(Reading time: 22 - 44 minutes)

15. கிருஷ்ண சகி - மீரா ராம்

ரையில் விழுந்தவளை இரு கரம் பதறிக்கொண்டு தூக்கியது…

“மெதுவாம்மா… மெதுவா…” என அவளிடத்தில் சொல்லிவிட்டு,

“என்ன நடக்குது இங்க….” என்று உறுமினார் குருமூர்த்தி…

krishna saki

“சார்… அது வந்து….” என மகத் சொல்லும் முன் கை அமர்த்தி தடுத்தவர்,

“என் பொண்ணுக்கு புருஷன் நீங்க தான மகத்… உங்க கண் முன்னாடியே என் பொண்ணை கை நீட்டி அடிக்கிறாங்க… நீங்க பார்த்துட்டு பேசாம இருக்குறீங்க?... இதுதான் நீங்க அவளை காப்பாத்துற லட்சனமா?...”

“சார்…” என மகத் சொல்வதற்குள்,

“உன் பொண்ணு ஒழுங்கா நடந்துகிட்டா ஏன் யாரும் கை நீட்டப்போறாங்க?...” என்றார் காவேரி…

“என் பொண்ணு என்ன செஞ்சா அப்படி?...” – குருமூர்த்தி…

“அதை நீ பெத்து வச்சிருக்குறியே ஒருத்தி… அவகிட்டயே கேளு…” என்றார் காவேரி கோபத்துடன்…

“என்னாச்சு கன்யா?... சொல்லு…”

“….”

“கன்யா…. உங்கிட்ட தான் கேட்குறேன்… சொல்லுடா…”

“இந்த பாச நாடகம் எல்லாம் எங்கிட்ட காட்ட வேண்டாம்னு அன்னைக்கே நான் சொல்லிட்டேன்… சும்மா வந்து இப்படி அக்கறை இருக்குறவர் போல நடிச்சா நான் நம்பிடுவேன்னு நினைக்குறீங்களா?... சத்தியமா நம்பமாட்டேன்…” – கன்யா…

You might also like - Kalyanam muthal kathal varai... A romantic comedy...

“கன்யா… அப்பா நடிக்கலை… அப்பா நிஜமாவே…”

“நிஜமாவே… ஹ்ம்ம்… என்ன சொல்ல வர்றீங்க?... என் மேல பாசம் அக்கறை கவலை எல்லாம் இருக்குன்னா?... ஹாஹா… அது எல்லாம் உங்களுக்கு இருந்துச்சு என் மேல… என் மேல மட்டும்… ரொம்ப நாள் முன்னாடி வரைக்கும்… பட் என்னைக்கு இந்த அசிஸ்டெண்ட் நம்ம லைஃஃப்-ல் வந்தானோ அன்னைக்கே எல்லாமே போச்சு…”

“அதானே… உனக்குத்தான் நல்ல எண்ணம் எல்லாம் வரவே வராதே… வந்தா தான் இப்படி அடுத்தவங்களை கை காட்டி பேச மாட்டீயே…” – என்றார் காவேரி நேரடியாக அவளைப் பார்த்து…

“இங்க பாரு கிழவி… போனா போகுதுன்னு பார்க்குறேன்… இல்லன்னு வை… உன் கை கால் எல்லாம் உடைச்சி படுக்கையில போட்டுடுவேன்… யார்கிட்ட உன் கோபத்தை காட்டுற?... ஜாக்கிரதை… சொல்லிட்டேன்…” என்றாள் கன்யா விரல் நீட்டி அவரை மிரட்டி…

“கன்யா… உன்னை அப்பவே மரியாதையா பேசுன்னு சொன்னேன்… நீ படிச்சவ தான?... கொஞ்சமாவது அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோ….” – மகத்…

