(Reading time: 22 - 43 minutes)

09. காதல் பின்னது உலகு - மனோஹரி

வனுக்கு இருந்த அத்தனை கோபத்திலும் கூட அவளது ஆடு மாடு நாய்தான வாலாட்டும்….நான் எப்படி ? என்ற கேள்வியில்  அதுவும் அத்தனை பயமும் நடுக்கமுமாயும் அவள் கேட்ட விதத்தில் அதிபனுக்கு அத்தனையும் மறந்து சட்டென சிரிப்புதான் வருகிறது…. அதையும் தாண்டி அவன் மனம் தொடுகிறது அவளது அந்த கள்ளம் கபடமற்ற குழந்தைத்தனம்.

அவளது கண்களில் அப்படி ஒரு பயம் கலந்த பரிதாப பார்வை….. அடிக்கவரும் அம்மாவைப் பார்க்கும் குழந்தையைப் போல மிரட்சியும், கனிவை எதிர்பார்க்கும் ஒரு தவிப்புமாய் அவள்….. அப்படியே அவளை அள்ளிக் கொள்ள தோன்றுகிறது இவனுக்கு….…

விக்கித்துப் போனான் அவன் மறு நொடி….. எங்கு செல்கிறது இவன் மனம்? இதென்ன இப்படி ஒரு நினைவு….? அதில் அவன் உதடுவரை வந்த சிரிப்பு வெளிப்படாமலே உறைந்து போயிற்று… குழந்தை மாதிரி பார்க்கிறான்னு நினச்சதால இப்படி தோணிட்டு போல…. தனக்குள் சொல்லி தன்னைத்தானே சமாதானப் படுத்த முயன்றவன் குரல் என்ன இருந்தாலும் இறங்கித்தான் போயிற்று.

Kadhal pinathu ulagu

“வீட்டுக்கு வந்தியா?” வெகு இயல்பான குரலிலேயே கேட்டான்.

“ம்…..உங்க அம்மா வரச் சொன்னாங்கன்னு வந்தேன்……” என இழுத்தவள்

 “வரகூடாதோ ? அங்க வந்தது தப்பா தீபன்?...இனிமே நான் வரலை…..” என அவசர அவசரமாக தப்பை உணர்ந்து திருத்திக் கொள்ளும் தொனியில் சொன்னாள். “அம்மாக்கு உடம்பு சரி இல்லைனதும் தான் வந்தேன்……இல்லைனா கண்டிப்பா வந்திருக்க மாட்டேன்…” அவள் விளக்கிக் கொண்டு போக….

இவனுக்கோ இவன் என்ன கேட்க வந்தால், இவள் என்ன சொல்கிறாள் என்கிறது மனது. சுத்தி வளைக்காமல் விஷயத்துக்கு வந்தான்.

“நான் இல்லாத நேரம் வரனும்னு கவனிச்சு தானே வந்த….அது ஏன்?”

“அது…..” என தயங்கி தொடங்கியவள் பின் ஒருவித தன்னம்பிக்கை பாவத்திற்கு வந்துவிட்டாள்.

