(Reading time: 31 - 61 minutes)

 

ல்லாம் சரியாக போய் கொண்டிருந்தது. எல்லாரிடத்திலும் நிம்மதி நிறைந்திருக்க வந்தது அந்த நாள்...

அன்று தீக்ஷாவுக்கு பிறந்தநாள். திவாகரின் மூலமாக எல்லாருக்கும் அது தெரிய வர சஞ்சாவின் கெஸ்ட் ஹௌசின் மொட்டை மாடியில் ஒரு சிறிய பார்ட்டி ஏற்பாடு ஆகி இருந்தது. பக்கத்து வீடுகளில் இருந்த சின்ன சின்ன குழந்தைகளுக்கு மட்டும் அழைப்பு. உடல் நலம் கொஞ்சம் தேறி இருக்க, வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்கும் மனைவியையும் அழைத்துக்கொண்டு  இயக்குனரும் வந்து சேர்ந்தார் அந்த பார்ட்டிக்கு. சஞ்சாவும், அஹல்யாவும் கூட வந்திருக்க

'வாங்க அத்தை...' என்றான் ரிஷி மேகலாவை பார்த்து. குற்ற உணர்ச்சி உயிர் கீறியது. பார்ட்டி துவங்கியது. ஓரமாக சென்று நின்றுக்கொண்டார் மேகலா.

இறைவா... நான் செய்த தவறெல்லாம் திடீரென மறைந்து போகாதா??? நான் என்னை சுற்றி இருப்பவர்களுக்கெல்லாம் நல்லது மட்டுமே செய்பவளாக மறுபடியும் பிறந்து வர முடியாதா??? எல்லாரும் அவரை மன்னித்தாலும் அவரால் தன்னை மன்னித்துக்கொள்ளவே இயலவில்லை.

மொட்டை மாடியின் இன்னொரு ஓரத்தில் நின்றிருந்தார் சந்திரிக்கா. குழந்தைகளுக்கு மத்தியில் நின்றிருந்தனர் அருந்ததியும், ரிஷியும். திடீரென நினைவுக்கு வந்தது அந்த கனவு. ரோஜா தோட்டத்தின் மத்தியில் நிற்கும் ரிஷியும் அருந்ததியும்!!!! இந்த குழந்தைகள் தான் அந்த ரோஜா மொட்டுக்களா??? கனவு பலிக்க போகிறதா??? என்னவாகபோகிறது மேகலாவுக்கு???

மெதுவாக மேகலாவின் அருகில் சென்று நின்றார் சந்திரிக்கா. சுவர் ஓரமா நிற்காதே மேகலா ...' அவரை சற்று தள்ளி நிற்க வைத்தார்

பழைய நினைவுகளே அவரை வதைக்க மேகலாவிடம் அதே வேண்டுதல் நான் என்னை சுற்றி இருப்பவர்களுக்கெல்லாம் நல்லது மட்டுமே செய்பவளாக மறுபடியும் பிறந்து வர முடியாதா???

குழந்தைகள் சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருக்க, ரிஷியின் கரம் அருந்ததியை வளைத்திருக்க எங்கும் சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்க, திடீரென சிரிக்க துவங்கினார் மேகலா.

சிரித்தார் சிரித்தார் சிரித்துக்கொண்டே இருந்தார். சில நிமிடங்கள்!!! பின்னர் ஏனோ 'ரிஷி...' என்று ஒரு அலறல் அவரிடம். மயங்கி சரிந்திருந்தார் மேகலா. தனது மனம் என்னும் பள்ளத்துக்குள் புதைந்து இருந்தார் அவர்.

மருத்துவமனையில் அவரது நினைவு திரும்ப பல மணி நேரங்கள் பிடித்தன. மெதுவாக கண் திறந்தார் அவர். சுற்றி நின்றிருந்த எல்லாரையும் மாறி மாறி பார்த்தார் மேகலா . யாரையுமே அவரால் அடையாளம் தெரிந்துக்கொள்ள முடியவில்லை.

'ஸ்ட்ரெஸ்... அவங்களுக்குள்ளே நிறைய ஸ்ட்ரெஸ்... மன அழுத்தம்... ' என்றார் மருத்துவர். அதிலிருந்து வெளிய வர ஒரு சில நேரம் நம்ம மூளை எல்லாத்தையும் தூக்கி போட்டுடும்....  எல்லாத்தையும் .மறந்திடும்... இப்போ அவங்களுக்கு நடந்தது அதுதான்... கொஞ்ச நாளிலே தன்னாலே சரியாகவும் வாய்ப்பு இருக்கு. பார்க்கலாம்!!!

எல்லாரும் சென்ற பிறகும் மேகலாவின் அருகிலேயே அமர்ந்திருந்தார் சந்திரிக்கா. அவர் கையை பிடித்துக்கொண்டு கேட்டார் மேகலா ' எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு நீங்க என் கூடவே இருப்பீங்களா???' தனது தோழியின் கரத்தை பிடித்துக்கொண்டு தலையை வருடிக்கொடுத்தார் சந்திரிக்கா.

இங்குமங்கும் சிதறிக்கிடக்கும் வைரங்களாக வானமெங்கும் மின்னிகொண்டிருந்தன நட்சத்திரங்கள்!!!!

நிறைந்தது.

Episode # 20

{kunena_discuss:886}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.