“உனக்கு வேற நான் தனியா சொல்லணுமா அசிஸ்டெண்ட்… இந்த அட்வைஸ் பண்ணுற வேலை எல்லாம் உன் வீட்டு வேலைக்காரிகிட்ட வச்சிக்கோ… எங்கிட்ட வச்சிகிட்ட மரியாதை கெட்டுடும் சொல்லிட்டேன்…”

“கன்யா… இப்படி பேசாதன்னு உனக்கு சொல்லியிருக்கேன் தான….” என்றார் குருமூர்த்தி சற்றே அதட்டலுடன்…

“யாருக்குடி மரியாதை கெட்டுடும்… இன்னும் நீ இங்க நின்னன்னு வை… கண்டிப்பா உன்னை கொன்னுடுவேன்… அதுக்குள்ள நீயா வெளியே போயிடு…” – என காவேரி மிரட்ட,

“இந்த அதட்டல், உருட்டல், மிரட்டல் எல்லாம் எங்கிட்ட வேண்டாம் சரியா… நான் கன்யா… என் இஷ்டப்படி தான் இருப்பேன்… என் இஷ்டப்படி தான் பேசுவேன்…”

“உன் இஷ்டப்படி செஞ்சுதான உன்னை பெத்தவனையும் அன்னைக்கு தலை குனிய வச்ச… குடும்ப மானத்தையும் வாங்கின…. இன்னும் நீ உன் இஷ்டத்துக்கு செஞ்சு அழிஞ்சி போயிடாதடி…” – காவேரி…

“மதர்… என்ன இது… அவ தான் அப்படி பேசுறான்னா… நீங்களும் ஏன் இப்படி பேசுறீங்க… விடுங்க… ப்ளீஸ்…” – மகத்…

“ஹலோ அசிஸ்டெண்ட்… போதும்… ஆளாளுக்கு ஓவர் ஆக்டிங்க் பண்ணாதீங்க… சரியா?... என்னால இந்த கொடுமை எல்லாம் பார்க்க முடியாது…”

“கன்யா… இங்க யாரும் நடிக்கலை… நடிக்க வேண்டிய அவசியமும் யாருக்கும் இல்லை… அதை நீ புரிஞ்சிக்கோ முதலில்…” – குருமூர்த்தி…

“இதோடா இதை நம்ப நான் ஒன்னும் முட்டாள் இல்ல சரியா?... போங்க பேசாம…” – கன்யா…

“நீ தான் யாரையும் நம்ப மாட்டியே… நம்பாம தான இப்போ இந்த நிலையில இருக்குற….” – காவேரி…

“இதோ பாரு கிழவி… நீ ரொம்ப ஓவரா பேசுற… என் நிலைமைக்கு என்ன?... நான் கோடீஸ்வரி… நீதான் இதோ இந்த ஆசிரமத்துல ஒண்டிட்டிருக்கிற… புரியுதா?.. இனியாச்சும் யார்கிட்ட என்ன பேசுறோம்னு புரிஞ்சு பேசு…”

“கன்யா… உனக்கு பலதடவை சொல்லிட்டேன்… இப்படி எடுத்தெறிஞ்சு பேசாதன்னு… நீ திரும்ப திரும்ப அதே தவறை செய்துட்டிருக்கிற… கொஞ்சம் நிதானத்துக்கு வா…” – மகத்…

“உனக்கு ஒருதடவை சொன்னா புரியாதா அசிஸ்டெண்ட்… யார்கிட்ட எப்படி பேசணும்னு நீ எனக்கு கிளாஸ் எடுக்க வேண்டாம் புரியுதா?... முடிஞ்சா இதோ இங்க நிக்கிறாளே கிழவி அவ கிட்ட எடுத்து சொல்லு, எங்கிட்ட பேசும்போது ஒழுங்கா பேசினாதான் மரியாதை கிடைக்கும்னு…. இல்லன்னா இப்படித்தான் நான் பேசுவேன்னும் புரியவை…”

