(Reading time: 15 - 29 minutes)

 

வாசலில் அவனுக்காக காத்திருந்தாள்  சைந்தவி ..

" சந்தோஷ் "

"அண்ணி ... ஏன் இப்படி வாசலில் உட்கார்ந்து இருக்கீங்க ? சுபாஷ் எங்க ?" என்று அவன் பதரும்போதே கையில் பாலுடன் வந்தான் சுபாஷ் .. தம்பியின் முகத்தை தூரத்தில் இருந்தே பார்த்தவன் தன்னை இயல்பாக்கி கொண்டான் ..

" வா டா சோம்பேறி ... குளிக்காம ஷேவ் பண்ணாம என்னடா கோலம் இது ? அப்படியே நில்லு ஒரு போட்டோ எடுத்துக்குறேன் .. சாஹித்யா  முழிச்சதும் இதையெல்லாம் காட்டுறேன் பாரு " என்று சுபாஷ் சொல்லவும் அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீரெல்லாம் மடை திறந்த வெள்ளமாய் பெருக்கெடுக்க , அண்ணனை கட்டிகொண்து அழுதான் சந்தோஷ் ...

" டேய் "

" .."

" டேய் சந்தோஷ் "

"...."

" அழாத சந்தோஷ் "

" பயம்மா இருக்கு அண்ணா .. "

"எதுக்கு பயப்படுற? நம்ம சத்யாவுக்கு ஒண்ணும் ஆகாது .. நம்ம வீட்டு வாரிசு பிறக்கறது முன்னாடி சத்யா குணம் ஆகிருவா நீ வேணும்னா பாரேன் " என்று  சிரித்தான் சுபாஷ் ..கணவனின் கண் அசைவில் சுதாரித்த  சைந்தவியும்

"  ஆமா சந்தோஷ் ..வேணும்னா பாரேன் , நீ உன் மருமகனை/மருமகளை   கவனிக்கிறதா ? இல்ல சத்யாவை கவனிக்கிறதான்னு  முழிக்க போற " என்றாள் .. அவளை பார்த்து மெலிதாய் புன்னகைத்தான் சந்தோஷ் .. சுபாஷின் வார்த்தைக்கு கட்டுபட்டு  கொஞ்சமாய் உணவு உண்டுவிட்டு , குளித்துவிட்டு மீண்டும் மருத்துவமனைக்கு கிளம்பினான் ..

You might also like - Vasantha bairavi... A neat family story...

ருள் அணிவித்த சங்கிலியை தொட்டு பார்த்தாள்  வானதி .. மனதிற்குள் அவர்கள் சந்தித்த நாட்கள் எல்லாம் கண்முன்னே நின்றது .. சாஹித்யா இல்லாமல் முதல் முறையாய் கல்லூரி சுற்றுலாவிற்கு சென்றிருந்தான் அருள் .. அங்குதான் வானதி தனது கல்லூரி நண்பர்களுடன் வந்திருந்தாள் .. அருளின் சில நண்பர்கள் ஏதோ பெண்களை பற்றி கேலியாய் பேசிவிட வானதியின் கோபபார்வையில்  அருளும் விழுந்திருந்தான் .. முதலில் அவன் எதையும் உணரவில்லை ..

இரு கல்லூரி மாணவர்களுமே ஒன்றாய்  சேர்ந்து சில இடங்களை சுற்றி பார்க்கும்போது தான் வானதியின் கோபத்தை உணர்ந்தான் அருள் .. யாரோ ஒரு பெண்தானே , என்று அவன் விலகி இருந்தாலும் அவ்வப்போது அவள் வீசிய கோபப்பார்வை அவனை  கொஞ்சமாய் சீண்டித்தான் பார்த்தது .. அன்று இரவு மாணவர்கள் எல்லாம் அவரவருக்கு பிடித்த பாடலுக்கு ஆடி பாட, அருளின் முறை வந்தப்போது கண்களை மூடி கொண்டு உணர்ந்து பாடினான் அவன் ..

" உனக்கென இருப்பேன்

உயிரையும் கொடுப்பேன்

உன்னை நான் பிரிந்தால்

உனக்குமுன் இழப்பேன்

கண்மணியே கண்மணியே " குரலில் சோகம் இழையோட , அவன் பாடினாலும் அவன் குரலில் வசீகரிக்கபட்ட அனைவருமே கைதட்டி மகிழ்ந்தனர் .. வானதியும் கூட அவர்களில் ஒருத்தியாய்  நின்று கைதட்டினாள் ..

