(Reading time: 43 - 85 minutes)

ன்பரசியை ட்ராவல் செய்ய டாக்டர்ஸ் அனுமதித்திருந்த நாளுக்காக சங்கல்யாவும் அன்பரசியும் காத்திருந்தனர் எனில்…அவர்கள் இருவர் மட்டுமாக ட்ராவல் செய்வதை விட துணைக்கு தானும் வந்தால் நன்றாக இருக்கும் என  நினைத்த சுகா…… ஒரு ஷாட் ட்ரிப் ஆஸ்ட்ரேலியா போய்விட்டு திரும்பி வந்து இவர்களுடன் மறுபடியுமாய் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள்.

நாளை இவர்கள் ஆஸ்ட்ரேலியா கிளம்புகின்றனர்…..

இன்று சூப்பர் 8 ல் இன்டியா vs ஆஸ்ட்ரேலியா. பூல் மேட்சசில எதிர்பார்த்த அளவு ஃபெர்ஃபார்ம் செய்யாமல் கடைசி அணியாக தேர்வாகி சூப்பர் 8 க்குள் வந்திருந்ததால் ஆஸ்ட்ரேலியாவை அவர்கள் ஹோம் க்ரவ்ண்டில்  க்வாட்டர் ஃபைனலிலேயே சந்திக்க வேண்டி இருந்தது இந்திய அணிக்கு. இப்போதைய ஃபெர்ஃபார்மன்ஸ் பேஸில் இன்டியா எளிதாக செமி ஃபைனல்ஸ் நுழைந்துவிடும் என கட்டியம் கூறின மீடியா.

டே அண்ட் நைட் மேட்ச். வென்யூ மெல்பர்ன். சென்னைக்கு ஏறத்தாழ 5 மணி 31 நிமிடங்கள் முன்னால் சென்று கொண்டிருக்கும் நகரம் அது.

சென்னை:

காலை 9மணி. மேட்ச் ஆரம்பிக்க இன்னும் 1 மணி நேரம் இருக்கிறது. நாளை கிளம்பும் முன் அன்பரசிக்கு ஒரு மெடிகல் செக் அப் செய்து கொள்ள வேண்டும் என்பதாலும்….சுகாவிற்கு அவளது ரெகுலரான செக் அப் டே என்பதாலும் சுகா அன்பரசி சங்கல்யா அக்கம்பைன்ட் பை ஹயா குட்டி ஹாஸ்பிட்டல் சென்றிருந்தனர்.

You might also like - Rojavai thalattum thendral... A breezy romantic story 

அன்பரசிக்கு சில நீள ப்ரொசீசர்ஸ்….சுகா சங்கல்யா இருவரும் அந்த அறைக்கு வெளியே காத்திருந்தனர். அதே நேரம் சுகாவிற்கான அப்பாய்ண்ட்மென்டும் வர சுகா ஹயாவை சங்கல்யாவிடம் கொடுத்துவிட்டு தன் டாக்டரைப் பார்க்க சென்றாள்.

ஹயாவை கையில் வைத்துக் கொண்டு சுகாவால் டாக்டரிடம் பேசுவது என்பது இயலாத காரியம்….இது ஒரு வகை சைகாலிஜிகல் கவ்ன்சிலிங் செஷனும் கூட…ஆக நேரமெடுக்கும். 10 மாத துறு துறு குழந்தை அவ்ளவு நேரம் இவள் மடியில் உட்கார்வதெல்லாம் நடைமுறையில் சாத்தியமே கிடையாது.

இப்பொழுது சங்கல்யாவும் ஹயாவும் மட்டுமாக காத்திருந்தனர். இவர்கள் செக்யூரிட்டிக்கு வந்தவர்கள் கண் பார்வைக்குள் தான் நின்று கொண்டு இருக்கின்றனர். ப்ளாகிஷ் ப்ரவ்ன் ஜீன்சும் வைட் கட் ஷெர்ட்டுமாய் சங்கல்யா….முடியை ஃப்ரீ ஹேராய் விட்டிருந்தாள். அவளது சன்க்ளாஸை ஹயா கையில் வைத்து குடைந்து கொண்டிருந்தாள்.

