(Reading time: 7 - 14 minutes)

ந்த மூக்கு கூட எவ்ளோ க்யூட்டா இருக்கு பாரேன் . எதோ பொம்மைக்கு இருக்குற்த போல ( என்னது பொம்மையா , இத அவ கேட்டுருக்கனும் . உன்ன என்ன பண்ணி இருப்பானு எங்களுக்கே தெரியாது ) அப்புறம் இந்த கன்னம்  அது கூட பஞ்சு மிட்டாய் போல இருக்குல்ல ( இருக்கா இல்லையா ப்ரோ) இந்த உதடு இருக்கே ( ஹெய் , ப்ரோ  நான் ரொம்ப சின்ன பிள்ள என்ன கெடுக்காத) ம்ம்ம் சூப்பர்  அவ்வளோதான். மொத்ததுல இவ ஒரு அப்சரஸ் . இப்படி இவன் வர்ணித்து கொண்டிருக்க  இவன் தோளின் மேல் ஒரு கை விழுந்தது.

வணக்கம் தம்பி வந்து ரொம்ப நேரம் ஆச்சா.. இங்க பக்கத்துல போய்ருந்தேன்.  நாகு தான்.

பக்கவாட்டில் திரும்பி  தம்பிக்கு குடிக்க  காபி தண்ணி கொண்டுவாமா ,  எனக்கூறியது  தான் இவனுக்கு உள்ளுக்குள் உதரலே எடுக்க ஆரம்பித்து விட்டது.

இதை கண்டும் காணாதது போல் இருந்த சந்தியா  களுக் என்று சிரிக்க உடன் சேர்ந்து சிரிக்கவா இல்லை அழவா என்று அவனுக்கு தெரியவில்லை  .

ஆனால், எலி இருக்கையில் இருந்து எழுந்தே விட்டான் . 

You might also like - Kanaamoochi re re... A romantic comedy...

என்னாச்சு எழில்? என்று அவர் ஒன்றும் அறியாது வினவ..

ஒன்னும் இல்ல பெரியப்பா அப்பா கூப்ட்ற மாறி இருந்துச்சு அதான்... என்று இழுக்க...

என்ன அவன நான் டவுனுக்கு தானே அனுப்புனேன் அதுக்குள்ள வந்துட்டானா, என்று வாயிலை நோக்கியவர் போடா யாரும் இல்லை நீ உட்கார் . என்றார் சமர்த்தாக

அவனோ , அய்யோ இவர் வேற நேரம் காலம் தெரியாம அவ ரெண்டாவதா காபி கொண்டு வந்து கொடுத்து மறுபடியும் அந்த கஷாயத்த யார் குடிக்கறதாம். அய்யோ நம்மால முடியாதுப்பா.

அவனை காப்பாற்றும் ஆபத்பாந்தவனாக ,

இருக்கட்டும் மாமா, இப்போதான் காபி சாப்டோம். என்று சரோ கூற,

எலியின் பார்வை அவனிடம் " உன் மனச தொட்டு சொல்லு அதுக்கு பேர் காபியா" என்று கேட்டது.

அவனின் பதில் பார்வை சமையல் அறையை சுட்டி காட்ட அங்கு நம்ம திவ்யா காளி அவதாரம் எடுத்து நின்றாள்  . இவ எதுக்கு நம்மல கொலவெறி லுக் விடுறா நியாயமா பார்த்தா நாங்க தானே இவள கொல கூட  பண்ணனும் . 

என்று எண்ணி கொண்டான்.

உண்மையில் திவ்யாவோ , இப்போ தானே ஒரு வழியா ரெண்டு பேருக்கும் காபி போட்டு கொடுத்து விட்டேன். இப்போ ரெண்டாவதும் போட சொன்னா மனுசனுக்கு கடுப்பாகாது என்று விறைத்து கொண்டாள்.

அப்படியா, தம்பி சரி .. தம்பிக்கு  ஸ்வீட் கொண்டு வாம்மா, 

பரவாஇல்லை மாமா, நேரம் ஆகுது  நிறைய வேலை இருக்கு என்று கூறிவிட்டு , அத்தை ,பாட்டிய வர சொல்லுங்க என்றான்.

அதற்குள் ரஞ்சிதமே அங்கு வர அவரிடம் அந்த சம்பிரதாய பத்திரிக்கையை கொடுக்க அவரோ, இல்ல தம்பி அவங்க ரெண்டு  பேரயும் நிக்க வச்சி கொடுக்றது தான் முறை என்றார். 

அவனோ

இல்ல பாட்டி எங்க வீட்ல வயசுல மூத்தவங்க கிட்ட தான் கொடுக்கனும். நீங்க தான் உங்க பேத்தி கல்யாணம் நல்ல படியா முடிஞ்சி அடுத்தடுத்து இந்த வீட்ல விசேஷம் வரனும்னு கடவுள்ட்ட வேண்டிகிட்டு உங்க பிள்ளைட்ட கொடுங்க என்றான். அவனின் அந்த துடுக்கான பேச்சை கேட்ட அனைவருக்குமே அவன் மேல் ஒரு பாசம் ஏற்பட்டது உண்மையே. 

(உன் பேச்சுல எதோ உள் குத்து இருக்குற மாறி  தோனுதே ப்ரோ) 

அவன் எல்லாரிடமும் விடை பெற்று கொள்ள , எலி விரைவாக.. அடுக்களைக்குள் சென்றான். 

இங்க ஒரு கொலை விழப்போவது நிஜம்... ஆனால், அது நம்ம திவ்யாவா? இல்லை எலியா?

காத்திருப்போம் பதிலுக்கு....

தொடர்ந்து ஊக்க படுத்தும் தோழமைகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்... எல்லாருக்கும் தனித்தனியா தேங்க்ஸ் பண்ணனும்னு ஆசை தான். ஆனால் வேலை பளு காரணமாக முடியாது போகிறது. மன்னித்து கொள்ளவும். மிக்க நன்றி...

தொடரும் . . .

Episode # 03

Episode # 05

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.