(Reading time: 25 - 50 minutes)

ப்போதைக்கு இந்த மேரேஜ் வேண்டாம்னு நினைக்கிறேன் மித்ரன்….” கண்களில் காதலை தேக்கித்தான் சொன்னாள்…. அவன் ஹர்ட் ஆகாமல் அவள் சொல்வதை புரிந்து கொள்ள வேண்டுமே…

“ஓ” என்றபடி எழுந்து கொண்டான் அவன் இப்போது…..

“இப்போதைக்கு வேண்டாமா? இல்ல எப்பவுமே  வேண்டாமா? “ கேட்டபடி அவனது டேபிளை வலப்புறமாக சுற்றிக் கொண்டு இவளைப் பார்த்து மெதுவாக வந்தான். அவன் தொனியிலேயே அவள் வார்த்தைகள் அவனுக்குள் எதை கொண்டு வந்திருக்கின்றன என புரிகிறதுதானே….

“என்ன மித்ரன் நீங்க…… நான் அப்டி சொன்னனா?” மனோஹரி கேட்டாள்.

“பின்ன என்ன சொன்ன…? புரியுற மாதிரி சொல்லு கேட்போம்….” இவளுக்கு எதிரில் நின்றபடி டேபிளில் சாய்ந்து கொண்டான்….

“இதப் பாருங்க…..….” தான் கையோடு கொண்டு போயிருந்த அந்த அவனது விவாகரத்து குறித்த ஃபைலை எடுத்து அவனிடமாக நீட்டினாள் அவள்.

அதை கை நீட்டி வாங்கிக் கொண்டவன் அதை திறந்து கண்களை அதில் ஓட்டினான். இரண்டு டாக்குமென்டை திருப்பிப் பார்த்தவன் அலட்சியமாக அந்த ஃபைலை மேஜையின் மீது தூக்கிப் போட்டான்.

“ப்ச்….மனு இதெல்லாம் விடு நீ……மகிபா என் ஃபாஸ்ட்…. நீ என் ப்ரெசெண்ட்…. தேவையில்லாம குழப்பிக்காத….கிளம்பு கல்யாணத்துக்கு நிறைய வேலை இருக்குது…..” என்றானே பார்க்கலாம்…..

காதில் விழுவதை, கண்ணில் பார்ப்பதை, நம்ப முடியாமல் தவித்து தடுமாறிப் போனாள் மனோ…. என்ன சொல்கிறான் இவன்?? அப்ப இவனுக்கு மேரேஜாகி டிவோர்ஸ் பண்றது அவ்ளவு சாதாரணமான விஷயமா? அப்ப அந்த லாயர் பேசுனது உண்மையா? இவன் அம்மா சொன்னாங்களே அது???? விஜிலா சொன்னதெல்லாம்?????

“மித்ரன்ன்ன்ன்….” அதிர்ந்து போய் எழுந்து நின்றாள் இவள்.

“அந்த ஃபைல் படி உங்களுக்கு இன்னும் டிவோர்ஸே ஆகலை மித்ரன்….. நாம மேரேஜ் செய்தா கூட லீகலி செல்லாது…. அதோட என்னால இப்படிப்பட்ட மேரேஜுக்கு ஒரு நாளும் சம்மதிக்க முடியாது…. ஹஸ்பண்டோ வைஃபோ இறந்து போய்ட்டா ரெண்டாவது மேரேஜ் செய்றது தப்பு இல்லை……ஆனா அதை தவிர வேறு எதுக்காக ரெண்டாவது மேரேஜ் போறதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது……கல்யாணம் செய்றதுக்கு முன்ன ஆயிரம் தடவை யோசிக்கனும் ஆனா கல்யாணத்துக்கு பிறகு அந்த மேரேஜை காப்பாத்ததான் யோசிக்கனுமே தவிர கழற்றிவிட்டுட்டு ஓடுறதுக்கு இல்ல….இன்னைக்கு அவளை விட்டுட்டு போறவங்க, நாளைக்கு என்னை எதுக்காக விடமாட்டீங்கன்னு என்ன நிச்சயம்…..??? ஆனா கண்டிப்பா உங்களை இப்படின்னு நினைக்கவும் முடியலை நம்பவும் முடியலை…..” கோபமாக அதட்டலாக தான் ஆரம்பித்தாள் பேச....ஆனால் உள்ளுக்குள் வந்த உணர்ச்சி கொந்தளிப்பில்…..எப்பொழுது கண்ணில் நீர் வந்தது…எப்பொழுது குரல் கதறியது என்றெல்லாம் அவளுக்குத் தெரியாது…..

