(Reading time: 9 - 18 minutes)

வள் என்னக் கூறுவாள் என்று அனுவின் முகத்தையே கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தான் விஷ்ணு.

“நீங்க என்னை எந்தத் தொல்லையும் செய்யமாட்டீங்க இல்ல” விஷ்ணுவிடம் கேட்டாள் அனு.

“கண்டிப்பா பண்ணமாட்டேன் அனு, நீங்க என்னை நம்பலாம்” விஷ்ணு உறுதி அளித்தான்.

“சரி” என்று கூறிவிட்டு வேறு எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றாள்.

விஷ்ணுவிற்கு அந்த வார்த்தைப் பாலைவன வெயிலில் சிக்கி தவித்தவனுக்குக் கிடைத்த சிறு நீருற்று போல அப்படி ஒரு ஆனந்தத்தைத் தந்தது. காலையில் இருந்து அவன் பட்ட துன்பம் எல்லாம் நொடிப் பொழுதில் மறந்து மகிழ்ச்சியானான்.

அதே மகிழ்ச்சியோடு விஷ்ணு வீடு திரும்பினான், அனுவோ மேலும் குழப்பத்தோடு வீடு திரும்பினாள்.

ன்று மாலை முழுவதும், எந்த வேளைச் செய்தாலும் அவள் காதில் விஷ்ணு கூறிய அந்த வார்த்தைகள்தான் மீண்டும் மீண்டும் ஒளித்துக் கொண்டிருந்தது.

இரவு உணவு உண்டுவிட்டுச் சென்று தன் படுக்கையில் சாய்ந்தாள் அனு. அவள் மனம், 6 மாதம் பின் நோக்கிச் சென்றது, முதல் முதலில் அவள் விஷ்ணுவைப் பார்த்த அந்த நொடிக்குச் சென்று நின்றது. அதே பஸ் ஸ்டாப்பில் தான் பார்த்தாள். திவ்யாவிடம் நின்று பேசிக் கொண்டிருந்தவளுக்கு தன்னை யாரோ “அனு செல்லம்” என்று அழைப்பதைப் போன்று ஒரு உணர்வு தோன்ற, கூறல் வந்த திசையை நோக்கித் திரும்பினாள். அருகில் யாரும் இல்லை ஆனால் தூரத்தில் ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவனா அழைத்திருப்பான்? என்று உற்று நோக்கினால் அனு. அதுதான் விஷ்ணுவை அவள் முதல் முதலில் பார்த்தது. அன்று அவன் யார் என்று தெரியாததால், அவன் அழைத்திருக்க மாட்டான் என்று எதுவும் அவள் கண்டு கொள்ளவில்லை.சிறிது நாள் சொல்ல சொல்லத்தான் அவள் கவனித்தாள் விஷ்ணு பின் தொடருவதை.

பலமான யோசனையில் இருந்த அனுவின் கவனத்தை களைத்தது அவளின் கை பேசியின் ஓசை. கை பேசியை எடுத்து யார் என்று பார்த்தாள் அது திபக் என்று காட்டியது.

மகிழ்ச்சியோடும், வெட்கத்தோடும் எடுத்துப் பேசவேண்டியவள், அந்த அழைப்பை எடுக்கலாமா? வேண்டாமா? என்று தயங்கினாள் நின்றாள். “இப்படி என்னைக் குழப்பி விட்டுடியேடா பாவி” என்று தன் மனதுக்குள் விஷ்ணுவைத் திட்டினாள். அவள் யோசித்து முடிப்பதற்குள் கை பேசியின் சத்தம் நின்றது.

என்ன செய்வது என்று புரியாமல் யோசித்தபோது திவ்யாவின் உருவம் அவள் கற்பனையில் தோன்றியது “ஏண்டீ முண்டம், எவனோ ஊரு பேரு தெரியாதவனைப் பற்றி நாள் முழுக்க நினைத்துக் கொண்டு இருப்ப?, ஆனால் கட்டிக்க போரவன் போன் பண்ணா எடுக்க மாட்டியா?. வேண்டாம் அனு இது தப்பு” என்று கூறிவிட்டு மறைந்தாள்.

“ச்ச, இந்த திவி நேருல தான் அட்வைஸ் பண்றானு பார்த்த இப்படி கற்பனையில் வந்தும் அட்வைஸ் பண்றாலே” என்று தன் தோழியின் ஞாபகம் வர அவள் உதட்டில் ஒரு மெல்லிய சிரிப்பு. திபக் எதாவது தப்பா நினைத்துக் கொள்ள போகிறார் என்று திபக்கிற்கு அனு மீண்டும் கால் செய்தாள்.

அதற்காகவே காத்திருந்தார்ப் போல் முதல் ரிங்கிலே எடுத்தான் திபக்.

“ஹலோ அனு, என்ன தூங்கிடீங்கலா? டிஸ்டரப் பண்ணிடேனா? ஸாரி” என்று மூச்சு விடாமல் பேசினான்.

“அப்படி எல்லாம் இல்லை திபக், நான் ரெஸ்ட் ரூம் போயிருந்தேன், அந்த டைமில்தான் நீங்க அடிச்சீங்க அதான் எடுக்க முடியல, ஸாரி” என்று பொய் கூறிச் சமாளித்தாள்.

“ஓ, நீங்க தூங்கிட்டிங்களோனு நினைச்சேன். அதான் மறுபடியும் அடிக்கலாமா? வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன் அதற்குள் நீங்களே கால் பண்ணிட்டீங்க” மீண்டும் சர வெடியாய் பொரிந்து தள்ளினான்.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை, சொல்லுங்க” என்று நிறுத்தினாள் அனு.

“ஒன்னும் இல்லை அனு, சும்மா தான் கால் பண்ணேன்” என்று திபக் பதில் அளித்தான்.

இப்படியே இருவரின் பேச்சும் சிறிது நேரம் தொடர்ந்தது. அவனிடம் சிறிது நேரம் பேசியதில், அனுவின் மனதில் வீசிக் கொண்டிருந்த புயல் சிறிது ஓய்ந்தது. முதல் நாள் உறங்காத கலைப்பும் சேர்ந்து கொள்ள உடனே உறங்கிப் போனாள் அனு.

றுநாள் வேளைக்குக் கிளம்பி பஸ் ஸ்டாப்பிற்கு வந்த அனு தன்னை அறியாமல் விஷ்ணுவைத் தேட துவங்கினாள். அவன் கண்ணில் படாததால் “ஒரு வேலை நேற்று அவன் பேசியது எல்லாம் பொய்தான் போல, சரியான ஃப்ராட் தான் போல அவன்” என்று விஷ்ணுவைத் திட்டிக் கொண்டே திரும்பியவளின் கண்களில் பட்டான் விஷ்ணு. அவன் தூரத்தில், தன் பைக்கின் மீது அமர்ந்து கொண்டிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.