" ஹே இந்த பாட்டு யாருக்கு மச்சான் ?" என்று ஒரு புது நண்பன் உரிமையாய்  கேட்க , அனைவருமே அதையே பிடித்து கொண்டனர் ..

" ஹே சொல்லு சொல்லு " என்று அனைவரும் ஆரவாரமாய் கேட்க

" ஏன் காதல் பாட்டுன்னா அது காதலிக்கு தானா ? சிநேகிதிக்காக இருக்க கூடாதா ?" என்றான் .. அவனுடன் வந்த நண்பர்களோ

" ஆரம்பிச்சுட்டான்டா சத்யா புராணத்தை " என்றனர் சலிப்பாய்.. மற்ற நண்பர்கள் அவனை ஊக்குவிக்க கொஞ்சமாய் சத்யாவை  பற்றி சொன்னான்  அருள் .. மேலும்

" ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகிட்டா ,

அவளுடைய காதலன் கணவனாய்  மாறிடுவான்

அவளுடைய அப்பா , மாமனாராய் மாறிடுவார்

அண்ணன் , மைத்துனாய் மாறிடுவான்

ஆனா நண்பன் மட்டும் யாரோவா ஆகிடுறான் !

நம்ம எல்லாருக்குமே நட்புன்னா ரொம்ப பிடிக்கும் .. நமக்குமே பெண் தோழி , ஆண் தோழன் இருக்காங்க .. ஆனா , நம்ம மனைவிக்கு ஒரு நல்ல நண்பனோ ,அல்லது கணவனுக்கு உயிர் தோழியோ இருக்காங்கனு சொன்னா நாம ஏற்றுகொள்ளுறோமா ? காதல் வலியை  வாய்விட்டு சொல்லலாம் ..தாடி வளர்க்கலாம் .. இன்னொரு காதலியை கூட தேடிக்கலாம் .. ஆனா நட்புக்கு இதெயெல்லாம் பண்ணினா , அந்த நட்பையே தப்பா பேசுவோம் .. ஆனா சத்தியமா இன்னொரு தோழியை நம்மால தேடிக்கவே முடியாது " ஏன் என்று புரியாமலே மனதில் தோன்றியதை சொல்லி முடித்தான் அருள் ..அனைவருமே ஒரு நிமிடம் அமைதியாய் இருந்துவிட்டு பிறகு அவனை பாராட்டினர் .. வானதியோ கொஞ்சமும் தயங்காமல் அவனிடம் மன்னிப்பு கேட்டாள்  ..

" என்னை மன்னிச்சிருங்க மிஸ்டர் அருள் "

" எனக்கும் பொண்ணுங்க மேல மரியாதை இருக்கு ! "

" அப்படியா ?"

" என்ன அப்படியான்னு கேட்குற ?"

" இல்ல , உங்க வார்த்தைய நான் நம்பமாட்டேன்னு சொன்னா , லைப் லாங் அதை ப்ரூவ் பண்ணுவிங்களா பார்க்குறேன் " என்றுவிட்டு அங்கிருந்த சென்றாள்  வானதி .. அவளது வார்த்தையின் அர்த்தத்தை புரிந்து கொள்ளவே அவனுக்கு இரண்டு வாரங்கள் தேவைபட்டது ..

"சரியான டியூப் லைட் " என்று வாய்விட்டே சொன்னாள்  வானதி .. தான் மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்தவளாய் அருளின்  அறையை எட்டி பார்த்தாள் ..

" டேய் மக்கு ,.. என்ன இப்படியே   கண்ணை மூடி எஸ்கேப், ஆகலாம் பாக்குறியா ? கொன்னுடுவேன் அருள் உன்னையா .. ஒழுங்கா கண்ணு முழிச்சிருடா .. ப்ளீஸ் ... நீ இல்லாம நான் எப்படி இருப்பேன்னு நினைச்சு பார்த்தியா ? " என்று அவனுடன் மனதிற்குள் மானசீகமாய் பேசினான் ..அதே நேரம் சந்தோஷும் சாஹித்யாவிடம் மன்றாடி கொண்டிருந்தான் ..

" சஹி ..... ஹே பொண்டாட்டி .. சீக்கிரம் என்கிட்டே வந்துரு கண்ணம்மா .. நீ இல்லாம என்னால இருக்கவே முடியல " என்று கண்ணீர் விட்டான் ..

அட போதும்பா ரெண்டு பேரும்  கண்ணாமூச்சி ஆடினது ..சீக்கிரம் வந்து ஒரு என்ட்ரி கொடுங்க ..

அடுத்த பதிவுடன் முற்றும்!

Episode # 23

Episode # 25

{kunena_discuss:838}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.