(Reading time: 12 - 23 minutes)

யம் - பயம் என்பது தானே அதிகாரவர்க்கத்தை ஆட்டிப்படைக்க வைக்கிறது! இந்த பயம் உன்னை பார்த்து அல்ல... உன் பதவிக்கு தான்... அது மட்டும் உன் கை நழுவி போகும் சமயத்தில்... இப்போது பயந்து ஒதுங்கும் ஜனம் உன் மீது ஏறி மிதிக்கவும் தயங்காது! இப்படி அடக்கபடும் பொழுது கொந்தளித்து எழுபவர்கள் இல்லை  ஆர்யமன்னும் வாசுவும். அவர்களை முடிந்தவரை ஒதுக்கி செல்வது ஆர்யமன் குணம் என்றால் அப்படியே பணிந்து போய் விடுவது  வாசுவின் குணம்.

மான ரோஷம் பார்த்து கொண்டிருந்தால் வாழ்க்கையை வாழ முடியாது என்பதை அவர்கள் வளர்ந்த அன்பு இல்லம் கற்றுக் கொடுத்திருந்தது. உடுக்கும் உடையில் இருந்து படுக்கும் பாய் வரை... மற்றவர் இரக்கத்தால் கிடைப்பது என்பதை அனுபவித்து அறிந்தவர்கள் என்பதால் சகிப்புத்தன்மை என்பது ரத்தத்தில் ஊறி போயிருந்தது! பலவித ஏக்கங்கள், அவமானங்கள் எல்லாவற்றையும் தாண்டி தானே வந்திருக்கிறார்கள் - இவர்கள் தங்களைத் தாமே தேற்றிக் கொண்டு வாழ பழகியவர்கள் கூட...

சொத்து பத்து... சொந்தம் பந்தம் என்று எந்த ஆதரவும் இல்லாத வாசுவைப் போல தான் ஆர்யமன்.. ஆனால், வாசுவை அதிகாரம் செய்யும் வாயை ஆர்யமனிடம் அடக்கி தான் வாசிப்பார் அந்த பெண்மணி... மெத்த படித்தவனாயிற்றே! அதுவும் அவன் ஊதியத்தை அறிந்த பின்பு, காசு, படிப்பு, பெரிய இடத்து  பையன் போன்ற தோற்றம்... என்று எல்லாத்திலும் நிறைவாக இருந்தவனை எப்படியும் தன் அக்கா மகளுக்கு வளைத்து போடும் எண்ணத்தில் இருந்தார்...

You might also like - Krishna Saki... A family oriented romantic story...

“கம்ப்யூட்டர் இன்ஜினியர் கல்யாண மாப்பிள்ளை மாதிரி கிளம்பி இருக்குறீங்க.. பொண்ணு கின்னு பார்க்க போறீங்களா?”, என்று அவன் வேட்டி சட்டை கோலத்தை ஏற இறங்க பார்த்த படி கேட்டார்....

‘இந்த வேஷ்டி எப்ப கழண்டு விழுமோன்னு பயமா இருக்கு! சும்மா சைட் அடிக்கிறதே  கஷ்டம்... அதில் லைசென்ஸ்டு சைட் சீயிங் வேறயா’, எண்ணிக் கொண்டே

சிறு புன்னகையுடன்  மறுப்பாக தலையசைத்தவனிடம் அவர்,

“அப்படி ஏதாவது யோசனை இருந்தா சொல்லுங்க தம்பி! உங்களுக்கு ஏத்த பொண்ணு நம்ம சொந்தத்திலே இருக்கு! நாங்களே முன்ன நின்னு கல்யாணத்தை நடத்தி வைப்போம்”, என்று சொல்ல...

தனக்கு ஒரு துணை என்று சொன்னதும்...

“பப்பி” என்ற சத்தமின்றி அவன் உதடுகள் உச்சரிக்கும் பொழுதே  உள்ளமும்  உடலும் சிலிர்த்தது... 

அனாதை ஆசிரமத்தில் பால்ய வயதில் பாசத்தை திணித்த நித்தியின் இழப்பிற்கு பின்.. இனி எந்த பெண்ணின் பந்தமும் பிணைப்பும் வேண்டாம் என்று பாறையாய் இறுகி போனவனையும் மீறி தன் பெயரை பொறித்த பப்பி..

‘பப்பியை பார்த்து ஒரு மாதமாகுதே..’, ஒருவித தவிப்பு அவனுக்குள் எழ

இவன் சிந்தனை அறியாமல் பதிலை எதிர்பார்த்து அந்த பெண்மணி காத்திருக்க... அதற்குள் அந்த பேச்சில் இடைபுகுந்த வாசு, அவரை நோக்கி,

“எனக்கும் ஏதாவது பொண்ணு இருந்தா சொல்லுங்க மேடம்”, என்று கூச்சப்படாமல் கோரிக்கை வைக்க,

‘அவன்கிட்ட கேட்டா இவன் துள்ளிகிட்டு வாரானே’ என்று எரிச்சலடைந்த அந்த பெண்மணி,

“இதுல மட்டும் தெளிவா இருங்க! தேங்காயை எல்லாம் வாங்கிட்டீங்களா?”, என்று வாசுவிடம் விசாரணையை ஆரம்பிக்க,

அதை நேற்றே வாங்கி வைத்து விட்டதாக வாசு அவரிடம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே தன்னிலைக்கு வந்த ஆர்யமனுக்கு பேச்சு திசை மாறியதில் நிம்மதியடைந்தவனாய்,

“சரி! நான் தேங்காய் மூட்டையை காரில் ஏத்துறேன்”, பொதுவாக சொன்ன படி அவர்களை கடந்து சென்றான்.