“பச் மனு….” அவனது அந்த மனு…. அவளது அத்தனை புரிதலையும் தவறென்று சொல்ல போகிறான் என எண்ண வைக்கிறது இவளை….. அத்தனை ஆறுதலும் தவிப்பும் அந்த மனுவில்…..தவிப்போடும் எதிர்பார்ப்போடும் அவன் முகம் பார்க்கிறாள்…. பெண்ணவள் கண்ணில் கட்டி தேங்கியது பொன்னி.

“இங்க பாரு மனு…. அவல்லாம் ஒரு நாளும் நம்ம கல்யாணத்துக்கு அப்ஜெக்ட் செய்ய மாட்டா……நீ மேரேஜைப் பத்தி மட்டும் யோசி…அவளைப் பத்திலாம் நினச்சு குழப்பாத….. ”

இவளது எதிர்பார்ப்பென்ன அதற்கு அவன் சொல்லும் சமாதானம் என்ன? இவள் அவனை விரக்தியாய் பார்க்க அவனோ தன் வெயிஸ்ட் கோட் பாக்கெட்டிலிருந்து எதையோ எடுத்தான். இரண்டு ரிங்…

“பாரு நம்ம வெட்டிங் ரிங் வாங்கினேன்….” மோதிரங்களை இவளிடமாக நீட்டினான்…

.” அதோட இன்விடேஷனும் டிசைட் பண்ணிட்டேன்…. அந்த டிசைன காமிக்கிறேன் பாரு…. முதல்ல இந்த ரிங்கை கைல வாங்கிப் பாரு மனு….“

இவனிடம் பேசி புரிய வைக்க முடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை….அதோடு பேசும் அளவிற்கு இப்போது இவளுக்கு மனபலம் தெளிவெல்லாம் இருப்பதாகவும் புரியவில்லை…..

சட்டென திரும்பி நடக்க ஆரம்பித்தாள் மனோஹரி….

“மனு….”

 “ப்ளீஸ் மித்ரன்….. உங்க மகிபா கூட உள்ள ப்ரச்சனையை சால்வ் பண்ணப் பாருங்க…. என்னை விடுங்க…” இவள் திரும்பிக் கூட பார்க்கவில்லை. தன் நடையை தொடர்ந்தாள்.

“இதான் உன் முடிவா மனு?”

“கண்டிப்பா மித்ரன்….. இனி நீங்க என்னை பார்க்கவோ பேசவோ ட்ரைப் பண்ணாதீங்க….”

அவள் போய் அவர்கள் நின்று பேசிய அறையின் கதவை திறப்பதற்காக தொட்டது தான் தெரியும் மனோஹரிக்கு….

அடுத்து நடந்ததை  அவள் உணரும் முன் அவளை இடையோடு பிடித்து தன் ஒற்றைக்கையால் தூக்கியவன்….அந்த அறையின் புக் ஷெல்ஃபின் ஓரத்தில் இவள் பார்த்திறுந்த அந்தக் கதவை தள்ளித் திறந்து இவளை அங்கிருந்த ஒரு மெகா சைஸ் கட்டிலில் தூக்கி எறிந்தான்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.