(Reading time: 13 - 25 minutes)

வளுக்கு ஏனோ, பைரவியை முதல் பார்வையிலேயே பிடிக்கவில்லை.. அது வேறொன்றுமில்லை.. தன்னை விட அழகாக ரோஜாப்பூ நிறத்தில் உயரமாக, மெலிதான உடல் வாகுடன், அழகான பெரிய கண்களுடன் சுருட்டை முடியுடன் இருந்த பைரவி பார்த்தவுடனேயே பொறாமை தலை தூக்க, அதுவும் தன் அக்கா ரஞ்சனியின் பெண் வேறு நடிகை திரிஷா மாதிரி இந்த அக்கா இருக்காங்க, என்றவுடன் அவளுக்கு பைரவியை பிடிக்காமல் போய் விட்டது.. அதனால் அவளை மட்டம் தட்ட எண்ணி , அது வரை அறிமுக இல்லாத பைரவியை பற்றி அப்படி பேசினாள்.

பைரவி கல்யாணியின் பேச்சை கேட்டு, முகம் கருக்க, "வசந்த் நான் மஹதி ரூமிற்கு செல்கிறேன்.. அவ ரெடியா என்று பார்க்கனும்" என்றபடி அவர்களை கண்டு கொள்ளாமல், பொங்கிய பாலை அணைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

ரஞ்சனியோ, "சரியான திமிர் பிடித்தவளாக இருப்பாளோ?.. தான் ரொம்ப அழகின்னு கர்வம் போல.. பார், கல்யாணி நாம யாருன்னு கூட கேட்காமல் பேசாமல் போறா!"

"ஆமாம்.. நீங்க இரண்டு பேரும் இப்படி எடுத்தெறிந்து பேசினால் வேற எப்படி பேசுவாங்களாம்..  பைரவி ரொம்ப நல்லவங்க"  என்று சொல்லிவிட்டு,

"அம்மா.. சீக்கிரம்மா.. மாப்பிள்ளை வீட்டிலே கிளம்பியாச்சாம்.. அப்பாவுக்கு போன் செய்தாளாம்"  என்றபடி தாயை அழைத்தபடி அவரை தேடி சென்றான்.

அதற்குள் சாரதா, எளிமையான மெல்லிய சரிகையில்லாத அரக்கு கலர் பட்டு புடவையில் வர,

சமையல் மேடையில் அழகாக எடுத்து வைத்திருக்கும் உணவுகளை பார்வையிட்டவர்,  'ம்ம்.. இந்த பைரவி பொண்ணு, எந்த காரியத்தை செய்தாலும் அழகாக தான் இருக்கு.. ஆளும் பாந்தமா, அழகா இருக்கா.. அவளோட வேலையும் எவ்வளவு நருவிசாக இருக்கு.. பாலை கூட காய்ச்சி வைச்சுட்டாளே' என்று தனக்குள் சிலாகித்துக் கொண்டார்.

பின்னர் அங்கே நின்று கொண்டிருந்த தனது மூத்த மகள்களை பார்த்தவர், "என்னம்மா நீங்க இரண்டு பேரும் ரெடியா.. உங்களோட தங்கையை பார்த்தீங்களா?"   என்று கேட்டுக் கொண்டே, அவர்கள் இருவரையும் கண்டு கொள்ளாமல், தன் இளைய பெண்ணை பார்க்க சென்றார்.

You might also like - Barath and Rathi... A free English romantic series

ஹதியின் அறைக்குள் நுழைந்த சாரதா, அங்கே பைரவி மஹதிக்கு அழகாக புதிய முறையில் தலை அலங்காரம் செய்து கொண்டிருந்ததை பார்த்து விட்டு, "ரொம்ப நன்னா இருக்கு பைரவி இந்த பின்னல்"  என்று சிலாகிக்க,

"மாமி, இது பிஷ் டெயில் பின்னல்.. மஹதிக்கு நீண்ட மூடி.. இந்த ஜடை பின்னல் ரொம்ப சூட் ஆகும்.. அதான் இப்படி செய்தேன்"

"அம்மா, பைரவிக்கு தெரியாத வித்தையே இல்லை போல.. சும்மா பின்னல் போடலாம் என்று நினைத்தேன்.. ஆனா பாருங்க அவங்களே அழகாக எனக்கு இப்படி பின்னல் போட்டிருக்காங்க.. லையிட்டா மேக்கப்பும் போட்டு விட்டா"  என்று மஹதி பைரவியை பாராட்ட,

