(Reading time: 4 - 8 minutes)

01. அனல் மேலே பனித்துளி - ரேணுகா தேவி

Anal mele pani thuli

காரிலிருந்து அந்த பிரமாண்ட வளாகத்திற்குள் காலெடுத்து வைத்தாள் மதுமதி. அவளுக்குள் பளீரென்று ஒரு விதமான சந்தோச சுதந்திர உணர்வு ஓடியது . இது அவளின் கனவு.  அவள் தனித்து காண போகும் வெளி உலகம். பொறியியல் படிப்பை முடித்து இந்த 8 மாதங்கள் வீட்டில் இதற்காக காத்திருந்தாள். குறைந்தது ஒரு வருடமாவது தான் படித்த படிப்பிற்கு உரிய வேலையில் சேர வேண்டும் என அவள் நினைத்த போது அவளுடைய அப்பாவும் அம்மாவும் சித்தப்பாக்களும் சித்திகளும் அண்ணன்களும் சேர்ந்து கூடவே கூடாது என போராட்டம் நடத்தினார்கள்.

"ஏதோ நீ ஆசைப்பட்ட அதனால உன்னை இன்ஜினியரிங் படிக்க வெச்சோம். இப்போ வேலைக்கு போறேன்னு சொல்ற,அதுவும் பெங்களூர் ல... உனக்கு கன்னடம் தெரியுமா?" என அவள் அண்ணன் சரண் கேட்டபோது ,

"தெரியாது தான் ஆனா நான் பொறக்கும் போது எனக்கு தமிழ் கூட தான் தெரியாது அதுக்காக என்னை விட்டாரா கடவுள். அது மாதிரி தான் இதுவும் . மரியாதையா நீ எனக்கு சப்போர்ட் பண்ணு " என்று அவனிடம்  சண்டைக்கு நின்றாள். ஆனால் இவளின் பேச்சுகளுக்கு அந்த வீட்டில் இதற்க்கு மட்டும் எதிர்மறை பதிலே கிடைத்தது.

கடைசியில் அவள் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் தான் "உண்ணா விரதம்".  " நான் இனிமேல் சாப்பிட மாட்டேன் ஏன் பச்சை தண்ணி கூட குடிக்க மாட்டேன் "அப்படின்னு சொல்லிட்டு அந்த வீட்டில் வேலை செய்யும் சரஸ்வதியிடம் (யார்கிட்டயாவது சொன்ன கொன்னே போடுவேன் என அந்த பெண்ணை மிரட்டி ) சொல்லி அவளுடைய அறையில் வேண்டிய அளவு பழங்களை வைத்திருந்ததும் யாருக்கும் தெரியாது.

"அப்பா இவ சாப்பிடாம இருக்க மாட்டா . இவளே ஒரு கடொத்கஜி" என்று அவள் அண்ணன் ரகு சொன்ன போது , அவன் பேச்சை கேக்காமல்

"இல்லைமா வேண்டாம் தயவு செஞ்சு சாப்பிடு கண்ணா , உன் நல்லதுக்கு தான் சொல்றோம். பெங்களூர் உனக்கு சரி பட்டு வராது டா , ப்ளீஸ் டா " என அம்மாவும் அப்பாவும் மாறி மாறி கெஞ்சியும் இவள் விடாமல் அடம் பிடித்து இங்கு வந்திருப்பதை எண்ணி அவளுக்கு சூழ்நிலையை மறந்து சிரிப்பு வந்தது.

"அம்மா தாயே நன்து பைசா கொடுத்பிட்டு ஆமேல நகு " என்று யாரோ கத்த,

"என்னது ஆமை மேல நகரறதா , என்ன பேசறாரு " என்று நம் மது மதியின் பொரியல் மூளை சாரி சாரி பொறியியல் மூளை யோசிக்க , அங்கே டாக்ஸி டிரைவர்க்கு மயக்கம் வராத குறை தான்.