இப்பொழுது ஒரு பெண் சட்டென சங்கல்யா மேல் வந்து மோதுகிறாள்.

“ஹேய்…என்ன நீ…” என்றபடி இவள் திரும்பிப் பார்க்கும் போதுதான் தெரிகிறது மோதியவள் பார்வை அற்றவள் என. அவள் கையிலும் குழந்தை.

“ஓ சாரி…” இவளும் அவளும் ஒன்றாய் ஒரே நேரத்தில் சொல்லிக் கொள்கின்றனர்.

“சாரி மேம்…டென்ஷன்ல வந்தேன்….அதான் சரியா கவனிக்கலை….ப்ளீஸ் ஒரு ஹெல்ப் செய்ய முடியுமா…? என் கார் பார்க்கிங்ல வெய்ட் செய்துட்டு இருக்குது….என்னை அங்க கொண்டு போய் விட்டுட முடியுமா ப்ளீஸ்…”

“ஓ ஷ்யூர்” ஒரு பெண் உதவி கேட்டு சங்கல்யா நோ சொல்வதா? இருந்தாலும் நங் என ஆக்க்ஷனில் ஜம்ப் செய்யாமல் நடப்பதை கவனித்து இவள் அருகில் வந்துவிட்ட செக்யூரிட்டி ஆஃபீசர் ஆலனைப் பார்த்து “ஆலன் சார்…இவங்களை பார்க்கிங் வரை கொண்டு போய் விட்டுட்டு வாங்களேன்…” என சொல்யூஷன் சொன்னாள்.

“ஐயோ….இல்ல வேண்டாம்….” பதறினாள் அந்த பெண். “இல்ல மேம்….நான் தனியாவே போய்கிறேன்….இப்பதான் எவனோ ஹெல்ப் பண்றேன்னு சொல்லிட்டு அசிங்கமா மேல கை வச்சுட்டான்….” சொல்லியபடி அந்த பெண் நடக்க முயல…இப்போழுது அங்கிருந்த ஒரு வெய்ட்டிங் சேரில் போய் இடித்துக் கொண்டாள் அவள்.

“வாங்க…” இப்பொழுது அந்த பெண்ணின் கையைப் பிடித்தபடி நடக்க தொடங்கி இருந்தாள் சங்கல்யா. அந்த ஆலன் பின் தொடர்ந்தார் இடைவெளியுடன் இவர்களை.

அந்த பில்டிங்கிலிருந்து படி இறங்கி நேராக சென்றால் பார்க்கிங் தான்.

TN 74 N 698 நு ஒரு வைட் வெர்னா நிக்கும் பாருங்க மேம் அதுதான் என் கார்….ட்ரைவர் உள்ள இருப்பார்.

ஆக அந்த காரைக் கண்டு பிடித்து அதன் கதவை அந்த பெண்ணிற்காக திறக்க இவள் குனிந்த வேளை ஏனோ சட்டென உறைக்கிறது சங்கல்யாவுக்கு ‘அந்த பொண்ணும் இவள மாதிரியே ட்ரெஸ் பண்ணிருக்கா….அந்த குழந்தைக்கும் ஹயா குட்டிக்கு மாதிரியே வைட் ஃப்ராக்….’

பின்னால் வந்து கொண்டிருந்த அந்த செக்யூரிட்டி ஆஃபீசர் ஆலனுக்கும் சங்கல்யாவுக்கும் இடையில் ஒரு குட்டி கும்பல் இந்த நேரம் க்ராஸ் செய்ய இப்பொழுது அவர் பார்க்க சங்கல்யா குழந்தையுடன் அந்த வெர்னாவில் இயல்பாய் அமர  அந்த கார் கிளம்பிச் செல்கிறது. வேகமாய் அதை நோக்கி ஓடுகிறார் இவர்….”மேம்…மேம்….”

இப்பொழுது சங்கல்யாவின் எண்ணிலிருந்து அவருக்கு அழைப்பு “சாரி ஆலன் சார் அந்த பொண்ணுக்கு ஒரு சின்ன ஹெல்ப் தேவைப் படுது 5 மினிட்ஸ்ல வந்துடுவேன்…” சங்கல்யாதான்.

