(Reading time: 38 - 76 minutes)

 

போலீஸ்க்கு இன்ஃபார்ம் செய்யவா? ஆனா அது மீடியா அது இதுன்னு எங்கயெல்லாமோ போய்…..மித்ரன் ஃபேமிலி பேக்ரவுண்டுக்கு ஹாட் நியூஸாக்கி மீடியா இதை…சே….மனோ பேரே வெளிய போகாம அவளை காப்பாத்தனும்….

எப்படி யோசித்துப் பார்த்தாலும் இந்த விஷயத்தில் கொஞ்சமாவது உதவி செய்ய முடிந்த நபராக அவளுக்கு தெரியும் ஒரே நபர் நாத்தனார் இன்பா தான். அவங்க சொன்னா மித்ரன் கேட்பான்னு இல்லைதான்…ஆனா இன்பாக்கு தன் குடும்பத்தோட பலமான பேக்ரவ்ண்டும்… பவர்ஃபுல் கான்டாக்ட்ஸ்ம் உண்டு….. மித்ரன் மனோவை மிரட்டி கடத்தி கொண்டு போயிருக்கான்னு தெரிஞ்சா, நாலுபேரை அனுப்பி மித்ரனை அடிச்சு போட்டுட்டு மனோவை கூட்டிட்டு வர கூட தயங்காத அளவுக்கு மனசும் உண்டு……

ஆனால் இன்பா வர்ஷன் மாதிரி கிடையாது…..மித்ரன் தப்பு செய்தாலும் அதுக்கு சூழ்நிலை காரணம்னு சொல்லி மித்ரன் தப்பு செய்றவன்னு ஒத்துக்க கூட அவங்களுக்கு விருப்பம் இருக்காது….

“அதெல்லாம் தம்பிட்ட தப்பு இருக்கும்னு எனக்கு தோணலை…..ஏதோ எல்லாத்தையும் நாமதான் தப்பா புரிஞ்சிகிடுறோம்….” .என  மித்ரனை சப்போர்ட் செய்ற டைப்….இருந்தாலும் நியாயவாதி…இரக்கவாதி…..விஜிலா பேச்சை மொட்டையாய் முரட்டடியாய் மறுக்கும் நபரும் கிடையாது…அதனால கண்டிப்பா உதவி செய்வாங்க தான்….

ஆனா இப்ப  இன்பாட்டா பேசுனா இவ எங்க இருக்கான்ற விஷயம் வெளிய தெரிஞ்சிருமே….இவளை தேடி யார் வரதிலும் இவளுக்கு இஷ்டமில்லை…..கண்டிப்பா வர்ஷன் வரப் போறதில்லை தான்….அவன் வந்தாலும் வேண்டாம்…. ஆனா மாமியார்…இன்பாலாம்….??

ஆனா இப்ப மனோவை காப்பாத்த இதை தவிர வழி இல்லை….. மாமியார் இன்பாலாம் வந்து இவளை கூப்பிட்டாலும் போறதும் போகாததும் இவள் முடிவுதானே …..யார் அப்படி என்ன கட்டாயபடுத்திவிட முடியும்….? அதோடு இப்பொழுது அவர்கள் பார்வையில் படாமல் இருப்பது முடியுமானால் அப்போதும் இன்னொரு இடத்தை தேடிக் கொள்ள இவளால் முடியும் தானே…. ஆனா இப்போ மனோ முக்கியம்…

மனோ வீட்டில் மித்ரன் மனோவை கடத்தி இருக்கிறான் என இவள் சொல்ல முடியும் தான்….. ஆனால் அவங்க இதை நம்பனும்னு கூட அவசியம் இல்லை……இவ சொன்னதும் அவங்க மனோவை கூப்பிட்டு கேட்டா அவளே அப்டிலாம் இல்லைனுட்டா என்ன செய்ய? அதோட அவங்களும் தான் மித்ரனை எதிர்த்து என்ன செய்துட முடியும்?