“எனக்கு இந்த ஊர்ல எப்டி பேசனும் பழகனும்னு எல்லாம் கனி ஆன்டி சொல்லி பேச்சளவுலதான் தெரியும் தீபன்… மத்தபடி நான் பிறந்து வளந்தது எல்லாம் யூஎஸ்ல தான்…..எனக்கு நேரடியா உங்க ஊரைப் பத்தி எதுவுமே தெரியாது….. இங்க பொண்னுங்க பசங்கட்ட பேசக் கூடாதாம்….அப்டி பசங்க இருக்கிற வீட்ல போய் அடுத்தவங்கட்ட பேசுனா கூட….அடிக்கடி போனம்னா ஊர்ல அந்த பொண்ணைப் பத்தி தப்பா பேசுவாங்க….அங்கலாம் நீ வந்து சமாளிக்க முடியாதுன்னு கனி ஆன்டி சொல்லிட்டு இருந்தாங்க….. உங்களுக்கு தெரியாது தீபன்….. கனி ஆன்டிக்குன்னு இப்ப இருக்கிறது நான் மட்டும் தான்…..அதோட அவங்களுக்கு ஹெல்த்தும் அவ்ளவு நல்லா இல்லை…… அவங்களை இங்க தனியாவிட்டுட்டு நான் எப்டி அங்க நிம்மதியா இருக்க முடியும்? நாம எப்ப பூமியில எங்க இருக்கனும்னு கடவுள் முன் குறிச்சுருக்கார்னு பைபிள்ள இருக்கு படிச்சிருக்கீங்களா? அப்படி அவர் நான் இப்ப இங்க இருக்கனும்னு கூப்பிட்டுருக்கார்ன்றது என் நம்பிக்கை….அதான் நான் இங்க கனி ஆன்டி கூடதான் இருக்கப் போறேன்……அடுத்தவங்க என்னைப் பத்தி என்ன பேசுறாங்கன்றது எனக்கு விஷயமில்லை…..ஆனா ஆன்டிக்கு ஏற்கனவே நான் இங்க வர்றதுல இஷ்டம் இல்லை….வந்தா கஷ்டபடுவ வராதன்னு ஒரே அட்வைஸ்….பிடிவாதமாதான் நான் இங்க வந்ததே….இங்க அவங்க காதுபட யாரும் என்னை எதுவும் பேசிட்டா அவங்களால நான் கஷ்டபடுறேன்னு ஆன்டி ரொம்ப வருத்தப் பட்டுடுவாங்க…. அதான்….நீங்க இருக்கிறப்ப உங்க வீட்டுக்கு  வர வேண்டாம்னு நினைச்சேன்…..அதுல எதுவும் தப்பு இருந்தா ……எதாவது வகையில உங்க ட்ரெடிஷனை நான் மீறி இருந்தா….உங்களை ஹர்ட் செய்திருந்தா…..அது ஃபுல்லி அன்இன்டென்ஷனல்…..தெரியாம செய்துட்டேன் சாரி…. இனிமே உங்க அம்மா கூப்டாங்கன்னா நான் என்ன செய்யனும்னு சொல்லிடுங்க அதையே செய்துடுறேன்….”

அவள் பேசிக் கொண்டு போக போக….. அவள் குரலும்….முகமும்….அவள் பேசிய விதமும்…..அத்தனையும் உண்மையென்று அவனைத் தாக்க……முதல்ல இவளைப் பார்த்த அந்த ஏர்போர்ட் நிகழ்ச்சிய ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு தேவையில்லாம இவட்ட ஓவரா கோபப்படுறேன் போலயே……இவன் மோதிரம் கூட அவள் கையில் ஏதேச்சையாய் கிடைத்திருக்கலாமே…. என்ற சிந்தனை அறிவில் ஓடியது அதிபனுக்கு…மனமோ அவளிடமாக கனிந்தது…. கசிந்தது அவளை தன் உயர்வுப் பகுதியில் நிரப்பியது. சில நொடி அவளை கொண்டாடியது.

“ஆனா இப்டி திடீர் திடீர்னு காரணம் சொல்லாம கோபபட்டீங்கன்னா…..ரொம்ப பயம்ம்மா இருக்கு தீபன்….” அவள் தொடர, இதில்…. இதை அவள் சொல்லிய விதத்தில்…..  உருகித்தான் போனான் அதிபன்.

 “எதுனாலும் முதல்ல என்ட்ட ஒரு வார்த்தை கேளுங்க…..நான் பதில் சொன்ன பிறகும் என் பக்கம் தப்பு இருக்குன்னு உங்களுக்கு தோணிச்சுன்னா கண்டிப்பா கோபப்படுங்க…..”  சற்றே நனைந்த இமைகளுடன் அவள்

குஞ்சை இழுத்து தன் இறகுக்குள் கூட்டி சேர்க்க தவிக்கும் தாய் பறவையின் உணர்வில் இவன்….

 “சாரி……அனு…. ஏதோ ஒரு மிஸண்டர்ஸ்டாண்டிங்….. இனி எதுனாலும் உன்ட்ட ஓபனா பேசிடுறேன் சரியா….?”  .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.