(Reading time: 15 - 29 minutes)

" ப்ப் .. நான் இப்போ சண்டை போடுற மூட்ல இல்ல தர்ஷினி "

" நானும் சண்டை போடா சொல்லலியே ..சரி என்ன விஷயம் சொல்லுங்க ?"

" வீட்டுக்கு தானே போற ? நானும் உன்கூட வரேன் " என்றான் கதிர் .. அவனை விநோதமாய் பார்த்து வைத்தாள்  காவியா ..

" ஆர் யூ ஒகே  கதிர் ? இப்போ நாம சேர்ந்து பைக்ல போனா யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்களா ?"

" ப்ச்ச்ச் .. ஏன் இப்படி படுத்துற தர்ஷினி "

" சரி சரி .. உங்க பைக் எங்க அது என்ன என்னாச்சு ?" என அடுத்த கேள்விக்கு தாவினாள் .

" அது .... அது ரிஷி கொண்டு போயிட்டான் "

" அப்படியா ? அப்போ ரிஷி அண்ணாவுடைய பைக் ?" என்று அவள் கேட்க

" அம்மா தாயே, நான் நடந்தே வரேன் .,..நீ போ " என்று கையெடுத்து கும்பிட்டான் .. அவன் செய்கையில் களுக்கென சிரித்தாள்  காவியா .. அவள் சிரிப்பினில் அவனுக்கும் நிம்மதி பிறந்தாலும், அதை வெளிக்காட்டி கொள்ளாமல் எரிச்சலாகவே , " இப்போ என்ன சொல்லுற ? நான் ஏறிக்கவா  வேண்டாமா ? " என்றான்.

அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு

" சரி சரி இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் " என்றாள் .

" இருந்தாலும் ரொம்பதான் ஓவர் " என்று முணுமுணுத்தபடி  ஸ்கூட்டியின் பின்னால் ஏறி  கொண்டான் கதிர் .. கண்ணாடியை சரி செய்வது போல அவன் கோபமான முகத்தை " சோ ஸ்வீட்  " என்று ரசித்து விட்டு ஸ்கூட்டியை எடுத்தாள்  காவியதர்ஷினி .. அங்கு நடந்த அந்த நாடகத்தை மிகவும் குரோதத்துடன் பார்த்தன இரு விழிகள் .. வேற யாரு நம்ம குணாதான் !

சாலை நெரிசலை சமாளித்து இருவரும் வீட்டிற்கு செல்வதற்குள் மாலையாகி இருந்தது .. எப்போதும் அமைதியாய் இருக்கும் அவள் வீட்டில் இன்று சிரிப்பு சத்தம் வாசலை நிரப்பி இருந்தது .. தேன்நிலா, மதியழகன் , ஷக்தி , மித்ரா, அன்பெழிலன் , முகில்மதி, வைஷ்ணவி, ஆதிஷ்வர்  தேவசிவன் , நாராயணன் அனைவரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர் ..

" ஷக்தி அவுட் " என்று ஆர்பரித்தான் அன்பு .. " இல்ல .. இல்ல அவுட் இல்ல " என்று ஷக்தி மறுக்கவும், மித்ராவும்

" ஆமா மாமா அவுட் இல்ல எனக்கு தெரியும் .. நான் தான் மேட்ச் ஒழுங்கா கவனிச்சேன் " என்றாள் .. மொத்தமாய் அனைவரும் " ஓஹோ " என்று கூச்சல் போட்டு அவளை வெட்கப்பட வைத்தனர் ..

" யாரு நீதானே ? இவனுக்காக அண்டபுழுகு ஆகாசபுழுகு சொல்லுவியே சங்கு " என்று நிலா வார ,

" ஆமா என்னமோ , நீ மட்டும் யோக்கியமா தேனு .. ? ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கு எல்லாம் என் அண்ணா  மேல கோபபடுறது மாதிரி நடிக்கலையா ? " என்று சிரித்தாள் ..

" நீ சொன்னியா மது ?" என்று அவள் பார்வையாலேயே மதியழகனை மிரட்ட

" ஹே குட்டிமா , நான் வாயே திறக்கல" என்று உடனே மறுத்தான் மதி ..

" வேற யாரு சொல்லி இருப்பா , நம்ம சிங்கபூர் குட்டிசாத்தானின் வேலையாய்  தான் இருக்கும் " என்றான் ஷக்தி ..

" அடடே வீட்டுக்கு விருந்தாளி வந்துருக்காங்க " என்று வாசலை பார்த்து கை தட்டி கொண்டே கூறினான் ஷாந்தனு .. அவனும் மதியழகனுடன் அங்கு வந்திருந்தான் ..

" ஆமா குட்டி .. உங்க பேரென்ன ?" என்று அவன் அருகில் மண்டியிட்டு கதிர் கொஞ்ச , அந்த காட்சியை கண்களுக்குள் நிரப்பி கொண்டாள்   காவியதர்ஷினி .. தங்களுக்கும் திருமணமாகி தங்களது மகனை அவன் இப்படித்தான் கொஞ்சுவானா ? என்று கற்பனை குதிரையின் முதுகில் சவுக்கடி கொடுத்து அதிவேகமாய் ஓடினாள் .. அப்படி  ஓடி கொண்டிருந்தவளை தொட்டு நிறுத்தினார் லக்ஷ்மி ..

" காவியா "

" எப்படி இருக்கீங்கம்மா ?"

" நல்ல இருக்கேன்டா .. நீதான் இளைச்சுட்ட  . சரியா சாப்டறது இல்லையா ?"

" அப்படி எல்லாம் ஒன்னும் இல்லம்மா , வேலை கொஞ்சம் அதிகம் .." என்றாள்  சமாதானமாய். அவள் கன்னத்தை ஆசையாய் வருடியப்படி கதிரையும் பார்த்தார் லக்ஷ்மி .. சற்றுமுன் இருவரும் ஜோடியாய் இருவரும் வருவதை பார்த்ததும் , மனதிற்குள் அவருக்கு மின்னல் வெட்டியது .. மித்ராவை போலவே , காவியா மீது அவருக்கு அன்பும் இணக்கமும்  அதிகமாகவே இருந்தது .." எல்லாம் நல்லபடியா நடந்தா சரிதான்" என்று மனதிற்குள் நினைத்தார் அவர் ..

" என்ன மித்ராம்மா  உங்க அம்மா காபி கொண்டு வரேன்னு மயக்கம் போட்டுட்டாளா ?" என்றார் காபி பிரியர்  தேவசிவம் ..

" அதானே .. சித்து ... சித்ரா ..எங்க இருக்க ?" என்று மித்ரா குரல் கொடுக்க தோசை கரண்டியுடன் வந்தார் சித்ரா ..

" ஏன்டீ , கல்யாணம் ஆகியும் திருந்த மாட்டியா நீ "

" உனக்கு கூடத்தான் கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆச்சு அம்மா , நீ என்னை அடிக்கிறதை நிறுத்துனியா  ? அதே ரத்தம் அப்படியேதான் இருக்கும் " என்றவள் சித்ரா அருகில் வரவும் ஷக்தியின்  பின்னால் ஒளிந்து கொண்டாள் ..

"உனக்கு ஷக்தி பக்கத்துல நிக்கணும் .,.அதுக்கு அம்மா ஒரு சாக்கா மித்ரா ?" என்று எடுத்து கொடுத்தான் அன்பு ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.