(Reading time: 12 - 23 minutes)

ர்யமன் நினைவு கூரும் துக்கம் நெஞ்சில் வலியை உண்டாக்க...

வாசு,

“அன்னைக்கு உனக்கு எழுதின லெட்டரை கூட போஸ்ட் பண்ண விடலை. அந்த படுபாவிங்க நித்தியை கூட்டிகிட்டு போறதுலே குறியா இருந்தானுங்க.....”,

அதற்கு மேல் வாசுவால் பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க... அமைதியாய் இருந்தான்.. சில நொடிகள் கனத்த மவுனம்...

காலம் ஒரளவிற்கு நித்தியின் இழப்பை ஏற்றுக் கொள்ள பழக்கி இருந்ததால்... அந்த நிமிஷம் கலங்கினாலும்.... தங்களை மீட்டு கொண்டவர்கள்...  மவுனத்தில் சஞ்சரித்தனர். மனம் சற்றே அமைதி பெற, தொண்டையை செருமி மவுனத்தை கலைத்த ஆர்யமன் வாசுவை நோக்கி,

You might also like - A-Aa-E-Ee... A quick fire feel gud romantic story...

“நம்ம நித்தி தெய்வக் குழந்தைடா... மனுஷங்க கையில் கொடுக்க பிடிக்காம அந்த சாமியே எடுத்துகிச்சு! இருந்தாலும், விடுவோமா.. எங்க நித்தியை சேஃப்பா வைச்சுக்கோன்னு வருஷா வருஷம் கோவிலுக்கு வந்து சாமிக்கு அலர்ட் அலார்ம் வைப்போம்ல”,

என்று சொன்னவனின் பார்வையில் வழிந்த ஆறுதலை ஏற்றுக் கொண்டவனாய் தலையசைத்தான் வாசு.

பின்னர் இருவரும் கோவிலுக்குள் நுழைய...

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே!

விநாயகர் அகவலை பாடிக் கொண்டிருந்த இனிய பெண் குரல் அவர்களை வரவேற்]றது...

ஆனால், அவர்கள் சன்னதி நோக்கி வருவதற்குள் அந்த பாட்டு முடிந்து விட அந்த குரலுக்கு சொந்தக்காரி யார் என்பது இருவருக்கும் தெரியவில்லை.

பிள்ளையாரிடம், நித்திக்காக வேண்டி விட்டு...

“கடவுளே! பப்பியை சீக்கிரம் காட்டு... ஒரு மாசமாச்சு! லைஃப் செம போர்”, மனமுருக வேண்டி விட்டு  கண்களை திறந்து ஆர்யமனின் காதில்

“மாப்பு, எதிர்த்தாப்புல நிற்கிற பொண்ணு சூப்பரா இருக்கு பாரேன்”, என்று வாசு கிசுகிசுக்கும் பொழுதே அர்ச்சகர் பிரசாதத்துடன் அவன் முன் வந்து நிற்க....      

பய பக்தியுடன் தீபத்தை கண்களில் ஒற்றி விட்டு... பிரசாதத்தை வாங்கி கொண்டிருந்தவனிடம்...

“என்ன மாப்பு.... பரவச நிலையை விட்டு வரலையா... நான் பார்த்துட்டேன்ப்பா.. நீதான் மிஸ் பண்ண போற...”, என்று கிசுகிசுக்க...

வாலிப வயதிற்கே உரிய ஆர்வமா... நண்பன் பார்த்ததை நான் மிஸ் பண்ணுவேனா என்ற போட்டியோ தெரியவில்லை....

“அதெப்படி விடுவேன்”, என்று எண்ணிக் கொண்டவன் நிமிர நினைத்தான்... ஆனால்....

தொடரும்

Episode 01

Episode 03

{kunena_discuss:922}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.