(Reading time: 9 - 17 minutes)

மாஸா – 03 - மது கலைவாணன்

முடக்கத்தான் , இவரின் வயது 150 தாண்டும். ஆகினும் உடல் கட்டுடன் , நல்ல ஆரோக்கியத்துடன் காணப்பட்டார்.

"எதற்காக நீ இவ்விடம் வந்தாய்?" - முடக்கத்தான்.

நான் வந்த நோக்கத்தினை கூறினேன்.

Maasa

"நன்று. இங்கு இருக்கும் 12 அறைகளில் ஒரு அறையில் ராக பாவனா உள்ளது. நீ அதை எடுத்து செல்லலாம்." - முடக்கத்தான்.

மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

"ஆனால். உனக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே. நீ திறக்கும் அறையில் ராக பாவனா இருந்தால் , நீ அதை எடுத்து செல்லலாம். இல்லை என்றால் மறு வாய்ப்பு உனக்கு இல்லை. இவ்விடம் விட்டு நீ வெறும் கையுடன் தான் செல்ல வேண்டும்." - முடக்கத்தான்.

12 அறைகள். ஒரே வாய்ப்பு. நான் முதலாக திறக்கும் அறையில் ராக பாவனா இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் , மறு வாய்ப்பில்லாமல் நான் தோல்வியுற்று வெறும் கையுடன் திரும்ப வேண்டும். செய்வது அறியாமல் என் மனம் குழம்பியது.

எனக்கு வழி தெரியவில்லை. எப்படி அந்த ஒரு அறையினை கண்டுபிடிப்பது என்று முடகத்தான்னிடமே உதவி கேட்டேன்.

"உன் மனம் தெளிவாக இருந்தால் நீ வெல்லலாம்" என்றார்.

எப்படி மனதினை தெளிவாக்க முடியும் என்று கேட்டேன்.

"நீ தெளிவாக இருந்தால் உன் மனம் தெளிவாக இருக்கும்" என்றார்.

புரியவில்லை என்றேன்.

அவர் ஏதும் பேசாமல் சென்றுவிட்டார்.

மூன்று நாட்கள் என்ன செய்வதென்று தெரியாமல் நான் அங்கே தங்கி இருந்தேன். ராக பாவனாவை அடைந்தே தீர வேண்டும் என்ற ஒரு வெறி என்னுள் எழுந்தது. மனதினை கட்டுக்குள் கொண்டு வந்தேன். 12 ஆவது நாள் , என் மனம் ஆழ் கடல் போன்று அமைதியானது. நான் எழுந்து சென்று ஆறாவது அறையினை திறந்தேன். ராக பாவனா அங்கு இருந்தது.

You might also like - Oru kootu kiligal... A family drama...


Black& White Track:

றுக்கமாக காணப்பட்ட மாசாவிடம் கோமதி தயக்கத்துடன் பேச தொடங்கினாள்.

"என்ன ஆயிற்று?" - கோமதி

"கடலின் பேரலை வருகையினை பறவைகள் உணர்ந்து கொள்வதை போல் , என் மன்னவனின் மன அலைகளை என்னால் உணர முடிகிறது."

"நிலைமை சரியில்லை. ஒரு குவளையில் பாத ரசம் எடுத்து வா கோமதி." என்றாள் மாசா.

அந்த பாத ரசத்தில் கற்பூரம் மற்றும் சில திரவியங்களை கலந்து அதனை கொண்டு ஒரு வடிகட்டி போன்ற  பாத்திரம் உருவாக்கினாள் மாசா. கண்களை மூடி அந்த பொருளை உள்வாங்கிய நிலையில் மாசா இருக்க , சிறிது நேரத்தில் மழை பொழிய தொடங்கியது.

மெல்ல எழுந்து சென்று , ஜன்னல் கதவுகளை திறந்து , அந்த பாத ரச பொருளை மழையில் கரைத்தாள் மாசா.அது முழுவதும் கரைந்த பின் அமைதியாக நின்று கொண்டிருந்த கோமதியிடம் "நமது படைகளை தயாராக இருக்க சொல். இந்த கணமே நாம் புறப்பட வேண்டும்." என்றாள் மாசா.

அவ்வாரே செய்தாள் கோமதி.