வேண்டா வெறுப்பாக சம்மதித்து வைக்கிறார் அவர். கார் கண் பார்வையிலிருந்து மறைகிறது.

ஆனால் அந்த ஐந்து நிமிடம் தான் முடியவே இல்லை. ஆம் சுகா  வெளி வந்த பின்பும் சங்கல்யா திரும்பவே இல்லை.

டந்தவைகளை சுகா முழுதாய் புரிந்து கொள்ளும் முன்னம் அவளது மொபைல் சிணுங்க லைனில் சங்கல்யா.

“ பயப்படாதீங்க சுகவிதா மேம்….. உங்களுக்கே தெரியும்…..ஐ’ம் வெரி ஜென்டில் வித் விமன்…உங்களையோ ஹயாவையோ கஷ்டபடுத்ற மாதிரி எதுவும் செய்ய மாட்டேன்….சேம் டைம் ஐ’ம் ஆம்பிஷியஸ்….லைக் டூ எர்ன் அ லாட்….அண்ட் யூ நோ மை ப்ரொஃபஷன். நான் உங்க வீட்டுக்கு வந்ததே அதுக்காகதான்…..நவ் மை மொமன்ட் ஹஸ் கம்…இதுக்காகத் தான் இவ்ளவு நாளா வெயிட் பண்ணது….”

“லியா என்னாச்சு லியா? யார் உங்களை கிட்நாப் செய்துறுக்காங்க…? த்ரெட் பண்றாங்களா லியா…? எவ்ளவு அமவ்ண்ட் கேட்டாலும் கொடுத்துடலாம்…நீங்க பயப்படாதீங்க….ஹயா குட்டி உங்க கூட தான இருக்கா….அவ உங்கட்ட இருக்ற வரைக்கும் எனக்கு பயமில்லை…நீங்க பார்த்துப்பீங்கன்னு தெரியும்…”

இங்கு இவளிடம் பேசிக் கொண்டே சுகா அவசர அவசரமாக தன் பேக்கிலிருந்து தேடி எடுத்து அடுத்த மொபைலில் ப்ரவீர் எண்ணை அழைக்கிறாள்.

“லூசு மாதிரி பேசாதீங்க சுகா….நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்…நீங்க என்ன பேசிகிட்டு இருக்கீங்க…..என்னை யாரும் கிட்நாப் பண்ணலை நான் தான் ஹயாவை கிட்நாப் செய்துறுக்கேன்….இப்ப வழவழன்னு கதைய இழுக்காம நான் சொல்றதை செய்ங்க…..உங்க ஹஸ்பண்ட் அரண்க்கு போன் செய்து விஷயத்தை சொல்லுங்க….”

“இல்ல மேட்ச் ஆரம்பிக்கப் போகுது அவங்கட்ட பேச முடியாது….” சுகாவின் ஸ்டெர்ன் குரல்.

“ப்ச் பேசிகிட்டு இருக்கப்ப இதென்ன இடையில பேசுற லூசு….அவன் அங்க லாக்கர் ரூம்க்கே இப்பதான் போறான்….இந்த நேரத்துல உன் கால் தவிர யாரோடதையும் பிக் அப் பண்ண மாட்டானே உன் கேப்டன் ஹஸ்பண்ட்…. அதான் உன்னை சொல்ல சொல்றேன்…”

“ப்ரபு கூட அப்டித்தான்….அவன் வைஃப் காலை பிக் அப் செய்வானே…..அப்ப நீயே அவன்ட்ட சொல்லு லியா காசுக்காக ஹயாவை தூக்கிட்டு ஓடிட்டேன்னு.” இதை அவள் சொன்னது விஷயம் ப்ரவிருக்கு புரிய வேண்டும் என்பதற்காக…..

சுகா பேசும் அனைத்தும் அடுத்த இணைப்பை ஏற்றிருந்த ப்ரவீரின் காதுகளில். ப்ரவீர் தன் லேப்டாப்பை நோக்கி ஓடத் துவங்கி இருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.