவன் தர்மபத்தி செய்த நாடகம் தான் !

நேற்று இரவு…

“நந்திதா….”

“..”

“உன்கிட்ட தான் பேசுறேன்” ..தனக்கு முதுகு காட்டி படுத்திருந்த மனைவியை பார்த்து கேட்டான் அபி..

“ எனக்கு காது நல்லாத்தான் கேட்குது..சொல்லுங்க என்ன விஷயம் ?”

“இன்னும் எத்தனாய் நாளாய் என்னை சோதிக்க போற நீ ? இதற்கெல்லாம் முடிவே இல்லையா ?” . இப்போது அவன் முகம் பார்க்கும்படி திரும்பிபடுத்தாள் அவள்..

“ முடிவுன்னா ? விவாகரத்து பற்றியா சொல்லுறிங்க ?” வார்த்தைகள் அம்பாய் பாய்ந்தன.. கண்களை இறுக மூடினான் அபி.. இந்த ஐந்து நாட்களாய் இப்படித்தான் வார்த்தையால் போர் புரிகிறாள் அவள்..

“இப்படி அமைதியாய் இருந்தால் என்ன அர்த்தம்?மௌனம் சம்மதம்னு எடுத்துக்கவா ?”

“ப்ச்ச்ச்…. நான் உன்னை விட்டு விலகனும்னு நினைச்சு இந்த

பேச்சை எடுக்கல”

“வேறென்ன ?”

“ உனக்கேதும் புரியலையா ?”

“ம்ம்ம்ம்ம்மஹ்ம்ம்ம்ம் இல்லையே”

பற்களை கடித்தான் அபி… “இது பாரு, ஒரே ரூமில் நீயும் நானும் இப்படி எதிரும் புதிருமாய் இருக்கிறது எனக்கு கஷ்டமாய் இருக்கு !”

“அப்படியா சங்கதி ? ஆனா,நாம கல்யாணம் பண்ணதிலிருந்தே இப்படி தானே இருக்கோம் ? யேதொ , நாந்தான் அப்பப்போ புத்திகெட்டு உங்ககிட்ட பேசுவேன்..மற்றபடி இப்படி இருக்குறது தானே உங்களுக்கு பிடிக்கும்”

“அது அப்போ”

“ ஒஹொ, இப்போ என்ன மாறி போச்சு ? ஒருவேளை இப்போ உங்க குழந்தை என் வயிற்றில் வளருதுன்னு கரிசனையோ? என்றாள் நந்திதா நக்கலாய்…

“ நந்திதா !!!!!”

“ஷ்ஷ்ஷ்அப்பா கத்தாதிங்க… உங்களுக்கு இப்போ இதுதானே பிரச்சனை ? இருங்க இதுக்கொரு முடிவு கட்டுறேன் “ என்றவள்  உடனேயே “அத்த்த்த்தை!!!!!!” என்று கூக்குரலிட்டு அழுதாள் அடுத்த நொடி அங்கு வந்தார் சாரதா.

“அத்தை, ஏதேதொ கெட்ட கெட்ட கனவு வருது..பயம்மா இருக்கு…அம்மா நியாபகம் வந்திருச்சு “ என்று கண் கசக்கினாள் …அவள் எதிர்பார்த்தது போலவே அம்மா சென்டிமெண்ட் வேலை செய்தது..

“ அச்சோ,நான் இருக்கும்போது நீ இப்படி ஃபீல் பண்ணலாமா?”

“ நான்…நான் இன்னைக்கு மட்டும் உங்க கூட தூங்கவா அத்தை?”

“அடடே நீ கேட்கனுமா கண்ணா,வா என் கூட படுத்துக்க இனிமே “என்று விட்டார் சாரதா.

“அம்மா” என்று அதிர்ச்சியாய் மறுப்பை தெரிவிக்கவும்

“சும்ம இரு அபி… கர்பமாய் இருக்கும்போது இதெல்லம் சகஜம்..ஒரு மூனு நாள் அவ என்னொடு இருக்கட்டும் “ என்றபடி அவளை அழைத்து சென்றாள்… நந்துவின் கண்களில் வெற்றியின் புன்னகை… அபியின் கண்களிலொ வெறுமை..

“அவ பாட்டுக்கு சிவனேன்னு படுத்திருந்தா… உனக்கு இந்த சமாதான வேலை எல்லாம் தேவையாடா ?” தன்னைத்தானே அவன் திட்டும் வேளையில் வேணு உள்ளே வந்தார்…

“டேய் மகனே”

“ அப்பா”

“ நீ ஏண்டா…ஆடு திருடின கள்வானி மாதிரி பார்க்கர ? இதெல்லாம் சகஜம்…உங்கம்மா எல்லாத்தையும் சொன்னா…பாவம் நந்து.. அவ அங்க தூங்கட்டும்…. நான் உனக்கு துணையா படுக்குறேன் “ என்றார் அவர்..

“எனக்கு ?? துணை??? நீங்க ? “ அலுத்து கொண்டான் அபி..

“ அட பேசாம படுடா “என்றவர் சில நிமிடங்களிலேயே குறட்டை விட்டு தூங்க தொடங்கினார்.. அபி தான், விடிய விடிய உறக்கம் வராமல் இறுதியாய் அன்னையின் அறைவாசலில் இருந்த சோபா நாற்காலியின் அயர்ந்து தூங்கி போனான்… இன்று எப்படியாவது அவளை சமாதானம் படுத்தி விட வேண்டும் என்று தான் வந்தான் அபி.. அதற்குள் அபினந்தன் யாருங்க ?உங்களுக்கு ஒருகொரியர்… என்றபடி சிவப்பு ரோஜாக்கள் கொண்ட பூங்கொத்தை நீட்டினான் அந்த புதியவன்.. அவனை அனுப்புவிட்டு , அந்த பூங்கொத்தை பார்த்தான் அபி..

உதடுகளால்

உரைக்காமல் போனாலும்

உன்னதமான அன்பு..

உணர்ந்துவிட்டேன் இன்று..

உடன் வருவேன் விரைவில்

உன்

………………………….. (அது யாருன்னு அடுத்த எபிசொட்ல சொல்லுறேன் ஹீ ஹீ.. )?

குழலின் அடுத்த கீதத்தில் இணைவோம்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:883}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.