ராக பாவனா என்வசம் வந்த மகிழ்ச்சியில் நான் புறப்பட தயாரானேன். அப்பொழுது கோவிந்தம்மாள் என்னிடம் கூறியது ஞாபகத்துக்கு வந்தது. அவர் கூறியது போல் , அந்த சங்கீத ராகத்தை முடகத்தானிடம் நான் பாடிவிட்டு விடை பெறுவதற்காக அவரை பார்க்க சென்றேன். அப்பொழுது அவர் ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார். மிகவும் பொலிவுடன் காணப்பட்டார். கோவிந்தம்மாள் அருளிய இன்னிசையை அவரிடம் காணிக்கையாக நான் என் குரல் வழியாக அளித்தேன். அப்பொழுது அங்கு இருந்த முதியவர் ஒருவர் என்னிடம் இவாறாக கூறினார். "இந்த ராக பாவனா என்ற கடவுள் தான் எங்கள் அனைவரையும் இவ்வளவு ஆண்டுகளாக நோயின்றி காப்பாற்றியது. இப்பொழுது நீங்கள் இதனை எடுத்து சென்றால் , நாங்கள் அனைவரும் இறக்க நேரிடும்." என்றார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நான் , ராக பாவனாவை அவர்களிடமே திரும்ப கொடுப்பதற்கு முடிவு செய்தேன். ஆனால் என்னை தடுத்தார் முடக்கத்தான். "நான் வாக்கு அளித்து விட்டேன். இனி முடிவினை மாற்ற முடியாது. நீ ராக பாவனாவை எடுத்து செல்." என்று முடிவாக கூறி என்னை வழியனுப்பி வைத்தார்.

நான் ராக பாவனாவுடன் கோவிந்தம்மாள் இருக்கும் சங்கரன் கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தேன். வழியில் போர் முகாம் போன்று ஒரு இடம் இருந்தது. அங்கு சில வீரர்கள் இருந்தனர். அன்று இரவு அங்கு தங்கினேன்.

மார்கண்டேய சாஸ்திரி என்ற ஒருவரை முகாமில் சந்தித்தேன். அவர் நான் அந்த இடத்திற்கு வந்த நோக்கம் என்ன என்று வினவினார்.அவர் நேர்மையானவர் என்றும் , எனக்கு எந்த தீங்கும் விளைவிக்க போவதில்லை என்றும் கூறினார். நான் நடந்த அனைத்தையும் கூறினேன்.

அவர் இந்த ராக பாவனா மிக பெரிய பொக்கிஷம் என்றும் இதனை கொண்டு சமூகத்துக்கு பல நன்மைகளை  செய்ய முடியும் என்றார். ராக பாவனாவை முறையாக "Research Centre"இல் ஒப்படைப்பதே சரியாக இருக்கும் என்றார். மிகவும் களைப்புடன் இருந்த நான் அறை  மனதோடு ஒப்பு கொண்டேன். பின்பு நானும் அவரும் சென்று ராக பாவனாவை research centre இல் ஒப்படைத்தோம் என்று கூறி முடித்தாள் பைரவி.

கோவிந்தம்மாள் அவர்களை நீங்கள் பிறகு சந்திக்கவில்லையா?” - மித்ரா

“இல்லை. ராக பாவனாவை ஒப்படைத்த பிறகு நான் என் வீட்டிற்கு சென்று நடந்த அனைத்தையும் என் அம்மாவிடம் கூறினேன். வீட்டில் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அன்று இரவே நாங்கள் ஊரை விட்டு கிளம்பி திருச்சி பக்கத்தில் உள்ள கல்கண்டார் கோட்டை என்ற இடத்துக்கு வந்துவிட்டோம்." - பைரவி.

“நீங்கள் இந்த பரபரப்பான நேரத்தில் research centre வர காரணம்?” - மித்ரா.

“ராக பாவனா ஆராய்ச்சி தொடர்பாக என்னை அழைப்பார்கள். சில ராகங்களில் உள்ள ஸ்வரங்களின் நுண்ணிய அலைவரிசைகளை கண்டறிய நான் அவர்களுக்கு உதவி செய்வேன்.இப்பொழுது நான் இங்கு வந்த நோக்கமும் அதே. இதற்கு மேல் என்னை எதுவும் கேட்காதீர்கள். எனக்கு எதுவும் தெரியாது.” - பைரவி .

பைரவி இவ்வாறாக கூறியதில் மித்ராவிற்கு நம்பிக்கை இல்லை.

டத்தியதர்க்காக பைரவியிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு மித்ராவும் அஷ்வினும் அடுத்த செயலில் இறங்கினார்கள்.

"அடுத்து என்ன செய்ய போறோம்" - அஷ்வின்

"பைரவியிடமிருந்து ராக பாவனாவை Research Centre'க்கு கொடுத்த மார்கண்டேய சாஸ்த்ரியை meet பண்ண போறோம்" - மித்ரா.

மார்கண்டேய சாஸ்த்ரி இப்பொழுது தூத்துக்குடியில் இருப்பதை மித்ரா கண்டறிந்தாள். இருவரும் தூத்துக்குடி சென்று மார்கண்டேய சாஸ்த்ரியை சந்தித்தனர்.

"நான் அதனை என்னுடைய பெரியப்பா மகன் ஸ்ரீனிவாச சாஸ்த்ரியிடம் கொடுத்துவிட்டேன். அவர் தான் அதனை பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்" - மார்கண்டேய சாஸ்த்ரி இவ்வாறாக கூறினார்.

அஷ்வினும் மித்ராவும் ஸ்ரீனிவாச சாஸ்த்ரியை சந்தித்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.