(Reading time: 16 - 31 minutes)

ணத்திற்காக மேலதிகாரியிடம் கைகட்டி வாய் பொத்தி , சில நேரம் தன்மானம்  சுயர்கோவ்ரவம் அனைத்தையும்  மௌனமாய் அடகுவைத்து , ஆபிசில் பணிபுரியும் வேலை உயரக வேலை ?? யாருக்கும் அஞ்சாமல் தலைநிமிர்ந்து , இயற்கோடு ஒன்றிணைந்து பார்க்கும் விவசாய தொழில் கௌரவ குறைச்சல் ?? இதெல்லாம்  நிர்ணயிக்கும் அதிபுத்திசாலிகள் யாரோ ?? கேலியான புன்னகையுடன் அவன் இதழ்கள் வளைய , தனது காந்த கண்களினால் சுற்று வட்டாரத்தை அளவெடுத்தபடி  நடந்தான் அவன் .. தூரத்தில் மாட்டுவண்டி செல்லும் சத்தம் கேட்டதும் , அவளின் நினைவுகள் அழைகாமலே வந்தன ..

கொஞ்சும்  பேச்சும் ,அலட்டி கொல்லாத அளவான அழகும் , பிரம்மிக்க வைக்கும் அன்பும் , ஒரே பெண்ணிடம் எப்படி தஞ்சம் ஆகினவோ ?? மீண்டும் அந்த மாட்டுவண்டியின் சத்தத்தில் , அவள் பாத கொலுசொலியை  நினைத்து கொண்டான் கதிரோவியன் ..

" இவர்தான் அக்கா நம்ம அத்தான் " அன்று அவள் மைத்ரேயியிடம் தன்னை அறிமுகபடுத்தி வைத்தப்போது , அவள் முகத்தில் பிரதிபலித்த ஆர்வம் இன்னமும் அவனுக்குள் சாரலாய் தூறியது .. அந்த சாரல் மீது விழுந்த அனல் போல அடுத்த நொடியே அவன் தந்தையின் வார்த்தைகள் நினைவில் வந்தனர் ...

" எவ்வளவு தைரியம் இருந்தா , அம்மாவும் மகனுமா சேர்ந்துகிட்டு முடிஞ்சுபோன சொந்தத்தை  ஒட்ட  வைக்க போயிருப்பிங்க ?" அவர் கர்ஜித்தது இன்னமும் அவனுக்கு ஞாபகம் இருந்தது .. அவரை சமாதானம் படுத்தும்  வகை  அறிந்த இவனோ

" இது பாருங்க அப்பா , ஒரு நாள் அவங்க வீட்டுக்கு போயிட்டா , உடனே கதிர் அவங்க பக்கமாய் சாஞ்சுட்டான்னு நினைக்காதிங்க .. அம்மாவுக்காக எப்படி அவங்க வீட்டுக்கு போனேனோ , அதே மாதிரி உங்களுக்காக நான் அவங்க கூட  உறவு கொண்டாட மாட்டேன் ..என் வார்த்தைய நீங்க நம்பலாம் " என்று ஒரே போடாய் போட்டான் ..அதன்பின் எதுவுமே பேசவில்லை அவன் தந்தை ! அவருக்கு தனது மகனை பற்றி நன்றாக தெரியும் .. கதிர் ஒரு வார்த்தை கூறினான் என்றால் , அதில் சற்றும் பின்வாங்க மாட்டான் .. அதனால் மனைவி மீது எழுந்த கோபத்தை கூட ஒத்தி வைத்திருந்தார் அவர் ..

தன் தந்தைக்கு கொடுத்த வாக்கும் பொய்யல்ல , கயல்விழி மீது எழுந்துள்ள ஈர்ப்பும்  பொய்யல்ல .. இரண்டையும் அவனால் சமாளிக்க முடியுமா ? பார்ப்போம் ..