மித்ரன் மேல் அவர்களுக்கு உள்ள நன்மதிப்பு இவளுக்கு புரிகிறது தானே…..ஆனா அவனும் தான் அவங்க முன்னால என்னமா நடிக்கிறான்??

ஆக தன் இன்பாவை தொடர்பு கொண்டு ப்ரச்சனையை சொல்வதென முடிவுக்கு வந்தாள் விஜிலா.

மாடியிலிருந்து ஃபோன் பேசவென இறங்கி வந்தாள். வீட்டின் வரவேற்பறையில் போனைப் பார்த்ததாக நியாபகம். . ஹாலில் யாரும் இல்லை. போய் லேண்ட்லைனை எடுத்தால் அதில் டயல் டோனே இல்லை….. அதாவது இணைப்பு துண்டிக்கப் பட்டிருந்தது. முதல் கணம் புரியவில்லை எனினும் அடுத்த கணம் புரிந்துவிட்டது அவளுக்கு. இது மித்ரனோட வேலை….

ஓ மை காட்….அவன் எவ்ளவு பெரிய கிரிமினல்….?

பின் சமயலறையில் சத்தம் கேட்க அங்கே போனாள். மனோவின் அம்மா அங்கே வேலையாய் இருந்தார்.

“ஆன்டி…..எனக்கு உங்க மொபைல் தர முடியுமா ப்ளீஸ்…? ஒரே ஒரு கால் செய்துட்டு தந்துடுறேன்…”

இவளது கோரிக்கையில் அவர் ஆச்சர்யமுற்று இவளைப் பார்த்தது நிஜம். தனக்கு யாரும் இருப்பதாக கூட காண்பித்துக் கொள்ள விரும்பாதவள் யார்ட்டயோ பேசனும்னு சொல்றாளே…. ஒரு வகையில் நல்ல விஷயம் தான்….. தன் மொபைலை எடுத்து அவளிடம் கொடுத்து “நீ மாடிக்கு எடுத்துட்டுப் போய் பேசிட்டு அப்றமா தாம்மா….” என்றபடி மீண்டுமாக தன் வேலைக்குள் புகுந்து கொண்டார்.

மாடியில் தனக்கான அறைக்கு வந்த விஜிலா மொபைலில் சற்று ஞாபகபடுத்தி இன்பா எண்ணை அழைத்தாள்.

“அவுட் கோயிங் கால்ஃபெஸிலிட்டி இஸ் பார்ட் இன் திஸ் நம்பர்” என்றது அது. அதிர்ந்து போய் நின்றாள் அவள்.

ஆக மனோ வீட்டுக்கு இன்கமிங் மட்டும் இருக்கும்…..அவ்ட் கோயிங் இருக்காத மாதிரி செய்து வச்சுறுக்கானா மித்ரன்??? அதாவது இவ யாரையும் கூப்டுட கூடாதுன்னா?

திரும்ப சில முயற்சிகளுக்குப் பின்  மனோ அம்மாவிடம் வந்து மொபைலை கொடுத்துவிட்டுப் போனாள் விஜிலா…… இந்த மித்ரன் இவ்ளவு செய்து வச்சுறுக்கானே…..

ஆனா மொபைல் சர்வீஃஸ் ப்ரவைடர் தானே அவுட் கோயிங்க பார் பண்ண முடியும்? அவங்க எப்டி மித்ரன் சொன்னதை செய்து கொடுப்பாங்க??? போலீஸ் சொன்னா மட்டும் தான் இப்டிலாம் செய்து கொடுப்பாங்கன்னு கேள்விபட்டிருக்கிறாளே….

இந்த மித்ரன் நிச்சயமா இவ நினச்சதை விட புத்திசாலியும் தான்…… இப்ப என்ன செய்ய?

சிறிது நேரம் யோசித்தவளுக்கு வீட்டை விட்டு வெளியே சென்று ஃபோன் செய்வதை தவிர வேறு வழி இல்லை என புரிய….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.