சட்டென டிரைவர் ஞாபகம் வர, "வாட் ?" என கேட்க

அவரோ "வாட்டும் இல்லா ஏனு இல்லாமா , பைசா துட்டு மணி மணி என பாட ஆரம்பிக்க ,

"அய்யயோ இவருக்கு பணம் கொடுக்க மறந்துட்டனே" என்று பட படவென பாகில் இருந்த பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு உள்ளே நடக்க தொடங்கினாள்.

இதோ நாமும் மதுமதியோடு சேர்ந்து அவளுடைய வாழ்க்கையில் பயணிக்க போகிறோம்...

அதற்க்கு முன்பு மதுமதியின் குடும்பம் பற்றி அறிந்து கொள்வோம்..

ண்முகம் & கோ , கோவையின் மிகப் பெரிய தொழில் நிறுவனம். சண்முகம் அவர்களால் தொடங்கப்பட்டு அவருடைய மகன்கள் சிவசண்முகம், பாலசண்முகம், சக்தி சண்முகம் ஆகியோரால் வளர்க்கப்பட்டது. இன்று மூன்று தலைமுறைகளை கடந்து கல்லூரி, கார்மெண்ட்ஸ் என பல பகுதிகளில் விரிவடைந்துள்ள மிக பிரம்மாண்டமான நிறுவனம்.

கோவையின் மிக முக்கிய பகுதியான அவினாசியில் அண்ணன் தம்பிகள் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். சிவஷன்முகத்தின் மனைவி மங்களம் பெயருக்கேற்றார் போல அழகும் குணமும் கொண்டவர். அவரை போலவே லலிதாவும் மோகனாவும் பாசமான பொறுப்பான மருமகள்களாக வந்தது அந்த குடும்பத்திற்கு கிடைத்த வரமாக இருந்தது. லலிதாவும் மோகனாவும் ரகு, சரண் என இரண்டு மகன்களை பெற்ற போது மங்களமும் சிவஷன்முகமும் நீண்ட 8 வருட காத்திருப்புக்கு பின் பெற்ற வரம் தான் மதுமதி. ஆண் பிள்ளைகள் மட்டுமே இருந்த அந்த வீட்டில் ரோஜா குவியலாய் மகாலட்சுமியாக அந்த வீட்டின் இளவரசியாக வந்தவள்.

அவளை பூப்போல தாங்கினார் தகப்பன்களும் சகோதரர்களும்.மங்களம் மட்டுமே அவ்வப்போது  கண்டிக்க செய்வார்.. அடுத்த வீட்டுக்கு செல்ல வேண்டிய பெண்ணுக்கு இவ்வளவு செல்லம் கூடாது என்பார்.

சந்தோசத்தை மட்டுமே கொடுத்து வலியை தாங்கும் பக்குவம் இல்லாமல் போய்விடுமோ தன் மகளுக்கு என்ற கவலை அந்த தாய்க்கு .ஆனால் வீட்டோடு மாப்பிள்ளை பார்போம் என்று அவர் வாயை எல்லோரும் சேர்ந்து அடைத்து விடுவார்கள்.

இதோ இந்த பாசக்கூண்டை விட்டு இன்று நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் பெங்களூரில் Electronic சிட்டியில் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் ஜூனியர் ப்ரோக்ராம்மேராக சேர வந்திருக்கிறாள் நம் வீட்டு இளவரசி.

தோழிகளே இனி மதுமதியின் வாழ்வில் அவள் சந்திக்க போவது யாரை? அவள் சந்திக்க போகும் நிகழ்வுகள் என்ன? ஒரு பயணத்திற்கு நாமும் தயாராவோம்.

இது என்னுடைய முதல் முழு நீளக்கதை. இதில் உள்ள குறைகளை தயவு செய்து பகிருமாறு கேட்டு கொள்கிறேன்.

தொடரும்!

Episode 02

{kunena_discuss:945}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.