(Reading time: 5 - 10 minutes)

26. கிருஷ்ண சகி - மீரா ராம்

பிரபு கேட்ட கேள்வியில் தன்னிலை மறந்து தான் போனான் மகத்…

“காதலா?... எனக்கா?... அதும் என் கிருஷ்ணா மேலயா?...” என தனக்குள்ளேயே கேள்வி கேட்டுக்கொண்டவனுக்கு சட்டென மனம் சொன்னது புரிந்தது…

“என் கிருஷ்ணா…” இந்த வார்த்தைக்குண்டான பொருள் என்ன?... அது சொல்லும் அர்த்தம் தான் யாது?... என தன் தலையை மேலும் பிடித்துக்கொண்டவனுக்கு ஒன்று மட்டும் விளங்கியது…

krishna saki

அவள் இல்லாது தன் வாழ்வு இல்லையென…

அதற்கு பிரபு காதல் என்று பெயரிட சொன்னால், மகத்திற்கு அதில் சம்மதமும் இல்லை மறுப்பும் இல்லை…

இது என்ன வகையான முடிவென்று அவனால் ஒரு நிலைக்கு வரமுடியவில்லை…

“உங்கிட்ட தாண்டா கேட்குறேன்… லவ் பண்ணுறீயா என்ன?...” என மகத்தை பிரபு உலுக்க,

மகத் எதுவும் பேசாது அமைதி காத்தான்…

“ட்வெல்த்-ல இருக்குறடா… உன் லட்சியமே டாக்டர் ஆகணும் அப்படிங்கிறது தான்… இந்த நேரத்துல இப்படி லவ் அது இதுன்னு விழுந்து உன் வாழ்க்கையை நீயே பாழாக்கிக்காத மகத்…” என பொறுமையாக பிரபு சொல்லி முடித்ததும்,

“என் லட்சியத்துக்கு எந்த விதத்திலேயும் இடைஞ்சல் கிடையாது என் கிருஷ்ணா… என் லட்சியத்துக்கு துணையா இருக்குறதே அவ தான்…” என்றான் மகத்தும் சட்டென…

“இதோ பாருடா… கோபம் வேற வருதா உனக்கு?... ஹ்ம்ம்…. சரி கிருஷ்ணா என்ன படிக்குறா?... ட்வெல்த்தா?... எந்த ஸ்கூல்?...”

“இங்க பக்கத்துல இருக்குற ஸ்கூல் தான்… செவன்த் படிக்குறா….”

“என்னது?...........” என கிட்டத்தட்ட கத்தியவனை தன் வார்த்தைகளால் அடக்கினான் மகத்….

“எதுக்குடா கத்துற?.... ஆமா அவ சின்னப்பொண்ணு தான் என்னைவிட… நீ கேட்டியே ஒரு கேள்வி… அதுக்கு எங்கிட்ட பதில் இல்லை… ஆனா ஒன்னு மட்டும் உறுதியா சொல்லுறேன்… அவ என் கூட இருந்தா தான் எனக்கு நிம்மதி, சந்தோஷம் எல்லாமே… கண்டிப்பா அவ என் வாழ்க்கையில திரும்ப வருவா… அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு…”

“நம்பிக்கையா?... எந்த நம்பிக்கைப்பா அது?... கொஞ்சம் தெளிவா தான் சொல்லேன் அதையும் கேட்போம்…” என்றான் கிண்டலாக பிரபு…

“என் கிருஷ்ணா மேல எனக்கு இருக்குற நம்பிக்கை… என்னை விட அதிகமா அவ என்னை தேடுவா… அது எனக்கு நல்லாவே தெரியும்…”

“ஓ…. சின்னப்பொண்ணுன்னு சொல்லுற…. லவ் இல்லைன்னு சொல்லுற… பட் அவ உங்கூட இருந்தா தான் நிம்மதின்னு சொல்லுற?.. இதெல்லாம் என்ன மகத்?... எனக்கு நிஜமா புரியலை…”

