(Reading time: 16 - 31 minutes)

ரி அப்படியே ரஞ்சினி தனி அரை கேட்டதற்கு மூலக்காரணம் என்னன்னு உங்ககிட்ட சொல்லிடுறேன் ..எல்லாம் பாழாய்  போன காதல் தான் .. என்னதான் அவன் நட்பிற்கு மதிப்பு கொடுத்து அவள் தன் மனதை மறைத்து கொண்டாலும் , பல மணி நேரங்கள் அவன் அருகில் அமர்ந்து கொண்டு மனதில் எந்தவொரு சலன்னமும் இல்லாமல் வேலை பார்ப்பது அவளுக்கு  பெரிய சவால் தான் .. அதனாலேயே, தனி அறை  கேட்டு வாங்கி இருந்தாள் .. அவள் நினைவுகளை கலைப்பது போல சிணுங்கியது செல்போன் ..

" எனை காணவில்லையே நேற்றோடு " என்று எஸ் பீ பி பாட ஆரம்பிக்க திரையில் மலேசிய எண்ணை  பார்த்ததும் புருவம் உயர்த்தினாள்  சதீரஞ்சனி .. கடந்த ஒரு வாரமாகவே அவனை தவிர்த்து கொண்டுதான் இருந்தாள்  அவள் .. எனினும் ஒரேடியாய் மௌனமாய் இருக்கவும் முடியாதே ? என்ன பேசுவது ? என்று ஓரளவு தன்னை தயார் படுத்திகொண்டு போனை எடுத்தாள்  அவள் ..

" மச்சி "

" ம்ம்ம் "

" என்னடீ .. எப்படி இருக்க "

" ம்ம்ம் பைன் .. நீ ?"

" நானும் நல்லா இருக்கேன் டீ "

" ம்ம் என்ன விஷயம் ? "

" ஏன் டீ சரியாவே பேச மாட்டுற ?"

" அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே "

" நீ பொய் சொல்லுற ரஞ்சு "

" ப்ச்ச்ச் .. கெளதம் , நான் எதுக்காக உன்னை மலேசியாவுக்கு போக சொன்னேன் ? அப்பாவோடு சந்தோஷமா இருக்குறதுக்கு தானே ? அங்க போயும் நீ என்னை பத்தி கவலை பட்டா என்ன அர்த்தம் ?"

" நான் கவலை படுற மாதிரி நீ நடந்துக்குறன்னு  அர்த்தம் " ..  கீழ் உதட்டை கடித்து கொண்டாள்  சதீரஞ்சனி ..

" இது மட்டும் தெளிவாய் தெரியுமே உனக்கு ? என் சோகம் கூட புரியும் உனக்கு ஆனா என் காதல் மட்டும் புரியாது !!" சலித்து கொண்டது அவள் மனம் ..

" நீ நினைக்கிற மாதிரி எதுவுமே இல்லை கெளதம் .. நீ இல்லாதப்போ நம்ம கம்பனிய நான் தானே பார்த்துக்கணும் .. ரெண்டு பேராய்  நின்னு சமாளிக்கிரதுக்கும் ,தனி ஆளாய் கவனிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்குல ? அதனால்தான் .. அப்பா எப்படி இருக்காங்க ?"

" யா நல்லா இருக்கார் .. உன்னை ரொம்ப கேட்டார் ."

" நான் சாயங்காலம் ஸ்கைப்ல பேசுறேன்னு சொல்லு "

" .."

" ஹெலோ இருக்கியா மச்சி ?" கொஞ்சம் இலகுவான குரலில் பேச தொடங்கினாள்  ரஞ்சினி .. கெளதமோ , இப்போது குறை கூறும் தொனியுடன்

" ஒரு வாரமாய் ஸ்கைப் வான்னு நானும்தானே உன்கிட்ட கேட்டேன் ?" என்றான் .. " என்ன பதில் கூறுவாள் அவள் ? உன் முகம் காண என் மனமும் ஏங்குகிறதடா என்று உண்மையை சொல்லிட முடியுமா அவளால் ? "

" சரி அதான் இன்னைக்கு பேசுறேன்னு சொல்றேன் ல கெளதம் ?"

" அது அப்பாக்கிட்ட !" என்றான் மீண்டும் அதே குறை கூறும் தொனியில்.

" எர்ர்ர்ர்ர்ர் ப்ளேடு போடாத .. நீயும் அப்பாவும் ஒரே வீட்டுல தானே இருக்கீங்க ? இவினிங் பேசுறேன் .. இப்போ டிஸ்டர்ப் பண்ணாத .. போனை வை " என்று போனை கட் பண்ணிவிட்டிருந்தாள் .. அவன் குரலில் இழையோடிய ஏக்கம் அவளின் பொறுமையை சோதித்தது .. வரும் கோபத்திற்கு , மனதில் இருக்கும் காதலை அவனிடம் கொட்டிவிட்டு எங்காவது ஓடிவிடலாம் என்று தோன்றியது அவளுக்கு ... விலகிடும்போது துரத்திவரும் பழக்கம் கொண்டது தான் காதல் என்றவள் உணர்வாளா  ???

வயலோரம் அமர்ந்திருந்தான் கதிரோவியன் .. பச்சை பசேலென செழித்து வளர்ந்த பயிரெல்லாம் அவனை பார்த்து புன்னகைப்பது போல இருந்தது ..

" முட்டாளா கதிர் நீ ? இதுக்கெல்லாம் நீ வருத்தபடுவ ! பிழைக்க தெரியாதவன் டா நீ " இப்படி அவன் முன்னால் நண்பர்கள் கேலி பேசிய வார்த்தைகள் எல்லாம் அவன் செவியை தீண்டி சென்றன .. குளிர்காற்று அவனின் பரந்த மார்பில் தஞ்சம் அடைய , ஊதகாற்றை ரசித்தபசி கைகளை கட்டிக்கொண்டு பயிரை பார்த்தான் ..

மனிதனை உயிர் வாழ வைத்து கொண்டிருக்கும் கண்ணுக்கு தெரிந்த கடவுள் இந்த பயிர்கள் .. இந்த பயிர்களை வளர்க்கும் தொழில் , பிரம்மனின் படைக்கும் தொழிலுக்கு ஈடானது.. அப்படிபட்ட தொழில் ஏன் " ஏழைகளின் தொழில் " என்ற அடையாளத்திற்குள் புதைக்கபட்டு இருக்கிறது ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.