“ஒழுங்கைப் பத்தி நீ பேசுறீயா?... சீ… உனக்கு இப்படி பேச வெட்கமா இல்லை…” – காவேரி…

“நான் எதுக்கு வெட்கப்படணும்… எங்கிட்ட இப்படி பேச்சு கேட்குறதுக்கு நியாயமா நீதான் வெட்கப்படணும்…. அசிங்கப்படணும்…” – கன்யா…

“நியாயம் தர்மம் பத்தி உன் வாயால பேசாத… அதுக்கு உனக்கு எந்த தகுதியும் இல்லை…”

“தகுதியை பத்தி நீ பேசாத கிழவி… உன்னால ஏணி வச்சு ஏறினாலும் என் தகுதியை எட்டிப்பிடிக்க முடியாது… புரியுதா?...”

“ஆமாடி… ஆமா… உன்னை மாதிரி கீழ்த்தரமா நடந்துக்க என்னால ஏணி வச்சி ஏறினாலும் முடியாது தான்…”

“நீ என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற… இதுக்கு மேல நீ பேசின அவ்வளவுதான்…” என்றாள் கன்யா திமிருடன்…

“சார்… நீங்க கன்யாவை கூட்டிட்டு போங்க… மதரை நான் பார்த்துக்கறேன்… ப்ளீஸ்… கூட்டிட்டு போங்க… நான் அப்புறம் வந்து உங்களைப் பார்க்குறேன்…” என மகத் குருமூர்த்தியிடம் சொல்ல,

“நீதான்டி எல்லாம் செஞ்சு குடும்பத்தை தலைகீழாக்கின… இப்போ என்னை குறை சொல்லுறீயா நீ… உன் அப்பாவோட திரும்பி போயிடு… அதுதான் உனக்கும் நல்லது… உன்னைப் பெத்தவனுக்கும் நல்லது…” - காவேரி

“போக முடியாதுன்னு சொன்னா உன்னால என்ன பண்ண முடியும்?... இது எனக்கு வர வேண்டிய சொத்து… அதை நீ ஆக்கிரமிச்சு இதோ இப்படி நாலு அநாதைங்களை வளர்த்து உன் இஷ்டத்துக்கு ஆடினா கேட்குறதுக்கு ஆள் இல்லன்னு நினைச்சியா?...”

“இஷ்டத்துக்கு நீ தான் ஆடி ஆடியே எல்லாரோட நிம்மதியையும் சின்னாபின்னமாக்கிட்டீயே… இன்னும் என்னடி உன் இஷ்டத்துக்கு ஆடப்போற?...” என்றார் காவேரி கண்களில் பெரும் வலியுடன்…

அதைக் கண்டவளுக்கு கோபம் இன்னும் பெரிசாக, “ஆமா அன்னைக்கும் அப்படித்த்தான், இன்னைக்கும் அப்படித்தான்… என்னைக்கும் என் விருப்பப்படிதான் இருப்பேன்… அதைத்தடுக்கத்தான இதோ இந்த அசிஸ்டெண்டை என் தலையில எல்லாரும் சேர்ந்து கட்டிவைச்சீங்க… என் வாழ்க்கையையும் பாழாக்கினீங்க…”

“நீதாண்டி என் ராஜாவோட வாழ்க்கையை பாழாக்குற… இதுல உன் தலையில என் ராஜாவை கட்டி வைச்சு நானும் அவனோட வாழ்க்கையை பாழாக்கிட்டேனே… அய்யோ…” என காவேரி கதற…

“அழு… நல்லா அழு… என்னை நிம்மதியில்லாம செய்யத்தான எல்லாரும் இந்த தாலியை இவனை கட்ட வச்சீங்க என் கழுத்துல… அனுபவீங்க நல்லா எல்லாரும்…” என்று சத்தமாக சிரித்தாள் கன்யா…

அவளின் சிரிப்பு காவேரியை இன்னலுக்கு உள்ளாக்க, அவர் தனது வார்த்தைகளை சிதறவிட்டார்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.