“உனக்கு மட்டும் இல்ல… எனக்கே சில கேள்விக்கான விடை தெரியலை இப்போவரை… அவ ஏன் என்னை விட ஐஞ்சு வயசு சின்னவளா பிறக்கணும்???… அவளை நான் ஏன் சந்திக்கணும்???… பழகணும்???… அன்பு காட்டணும்???... அவளோட ஒரு அழகான வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கணும்?... இப்போ அந்த வாழ்க்கையே இருளடைஞ்ச மாதிரி நான் ஏன் இப்படி நிலை குலைஞ்சு போய் நிற்கணும்?... இது எதுக்குமே எங்கிட்ட விடை இல்லை…” என மகத் தன்னிலையை எடுத்து சொன்னதும்,

“என்னடா இப்படி சின்னப்பிள்ளை மாதிரி பேசுற?...”

“என் கிருஷ்ணா இப்படித்தான்டா பேசுவா… அவளோட பழக்கம் பேச்சு, எனக்கும் வந்துடுச்சு… அவ்வளவுதான்…..” என்றான் மகத் இலகுவாக…

“அது சரி… லவ்னு வந்தப்பின்னாடி இப்படித்தான்டா பேசுறாங்க பல பேர்… இப்போ நீயும் அதுல சேர்ந்துட்டியா?... சுத்தம்….”

“இப்பவும் உனக்கு சொல்லுறேன் பிரபு… நீ சொல்லுற மாதிரி என் மனசு இல்ல…. ஆனா என் கிருஷ்ணா மேல எனக்கு நிறைய அன்பு, அக்கறை இருக்கு…. கண்டிப்பா அவளை சீக்கிரம் நான் பார்ப்பேன்… அப்பவும் அவளை இப்ப நினைக்குற மாதிரி தான் நினைப்பேன்… என்னைக்கும் அவ என் கூட இருக்கணும்னு….”

“உனக்கே உன் பேச்சு புரியுதாடா?... லூசு மாதிரி உளருற?... உங்கூட அவ என்னைக்கும் இருக்கணும்னா நீயும் அவளும் கல்யாணம் பண்ணினா தான் உண்டு… அதை நீ புரிஞ்சிக்கோ….” என பிரபு சொன்னதும், சற்று நேரம் யோசித்தவன்,

“நான் அவளை மறுபடியும் சந்திக்கும்போது, என் கிருஷ்ணா முகத்துல இருக்குற சந்தோஷம் மட்டுமே போதும் எனக்கு… அவளோட இருக்குற அந்த நொடி ஒன்னு போதும்… அவளை நான் பிரிஞ்சிருந்த நாட்களோட துயரத்தை போக்க…”

“ஹ்ம்ம்…. நல்லாதான் பேசுற… ஆனா உனக்குள்ள இருக்குற உணர்வை ஒத்துக்க தான் மாட்டிக்குற…. கண்டிப்பா நீ ஒருநாள் அது உனக்குப் புரியும்… அந்த நம்பிக்கை உனக்கு இருக்கோ இல்லையோ எனக்கு நிறைய இருக்கு…” என்ற தன் நண்பனை அமைதியாக பார்த்திருந்தான் மகத்…

“சரி வாடா… பரீட்சை நெருங்குது… வா… படிக்கலாம்… மனசை போட்டு அலட்டிக்காத… இப்போ நல்லா படி…. வா…” என மகத்தினை எழுப்பி அழைத்துச் சென்றான் பிரபு….

பிரபுவுடன் நடந்து சென்ற போதிலும், அவனது மனம் முழுவதும் அவளின் நினைவுகளே ஆக்கிரமித்திருந்தது…

செய்யும் ஒவ்வொரு செயலையும், தன் மனதின் எண்ணங்களையும் அவள் அருகில் இருப்பது போலவே பாவித்து அவளுடன் அனைத்தையும் பகிர்ந்து கொண்டான் ஒவ்வொரு நாளும் மறவாது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.