108 தேங்காய் பிள்ளையாருக்கு உடைக்க வேண்டும் என்ற அந்த பெண்மணியின்  வேண்டுதல் நிறைவேற அதற்கு எடுபிடியாக இருக்க தான் வாசு! இதை முந்தைய நாள் வாசு சொல்லும் பொழுதே அலுவலகம் செல்லும் முன் அவனுக்கு உதவ அவனும் கோவிலுக்கு வருவதாக சொல்லி இருந்தான். 

மயிலாப்பூர் நவசக்தி விநாயகர் கோவில் வாசலில் நின்று வாசுவும், ஆர்யமனும் தேங்காய்களை உடைத்து முடிக்க... பிள்ளையாருக்கு வேண்டுதலை வைத்த அந்த எஸ். பி.யின் மனைவி...  அதை வெறுமனே வேடிக்கை மட்டும் பார்த்து விட்டு கிளம்பி விட... தாங்களும் கிளம்பலாம் என்று வாசு சொல்ல...

“சாமி கும்மிட்டு வந்திடலாம்டா”, என்று ஆர்யமன் கேட்பதை கண்ட வாசு திகைத்தான்.

இருவரும் நாத்திகர் இல்லை என்றாலும்... இறை வணக்கம் ஒவ்வொரு பொழுதிற்கு செலுத்துவது அன்றாட விஷயமாகி விட... கஷ்டம் என்றால் சாமியை நாடி இருக்கிறார்களே தவிர... கோவிலைத் தேடியது இல்லை..

“மனசு ஏனோ சரியில்லை! இன்னைக்கு... நவம்பர் பதினாறு. நித்தி கடைசியா எனக்கு லெட்டர் எழுதின நாள்!”, என்றவன் குரலில்... துக்கம் ஓங்கி ஒலித்தது..

ஆர்யமனை விட மூன்று வயது இளையவள் நித்யா. ஆர்யமன், வாசுவுடன் அன்பு இல்லத்தில் வளர்ந்த சிறுமி. அந்த ஆசிரமத்தில் ஆர்யமனும், வாசுவும் தான் மூத்தவர்கள். மற்ற குழந்தைகள் இவர்களை விட இளையவர்கள் என்பதால் ஆர்யமன் தான் அத்தனை பேருக்கும் குரு. வாசு  அவனக்கு ரைட் ஹேன்ட்...

ஆர்யமனை விட மூன்று வயது சிறியவளான நித்யாவுக்கு அவனை மிகவும் பிடிக்கும்! அவன் அன்பை யாசித்து இவன் காலையே சுற்றி வர, அவனோ பெரிதாக கண்டு கொள்ள மாட்டான்.

“பாவம்டா.. சும்மா உப்புக்கு சப்பாணியா சேர்த்துக்கலாம்!”, என்ற வாசு சிபாரிசில் அரைமனதாக  தான்  தங்கள் கூட்டணியில் சேர்த்தான்..

இப்படியே நாட்கள் உருள... ஆர்யமன், தேசிய அளவில் நடந்த நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, பாண்டிச்சேரி நவோத்யா பள்ளியில் சேர  தேர்வானான்.  பாண்டிச்சேரிக்கு ஹாஸ்டலில் தங்கி படிக்க அன்பு இல்லத்தை காலி செய்து விட்டு கிளம்பிய பொழுது தான் பிரிவின் வலியை முதல் முறை அனுபவித்தான்...

வாசுவை பிரிவதே மிகப் பெரிய கஷ்டமாக அழுத்திய மனதை... கசங்கிய விழிகளுடன் வழியனுப்பிய நித்யா மேலும் கரைத்தாள்.. பாண்டிச்சேரி வந்த பின், இவன் பதில் அனுப்பினாலும்.. அனுப்பாவிட்டாலும், வாரம் தவறாமல் வரும் நித்யாவின் கடிதமும்... அதில் வழிந்த அன்பும் ஆர்யமனிற்கு அவள் மீதிருந்த பிணைப்பை மேலும் பலமாக்கி இருந்தது....

இரண்டு வருடங்கள் இப்படியே செல்ல.... அப்பொழுது தான் விதி நித்யாவின் வாழ்க்கையை நிர்மூலமாக்கியது.

அன்பு இல்லத்தை நடத்தும் சிவநேசனை பார்க்க வந்த ஒரு தம்பதியர், தங்கள் குழந்தை விபத்தில் தவறி விட்டதாகவும், அதே வயது மற்றொரு குழந்தையை  தத்தெடுக்க விரும்புவதாகவும் கேட்டனர். ஒரு துயரை போக்க கேட்கும் அன்பு உள்ளங்கள் என்று ஒரளவிற்கு விசாரித்த பின்பு தான் நித்யாவை தத்து கொடுத்தார்..

ஆனால், ஒரு வருடம் கழித்து அதே தம்பதியர் ஒரு கொலை வழக்கில் சிக்கி கொள்ள.... அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில்... அவர்கள் புதைக்கப்பட்டிருந்த பிணங்கள்... உலகத்திற்கு வெட்ட வெளிச்சமானது.... உடல் உறுப்பிற்காக நடந்த படுகொலைகள்! அதில் நித்யாவும்  அடக்கம்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.