(Reading time: 17 - 34 minutes)

" ஹ்ம்ம் அம்மா மாதிரியே பிடிவாதம் " என்று சொல்லி கண்ணடித்தான் ..

" போதும் போதும் .. அடுத்த ஆளு எங்க ?" என்று சிவா குரல் கொடுக்க , பட்டு பாவாடை சட்டையுடன் ஓடி வந்தாள் சுபாங்கவி ... சைந்தவி - சுபாஷின் மகள் ..

" நான்தானே பெரியவன் என்னைத்தான் முதலில் அனுப்பி இருக்கணும் " என்று குரல் கொடுத்தவன் நம்ம ஹரிணி , சித்தார்த்தின் மகன் விஜய் தான் .. மற்றவர்களை விட அவன் உயரமாய் இருப்பதால் அவன்தான் பெரியவனாம் .. அவனை தொடர்ந்து ராதை வேடத்தில் வந்தாள் அகிலா , சிவா-மயூரியின் மகள் ..

"எல்லாரும் வந்தாச்சு முக்கியாமான ஆளு எங்கப்பா " என்ற அருள் வானதியை தான் தேடினான் .. அவனை கண்களுக்கு விருந்தாய் முன்னே வந்து நின்றவள் , அந்த விபத்துக்கு முன் அருள் ஆசையாய் வாங்கி வைத்த புடவையை கட்டி இருந்தாள் .. அடி கள்ளி இதைதான் சர்ப்ரைஸ்ஸா என்று விழி மின்ன சிரித்தான் அருள் ..

" ஏய் குரங்குங்களா , நீங்க பெற்ற குரங்கு எங்க ?" என்று ஹரிணி கேட்கவும், அருள் வானதியையும் சந்தோஷ் சாஹித்யாவையும் பார்த்தனர் ..

" பசங்க எங்க மதுரா ?" - சைந்தவி

" இங்க தானே இருந்தாங்க அக்கா " என்று அனைவரும் தேட அந்த பெரிய கிருஷ்ணன் விக்ரகம் பின்னால் இருவரும் களுக்கென சிரிக்கும் சத்தம் கேட்டது ..

" நம்ம அம்மா அப்பா செம்ம மக்கு யது "

" ஆமா நது ... "என்று இருவரும் பேசிக்கொள்ள இருவரையும் தூக்கி கொண்டு அனைவரின் முன்னிலையிலும் நிற்க வைத்தான் அருள் ..

" அப்பா விடுங்கப்பா நதுவை " என்றான் சாஹித்யா , ஹரிஹரசந்தோஷின் மகன் ஹரித்யன் ..

" அம்மா அப்பா நீங்களும் என் யதுவை பார்த்து முறைக்காதிங்க " என்றாள் வானதி , அருள்மொழிவர்மனின் மகள் நதிமொழி ...

அருள் , சத்யாவின் நட்பை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்காகவே பிறந்தது போல இரட்டைவாலாக இருந்தனர் இருவரும் ..

" நதி .. என்னடி வாயெல்லாம் வெள்ளையா இருக்கு ? வெண்ணையை சாப்பிட்டியா ?"

" ஐயோ இல்லம்மா ..இந்த யது தான் ஊட்டி விட்டான் " என்று நண்பனை மாட்டி விட்டாள் இளையவள் ..

" நானா ? இல்ல அம்மா .. இவதான் பசிக்கிதுன்னு அழுதா " என்று பதிலுக்கு கை காட்டினான் ஹரித்யன் ..

" சரி அப்போ ரெண்டு பேருமே தோப்பு கரணம் போடுங்க " என்று பெரியவர்கள் தீர்ப்பு சொல்லவும்

" வேணாம் .. வேணாம் நான்தான் பசங்களுக்கு ஊட்டிவிட்டேன் " என்று வாக்குமூலம் தந்தான் சந்தோஷ் ..

" அப்போ உன்னைத்தான் அடிக்கணும் " என வானதி எடுத்து கொடுக்க மொத்த குடும்பமும் சந்தோஷை ஒரு கை பார்க்க கொஞ்ச நேரம் அதை கண்கூடாய் வேடிக்கை பார்த்துவிட்டு

" ஹே என் புருஷன் பாவம் பா " என்று சமாதனப்படுத்தினாள் சாஹித்யா ..

" இவ்வளவு அடி வாங்கின பிறகுதான் நான் உன் புருஷன்னு ஞாபகம் வருதா ? " என்று சந்தோஷ் பாவமாய் கேட்க அங்கு சிரிப்பலைக்கு பஞ்சமில்லாமல் போனது ..

வீடெங்கும் நிறைந்துள்ள சந்தோஷத்தை மௌனமாய் உணர்ந்து இறைவனுக்கு நன்றி கூறினார் பெரியவர்கள் .. தங்களது நட்பும் , காதலும் இன்றுபோல் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று வேண்டினர் இளையோர்கள் .. நமது சின்னஞ்சிறு பட்டாம்பூச்சிகளோ "சீக்கிரம் இனிப்பு கொடுக்க சொல்லு கிருஷ்ணா " என்று வேண்டி கொண்டனர் .. அதன்பின் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து " அலைபாயுதே கண்ணா" என்று கிருஸ்ணனின் கீதங்களை பாடத் தொடங்கி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடலாய் பாடி கொண்டிருந்தனர் .. மிகவும் ஆனந்தத்தில் திக்குமுக்காடி இருந்தாள் சாஹித்யா ..

இல்லாத உறவுகளே இல்லை என்று கூறும் அளவிற்கு அனைத்தும் பெற்றவளாய் பூரித்து போனாள் ...தனது இத்தனை சந்தோஷத்திற்கும் காரணம்

அன்பு புகட்டிய பெற்றோரா ?

பாசம் தந்த புகுந்த வீட்டினரா ?

வாழ்வை பகிர்ந்துக்கொள்ள வந்த கணவனா ?

யாதுமாகி நின்ற நண்பனா ?

அல்லது தானாகவே அன்பு தந்த சுற்றத்தாரா ?

இல்லை பெற்ற மகனா ? பெறாத செல்வங்களா ?

இல்லை அனைவரை காட்டிலும் சிறந்தது அன்பு தான் .. அன்புக்கு ஓர் உருவமில்லை ..ஆனால் ஒவ்வொரு உருவத்திலும் அன்பு உண்டு .. இத்தனை உறவுகளும் வாரித் தந்த அன்பினில் திளைத்தவள் அந்த இறைவனை பார்த்து நன்றியுடன் பாட தொடங்கினாள் ..அந்த கிருஷ்ணனையே அன்பின் உருவாய் பார்த்தாள் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.