"பைரவி, .. ரொம்ப தாங்க்ஸ் டா.. மஹதிக்கு ரொம்ப சிம்பிளா, ஆனா எலிகண்டா அலங்காரம் செஞ்சிருக்கே.. ஆனா இந்த புடவை போதுமா?" மஹதிக்கு திருஷ்டி கழித்துபடி, கேள்வியாய் பார்க்க,

"இல்லை மாமி,  இந்த புடவையே நன்னா இருக்கு.. பார்க்கரதுக்கு சிம்பிளா இருந்தாலும், இந்த தாமரை பூ கலர், பச்சை பார்டர் கான்ட்ராஸ்ட் சுப்பர் காம்பினேஷன் தான்.. இப்பல்லாம் பட்டு புடவையை விட, சிம்பிளான லையிட் வெயிட் சில்க் காட்டன் பிரபலம்.. பாருங்க மஹதி எவ்வளவு அழகா இருக்கா.. ஜூவல்லரி கூட ஹைவியா இல்லாமால் எதினிக்கா இருக்கு.. இதுவே போதும் மாமி..  கொஞ்சம் பூ மட்டும் வைக்க வேண்டும்" என,

அப்பொழுது பெரிய பூ பந்தை எடுத்து கொண்டு வந்தான் வசந்த்.

"அம்மா, அப்பா கொடுத்து விட்டார்" என்று தாயின் கையில் பூவை கொடுத்து விட்டு, "வாவ் மஹதி அக்கா.. சுப்பரா இருக்கே.. டாக்டர் பிளாட் தான் போ" என்று சிரித்து விட்டு செல்ல,

"போடா.. கிண்டலடிக்காதே"  என்று அழகாக வெட்கப் பட்டாள் மஹதி.

"பைரவி, நீயும் போய் சீக்கிரம் ரெடியாகி வா..  பார்த்தேன்.. கிச்சனில் எல்லாம் ரெடியாக எடுத்து வைச்சுருக்கே.. ரொம்ப தாங்க்ஸ்டா.. உங்கம்மா உன்னை ரொம்ப நன்னா வளர்த்திருக்கா.. கிச்சன்ல என் மூத்த பொண்ணுங்க பேசினதை எல்லாம் கேட்டேன்.. எனக்கு அசிங்கமா இருக்கு.. சாரிடா பைரவி.. தப்பா நினைச்சுக்காதே.. அவா குணமே அப்படி தான்.. அங்கேயே கண்டிச்சிருக்கனும்.. சமய சந்தர்ப்பம் சரியில்லை.. மாப்பிள்ளைகள் முன்னாடி இந்த சமயத்தில் சண்டை ஆக வேண்டாம்ன்னு சும்மா விட்டேன்" என்று அவள் கன்னங்களை வருடினார் சாரதா.

"பரவாயில்லை, அதை விடுங்கோ மாமி.. நான் அக்காங்களை தப்பா எடுத்துக்கலை.. நான் மாடிக்கு போறேன்.. மஹதியை பார்க்க வரவா வரும் நேரம் ஆச்சு.. நான் அவர்கள் எல்லாம் வந்துட்டு போன பின்னாலே வரேன்.. இப்ப நான் இங்கே இருக்க கூடாது.. தேவையில்லாமல் கேள்விகள் வரும்..  அதுவும் இல்லாமல் இந்த மாதிரி நிகழ்ச்சிகள்ல உங்காத்து மனுஷா மட்டும் இருக்கறது தான் நல்லது.. ரொம்பவும் கூட்டம் கூடினா நல்லா இருக்காது.. நல்லபடியா நிச்சயம் ஆகட்டும்.. அடுத்து எல்லாத்துக்கும் முதல்ல நிற்கிறேன்"  என்றவளை,

சாரதா எத்தனை வற்புறுத்தியும், மஹதி எடுத்து சொல்லியும் கூட கேட்காமல் அன்புடன் மறுத்து விட்டு, மஹதிக்கு வாழ்த்தி விட்டு தன் அறைக்கு செல்ல மாடிக்கு விரைந்தாள்.

