(Reading time: 8 - 15 minutes)

ப்படி லவ் வரலனா” சின்ன குழந்தை கதை கேட்பது போல் ஆர்வத்தோடுக் கேட்டாள் அனு.

“இப்படிக் கேட்கும் போது நீ ரொம்ப கியுட்டா இருக்க டீ” தன் தோழியின் வெகுளித்தனத்தை ரசித்தவாறே அவள் கன்னத்தைக் கிள்ளினாள் திவ்யா.

“சொல்லு திவி, அப்படியும் லவ் வரலனா?” அதே குழந்தை ஆர்வத்தோடுக் கேட்டாள் அனு.

“லவ் வரலனா என்ன கல்யாணம் ஸ்டப் தான்” சர்வ சாதாரணமாக பதில் அளித்தாள் திவ்யா.

“விளையாடாத திவி” திவ்யா கேலிக்காக கூறுவதாக நினைத்துக் கொண்டு அவளைச் செல்லமாக கையில் தட்டினாள் அனு.

You might also like - Unnal magudam soodinen... A romantic story...

“நான் சிரியஸா சொல்றேன் அனு. லவ் இல்லாமல் திபக் உன்னைத் தொட்டதற்கே உனக்கு ஏதோ மிஸ் ஆனது போல் சங்கடமா இருந்தது இல்ல, அப்படி இருக்கும் போது எப்படி லைப் லாங் நீ லவ் இல்லாமல் திபக் கூட வாழ முடியும். ஸோ இந்த 3 மாதத்தைச் சரி யுஸ் பண்ணிக்கோ. அப்படி இல்லை என்றால் உனக்குத் தான் கஷ்டம்” திவ்யா தன் தோழியின் நலனிற்காக, அக்கறையோடு கூறினாள்.

“அப்போ இவினிங் பார்த்தவனின் பற்றி நான் ஏன் நினைக்கனும். அதற்கு என்ன அர்த்தம்” அனுவின் அடுத்த கேள்வி.

“அதற்கு ஒரு அர்த்தமும் கிடையாது. கொஞ்ச நாளாகவே ஃபாலே பண்றானு சொன்னே இல்ல, அதில் உனக்கே தெரியாமல் நீ கொஞ்சம் டிஸ்ட்ரப் அயிருப்ப. இன்றைக்கு மனசு குழப்பமா இருக்கும் போது தேவையில்லாத அந்த விஷயம் உன்னை டிஸ்ட்ரப் பண்றது. அவ்வளவுதான். இந்த மாதிரி ஸில்லி விஷயத்தையெல்லாம் தூக்கி தூரப் போட்டுவிட்டு மைண்ட ரிலக்ஸ் பண்ணு. திபக் விஷயத்தில் மட்டும் கான்சென்ற்றேட் பண்ணப் பார். டைம் ஆயிடுச்சு, நான் கிளம்புறேன். நீ பொறுமையா யோசித்துப் பார். சி யு டூமாரோ” அனுவின் கையை கனிவோடு அழுத்திவிட்டு அங்கிருந்து சென்றாள் திவ்யா.

திவ்யா சென்றவுடன் மீண்டும் தன் படுக்கையில் சாய்ந்தாள் அனு. திவ்யா கூறியது அனைத்தும் சரியென அனுவிற்கு தோன்றியது. அனுவின் மனக் குழப்பம் சற்றே ஓய்ந்தது போலவும் தோன்றியது. மீண்டும் தன் தலைக்கு மேல் ஓடிக்கொண்டிருந்த ஃபேனை உற்று நோக்கியவாறே, திவ்யா கூறியது போல் திபக் தவிர மற்ற சிந்தனைகள் அனைத்தையும் தன் மனதில் இருந்து அகற்ற வேண்டும் குறிப்பாக அந்த ஃபாலோ பண்ற பையனைப் பற்றி நினைக்கவே கூடாது என்று தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டிருந்தாள் அனு.

அதே சமயம்

விஷ்னு தன் படுக்கையில் படுத்தவாறே தலைக்கு மேல் ஓடிக் கொண்டிருந்த ஃபேன்னை நோக்கியபடி ஆழமாக சிந்தித்துக் கொண்டிருந்தான் அனுவை பற்றி.

தொடரும் . . .

Episode # 06

Episode # 08

{kunena_discuss:906}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.