" மாமனோட .... இந்த மாமனோட மனசு மல்லிகப்பூ போலே பொன்னானது ...

இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது " வானொலியுடன் இணைந்து பாடி கொண்டே பூச்சரம் தொடுத்து கொண்டிருந்தாள் கயல்விழி .. தங்கையின் ஆர்வ கோளாறை கவலையுடன் பார்த்தான் ஸ்ரீராம் .. அவனது கவலையான பார்வையை கேள்வியுடன் கண்டுகொண்டாள்  மைத்ரேயி .. அவர்கள் இருவரின் பார்வையையுமே ஓரக்கண்ணால் பார்த்திருந்தாள்  கயல்விழி .. மொத்தத்தில் உடன்பிறப்புகள் மூவருமே ஒருவரை ஒருவர் தெரிந்துதான் வைத்திருந்தனர் ..

" என்ன ரெண்டு பேரும்  ஆடு திருடின களவாணிங்க  மாதிரி முழிக்கிறிங்க " என்றாள்  இளையவள் .. ஸ்ரீராம், மைத்ரேயியிடம்  ஜாடை காட்டி பேசச் சொல்ல , தொண்டையை செருமிக்கொண்டு அவள் அருகில் வந்தாள்  மைத்ரேயி ..

" சொல்லுங்க டிச்சர் சொல்லுங்க "

" கயலு  "

" ம்ம்ம் "

" என் செல்லம் கயலு  "

" கயலு  வயலுன்னு சுத்தி வளைக்காம என்னனு சொல்லு "

" அன்னைக்கு அத்தை வீட்டுக்கு வந்தாங்களே "

" நாச்சியா அத்தை தானே ?"

" ஆமா "

" சரி , அவங்களுக்கென்ன ?"

" அவங்க கூட வந்தாரே "

" யாரு டிரைவரா ?" அவள் கேட்ட மொக்கை கேள்வியில் உச்சு கொட்டினான் ஸ்ரீராம் ..

" கதிர் அத்தானா ?"

" ம்ம்ம் "

" சரி அவருகென்ன ?"

" அவரை பத்தி என்ன நினைக்கிற ?"

" அவரை பத்தி நான் ஏன் நினைக்கணும் அக்கா ?" புரியாமல் விழித்தாள்  இளையவள் .. அவள் கேள்வியில் சந்தோஷமும் குழப்பமுமாய் தமயனை பார்த்தாள்  மைத்ரேயி .. இது சரி வராது என்று களத்தில் இறங்கி பேச ஆரம்பித்தான் ஸ்ரீராம் ..

" அதில்ல குட்டிமா .. அன்னைக்கு நீ அவர் கூட பேசிட்டு இருந்தியா ..அதுக்கு பிறகும் நீ ரொம்ப சந்தோஷமாவே இருக்கவும் , உன் மனசுக்குள்ள அவர் மேல ஏதாச்சும் அபிப்ராயம் இருக்கான்னு கவலை வந்துருச்சு என்றான் ..  அண்ணன் அக்கா இருவரையும் வேற்று க்ரஹ  வாசிகளை போல பார்த்தாள்  கயல்விழி ..

" அதாவது , இந்த ராமாயணத்துல  அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்  மாதிரி , எனக்கு அவரை பார்த்தும்  கண்டதும் காதல்ன்னு நினைச்சிங்களா ரெண்டு பேரும்  ?" என்றாள்  கொஞ்சம் கேலியும் கொஞ்சம் கோபமுமாய் ..

" ஏன் அக்கா , நம்ம அண்ணாதான் வெகுளி ஏதோ  ஆர்வகோளாரில் அப்படி நினைச்சுட்டார் .. நீ டீச்சரம்மா , உன் தங்கச்சிய பத்தி இவ்வளவுதான் தெரிஞ்சு வெச்சு இருக்கியா நீ ?" என்றாள்  அவள் தெளிவாய் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.