சாரதா மஹதியை உள் அறைக்குள் இருக்க சொல்லி விட்டு, ஹாலுக்கு வர,

அங்கே ஏற்கனவே குடும்பத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்த ரஞ்சனி, "என்னம்மா, அந்த மாடி வீட்டு அமெரிக்க பொண்ணு, யாரையும் கண்டுக்காம வெளியே போயிட்டா.. அதுவும் நல்லதுக்குத்தான்.. வரப் போறது டாக்டர் வரன், இந்த பொண்ணோ ஃபாரின்காரி.. அழகாவும் இருந்து தொலைக்கிறாள்..வர டாக்டர் இவளோட அழகுல மயங்கிட்டா, அப்பறம் நம்ம மஹதி கதி" என ஆரம்பிக்க,

"சே.. என்ன பேச்சுன்னு பேசரே?.. அவ ஒன்றும் அமெரிக்கன் இல்லை.. நம்ம இந்தியன் பொண்ணு.. நம்மளவா தான்.. எல்லாம் கேட்டிண்டு தான் இருந்தேன்.. நீ இப்படிதான் எடுத்தெறிந்து எல்லாரையும் அலட்சியமா பேசுவியா?"  என்று சாரதா கண்டிக்க,

முகம் கருக்க, தன் கணவன், மற்றும் தங்கை குடும்பத்தவர் முன்னால் கண்டித்த தாயை முறைத்தவள் ஏதோ திரும்பி சொல்ல ஆரம்பிக்க, அதற்குள் வாசலில் கார் நிறுத்தும் சத்தம் கேட்டது.

ராமமூர்த்தி  எதுவும் புரியாமல்,  "சாரதா, ரஞ்சீ எதுவா இருந்தாலும் அப்பறம் பேசுங்கோ.. வசந்த், வாடா.. மாப்பிள்ளை ஆத்துக்காரா வந்துட்டா போல, போய் எதிர் கொண்டு அழைக்கலாம், என வெளியே செல்ல,

சிவகுமார் என்னவோ அவன் தான் அந்த வீட்டுக்கு மூத்த மாப்பிள்ளை என்ற கெத்தில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு சட்டமாக இன்னும் நன்றாக உட்கார, பெண்கள் அனைவரும் ஒரு பக்கமாக நின்று கொண்டனர்..  குழந்தைகள் ஏற்கனவே மஹதியின் ரூமில் தான் இருந்தனர்.

கார்த்திகேயன், தன் மாமனாரின் பின்னால் விரைய, சாரதாவுமே பரபரப்புடன் வெளியே சென்று பெண் பார்க்க வருபவர்களை சம்பிரதாயமாக வரவேற்க சென்றார்.

மேலே மொட்டை மாடியில் இருந்து யாருக்கும் தெரியாமல் அஜய் கீழே வாயிலை நோக்கிக் கொண்டிருந்தான்..

காரில் இருந்து முதலில் ஒரு பெரியவர் இறங்க, அவரை தொடர்ந்து குண்டான அகல கரை சரிகையிட்ட மஞ்சளும், அரக்கும் கலந்த பட்டு புடவையில் ஒரு பெண்மணி இறங்கினார்.. காரை  வீட்டின் ஓரமாக பார்க் செய்துவிட்டு, டிரைவர் சீட்டில் இருந்து கார் சாவியை கையில் சுழற்றியபடி முப்பது வயது மதிக்க தக்க, வாட்ட சாட்டமாய் அழகாய், கம்பீரமாய் உயரமான வாலிபன் ஒருவன் இறங்கினான்.. கண்களில் கூலர்ஸ் மறைத்திருக்க, காரை லாக் செய்து விட்டு வீட்டுக்குள் பெரியவர்கள் முன்னே செல்ல அவர்களை பின் தொடர்ந்தான்.

மாடியிலிருந்து பார்த்து கொண்டிருந்த அஜய்யால் இவன் மஹதிக்கு பொருத்தமானவனே என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.. ஒரு வித பொறாமை உணர்ச்சி கூட தோன்றியது.. சற்று ஏமாற்றமாகவும் இருந்தது.. தனது மனனிலையை கண்டு பயந்தவன், பேசாமல் பைரவியை போய் பார்க்கலாம் என்று அவளது அறைக்கு சென்றான்.. அங்கே பைரவியுமே மாப்பிள்ளை பையனை சன்னலில் இருந்து பார்த்து கொண்டிருந்தாள்.

தொடரும்

Episode 11

Episode 13

{kunena_discuss:909}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.